புதன், 17 ஆகஸ்ட், 2016

என் வாழ்க்கையில் நடந்த சிறுசம்பவத்தால் என்வாழ்க்கை மட்டுமல்ல வாழ்க்கையை நோக்கிய என்னுடைய கருத்துகூட மாறிவிட்டது .


தற்போதுதான் என்னுடைய வாழ்க்கையை துவக்கும் இளைஞனான நான் என் சொந்த ஊருக்கு அருகிலுள்ள நகரத்தில் கடந்த நான்கு மாதங்களாக ஒரு நிறுவனத்தில் புதியதாக பணியில் சேர்ந்து பணிபுரிந்து வருகின்றேன். இந்த என்னுடைய வாழ்க்கையானது புத்துணர்ச்சி ஏதுமின்றி ஒரு சலிப்பானதாக இருக்கின்றது .இந்நிலையில் ஒரு நாள் நான் பணிமுடிந்து வீட்டிற்கு திரும்பி வரும்போது ஒரு சாலையோர மாலைநேர உணவகத்தில் சிற்றுண்டி சாப்பிடுவதற்காக சென்றேன். அந்த சாலையோர மாலைநேர உணவகத்தில் இரண்டு சகோதரர்கள் மட்டுமே வேலை செய்து வந்தனர். மூத்தசகோதரர் உணவகத்திற்கு தேவையான சிற்றுண்டிகளை தயார் செய்து கொண்டிருந்தார் , மற்றொரு இளைய சகோதரர் அந்த உணவகத்திற்குள் வருபவர்களுக்கு அதனை பரிமாறும் பணியை செய்துகொண்டிருந்தார். அதுஒரு மாலை 6 மணி ஆனதால் , அவ்விருவரும் வாடிக்கையாளர்களின் வருகையை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தனர் அன்று நான்தான் முதல்ஆளாக அந்த உணவகத்திற்கு வந்து எனக்கான சிற்றுண்டியை கொண்டுவருமாறு உத்தர விட்டேன் உடன் எனக்குத் தேவையான சிற்றுண்டியை இளைய சகோதரர் கொண்டுவந்து பரிமாறி கொண்டிருந்தார் இதற்கிடையில் நான் உணவு பரிமாறுவதற்காக வந்திருந்த ஒரு நல்ல தடகள வீரர் போன்று உடல் கொண்ட அந்த இளைய சகோதரரிடம் பேச ஆரம்பித்து முதலில் “தம்பி நீ படிக்கின்றாயா?” என்ற ஒரு எளிய கேள்வியை கேட்டேன் ; உடன் அந்த இளைய சகோதரர் “அதை ஏன் ஐயா கேட்கின்றீர்? தற்போது நான் அருகிலுள்ள கல்லூரியில் இளங்களை வேதியில் இரண்டாம் ஆண்டு பயின்று வருகின்றேன் நாளை காலை என்னுடைய வேதியில் கல்வியின் செயல்முறை பயிற்சி தேர்வு நடக்கவிருக்கின்றது அந்த வேதியில் கல்வியின் செயல்முறை பயிற்சி தேர்வு நான் செய்திடவேண்டும் அது முடிந்து மாலை கால்பந்து போட்டி நடக்க விருக்கின்றது அதில் நான் கலந்து கொண்டு விளையாட வேண்டும் அதுமுடிந்ததும் மாலை இந்த உணவகத்தில் இரவு 11 மணிவரை பணியாற்றவேண்டும் அவ்வாறு பணியாற்றியபின்னர் இரவு 11 மணிக்குமேல் வீட்டிற்கு செல்வேன் விடியற் காலையில் 4 மணிக்கு எழுந்து அன்றன்றைய பாடத்தை படித்து தயார் கொள்வேன்” என தன்னுடைய இயந்திரமயமான வாழ்க்கையை பற்றி கூறினார். உடன் “சரிதம்பி பொழுது போக்கிற்கான தொலைக்காட்சி பெட்டியின் நிகழ்ச்சியை எப்போது காண்பாய்? கால்பந்தாட்ட பயிற்சியை எப்போது செய்கின்றாய்?” என நான் வினவியபோது “எங்களுடைய வீட்டில் தொலைக்காட்சி பெட்டியே கிடையாது ஒன்று மாற்றி ஒன்றாக பணியை முடிக்கவே நேரம் சரியாக இருக்கின்றபோது பொழுது போக்கெல்லாம் என்னுடைய வாழ்வில் இல்லை கால்பந்தாட்ட பயிற்சியைகூட செய்வதற்கு நேரம் எங்கே கிடைக்கின்றது அதற்கு பதிலாக நண்பர்கள் கால்பந்தாட்டம் பற்றிய கானொளி காட்சி படத்தினை இணையத்தில் பதிவிறக்கம் செய்து கொடுப்பார்கள் அதனை என்னுடைய கைபேசியில் செயல்படுத்தி பார்த்து அதன் நுனுக்கங்களை தெரிந்து கொண்டு நானாக முயற்சிசெய்து கால்பந்து விளையாடி வருகின்றேன்”. என இளைய சகோதரர் தன்னை பற்றி கூறினார்.இடையே மூத்தசகோதரர் “என்னுடைய தம்பி அவர் பயிலும் கல்லூரியில் சிறந்த கால்பந்து வீரராக பிரபலமாகிவிட்டதால் அவருடைய கல்லூரி நண்பர்கள் அனைவரும் அவரை ரொனால்டோ என்றே சிறப்பு பெயரிட்டு அழைக்கின்றனர்” என கூறினார் தொடர்ந்து நான் “கால்பந்து விளையாட்டில் எந்த வீரரையாவது முன்னுதாரணமாக கொள்கின்றாயா?” என வினவியபோது உடன் அந்த இளைய சகோதர்ர் “நான் எந்த கால்பந்து விளையாட்டு வீரரையும் பின்பற்ற எனக்கு நேரம் ஏதும் இல்லை என்னுடைய கைபேசியில் மட்டும் கால்பந்தாட்டம் பற்றிய கானொளி காட்சி படத்தினை பார்த்து நானாக பயிற்சி செய்து கால்பந்தாட்ட விளையாட்டில் கலந்து விளையாடி வருகின்றேன்” என க்கூறினார் அதனை தொடர்ந்து நான் “கல்லூரி படிப்பு ,கால்பந்து விளையாட்டு ,இந்த சிற்றுண்டி உணவகத்தில் வேலைஎன ஒரே குழப்பமாக இருக்காதா உனக்கு” என வினவினேன் “இதில் குழப்பம் ஏன்? வருகின்றது ஐயா! எதிர்கால வாழ்க்கைக்கு தேவையான கல்வியை கல்லூரியில் பயின்றுவருகின்றேன்; நீங்கள் கூறிய பொழுதுபோக்கிற்காக கால்பந்துவிளையாட்டினை பயிற்சிசெய்து சிறந்த கால்பந்து விளையாட்டு வீரனாக விளையாடி வருகின்றேன் ; வாழ்க்கையின் அடிப்படைத் தேவையான உணவு போன்ற அனைத்து பொருட்களையும் பெறுவதற்காக மாலையில் இந்த சிற்றுண்டியகத்தில் பணிபுரிந்து வருகின்றேன்; இந்த பணிகளில் அந்தந்த நேரத்தில் அந்தந்த பணியை மட்டும் மனநிறைவோடும் மகிழ்ச்சியாகவும் செய்து வருகின்றேன் . மேலும் என்னுடைய மூத்த சகோதரர் என்னுடைய கால்பந்து விளையாட்டு போட்டிக்காக முழுக்காலணியை இங்கு பணிபுரிவதற்கான பரிசாக எனக்கு வழங்கியுள்ளார்” என பதில் கூறியதும். என்னுடைய மனதில் ‘இதேபோன்று அனைவரும் இருந்தால் இந்த உலகில் வாழும் அனைவரும் மிகமகிழ்ச்சியோடு வாழமுடியுமே!’ என்ற இந்த சம்பவம் உண்மையில் என்னை போன்றவர்களின் வாழ்க்கையின் கண்ணோட்டத்தையே மாற்றியுள்ளது

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...