ஒருநாள் கல்லூரி பேராசிரியர் ஒருவர் தன்னுடைய வகுப்பு மாணவர்களிடம் தான் இன்று ஒருவித்தியாசமான தேர்வு நடத்தவிருப்பதாகவும் உடன் அனைவரும் தயாராக இருக்குமாறு கூறி ஒவ்வொரு மாணவரிடமும் ஒரு வினாத்தாளையும் விடை எழுதுவதற்கான வெள்ளைத்-தாளையும் வழங்கி அனைவரையும் தேர்வினை எழுதுமாறு கூறினார்
அதனை தொடர்ந்து அனைத்து மாணவர்களும் வினாத்தாளை பிரித்து பார்த்தபோது அது காலியாக இருந்தது ஆனால் அதன் நடுவில் மட்டும் சிறிய கரும்புள்ளி ஒன்று இருந்தது அதனை கண்ணுற்ற அனைத்து மாணவர்களும் ஒட்டுமொத்தமாக எழுந்து நின்று பேராசிரியரிடம் "ஐயா இந்த வினாத்தாட்களில் கேள்வி எதுவுமே இல்லையே அதனால் நாங்கள் என்ன விடையை எழுதுவது" என கோரினர். உடன் பேராசிரியர் "என்ன கேள்வி எதுவுமே அந்த கேள்வித்தாளில் இல்லையா இருக்கின்றது சரியாக பாருங்கள்" என பதில் கூறியதும் "ஐயா கேள்வித்தாளின் நடுவில் கரும்புள்ளி மட்டுமே உள்ளது" என அனைத்து மாணவர்களும் பதில் கூறியதும் "அப்படியா ரொம்ப சரி அந்த கரும்புள்ளியை பற்றி உங்களுடைய மனதில் தோன்றியதை எழுதுக" என கேட்டுகொண்டார்
உடன் மாணவர்கள் அனைவரும் அந்த கரும்புள்ளியை பற்றி தங்களுக்கு தோன்றிய கருத்தினைஎழுதி பேராசிரியரிடம் தங்களுடைய விடைத்தாள்களை கொண்டுவந்து கொடுத்தனர். பேராசிரியர் அந்த விடைத்தாள் அனைத்தையும் திருத்தினார் ஆனால் அவையனைத்தும் ஒரேமாதிரியான அந்த கரும்புள்ளியை பற்றிய வர்ணனையாகவே இருந்தன. அதனால் யாருக்கும் மதிப்பெண் எதுவும் வழங்காமல் வெறும் பூஜ்ஜியத்தை மட்டும் அனைவரின் விடைத்தாளிலும் வழங்கி விடைத்தாட்களை அவரவரிடம் திருப்பினார்
அதன்பின்னர் "மாணவர்களே இந்த கேள்வித்தாளில்இருந்த வெள்ளையான பகுதியை பற்றி யாருமே எழுதவில்லை ஆனால் நீங்கள் அனைவரும் கேள்வித்தாளில் இருந்த அந்த சிறிய கரும்புள்ளியை பற்றி மட்டுமே எழுதியுள்ளீர்கள் உங்களுடைய மனமானது அந்த கேள்வித்தாளில் இருந்த மற்ற வெள்ளையான பகுதிகளை பார்க்கதவறிவிட்டது அதேபோன்றே நாம் வாழும் இந்த சமுதாயத்தில் நிகழும் சிறிய தவறான நிகழ்வுகளை மட்டுமே ஒட்டுமொத்த மக்களும் தங்களுடைய கவணத்தை கொண்டுசெல்கின்றார்களே தவிர மிகுதிஉள்ள எத்தனையோ நல்ல செயல்களை எதனையும் கவணித்து அதனை பின்பற்றி வாழ்க்கையை வளமாகவும் நலமாகவும் வாழத்தலைப்படுவதில்லை என்பதே உண்மை நிலவரமாகும் அதனால் மாணவர்களே நீங்களாவது இந்த சமுதாயத்தில் நிகழும் மிகுதியுள்ள அனைத்து நல்ல செயல்களையும் அறிந்து அதனை பின்பற்றி உங்களுடைய கல்வியை மட்டுமன்று உங்களுடைய வாழ்வை மகிழ்ச்சியாகவும் சிறந்ததாகவும் அமைந்திடுமாறு செய்து கொள்க " என அறிவுரை கூறினார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக