புதன், 26 நவம்பர், 2014

மற்றவர்களின் செயலை மதித்து முதலில் செய்திடுமாறு அனுமதித்திடுக


நாம் அனைவரும் எப்போதும் மகிழ்வாக நிறைவாக வாழ்வது எவ்வாறு என்ற ஒரு பயிற்சி வகுப்பு எங்களூரில் நடைபெற்றது அதில் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்

அந்த பயிற்சியின்போது இடையில் பயிற்றுவிப்பாளர் பயிற்சியாளர் ஒவ்வொருவரையும் அழைத்து அவர்களுடைய பெயரை தன்னிடம் வைத்துள்ள பலூனில் எழுதி அருகேயிருந்த ஒரு அறையில் கும்பலாக வைத்தார்

அனைவருடைய பெயரையும் எழுதி கும்பலாக அருகிலிருந்த அறையில் வைத்தபின் அவர்கள் அனைவரையும் ஒரேநேரத்தில் அருகிலிருந்த அறைக்கு சென்று அவரவர்களுடை பெயர் எழுதிய பலூனை ஐந்துநிமிடகால அவகாசத்திற்குள் தேடிபிடித்து எடுத்துவரும்படி கோரினார்

உடன் அனைவரும் கும்பலாக சென்றதாலும் ஒருவருக்கொருவர் முட்டிமோதிக்கொண்டு தேடியதாலும் ஒரே கலவரமாக இருந்தது அதனால் அந்த கால அவகாசத்திற்குள் யாராலும் அந்த அறையிலிருந்துஅவரவர்களின் பெயர்எழுதிய பலூனை தேடிபிடித்து எடுத்து வரமுடியவில்லை

நல்லது கனவான்களே சிறிதுநேரம் அமருங்கள் என அவர்களை வேண்டி கேட்டுகொண்டு சிறிதுநேரம் கழித்து ஒவ்வொருவராக அந்த அறைக்கு சென்ற கைக்கு கிடைக்கும் பலூனை எடுத்துவருமாரு வேண்டிக்கொண்டார்

சிறிதுநேரம் கழித்து பின் அவரவர்களின் கைகளில் உள்ள பலூனில் உள்ள பெயரை பார்க்குமாறு கூறியபோது என்ன ஆச்சரியம் அனைவரின் கைகளிலும் அவரவர்களின் பெயர் எழுதிய பலூன் மிக்கச்சரியாக இருந்தது

ஆம் நண்பர்களே நாம் நம்முடைய வாழ்வில் அவசரத்தினாலும் ஆத்திரத்தினாலும் மற்றவற்களுடன் ஒத்துழைப்பு இல்லாததாலும் நாம் விரும்பியது நமக்கு கிடைக்கவில்லை

ஆனால் இரண்டாவது செயலில் பொறுமையாக மற்றவர்களின் செயலை மதித்து முதலில் செய்திடுமாறு அனுமதித்தால் அவரவர்கள் விருப்பபட்டது கிடைத்தது என அறிந்தகொள்க என அறிவுரைகூறினார்.

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...