வெள்ளி, 12 ஆகஸ்ட், 2016

மலையின் அடிப்படை கொள்கையே நாம் வாழும் சமுதாயத்திற்கும் பொருந்தும்


ஒரு சிறுவனும் அவனுடைய தந்தையும் வானாளாவ உயர்ந்த மலைகளுக்கிடையே காலாற நடை பயற்சி மேற்கொண்டிருந்தனர் திடீரென அந்த சிறுவன் கால்சருக்கி கீழேவிழுந்தான் அதனால் அந்த சிறுவன் "ஆஆஆஆ " என தன்னுடைய உடலில் ஏற்பட்ட வலியால் கத்தினான் என்ன ஆச்சரியம் அந்த மலையும் "ஆஆஆஆ " என அதே வலியை எதிரொலித்தது உடன் ஆர்வத்தினால் "நீ யார்?" எனசத்தமாக கேள்விகேட்டான் உடன் அந்த மலையும் "நீ யார்?"என பதில் கேள்வியை அவனிடமே கேட்டது .

பின்னர் அந்த சிறுவன் "நான் உன்னை பாராட்டுகிறேன்!" என புகழ்ந்தான் உடன் அந்த மலையும் "நான் உன்னை பாராட்டுகிறேன்!" என பதிலுக்கு அவனை புகழ்ந்தது அதன் பின்னர் அந்த சிறுவன் என்ன இந்த மலையானது நாம் கூறியதையே திரும்புதிரும்ப நமக்கு கூறுகின்றது என மிகவும் கோபமுற்று "கோழையே!" என கத்தினான் என்ன ஆச்சிரியம் பதிலுக்கு அந்த மலையும் "கோழையே!" என அவனிடம் கத்தியது அதனை தொடர்ந்து இந்த நிகழ்வை அவனால் புரிந்து கொள்ள இயலவில்லை அதனால் தன்னுடைய தந்தையிடம் "அப்பா இங்கு என்னதான் நடக்கின்றது எனக்கு ஒன்றுமே புரியவில்லையே" என வினவினான்

அவனுடைய தந்தை புன்முறுவலுடன் மகனே இப்போது நடைபெறபோவதை கவணி எனக்கூறியபின்னர் "நீ ஒரு வெற்றியாளன் !" என சத்தமாக கத்தினார் உடன் அந்த மலையும் "நீ ஒரு வெற்றியாளன் !" என கத்தியது அவருடைய மகனுக்கு மேலும் கூடுதலாக ஆச்சரியமாகிவிட்டது நாம் கத்தியதை போன்று நம்முடைய அப்பாவும் கத்தினார் ஆனால் அந்த மலை அதற்கும் அதேபோன்று கத்துகின்றதே இதனை ஒன்றும் புரிந்து கொள்ளமுடியவில்லையே என மனம் தடுமாறினான்

அதனை தொடர்ந்து அவனுடைய தந்தை அவனிடம் "மகனே இவ்வாறு இந்த மலையும் நாம் கூறுவதையே திரும்ப கூறுவதை பொதுவாக மனிதர்கள் எதிரொலி எனக்கூறுவார்கள் ஆனால் நம்முடைய வாழ்விலும் இதேபோன்று நாம் என்ன செய்கின்றோமோ அதுவே நமக்கு பதிலாக கிடைக்கின்றது அதாவது நாம் என்ன செயல் செய்கின்றோமோ அதுவே திரும்பநமக்கு கிடைக்கின்றது அதனடிப்படையில் நாம் இந்த உலகில் உள்ள மற்றவர்களுடன் இதயபூர்வமாக அதிக அளவு அன்புடன் பழகினால் பதிலுக்கு அனைவரும் நம்முடன் இதய பூர்வ அன்புடன் பழகுவார்கள் இந்த உறவும் பதில் செயலும் நம்முடைய வாழ்வின் அனைத்து செயல்களிலும் தொடர்கின்றது அதனால் நாம் மற்றவர்களிடமிருந்து என்ன எதிர்பார்க்கின்றோமோ அதனை முதலில் நாம் மற்றவர்களுக்கு வழங்கினால் உடன் அது நமக்கு தானாகவே கிடைக்கும் என்ற அடிப்படையை இந்த மலையின் எதிரொலியில் இருந்து தெரிந்து கொள்" என அறிவுரை கூறினார்

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...