வெள்ளி, 31 ஆகஸ்ட், 2018

கெடுவான் கேடுநினைப்பான்


ரகு எனும் மிகவும் பேராசைபிடித்த பணக்காரனிடம் ஏராளமானஅளவில் பணம் பொன் பொருள் எனகுவிந்து இருந்தன இருந்தபோதிலும் மேலும் பணத்தினை எப்படியாவது சேர்ப்பதிலேயே ரகுகுறியாக இருந்துவந்தார் இந்நிலையில் 10இலட்சரூபாய் பணத்துடன்கூடிய பணப்பையும் வேறு முக்கிய ஆவணங்களையும் கையில் வைத்து கொண்டு அவருடைய வீட்டைசுற்றியுள்ள தோட்டத்தின் வாழியாக செல்லும்போது தடுக்கி விழுந்து எழும்போது கையில் வைத்திருந்த ஆவணங்களும் பணப்பையும் சேர்ந்து அனைத்தும் செடிகளுக்கிடையே சிதறி விழுந்தன உடன் எழுந்து அவைகளை தேடிசேகரித்து எடுத்து கொண்டு வங்கிக்கு சென்று பணத்தினை வங்கியில் செலுத்தலாம் என பணப்பையை தேடியபோதுதான் பணப்பையை மட்டும் தேடி எடுத்திடாமல் விடுபட்டுவிட்டது என தெரியவந்தது அதனை தொடர்ந்து அவருடைய வீட்டில் பணிபுரியும் ரவி என்பவருடைய மகள் அந்த தோட்டத்தில் விளையாடும்போது இந்த பணப்பை கிடைத்தது அதனை தன்னுடைய தந்தை ரவியிடம் கொண்டுவந்து கொடுத்தாள் அதனை ரவியெனும் பணியாளர் இதுநம்முடைய முதலாளியினுடைய பணப்பையாகத்தான் இருக்கும் என ரவி அந்த பணப்பையை தன்னுடைய முதலாளி ரகுவிடம் கொண்டுவந்து கொடுத்து ஐயா இந்த பையில் 10 இலட்சம் ரூபாய் உள்ளது நீங்கள் காணோம் என தேடியது இந்த பணப்பைதானா வென சரிபாருங்கள் என கூறினான் உடன் ரகுவானவர் தந்திரமாக ஐயோ நான் இதில் 11 இலட்சம் ரூபாயை வைத்திருந்தேனே 1இலட்சம் பணத்தினை நீஎடுத்து கொண்டு 10 இலட்சம் மட்டும் என்னிடம் கொண்டுவந்த கொடுக்கின்றாயா உன்னை என்ன செய்கின்றேன் பார் என திட்டினார் தொடர்ந்து உள்ளூர் காவல்நிலையத்தின் வாயிலாக ரவிமீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார் அந்த வழக்கு விசாரணைக்கு வந்ததது நீதிபதி ரகுவிடம் "ஐயா உங்களுடைய பணப்பையில் எவ்வளவு தொகை வைத்து வங்கிக்கு எடுத்து சென்றீர்" என வினவியபோது "நான் 11 இலட்சம் ரூபாயை வைத்திருந்தேன் அதனையும் அதனோடு வேறு ஆவணங்களும் சேர்த்து எடுத்து சென்றபோது வீட்டு தோட்டத்தில் கால்தடுக்கி விழந்துஎழுந்து போது அனைத்தும் தோட்டத்தில் செடிகளுக்கு இடையே விழந்துவிட்டன பின்னர் எழுந்து ஆவணங்களை சேகரித்து எடுத்து சென்று வங்கியில் பார்க்கும்போது இந்த பணப்பைமட்டும் காணாமல் போய்விட்டது" என பதில்கூறினார் ரவியிடம் "நீங்கள் உங்களுடைய மகள் கொண்டுவந்து கொடுத்த பணப்பையில் எவ்வளவு தொகை இருந்தது" என வினவினார் நீதிபதி "ஐயா நான் அந்த பணப்பையை திறந்து எண்ணிடும்போதும் 10 இலட்சம் மட்டுமே இருந்தது" என ரவி பதில் கூறினார் இருதரப்பு வாதமும் முடிந்துவிட்டதால் அதனை தொடர்ந்து "இந்த வழக்கில் இருதரப்பினையும் தீர விசாரிக்கப்பட்டது வாதியான ரகு என்பவர் தன்னுடைய பணப்பையில் ரூபாய்11 இலட்சம் இருந்து தொலைந்து போனதாக சாட்சியம் கூறியுள்ளார் பிரதிவாதியானவர் தன்னுடைய மகள் பணப்பையை கொண்டுவந்து கொடுத்தவுடன் எண்ணிக்கைசெய்தபோது அதில் பணம் ரூ.10 இலட்சம் மட்டுமே இருந்தது அந்த பணப்பை தன்னுடையதன்று வேறுயாருடையதோ அதனால் ரகுவிடம் அவருடைய பணப்பையா என சரிபார்த்திடுமாறு கூறி நாணயமாக கொண்டுவந்து கொடுத்துள்ளார் ரகுவின் காணாமல் போன பணப்பையில் ரூ.11 இலட்சம் இருந்தது ஆனால் ரவி கொண்டுவந்து கொடுத்ததில் ரூ.10 இலட்சம் மட்டுமே இருந்தது என்பதால் இந்த பணப்பை ரகுவுடையதன்று அதனால் அந்த பணப்பை அவரிடம் திருப்பி தரமுடியாது ரவி மிகநேர்மையாக அந்த பணப்பையை கொண்டுவந்து கொடுத்ததால் அவருடைய நேர்மையை மெச்சும் பொருட்டு அந்த ரூ.10இலட்சம் பணப்பையை நீதிமன்றம் ரவியிடமே வழங்கிடுமாறு உத்திரவிடுகின்றது" என நீதிபதி தீர்ப்பளித்தார். தந்திரமாக ரவிசம்பாதித்தில் பணம் ஏதேனும் சேர்த்து வைத்திருந்தால் அதனை அபகரிக்கும் நோக்கத்தோடு வழக்கு தொடுத்த ரகு எனும் பேராசைக்காரர் தன்னுடைய பணத்தையும் சேர்ந்து இந்த தீர்ப்பின் வாயிலாக இழக்கநேர்ந்தது இதைத்தான்கெடுவான் கேடுநினைப்பான் என பழமொழியாக கூறிடுவார்கள்

ஞாயிறு, 26 ஆகஸ்ட், 2018

பணத்தால் எல்லாவற்றையும் வாங்க முடியாது


ராமு எனும் பத்து வயது சிறுவன் அவனுடைய பெற்றோருக்கு ஒரேயொரு மகனாவான் ஆயினும் தினமும் ராமு விழித்தெழுமுன் அவனுடைய தந்தை தன்னுடைய வியாபார நிறுவனத்தை நிருவகிக்க சென்றுவிடுவார் அதனை தொடர்ந்து இரவு ராமு தூங்கிய பின்னரே மீண்டும் திரும்பி வீடுவந்துசேருவார் ஒரு நாளாவது தன்னுடைய தந்தையுடன் மாலைநேரத்தில் சேர்ந்து விளையாடலாம் என ராமு நீண்டநாட்களாக ஏங்கி கொண்டிருந்தான் ஆனால் அதற்கான வாய்ப்பே இதுவரையில் கிடைக்கவேயில்லை

ஆனால் ஒருநாள் மட்டும் மிக உலகமகா அதிசயமாக ராமுபள்ளிமுடிந்து வீடுவந்து சேரும்போது அவனுடைய தந்தையானவர் வீட்டில் இருந்தார் "அப்பா இந்த மாலை நேரத்தில் நான் உங்களை நம்முடைய வீட்டில் பார்ப்பது மிக அதிசயமாக இருக்கின்றதே" என வினவினான் ராமு "ஆமாம் ராமு இன்று நான் கலந்து கொள்ளவேண்டிய குழுக்கூட்டம் ரத்துசெய்யப்பட்டது அதனால் வீட்டிற்கு வந்து சேர்ந்தேன் ஆனாலும் இன்னும் ஒருமணிநேரத்தில் நான் திருச்சிக்கு செல்லும் விமானத்தை பிடிக்கவேண்டும் அதனால் தேவையான பொருட்களை எடுத்து செல்லவீட்டிற்கு வந்தேன்" என அவனுடைய தந்தையானவர் பதிலளித்தார் தொடர்ந்து ராமு"நீங்கள் திருச்சியில்இருந்து எப்போது திரும்பி வருவீர்கள்?"என வினவியபோது அவனுடைய அப்பா "நாளை மதியம்." என பதில் கூறினார் ராமு சிறிதுநேரம் ஆழ்ந்த சிந்தனையுடன் இருந்தபின்னர் , "அப்பா, நீங்கள் ஒரு வருடத்தில் எவ்வளவு சம்பாதிக்கிறீர்கள்?" என்று ராமு கேட்டான்.

இதனை கேட்டவுடன் ராமுவின் அப்பாவானவர் மிகவும் அதிர்ச்சி அடைந்தார். இருந்தபோதிலும், " மகனே, அது மிகப்பெரிய தொகை, அதை உன்னால் கணக்கிட்டு புரிந்து கொள்ள முடியாது." என அவனுடைய அப்பா ராமுவிற்கு விளக்கமளித்தார் தொடர்ந்து"சரி அப்பா, நீங்கள் சம்பாதிக்கும் அளவுக்கு சந்தோஷமாக இருக்கிறீர்களா?" என ராமு மீண்டும் தன்னுடைய அப்பாவிடம் வினவினான் அதனைதொடர்ந்து "ஆம் மகனே. நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன், உண்மையில் ஒரு சில மாதங்களுக்குள் நம்முடைய நிறுவனத்தின் புதிய கிளையொன்றை திருச்சியில் துவங்க திட்டமிட்டுள்ளேன் அதற்கான முன்னேற்பாடு செய்வதற்காகத்தான் இன்று திருச்சி செல்லவிருக்கின்றேன் பணிமுடிந்து நாளை மாலைவீடு திரும்பலாம் என திட்டமிட்டிருக்கின்றேன் மேலும் ஒரு புதிய வியாபாரத்தை தொடங்கவும் திட்டமிட்டுள்ளேன். அது பெரிதல்லவா? "என ராமுவின் தந்தை விளக்கமாக கூறினார்

உடன் "ஆமாம், அப்பா. அதை கேட்க மிக மகிழ்ச்சியாக இருக்கின்றது. ஆனாலும் நான் இன்னும் ஒரு கேள்வி மட்டும் உங்களிடம் கேட்கலாமா? " என தனது தந்தையிடன் ராமு கோரிக்கை வைத்தான் ராமுவின் தந்தை "அதற்கென்ன மகனே தாராளமாக என்னிடம் நீ கேள்வி கேட்கலாம் ." என பதிலிறுத்தார்

அதனை தொடர்ந்து "அப்பா, நீங்கள் நாளொன்றிற்கு எவ்வளவு சம்பாதிக்கமுடியும் ?" என்ற வினாவினை அவனுடைய தந்தையிடம் வைத்தான் உடன் அவனுடைய தந்தையானவர் மிகவும் தடுமாறி"ராமு, நீ ஏன் இந்த கேள்வியை கேட்கிறாய்?" என பதில்கேள்வி கேட்டார் ராமு தொடர்ந்து . "தயவுசெய்து .நீங்கள் ஒரு மணி நேரத்துக்கு எவ்வளவு சம்பாதிக்கின்றீர்கள் என்றாவது என்னிடம் சொல்ல முடியுமா? "எனகேட்டான் அதனால் ராமுவின் தந்தையானவர், "ஒரு மணி-நேரத்திற்கு சுமார் ரூ.250 / இருக்கலாம் மகனே." என பதில் கூறினார் அதனை தொடர்ந்த ராமு விறுவிறுவென வீட்டின் மாடியில் அவனுக்கு ஒதுக்கப்பட்ட அறைக்கு ஓடிச்சென்று சேமிப்பு உண்டியலை கையில் எடுத்து கொண்டு திரும்பிவந்து அதனை திறந்து எவ்வளவு சேமிப்பு என எண்ணிய போது ரூ500 இருந்தது

இந்தாருங்கள் அப்பா என அந்ததொகையை அவனுடைய அப்பாவிடம் கொடுத்து நீங்கள் இரண்டுமணிநேரத்தில் சம்பாதிக்கும் தொகை இது அப்பா நான் இப்போதே உங்களுக்கு முன்பணமாக கொடுத்துவிட்டேன் நாளை மாலை திருச்சியில் இருந்துவந்தவுடன் இரண்டுமணிநேரம் மட்டும் மெரினா கடற்கரைக்கு என்னுடன் வந்து என்னுடன்சேர்ந்து விளையாடமுடியுமா சேர்ந்து இரவு உண்ணமுடியுமா உங்களுடைய நாளைய நிகழ்ச்சி நிரல் அட்டவணையில் என்னுடன் சேர்ந்து இருப்பதற்கும் விளையாடுவதற்கும் நேரம் ஒதுக்கமுடியுமா என கோரிக்கை வைத்தான் ராமு

அதை கேட்டவுடன் ராமுவினுடைய அப்பாவானவர் அப்படியே அயர்ந்து அமர்ந்துவிட்டார் தொடர்ந்து "மகனே நாளை என்ன இன்றே மெரினா கடற்கரைக்கு நாம் அனைவரும் செல்வோம்" என தன்னுடைய திருச்சி செல்லும் முடிவை வேறொரு நாளைக்கு ஒத்திவைத்து விட்டார் ஆம் நாம் எப்போதும் பணம் பணம் என அலைந்து கொண்டிருக்கின்றோமே தவிர நம்முடைய பிள்ளைகளுடன் குடும்பத்தாருடன் ஒருநாள்கூட சேர்ந்து இருப்பது மிகஅபூர்வமான செயலாகிவிட்டது பணத்தினால் உலகில்உள்ளஅனைத்தையும் வாங்க முடியாது! என்ற உண்மைநிலைய மனதில் கொள்க

வெள்ளி, 10 ஆகஸ்ட், 2018

மற்றவர்களின் மனம் புண்படுமாறு கின்டல் செய்யாதீர்


கல்லூரியில் பயிலும் இளைஞர்கள் சிலர் குழுவாக இந்திய நாட்டின் தலைநகரான புதுதில்லிக்கு சுற்றலா சென்றிருந்தனர் அங்கு முக்கியமான இடங்களை சுற்றிபார்ப்பதற்கு பஞ்சாபி நபர் ஒருவரின் வாடகை வண்டியை அமர்த்தி கொண்டு தங்களுடைய பயனத்தை துவக்கினார் பஞ்சாபிநபரின் தலைப்பாகையையும் தாடியையும் பார்த்தவுடன் இளைஞர்கள் சர்தர்ஜி ஜோக்குகளை நாள்முழுவதும் சொல்லி கிண்டலும் கேலியுமாக சிரித்து பேசி கும்மாளமிட்டவாறு பார்க்கவேண்டிய இடங்களை பார்த்து கொண்டு தங்களுடைய பொழுதை கழித்தனர் ஆயினும் அந்த வாடகைவண்டியின் வண்டியோட்டுநர் இந்த இளைஞரகளின் கிண்டல் கேலி பேச்சுகளை காதில் கேட்டாலும் அமைதியாக தன்னுடைய பணியை பார்த்து கொண்டிருந்தார் முடிவாக அன்று இரவு வாடகை வண்டியை விட்டு இறங்கும்போது அதற்கான வாடகை தொகையை இளைஞர்கள் அந்த வாடகை வண்டி ஓட்டுநரிடம் வழங்கி தீர்வுசெய்திடும்போதுமட்டும் தம்பிகளே இங்கு வாருங்கள் என அந்த வாடகை வண்டி ஓட்டுநர் கல்லூரி இளைஞர்கள் அனைவரையும் தன்னுடைய அருகில் அழைத்து ஒவ்வொருவரிடமும் ஐந்து ஐந்து ரூபாய் நாணயங்களை வழங்கி தம்பிகளே இந்த ஐந்துரூபாய் நாணயத்தை யாராவது பஞ்சாபி பிச்சைகாரர் மட்டும் உங்களுடைய கண்களில் தென்பட்டால் அவருக்கு பிச்சையிடுங்கள் என கூறினார் உடன் அனைவரும் ஐயா இன்று நாள்முழுவதும் ஒரு பஞ்சாபி பிச்சைகாரரைகூட நாங்கள் பார்க்கவே இல்லையேநாங்கள் எங்கு போய்தேடி இந்த ஐந்து ரூபாயை பிச்சையிடுவது என எங்களுடைய சந்தேகத்தை எழுப்பியபோது தம்பிகளே பஞ்சாபியர்களாகிய நாங்கள் உழைத்து அதில்கிடைக்கும் ஊதியத்தில் மட்டுமே வாழ்வோம் பிச்சை எடுக்கமாட்டோம் என்பதை மனதில் கொள்ளுங்கள் என அவர்கூறியதும் எங்களுடை நெஞ்சில் சுருக்கென்ற ஊசியால் குத்தியதைபோன்ற வலியுடன் அ்மைதியாகிவிட்டமோம்

வெள்ளி, 3 ஆகஸ்ட், 2018

மதிப்பு மிக்க வளங்களை வீணாக்காதீர்


ஜெர்மனியானது அதிகஅளவிற்கு தொழிலகங்களை கொண்ட மிகுந்த பணக்கார நாடாகும் அதனால் அங்கு வாழும் மக்கள்மிகவும் வசதியான வாழ்க்கையுடைவர்கள் ஆவார்கள் அவ்வாறான நாட்டின் லக்ஸம்பர்க் எனும் நகரத்தில் நாங்கள் ஒருமுறை அந்நாட்டு நண்பர் ஒருவருடைய துனையுடன் சுற்றுலாவாக சென்றிருந்தோம் மதியம் சாப்பாட்டுநேரம் தாண்டிகொண்டிருந்த சமயத்தில் நாங்கள் அதிக பசியுடன் ஒரு உணவகத்திற்குள் நுழைந்தபோது அங்கு உணருந்துவதற்காக போடப்பட்டிருந்த இருக்கைகள் பெரும்பாலும் காலியாகவே இருந்தன என்ன இவ்வளவு பெரிய நகரில் இந்த உணவகம் காலியாக இருக்கின்றதே நம்முடைய இந்தியநாட்டின் ஒரு நடுத்தர நகரத்தின் உணவகம் என்றாலும் இதுபோன்றநேரத்தில் கூட்டம் அலைமோதுவதுபோன்று இருக்குமே என ஆச்சரியமாக இருந்தது மேலும் அங்கு இருக்கைகளில் அமர்ந்து உணவருந்தி கொண்டிருந்தவர்களும் ஒருசில வகை உணவுகளையே அவர்களுக்கு முன்இருந்தன அதிலும் அவ்வாறான எளிய உணவுவகைகளையும் முழுவதுமாக உண்டு உணவு வைத்திருந்த பாத்திரங்களை சுத்தமாக காலிசெய்திருந்தனர் நாங்கள் மிகவும் பசியோடு இருந்ததால் எங்களுக்குஅந்நாட்டு நண்பர் ஏராளமான உணவுவகைகளை கொண்டுவருமாறு உத்திரவிட்டு அதற்கான தொகையும் செலுத்தியிருந்தார் நாங்கள் எங்களுக்கு வழங்கிய உணவுவகைகளில் மூன்றில் இருபங்கு அளவு மட்டுமே சாப்பி்ட்டோம் மிகுதி ஒருபங்கு அளவிற்கு அப்படியே பாத்திரங்களில் வைத்துவிட்டு கைகழுவ எழுந்து சென்றபோது அருகில் உணவருந்திகொண்டிருந்த வயதானவர் ஒருவர் ஆங்கிலத்தில் "தம்பிகளே உங்களுங்கு வழங்கபட்டஉணவுவகைகளை முழுவதுமாக உண்டு காலிசெய்தபின்னர் கைகழுவ எழுந்து செல்லுங்கள்" என அறிவுரைகூறினார் "நாங்கள்தான் எங்களுக்கு வழங்கப்பட்ட உணவிற்கான தொகை முழுவதும் செலுத்திவிட்டோமே அதனால் எங்களுக்குவழங்கப்பட்ட உணவுவகைகளை முழுவதும் சாப்பிடுவதும் அல்லது மிகுதி வீணாக்குவதும் எங்களுடைய விருப்பம்தானே" என நாங்கள் பதில்கூறியவுடன் உடன் கைபேசியில் அரசுஅதிகாரிகளிடம் வயதானவர் ஏதோ பேசியவுடன் அரசுஅலுவலர்கள் இருவர் வந்து நாங்கள் உணவுகளை வீணாக ஆக்கியதற்கு 50யூரோ டாலர் அளவிற்கு அபராதம் செலுத்துமாறு கட்டளையிட்டனர் உடன் அவர்களிடம் "நாங்கள்தான் எங்களுக்கு வழங்கப்பட்ட உணவுவகைமுழுவதற்கும் கட்டணம் செலுத்திவிட்டோமே" என விவாதித்தபோது "கட்டணம் செலுத்தினாலும் அந்த உணவுவகைகளை நாங்கள் பெறாமல் இருந்திருந்தால் அவை வேறுயாருக்காவது பயன்படுமல்லவா" என அறிவுரை கூறியதோடுமட்டுமல்லாமல் அபராத தொகையை எங்களிடம் பெற்று கொண்டுபின்னரே எங்களை வெளியில் செல்லவிட்டனர் இந்தியாவில் இவ்வாறான நடைமுறை எந்தகாலத்திற்கு செயல்படுத்துபடுமோ அப்போதுதான் நம்முடைய நாடும் வளமிகுந்தததாக உயரும் என்பது திண்ணம்

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...