ஒரு போக்கிரியும் ஒரு சாமியாரும் ஒரு கிராமத்தில் அருகருகே குடியிருந்தனர். சாமியார் எப்போதும் போக்கிரியை பற்றியே எண்ணிக்கொண்டு மந்திரத்தை உச்சரித்துகொண்டிருப்பார்.
போக்கிரியோ எப்போதும் சாமியாரைபோன்று தான் வாழ முடியவில்லையே என எப்போதும் அந்த சிந்தனையிலேயே இருந்துகொண்டு தன்னுடைய பணியை செய்துவருவது வழக்கமாகும்.
ஒருசமயம் அந்தகிராமத்தில் மிகக்கடுமையான புயல் இடியுடன் கூடிய பெரியஅளவு மழை பொழிந்தது. அதனால் அவ்விருவரும் குடியிருந்த கிராமப் பகுதிமுழுவதும் இரவோடு இரவாக வெள்ளத்தில் அடித்துச் செல்ல ஆரம்பித்தது. அதனால் அவர்கள் இருவரும் அந்த வெள்ளப் பெருக்கால் இறந்துவிட்டனர்
. தொடர்ந்து இருவருடைய உயிர்களும் இறப்பிற்கான கடவுளின் முன் கொண்டுசெல்லப்பட்டது. உடன் அவர் போக்கிரியின் உயிரை சொர்கத்திற்கும் ,சாமியாரின் உயிரை நரகத்திற்கும் செல்லுமாறு தீர்ப்புகூறினார்.
உடன் சாமியாரின் உயிரானது ஐயோ! ஐயய்யோ! இது அநீதி! என வாயிலும் வயிற்றிலும் அடித்துகொண்டது. உடன் இறப்பிற்கான கடவுளானவர் அந்த சாமியாரின் உயிரை அமைதியாக இருக்குமாறு கூறி உண்மை நிலவரம் என்னவென இறப்பிற்கான கடவுளின் கூறஆரம்பித்தார்.
சாமியாரின் வாயானது மந்திரச்சொற்களை கூறினாலும் அவருடைய எண்ணம் முழுவதும் போக்கிரியின் செயலையை நினைத்து கொண்டிருந்தது. அதனால் அவர்முழுஈடுபாட்டுடனும் மந்திரம் கூறவில்லை. ஆனால் போக்கிரியோ எப்போதும் சாமியார் கூறும் மந்திரத்தை காதில் கேட்டு மனதிற்குள் உச்சரித்துகொண்டேயிருப்பார் செயல்மட்டும் இயந்திரத்தனமாக செய்துகொண்டுஇருப்பார். அதனால் அவர் முழுமனதோடு மந்திரத்தை எப்போதும் உச்சரித்து கொண்டேயிருந்ததால் அவருக்கு சொர்க்கமும், சாமியாருக்கு நரகமும் கிடைத்தன என விவரங்களை கூறினார்.
நாம் அனைவரும் நம்முடைய செயல்கள் அனைத்தையும் முழுமனதோடு ஈடுபாட்டுடன் செய்வதே சிறந்ததுஎன இதன்மூலம் அறிந்துகொள்க.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக