சனி, 20 ஆகஸ்ட், 2016

அமைதியாக இருந்தால் மனதும் குழப்பம்எதுவுமின்றி தெளிவாகிவிடும்


ஒரு ஆசிரியர் தம்முடைய மாணாக்கர்களுடன் வெகுதூரத்திலிருந்த நகரத்திற்கு நடைபயனமாக சென்று கொண்டிருந்தார் மதிய நேரமானதால் அருகில் இருந்த மரத்தடியில் இளைப்பாற சென்றார் அதனை தொடர்ந்து அந்த ஆசிரியருக்கு அதிக நாவறட்சி ஏறபட்டது அதனால் தம்முடைய மாணாக்கர்களில் ஒருவனை அழைத்து "தம்பி அருகில் ஓடும் ஆற்றில் குடிப்பதற்கு நீர் கொண்டுவா" என கேட்டுக்கொண்டார் அந்த மாணவரும் தன்னுடைய ஆசிரியரின் உத்திரவை பின்பற்றி ஆற்றிற்கு சென்றார் அங்கு ஆற்றில் விலங்குகளின் நடமாட்டமும் மக்களின் நடமாட்டமும் இருந்ததால் ஆற்றில் ஓடும் நீர் சேரும் சகதியுமாக கலங்களாக இருந்தது அதனால் இந்த கலங்களாக இருக்கும் ஆற்று நீரை ஆசிரியருக்கு குடிப்பதற்கு எப்படி எடுத்து சென்று கொடுப்பது என மனம் தடுமாறி வெறுங்டுகையுடன் திரும்பி வந்து "ஐயா ஆற்றுநீர் சேறு சகதியுமாக கலங்கியிருப்பதால் அதனை குடிக்கவே முடியாது அதனால் ஆற்றுநீரை நீங்கள் குடிப்பதற்காக எடுத்து வரவில்லை" எனக்கூறினான் உடன் "சரிசரி போய் ஓய்வு எடு" என அதனை ஆமோதித்தார்

சிறிது நேரம் கழித்து அதே மாணவனை அழைத்து மீண்டும் தன்னுடைய தாகத்திற்கு தண்ணீர் கொண்டுவருமாறு உத்திரவிட்டார் மீண்டும் அதே மாணவன் ஆசிரியரின் உத்திரவினை செயல்படுத்திடுவதற்காக ஆற்றிற்கு சென்றார் தற்போது ஆற்றில் தண்ணீர் தெளிவாக ஓடிக்கொண்டிருந்தது உடன் ஆசிரியரின் தாகம் தீர்க்கும் அளவிற்கு தண்ணீரை கொண்டு வந்து கொடுத்தார் ஆசிரியரும் தாகம் தீர தண்ணீரை அருந்தியபின் அந்த மாணவனிடம் "தம்பி ஆற்றில் எப்போதும் ஒரேமாதிரியாகத்தான் தண்ணீர் ஓடிக்கொண்டிருக்கின்றது அதில் மக்களும் விலங்களும் நடமாடுவதால் முன்பு கலங்கியவாறும் பின்னர் அவ்வாறு நடமாடாததால் தெளிவாகவும் ஓடுகின்றதல்லவா அதேபோன்று நம்முடைய மனதில் பல்வேறு எண்ணங்களையும் நினைவிற்கு கொண்டுவந்தால் ஒரே குழப்பமாக கலங்கி நிற்கும் அமைதியாக இருந்தால் மனதும் குழப்பம்எதுவுமின்றி தெளிவாகிவிடும் அதற்காக தனியான முயற்சி எதுவும் எடுக்கத்தேவையில்லை மனதில் பல்வேறு எண்ணங்களை கொண்டுவராமல் அமைதியாக இருந்தால் மட்டும் போதுமானதாகும்" என அறிவுரை கூறினார்

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...