சனி, 28 மே, 2016

பெரியோர்கள் கூறுகின்ற அனுபவங்களை பின்பற்றி பாதுகாப்பாக வாழ்க


ஒருகாட்டில் பல குட்டிகளைப் பெற்ற பெண்முயல் ஒன்று இருந்தது. அதுஒரு நல்ல தாயாக, நாள்முழுவதும் தன்னுடைய குட்டிகளிடம் எந்தெந்த மூலிகை செடிகளின் தழைகளை உண்ணவேண்டும் எந்தெந்த செடிகளின் தழைகளை தவிர்க்கவேண்டும் எவ்வெப்போது தங்களுடைய வாழும் வலையிலிருந்து வெளியில் செல்லவேண்டும் எவ்வெப்போது வெளியில் செல்லக்கூடாது அவைகளைவிட மிகமுக்கியமாக வேட்டைக்காரர்கள் நம்மை வேட்டையாட வரும் நாட்களில் கண்டிப்பாக அதனை அறிந்து நம்மை காத்துகொள்ளவேண்டும் என சிறந்த அறிவுரைகளை கூறிக்கொண்டே இருக்கும் அப்போது “மனிதர்கள்போன்று நமக்குத்தான் செய்திதாட்கள் எதுவும் கிடையாதே அதனால் வேட்டைக்காரர்கள் நம்மை வேட்டையாட வரும் நாட்கள் எவையென நமக்கு எப்போது தெரியவரும்” என அந்த தாயிடம் குட்டிஒன்று கேட்டது “ பொதுவாக வெடிச்சத்தம் கேட்கும் அதனை தொடர்ந்து வேட்டைநாய்கள் குரைத்து கொண்டு ஓடிவரும் சத்தம் கேட்கும் இவைகளை வெகுதூரத்தில் கேட்டவுடன் நம்முடைய வலைக்குள் நாம்பாதுகாப்பாக வந்து புகுந்து கொள்ளவேண்டும்” எனக்கூறியது தாய்முயல்.

இவ்வாறானஎச்சரிக்கை அறிவுரை கூறியதை கேட்டுகொண்டிருந்த குட்டிஒன்று ஒருநாள் வெளியில் இரைதேட சென்றது அப்போது வேட்டு சத்தம் டமால் டுமீல் எனக்கேட்டதும் பதறியடித்துகொண்டு ஓடிவந்து தங்களுடைய தாயிடம் “அம்மா வெகுதூரத்தில் வேட்டுசத்தம் கேட்கின்றது வேட்டைக்காரர்கள் நம்மை வேட்டையாட வருகின்றார்கள்” என மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்குமாறு கூறியது

“அடடா குட்டிகளா அது வேட்டைக்காரர்களின் வேட்டைத்துப்பாக்கியின் சத்தமல்ல நம்முடைய காட்டிற்கு அருகில் வாழும் மக்கள் தங்களுடைய திருவிழாவிற்காக வெடித்துமகிழும் வெடிச்சத்தமாகும் அதனை தொடர்ந்து இனியப் பாடல்களின் இசைகளையும் இசைக்கருவிகளின் முழக்கத்தையும் கேட்கின்றது பாருங்கள்” என அமைதிபடுத்தியது

அதேபோன்று வேறொரு நாள் அந்த காட்டில் தாய்முயலும் அதனுடைய குட்டிகளும் சேர்ந்த குடும்ப உறப்பினர்கள் அனைவரும் இரை தேடிக் கொண்டிருந்தனர் அப்போது அருமையான இசைக்கருவிகளலான இனிய இசை முழக்கத்தை கேட்டன குட்டிகள் அதைபோன்ற இசையை நம்முடைய வாழ்நாளில் கேட்டதே இல்லை என மயங்கிகேட்டுக்கொண்டிருந்தன இருந்தபோதிலும் தாய்முயலானது “குட்டிகளே உடன் நாம் அனைவரும் நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் நம்முடைய வலைக்கு செல்வதுதான் நமக்கு பாதுகாப்பு வாருங்கள்” என கூறி குட்டிகளை பாதுகாப்பாக தாய்முயல் அழைத்து சென்றது அப்போது குட்டிமுயல்ஒன்று “அம்மா அம்மா இந்த இசை நன்றாகத்தானே இருக்கின்றது இதனால் நமக்கு ஆபத்து எப்படி வரும்” என கேள்விகேட்டது உடன் தாய்முயல் “குட்டிகளே பாம்பாட்டி போன்று இந்த வேட்டைக்காரர்கள் தங்களுடைய இசைகருவிகளில் அருமையான இசையை இசைத்து கொண்டு வருவார்கள் நாமும் மயங்கி இவர்களிடம் மாட்டிகொள்வோம்” என கூறியது. மற்றொருநாளில் ஒருசிலர் கைகளில் துப்பாக்கி ஏந்தி காட்டில் சுற்றிவந்துகொண்டிருந்தனர் “அம்மா அம்மா துப்பாக்கி ஏந்திய நபர்கள் நம்மை வேட்டையாட சென்று கொண்டிருக் கின்றார்கள் அதனால் நாம் நம்முடைய வலைக்கு செல்வோம்” என்றது ஒருகுட்டி. அதனை தொடர்ந்து“குட்டிகளே அவர்கள் காட்டின் பாதுகாவலர்கள் யாரும் காட்டில் அனுமதியின்றி காட்டிலுள்ள இயற்கை பொருட்களை திருடிசெல்லாமல் அவர்கள் பாதுகாப்பதற்காக அவ்வாறு சுற்றிவந்து கொண்டிருக்கின்றனர் அவர்கள் நம்மை ஒன்றும் செய்யமாட்டார்கள்” எனத்தாய் முயல்கூறியது

ஆம் இதேபோன்றே நாமும் நம்முடைய வாழ்க்கையின் ஓட்டத்தில் பாதுகாப்பான நிகழ்வுகள் எவை பாதுகாப்பற்ற நிகழ்வுகள் எவையென நம்முடைய பெரியோர்கள் கூறுகின்ற அனுபவங்களை நாமும் பின்பற்றி பாதுகாப்பாக வாழமுயலுவோம்

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...