சனி, 27 ஜூலை, 2019

கல்லால்அல்லது உலோகத்தால உருவாக்கப்பட்ட சிலையானது நம்முடைய கோரிக்கையை எவ்வாறு நிறைவேற்றமுடியும்


நானும் எங்களுடைய சிறிய மகளும் கோயில் ஒன்றிற்கு சென்றோம் கோயிலின் முகப்பிற்கு சென்றபோது உண்மையான சிங்கம் ஒன்று நம்மை நோக்கி பாய்ந்து வருவதை போன்றிருந்த அந்த கோவிலின் தூனிலிருந்த சிற்பத்தை பார்த்த எங்களுடைய சிறியமகள் அப்பா அப்பா சிங்கம் ஒன்று நம்மை அடித்து சாப்பிடவருகின்றது அதனால் வாருங்கள்நாம் கோயிலிற்குள் போகாமல் வெளியே ஓடிவிடலாம் என கத்தி கூச்சலிட்டாள் மகளே அது உண்மையான சிங்கம் அன்று சிங்கம் போன்ற சிலைதான் அதற்குஉயிரில்லை நம்மை ஒன்றும் அடித்து கொல்லாது பயப்படாமல் வா நாம் இந்த கோயிலின் உள்பகுதிக்கு செல்வோம் என ஆறுதல் கூறி பயத்தை போக்கியபின்னர் கோவிலின் உட்பகுதிக்கு சென்றோம் அப்போது எங்களுடைய மகள் அதெல்லாம் சரியப்பா இதுஅது சிலைதான் அதனால் உண்மையான சிங்கம் போன்று நம்மை எதுவும் செய்யாது என கூறுகின்றீர் ஆனால்இந்த கோயிலின் உட்புறம் இருக்கின்றதே கடவு சிலைள் அதுவும் சிலைதானே அதுமட்டும் எப்படி நம்முடைய குறைகளனைத்தையும் தீர்த்து வைக்கமுடியும் என பதில் கேள்வி கேட்டவுடன் எங்களுடைய சிறிய மகளின் கேள்விக்கு என்னால் பதில் பேசமுடியாமல் நின்றுவிட்டேன் அதுவும் உண்மைதானே நட்ட கல்லை சுற்றியே நான்கு பூக்களை வைத்திட்டால் சுற்றிசுற்றி வந்து சாமி சாமி என கும்பிடுவர் நட்டகல்லும் பேசுமோ நாதன் உன்உள்ளிருக்கையில் என முன்டாசு கவிஞர் பாரதியார் கூறிசென்றார் நாம் முயன்று நம்முடைய செயல்களை செய்திடாமல் கல்லால்அல்லது உலோகத்தால உருவாக்கப்பட்ட சிலையானது நம்முடைய கோரிக்கையை எவ்வாறு நிறைவேற்றமுடியும்

சனி, 20 ஜூலை, 2019

தர்பூசனி பயிரிட்ட விவசாயியும் கிராமத்து சிறுவர்களும்


ஒரு கிராமத்தில் ஒரேயொரு விவசாயிமட்டும் கோடைகாலத்தில் பயன்படும் தர்பூசனியை தன்னுடைய நிலத்தில் பயிரிட்டிருந்தார் அவருடைய விளைநிலம் முழுவதும் தர்பூசனிபழம் பழுத்திருந்தன ஆயினும் சிறுவர்கள் அவர் இல்லாத நேரத்தில் அவருடைய கொல்லைக்கு வந்து தர்பூசனி பழத்தை அறுத்து சாப்பிட்டு சென்றனர் இதனை எவ்வாறு தடுப்பது என சிந்தித்து கடைசியாக எச்சரிக்கை இந்த கொல்லையில் விளைந்த தர்பூசனி பழத்தில் ஒன்றுமட்டும் சயினைடு விசம் கலந்தது என்ற அறிவிப்பு பலகை ஒன்றினை கட்டி தொங்கவிட்டு சென்றார் அதன்பின்னர் அந்த கிராமத்து சிறுவர்கள் தர்பூசனி பழத்தை அறுத்து சாப்பிடலாம்என அங்கு வந்தபோது இந்த எச்சரிக்கை பலகையை கண்டவுடன் ஒரே ஓட்டமாக ஓடிவிட்டனர் ஆயினும் ஒரு சிறுவன் மட்டும் சிறிது நேரம் ஆலோசித்து அதே அறிவிப்பு பலகையில் ஒன்றன்று இரண்டில் மட்டும் சயினைடு விசம் கலந்தனவாகும் என எழுதி வைத்து விட்டு சென்றான் அதன் பிறகு அந்த விவசாயி திரும்ப வந்து இந்த எச்சரிக்கையை பார்த்தவுடன் ஐயய்யோ என்னுடைய கொல்லையில் விளைந்த தர்பூசனி பழம் எதையும் பறித்து விற்கமுடியாது போய்விட்டதே என தலையில்கைவைத்து கொண்டு உட்கார்ந்துவிட்டான்

சனி, 13 ஜூலை, 2019

மனதினை தொந்திரவு எதுவும் செய்திடாமல்அமைதியாக இருந்தால் மனதும் தானாகவே தெளிவாகி விடும்


கௌதம புத்தர் தன்னுடைய சீடர்களுடன் அடுத்தகிராமத்திற்குசென்று கொண்டிருந்தார் அப்போது கோடைகாலமாதலால்அதிக தாகமாக இருந்தது அதனால்தன்னுடைய சீடர்களுள் ஒருவனிடம் அருகில் ஓடிகொண்டிருந்த ஓடையில் தண்ணீரை மண்பாத்திரத்தில் முகர்ந்து கொண்டுவருமாறு கோரினார் அந்த சீடன் ஓடைக்கு சென்று தண்ணீரை கொண்டுவராமல் திரும்பி வந்தான் ஏன்என வினவினார் "ஐயா அங்கு ஒருசிலர் குளித்து கொண்டும் துனிகளை துவைத்தும் கொண்டும் இருப்பதால் கலங்களாக உள்ளது அதனை குடிக்க முடியாது" என பதில் கூறினான் சரி என சிறிதுநேரம் அருகிலிருந்த ஆலமரநிழலில் சிறிது நேரம் ஓய்வெடுத்தார் சிறிதுநேரத்திற்கு பின்னர் "ஓடையில் யாரும் இல்லை இப்போது சென்று தண்ணீர் கொண்டுவா" என கட்டளையிட்டார் சீடனும் மண்பாத்திரத்தில் தண்ணீர் கொண்டுவந்து புத்தருக்கு கொடுத்தான் "இப்போது கலங்களாக இல்லாமல் ஓடையின் தண்ணீர் தெளிவாக இருக்கின்றது" என சீடன் கூறினான் "அந்த ஓடையின் தண்ணீர் தெளிவடைந்து செல்வதற்கு நீ ஏதாவது முயற்சி செய்தாயா" என வினவினார் புத்தர் .சீடன் "நான் ஒன்றும் செய்யவில்லை ஆட்கள் போகும் வரை சிறிது நேரம் காத்திருந்தேன்" என பதிலிருத்தான் சீடன்.அதேபோன்றே மனதினை தொந்திரவு எதுவும் செய்திடாமல்அமைதியாக இருந்தால்தானாகவே தெளிவாகி விடும் என அறிவுறுத்தினார்

சனி, 6 ஜூலை, 2019

பிரச்சினை எதிர்கொண்டால் குறையை மட்டும் கூறுவோமே தவிர அதனை தீர்வுசெய்ய முயற்சி செய்யவேமாட்டோம்


ஒரு மனிதன் நகரத்தில் பெரிய சாலையில் நடந்து போய்கொண்டிருந்தான் அப்போது சாலையின் நடுவில் பெரிய கல்ஒன்று தடங்கலாக இருந்தது கண்ணுற்றதும் "சே சாலையின் குறுக்கே நடப்பவர்களுக்கு இடைஞ்சலாக இவ்வாறு தடையேற்படுத்தி விட்டார்களே அவர்களை சும்மா விடக்கூடாது கடுமையான தண்டனை வழங்கவேண்டும்" என திட்டிகொண்டு ஒதுங்கி சென்றான் அவ்வாறே அடுத்தடுத்துஅந்த சாலைவழியாக நடந்து சென்றவர்கள் அனைவரும் வாயால் திட்டிகொண்டும் குறைகூறிகொண்டும் சென்று கொண்டிருந்தனர் இந்நிலையில் ஒரு இளைஞன் அதே வழியே நடந்து வந்து கொண்டிருந்தான் அவன் இந்த கல்லை பார்த்து விட்டு "அடடா இந்த கல்லானது நடப்பவர்களுக்கு தடையாக இருக்கின்றதே இதனை சாலை ஓரத்திற்கு நகர்த்துவோம்" என மிககடுமையாக முயன்று அந்த கல்லை புரட்டி தள்ளிசாலையின் ஓரத்திற்கு நகர்த்தினான் அப்போது அந்த கல்லிற்கு கீழ்பகுதியில் ஒரு துண்டு சீட்டு இருந்தது அதில் "நண்பரே நீர்தான் இந்த நாட்டிற்கு உண்மையான செல்வம் உன்னை போன்றவர்களால்தான் இந்த நாடு வளமும் வெற்றியும் பெற்றுக் கொண்டிருக்கின்றது மேலும்பெறப்போகின்றது வாழ்த்துகள்!” என இருந்தது ஆம் நம்மில் பெரும்பாலானோர் எந்தவொரு பிரச்சினை எதிர்கொண்டாலும் அதனை பற்றி வாயால் குறையை மட்டும் கூறுவோமே தவிர அதனை தீர்வுசெய்ய நம்மால் முடிந்த அளவிற்கு முயற்சி செய்யவேமாட்டோம்

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...