முமே: முடிந்த காலாண்டின் உங்களுடைய கிளையின் இலாபம் குறைந்துவிட்டது தெரியுமா வங்கிகிளையின் இலாப உயர்விற்கு பாடுபடாமல் என்னதான் வேலை பார்க்கின்றீர்
கிமே: ஐயா நான் இந்த கிளையின் வளர்ச்சிக்கு அரும்பாடுபட்டுகொண்டுதான் இருக்கின்றேன்
முமே: அப்படியா ஆனால் உங்களுடைய கிளைக்கு நிர்ணயக்கபட்ட இலக்கைதான் உன்னால் அடையமுடியவில்லை
கிமே: ஐயா நான் இந்த காலாண்டின் ஆரம்பத்தில் எனக்கு கொடுத்த இலக்கை அடைவதற்காக கடுமையாக முயற்சி செய்துகொண்டிருந்தேன்
முமே: ரொம்ப சரி அவ்வளவு கடுமையாக முயற்சிசெய்தும் ஏன் உனக்கு கொடுத்த இலக்கை உன்னால் அடையமுடியவில்லை
கிமே: ஐயா வாடிக்கையாளர்களின் கடன்களுக்கான பரிந்துரை விண்ணப்பங்கள் வட்டார அலுவலகத்தினால் மறுத்தலிக்கபட்டது மேலும் வேறுசில வாடிக்கையாளர் கடன்விண்ணப்பங்களுக்கு தேவையான ஆதாரங்களை காண்பிக்குமாறு கேரி திருப்பிவிட்டேன் அதனால் அவர்கள் தங்களுடைய கடன்கோரிக்கையையே திரும்ப பெற்றுகொண்டார்கள்.
முமே:நீஉனக்கு கொடுத்த இலக்கை அடைவதற்காக கருத்தூன்றி பாடுபட்டிருந்தால் கண்டிப்பாக இலக்கை எட்டியிருப்பாய்
கிமே: ஐயா அவ்வாறு அதனை சரிசெய்வதற்காக நான் முயன்று கொண்டிருந்தபோது வட்டார அலுவலகத்திலிருந்து சிறுவணிக கடன் வழங்கும் பணியின் இலக்கானது மற்ற வட்டார அலுவலகத்தைவிட கூடுதலாக அடையவேண்டும்என எனக்கு உத்திரவிட்டிருந்தார்கள்
முமே: அதனால் நீ ஏராளமானஅளவில் சிறுவணிக கடன் வழங்கி கொடுத்த இலக்கை அடைந்துவிட்டாய் அல்லவா
கிமே: இல்லை ஐயா நம்முடைய நாடுமுழுவதற்குமான ஆயுள்காப்பீட்டு திட்டத்தை மக்களுக்கு கொண்டுசேர்க்கவேண்டும் என்ற குறியீட்டை அடைவதற்கான பணியை செய்திடுமாறு அறிவுறுத்தினார்கள்
முமே: மிகவும் சரியானது நீ ஆயுள்காப்பீட்டிற்காக உனக்கு கொடுத்த இலக்கை அடைந்துவிட்டாய் அல்லவா
கிமே: இல்லை ஐயா இந்த சமயத்தில் வட்டார அலுவலகத்திலிருந்து மின்னஞ்சல் ஒன்று வந்தது அதில் கிளையில் வாடிக்கையாளராக இருக்கும் அனைவரை பற்றிய விவரங்களையும் தயார்செய்து நம்முடைய வாடிக்கையாளரை பற்றிய அனைத்து விவரங்களையும் நாங்கள் தெரிந்திருக்க வேண்டும்என கேட்டுக்கொள்ளபட்டேன்
முமே: மிகவும் நன்று உன்னுடைய கிளையின் வாடிக்கையாளர் அனைவரை பற்றிய விவரமும் தொகுத்து தயாராக வைத்துள்ளாய் அல்லவா
கிமே: இல்லை ஐயா இந்த சமயத்தில் வட்டார அலுவலகத்தில் இருந்து உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கான ஆரோக்கிய காப்பீடு செய்திடுமாறு அறிவிப்பு வந்தவிட்டது அதனால் வாடிக்கையாளரை சந்தித்து அனைவரையும் இந்த உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கான ஆரோக்கிய காப்பீடு செய்திடுமாறான பணியை செய்ய ஆரம்பித்தேன் .
முமே: பரவாயில்லையே நீ வட்டார அலுவலகம் கோரியவாறு போதுமான உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கான ஆரோக்கிய காப்பீடு இலக்கை எய்திவிட்டாய் அல்லவா
கிமே: இல்லை ஐயா அதன்பின்னர் வட்டார அலுவகத்தில் இருந்து வராக்க கடன் எவ்வளவு அவற்றுள் தள்ளுபடி செய்வது எவ்வளவு என சரிபார்த்து கடனை வசூலிக்குமாறு அறிவுறுத்தபட்டேன்
முமே: மிகவும் சரி போதுமானஅளவு அனைத்து கடன்களையும் வசூல் செய்துவிட்டாய் அல்லவா
கிமே: இல்லை ஐயா அதற்குள் இந்த காலாண்டு முடிந்தவிட்டது நீங்களும் எங்களுடைய கிளைஅலுவக செயல்பாட்டினை ஆய்வு செய்திட அழைத்துவிட்டீர்கள் தற்போது உங்கள்முன் வந்து இருக்கின்றேன்
நிருவாக மானது தம்கீழ் பணிபுரிபவர்களின் பணிக்கான இலக்கை நிர்ணயத்தபின் அதனை அவ்வப்போது உடனுக்குடன் வெவ்வேறு பணிகளுக்கான இலக்காக மாற்றி கொண்டிருந்தால் அவர்கள் அனைவரும் ஒரு வேலையும்செய்யாது நிறுவனத்தின் பணி நடைபெறாமல் தடுமாறி கொண்டிருக்கும் என்பது திண்ணம்
குறிப்பு இங்கு
முமே= முதுநிலை மேலாளர்
கிமே=கிளைமேலாளர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக