சனி, 30 நவம்பர், 2019

தந்தையும் அவருடைய மகன்களும்


ஒரு தந்தைஅவருடைய இரண்டு மகன்களுடன் வாழ்ந்து வந்தார் ஆனாலும் அந்த குடும்பத்தில் எப்போதும் சண்டையும் சச்சரவுமாக இருந்துவந்தது, அதாவது அவருடைய இரண்டு மகன்களும் தங்களுக்குள் தொடர்ந்து எப்போதும் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். அவர்களின் சச்சரவுகளுக்கு தன்னுடைய தனது அறிவுரைகளால் எவ்வளவு கடுமையாக முயன்றும் தீர்வு காணமுடியவில்லை சரிஎன இறுதியாகஇன்னும் ஒருமுறை மட்டும் முயற்சி செய்திடுவோம் என , ஒற்றுமையின் நன்மையை அவ்விருவரும் தெரிந்து கொள்வதற்கு ஒரு நடைமுறை விளக்கத்தை வழங்க அவர் தீர்மானித்தார்.அதன்பின்னர் ஒரு நாள் தன் மகன்களிடம் தங்களுடைய வீட்டில் அடுப்பு எரிப்பதற்கு விறகு ஒன்றுகூடஇல்லை அதனால் அருகிலிருக்கும் காட்டிற்கு சென்று ஆளுக்கு ஒரு கட்டு சுள்ளி குச்சிகளைக் சேகரித்து கொண்டு வரச் சொன்னார். அவ்விருவரும் அவ்வாறு கொண்டுவந்தார்கள் அதனை தொடர்ந்து அவ்விருவரிடமும் அந்த சுள்ளிகள் மிகநீளமாக உள்ளன அடுப்பில் வைத்து எரிப்பதற்கு ஏதுவாகசிறு சிறு துண்டுகளாக உடைத்து கொடுக்குமாறும் ஆனால் விறகுகள் கட்டப்பட்ட கட்டினை மட்டும் அவிழ்க்காமல் அவைகளை உடைத்து சிறுசிறு துண்டுகளாக ஆக்கிடுமாறு கோரினார் அவர்கள் இருவரும் தாங்கள் கொண்டுவந்த விறகு கட்டுகளை அவிழ்க்காமல் சிறு சிறுதுண்டுகளாக உடைத்திட முழு பலத்தோடு முயற்சித்தார்கள், ஆனாலும் அவர்களால் அவ்வாறு உடைத்திட முடியவில்லை. பரவாயில்லை பிள்ளைகளே நீங்கள் கொண்டுவந்த விறகுகளின் கட்டினை அவிழ்த்துவிட்டு சிறு சிறுதுண்டுகளாக உடைத்திட முயற்சி செய்யுங்களேன் என ஆலோசனை கூறினார் என்ன ஆச்சரியம் அவ்விரும் தங்களுடைய விறகுகட்டுகளை அவிழ்த்த பின்னர் தனித்தனியாக குச்சிகளை உடைத்திடமுயன்றபோது எளிதாக உடைக்கமுடிந்தது விரைவில் தாங்கள் கொண்டுவந்த கட்டுகளிலிருந்த குச்சிகள் முழுவதையும் சிறு சிறுதுண்டுகளாக உடைத்து முடித்து விட்டார்கள் அதன்பின்னர் தன்னுடைய மகன்கள்இருவரிடமும் “பிள்ளைகளே பார்த்தீர்களா சிறு சுள்ளிகுச்சிகள் ஒன்றாக கட்டுகளாக இருந்தபோது என்னதான் கடுமையாக முயன்றாலும் உங்களால்உடைத்திட முடியவில்லை் ஆனால் அந்த கட்டினை அவிழ்த்தவுடன் எவ்வளவு எளிதாக உடைக்க முடிந்தது அதுபோன்று நீங்கள் இருவரும் ஒற்றுமையாக இருந்தால் நன்கு பலமாக இருந்து உங்களுடைய வாழ்வில் வெற்றி பெறுவீர்கள் ஒற்றுமையில்லாமல் பிளவுபட்டிருந்தால் இந்த குச்சிகளைப் போலநீங்கள் வாழ்வில் வெற்றிபெற முடியாது என அறிவுரை கூறினார் நீதி ஒற்றுமையே நல்ல வலிமையாகும்

புதன், 27 நவம்பர், 2019

புதிய சரக்கு சேவைவரியின் கீழான மின்வழிபட்டியல் எனும் வசதி


மின்வழிபட்டியல்( E-wayBill) என்பது சரக்கு சேவை வரியின் கீழ் பொருளின் மதிப்பு ரூ.50000/-இற்கு மேல் இருந்தால் கண்டிப்பாக பொருந்தும் அதற்கு குறைவாக இருந்தால் விருப்பபட்டால் மட்டும் பயன்படுத்தி கொள்க பொருள் வழங்குபவர் இருக்கும் இடத்திற்கும் பொருளினை பெறுபவரின் இடத்திற்கும் இடைபட்டதூரம் பத்துகிலோமீட்டர் வரையிலும் தேவையில்லை அவ்வாறே இருவரும் ஒருமாநிலமென்றாலும் தேவையில்லை விற்பணையாகும் அனைத்து பொருட்களும் இந்த மின்வழிபட்டியல் விற்பணைபட்டியல்அல்லது பொருள்வழங்கும் பட்டியலுடன் மட்டுமே எடுத்து செல்லவேண்டும் இந்த மின்வழிபட்டியலானது பகுதி அ (Part A) ,பகுதி ஆ (Part B) ஆகிய இருபகுதிகளைகொண்டது பகுதி அ (Part A) இல் பெறுபவரின் GSTIN எண், வழங்குவதற்காக கொண்டுசெல்லும் இடத்தின் பெயர்(Place of delivery), விற்பணை பட்டியலின் அல்லது பொருள் வழங்கும் பட்டியலின் எண் (Invoice/DC No), விற்பணை பட்டியலின் அல்லது பொருள் வழங்கும் பட்டியலின் நாள் (Invoice/DC date), பொருளின் மதிப்பு (Value of goods), அந்த பொருளிற்கான HSN குறியீட்டு எண் (Codeno) வாகணத்தின் ஆவணஎண் (Transporter Document No) ஆகிய விவரங்கள் உள்ளடங்கியிருக்கும் பகுதி ஆ (Part B) இல் இந்த பொருளை எடுத்துசெல்லும் வாகணத்தின் எண் (vehicle number) விவரம் குறிக்கப்பட்டிருக்கவேண்டும் இந்த மின்வழிபட்டியலானது தூரம் நூறு கிமீட்டர் எனில் ஒருநாள் செயலில் இருக்கும் அதற்குமேல் ஒவ்வொரு நூறு கிமீட்டருக்கும் ஒவ்வொருநாள் கூட்டியவாறு செயலில் இருக்கும் ஒவ்வொரு விற்பணைபட்டியலிற்கும் ஒவ்வொரு மின்வழிபட்டியல் இருக்கவேண்டும் அதாவது ஒரு வாகணத்தில் எத்தனை( பொருட்கள் அன்று) விற்பணை பட்டியலிற்கான பொருட்கள் இருக்கின்றதோ அத்தனை மின்வழிபட்டியல் இருக்கவேண்டும் மாநிலங்களுக்கு இடையேயான பொருட்களின் விற்பணைக்கு 1.02. 2018 முதல் கண்டிப்பாக கடைபிடிக்கவேண்டும் மாநிலத்திற்குள் அல்லது மாநிலங்களுக்கு இடையே என அனைத்து பொருள் போக்குவரத்திற்கும் எனில் 1.06.2018முதல் கண்டிப்பாக கடைபிடிக்கவேண்டும் இணையதளத்தில் GST INV-1 என்ற படிவத்திற்கான விவரங்களை வழங்கினால் EWB-01எனும் இந்தமின்வழிபட்டியல் தானாகவே உருவாக்கப்பட்டு நாம் அச்சிடுவதற்கு தயாராகி விடும் ஒருங்கிணைந்த பட்டியலே EWB-01ஆகும் இடையில் வாகணத்தினை நிறுத்தி ஆய்வுசெய்திடும்போது EWB-03என்ற பட்டியிலின்பகுதி அவில் பதிவாகும் அரைமணிநேரத்திற்குமேல் வாகணம் தடைபடுமானால் உடன் வாகணஉரிமையாளர் EWB-04 என்ற படிவத்தில் தங்களுடைய விவரங்களை சமர்ப்பிக்கவேண்டும்

சனி, 23 நவம்பர், 2019

தீங்கு விளைவிப்ப வர்களிடமிருந்து தூரமாக விலகி செல்க


மிகவும் அதிக குளிரான பனிகாலத்தில் ஒருநாள் அதிகாலையில் விவசாயி ஒருவர் தன்னுடைய வயல் வழியாக நடந்து சென்றுகொண்டிருந்தார். அவருடைய நிலத்தில் தரையெல்லாம் பனிக்கட்டியால் உறைந்த நிலையில் பாம்பு ஒன்று அவ்விடத்தில் நகர்ந்து செல்வதற்கு முயன்றும் முடியாமல் பணிகட்டியால் உறைந்திருந்ததை கண்ணுற்றார். அந்த பாம்பு ஆனது உயிர்வாழ்வதற்காக வே முடியாத எவ்வளவு ஆபத்தான மாட்டிகொண்டுள்ளது என இரக்கப்பட்டு அந்த பாம்பினை அந்த சூழலிலிருந்து எடுத்து மீண்டும் பழையவாறு உயிர்தப்பிக்க உதவிடவேண்டும் எனமுடிவுசெய்து கையில் ஒருகுச்சியை எடுத்து அதன்மூலம் அந்த பாம்பினை மிககடினமாக முயன்று எடுத்து தன்னுடைய வீட்டிற்கு கொண்டு வந்துசேர்ந்தார். அவருடைய வீட்டில் குளிரை விரட்டிடுவதற்கான வெப்பமூட்டும் இயந்திரம் இருந்ததால் அந்த பாம்பு விரைவில் புத்துயிர் பெற்றது, அதனோடு அது ஊர்ந்து நகர்ந்து செல்வதற்கு போதுமான வலிமை யும் பெற்றுவிட்டது, அதன்பின்னர் தான் குளிரில் விரைத்து இறக்கபோகின்ற நிலையில் தன்னை அங்கிருந்து எடுத்து கொண்டு வந்த காத்திட்ட அந்த விவசாயியை கடித்தது. அதனால் அந்தவிவசாயி பாம்பின் விஷம் உடல்முழுதும் பரவி இறக்கபோகும் நிலைக்கு ஆளானார் அந்நிலையில் அவருடைய உறவினர்கள் அவரை சுற்றி மிக சோகமாக அமர்ந்திருந்தனர் . அவர் தனது கடைசி மூச்சை விடும் நிலையில் தன்னை ,சுற்றி இருந்த உறவினர்களிடம், “ஒரு துரோகி மீது பரிதாபப்படக்கூடாது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்” என்றார். நாம் எவ்வளவுதான் நல்ல முறையில் நடந்து கொண்டு நல்லது செய்தாலும், தங்களின் தன்மையை ஒருபோதும் மாற்றாத மாற்றிகொள்ளாத மாற்ற விரும்பாத ஒருசில தீங்கு விளைவிப்பவர்கள் இருக்கின்றார்கள். அதனால் எப்போதும் விழிப்புடன் , அவர்களிடமிருந்து தூரமாக விலகி செல்க என அறிவுறுத்தப்படுகின்றது.

சனி, 16 நவம்பர், 2019

மற்றவர்கள் ஏமாற்ற முயற்சிக்காதீர்கள்


ஒருகிராமத்து விவசாயி ஒருவர் தனது நிலத்திலிருந்த கிணற்றை மற்றொரு விவசாயிக்கு விற்றார். அடுத்த நாள் அந்த கினற்றினை வாங்கிய விவசாயி ஆனவர் தன்னுடைய நிலத்தில் இருந்த பயிர்களுக்கு தண்ணீரை பாய்ச்சுவதற்காக அந்தக் கிணற்றிலிருந்து தண்ணீரை எடுக்கச் சென்றபோது, கினற்றை விற்ற விவசாயி ஆனவர் அந்தகினற்றிலிருந்து தண்ணீரை எடுக்க அனுமதிக்கவில்லை. மேலும் அதற்கான காரணமாக அவர் , "நான் உங்களுக்கு கிணற்றை மட்டுமே விற்றேன், அதிலிருக்கும் தண்ணீரை அல்ல, எனவே நீங்கள் இந்த கிணற்றிலிருந்து தண்ணீரை எடுக்க முடியாது." என்ற கூறினார் இதனால் அந்த கினற்றைவாங்கிய விவசாயி மிகவும் சோகமாகி பேரரசர் அக்பரிடம் சென்று நிகழ்வுகள் அனைத்தையும் விவரித்து கூறி தனக்கு நீதி கேட்டார். உடன் பேரரசர் தன்னுடைய மதியூக மந்திரியான பீர்பாலிடம் ஒப்படைத்து அதற்கு தக்கதீர்வு காணுமாறு உத்திரவிட்டார் . கிணற்றை விற்ற நபரை பீர்பால் அழைத்து, “கிணற்றின் தண்ணீரை ஏன் பயன்படுத்த அனுமதிக்கவில்லை. அந்த கிணற்றை மற்றொரு விவசாயிக்கு விற்றுவிட்டீர்கள். அல்லவா ” என கேட்டார் உடன் கினற்றை விற்ற நபர்,“ ஐயா, நான் கிணற்றை மட்டுமே விவசாயிக்கு விற்றேன், அதிலுள்ள தண்ணீர் அல்ல. அதனால் அந்த கிணற்றிலிருந்து தண்ணீரை எடுக்க அவருக்கு உரிமை இல்லை. ” என பதில்கூறினார் அதனை தொடர்ந்து பீர்பால் புன்னகைத்து , “நல்லது, ஆனால் பாருங்கள், நீங்கள் இந்த விவசாயிக்கு கிணற்றை மட்டுமே விற்றுள்ளீர்கள், தண்ணீர் உங்களுடையது என்று நீங்கள் கூறுகிறீர்கள் என்பதால், உங்கள் தண்ணீரை அந்த விவசாயியின் கிணற்றில் வைத்திருக்க உங்களுக்கு உரிமை இல்லை. உங்கள் தண்ணீரை அவரது கிணற்றில் வைத்திருக்க விவசாயிக்கு நீங்கள் வாடகை செலுத்தவேண்டும், அல்லது அந்த தண்ணீரை உடனடியாக அவருடைய கிணற்றிலிருந்து வெளியே எடுத்து கொள்ளவேண்டும். ” என தீர்ப்புகூறினார் இவ்வாறு பீர்பால் தீர்ப்பு கூறியதும் கினற்றை விற்றவர் தான் மிகவும் சிக்கலில் மாட்டிகொண்டதை அறிந்து கொண்டு தான்இனி அந்த கினற்றை விற்றவருடன் தகராறு செய்து தண்ணீர் எடுப்பதை தடுக்கமாட்டேன் ஒத்துகொண்டார் நீதி :மற்றவர்கள் ஏமாற்ற முயற்சிக்காதீர்கள். நாம் எவ்வளவு புத்திசாலி என்று நினைத்தாலும் அதற்காக விலை செலுத்தவேண்டியிருக்கும் என்பதை கவணத்தில் கொள்க.

சனி, 9 நவம்பர், 2019

நூலில்லாத பட்டம்


நகரத்தில் வாழும் ஒரு தந்தையும் அவருடைய மகனும் ஒரு முறை அந்நகரத்தின் உள்ள பூங்காவில் நடத்தப்பட்ட பட்டம் பறக்க விடும்திரு விழாவை கண்டு களிக்கச் சென்றனர். அந்த பட்டம் பறக்க விடும் திருவிழாவில் வானம் முழுவதும் பல்வேறு வண்ணங்களாலான பட்டங்கள் பறந்து கொண்டு இருந்ததைக் கண்டு அவருடைய மகன் மிகவும் மகிழ்ச்சியடைந்தான். அதனை தொடர்ந்து அவருடைய மகன் தானும் வானத்தில் அவ்வாறு ஒரு பட்டத்தை பறக்கவிட விரும்புவதாகவும் அதற்காக தனக்கு அதற்கு தேவையான பட்டம் , நூல்கண்டு ஆகியவற்றை உடனடியாக வாங்கி கொடுக்குமாறு தன்னுடைய தந்தையிடம் கோரி அதிக அடம்பிடித்து அழ ஆரம்பித்தான் எனவே, அந்த பட்டம் பறக்க விடும்திருவிழா நடைபெறும் பூங்காவில் அவைகளை விற்ணைசெய்கின்ற ஒரு கடைக்கு அந்த தந்தை தன்னுடைய மகனை அழைத்து சென்றார்.அந்த கடையில் அவர் தனது மகனுக்காக பட்டம் ஒன்றினையும் தேவையானநூல்கண்டையும் வாங்கிமகனிடம் வழங்கினார் அவரது மகன்உடனடியாக அந்த பட்டத்தை நூலில் இணைத்து பறக்கவிட ஆரம்பித்தான். விரைவில், அந்த பட்டமானது வானத்தில் உயரத்தில் பறக்க ஆரம்பித்ததது. சிறிது நேரம் கழித்து, மகன், “அப்பா,இந்த நூலானது பறக்கும் பட்டத்தை அதற்குமேல் உயரமாக பறக்க விடாமல் தடுத்துவைத்திருப்பதாகத் எனக்கு தெரியவருகின்றது, அதானல் பட்டத்தை இணைத்துள்ள நூலினை அறுத்து அந்த தடையை உடைத்தவிட்டால், பட்டமானது சதந்திரமாக மேலும் உயரத்தில் பறப்பதற்கான வாய்ப்பு ஏற்படும் அல்லவா அதனால் நூலால் கட்டி இழுத்து பிடிப்பதை அறுத்துவிடட்டுமா அப்பா ? ” என சந்தேகம் எழுப்பியதை தொடர்ந்து , தந்தை பட்டமானது இணைத்து கட்டப்பட்ட நூலை வெட்டி இணைப்பினை நீக்கினார் தொடர்ந்து இழுத்து பிடித்திருந்த கட்டு அகற்றப்பட்டதால் .அந்த பட்டமானது உடனடியாக மேலே பறந்து செல்ல ஆரம்பித்தது. ஆஹா பிரமாதம் பட்டமானது சுதந்திரமாக வெகு உயரத்திற்க சென்றுவிடும் என அந்த மகன் மிகவும் குதூகலிக்க துவங்கினான் ஆனால், சிறிதுநேரம் கழித்து அந்த பட்டமான மெதுவாக, கொஞ்சம் கொஞ்சமாக கீழே வர ஆரம்பித்தது.முடிவில் அருகிலிருந்த மொட்டை மாடியில் பறக்காமல் விழுந்துவிட்டது . இதைக் கண்டு அவருடைய மகன் மிகவும் ஆச்சரியப்பட்டான். நூலினால் இணைத்து கைகளால் இழுத்து பிடித்திருந்த தடை நீக்கம் பட்டுவிட்டதால் பட்டமானது சுதந்திரமாக மேலே உயர பறக்க முடியும், ஆனால் அதற்கு பதிலாக அது ஏன் கீழே விழுந்துவிட்டது .என சந்தேகம் எழுந்தது அதனால் தனது தந்தையிடம் , “அப்பா, இணைத்திருந்த நூலை வெட்டிவிட்ட பிறகு, பட்டமானது சுதந்திரமாக மேலேஉயரத்தில் பறக்க முடியும் என நான் நினைத்தேன். ஆனால் அது ஏன் கீழே விழுந்தது? ”என்ற சந்தேகவினாவினை எழுப்பினான் அதற்கு தந்தை, “மகனே, நாம் வாழும் நம்முடைய வாழ்க்கையின் உச்சத்தில், நாம் ஒரு சில செயல்களுடன் பிணைக்கப்பட்டுள்ளோம் என்று நினைக்கிறோம், மேலும் அவை நம்மை மேலும் உயரவிடாமல் தடுக்கின்றன என்றும் தவறாக எண்ணிவிடுகின்றோம்.அந்த நூலானது பட்டத்தை உயரமாகப் பறக்கவிடாமல் இழுத்து பிடிக்கவில்லை, ஆனால் காற்று மெதுவாகச் அடிக்கும்போது பட்டமானது உயரத்தில் இருக்க உதவுகின்றது, காற்று வீசும்போது,பட்டமானது சரியான திசையில் நூல் வழியாக மேலே சென்று பறக்க உதவிகின்றது. அந் நூலை வெட்டிடும்போது, நூல் வழியாக பட்டத்திற்கு வழங்கிய ஆதரவு இல்லாமல் அது கீழே விழுந்துவிட்டது ” என விள.க்கமளித்தார் மகன் தன்னுடய தவறை உணர்ந்தான். நீதி: சில நேரங்களில் நாம் நம் குடும்பத்தினருடன், பிணைக்கப்படாவிட்டால், விரைவாக நம்முடைய வாழ்க்கையில் புதிய உயரங்களை அடைய முடியும் என்று தவறாக எண்ணுகின்றோம். ஆனால், நம்முடைய வாழ்க்கையில் கடினமான நேரத்தில் குடும்ப உறுப்பினர்கள் ஆதரவளிப்பதன் வாயிலாக நாம் தப்பிப்பிழைக்கஉதவுகிறார்கள் என்பதையும், நம் முடையவாழ்க்கையில் உயரங்களை அடைய ஊக்குவிக்கின்றார்கள் என்பதையும் உணரத் தவறிவிட்டோம். அவர்கள் நம்முடைய முன்னேற்றத்தை தடுத்து பிடித்துவைக்கவில்லை, ஆனால் நாம் முன்னேறுவதற்காக ஆதரவளிக்கிறார்கள். அதனால் குடும்ப உறுப்பினர்களை எப்போதும் அனுசரித்து ஒற்றுமையுடன் வாழமுயற்ச்சித்திடுக .

சனி, 2 நவம்பர், 2019

நம்முடைய பணியை துவங்கிடும் முன் அந்த பணியை எவ்வாறு செய்து முடிப்பது என நன்கு சிந்தித்து திட்டமிட்டு செயல்படுத்திடுக


முன்னொரு காலத்தில் மரம்வெட்டிடும் தொழிலாளி ஒருவர் மரவியாபாரியிடம் தனக்கு மரங்களை வெட்டிடும் பணிவழங்கும்படி கோரினார் அந்த தொழிலாளி நல்ல திறனுடைய வர் என்பதால் மரவியாாரியும் தன்னுடைய வியாபாரத்திற்கு தேவையான மரங்களை வெட்டிடுவதற்காகஅந்த மரம்வெட்டும் தொழிலாளியை பணியில் அமர்த்தி மரம் வெட்டுவதற்கான கோடாளி ஒன்றினை கொடுத்து அன்று காட்டில் குறிப்பிட்ட பகுதியில் மரம்வெட்டிடும் பணியை முடிக்குமாறும் சாயுங்காலம் எவ்வளவு மரம் வெட்டுகின்றாரோ அதற்கேற்ப கூலி வழங்கபெறும் என உத்திரவிட்டார் அதனை தொடர்ந்து அந்த மரம் வெட்டிடும் தொழிலாளி நாள்முழுதும் பாடுபட்டு 20 மரங்களை வெட்டி முடித்து தன்னுடைய முதலாளியிடம் அதனை காண்பித்தார் மரவியாபாரியும் ஆஹா பரவாயில்லையே இன்று 20 மரங்களை வெட்டியுள்ளாயே வாழ்த்துகள் இதேபோன்று தினமும் உன்னுடைய பணி நன்றாக இருக்கவேண்டும் என பராட்டி அன்றைய மரம் வெட்டியதற்கான கூலியை கொடுத்தனுப்பினார் மறுநாள் அந்த தொழிலாளி முதல்நாளைவிட கடுமையாக முயன்றும் 18 மரங்களை மட்டுமே வெட்டிமுடித்திடமுடிந்தது அன்றைய நாள் முடிவில் வியாபாரியும் பரவாயில்லை இன்னும் சிறிது முயற்சிசெய்திருக்கலாம் என கூறிஇரண்டாம் நாள் மரம் வெட்டியதற்கான கூலியை கொடுத்தனுப்பினார் இவ்வாறு அடுத்தடுத்த நாட்களிலும்அந்த தொழிலாளி வெட்டிடும் மரங்களின் எண்ணிக்கையானவை இரண்டிரண்டாக குறைந்து கொண்டே வந்து அந்தவாரம் முடிவில் எவ்வளவுதான் மிககடினமாக முயன்று பணிபுரிந்தாலும் அந்த மரம்வெட்டிடும் தொழிலாளியால்8 மரங்களை மட்டுமே வெட்டிமுடிக்க முடிந்தது அதனால் அன்று அந்த மரவியாபாரி என்னதம்பி தினமும் நீ வெட்டிடும் மரங்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகின்றன என வினவியபோது நீங்கள் வேண்டுமானால் நேரில் வந்து பாருங்கள் ஐயா நான் முந்தைய நாட்களைவிட மிககடுமையாக முயன்றும் வெட்டுகின்ற மரங்களின் எண்ணிக்கை யானவை குறைகின்றன காரணம்தான் எனக்கு தெரியவில்லை என அப்பாவிபோன்று கூறினார் சரிதம்பி நீ மரம் வெட்டுவதற்காக உன்னிடம் கொடுத்த கோடாளியை தினமும் கூர்தீட்டினாயா என அந்த வியாபாரி வினவியபோது அந்த மரம்வெட்டிடும் தொழிலாளியானவர் பொழுதுக்கும் மரம் வெட்டவே நேரம் சரியாக போய்இருட்டிவிடுகின்றது அப்புறம்எங்கே கோடாளியை கூர்தீட்டுவது என பதில்கூறினார் அந்த தொழிலாளி .அதெல்லாம் பரவாயில்லை தினமும் பணியை துவங்கிடும் முன் முதலில் கோடாளியை கூர்தீட்டு அதன்பிறகு மரம் வெட்டிடும் பணியை துவங்கிடு என முதலாளி கூறியதால் மறுநாள் தன்னுடைய மரம் வெட்டிடும் பணியை துவங்கிடும் முன் கோடாளியை நன்கு கூர்தீட்டியபின் மரம் வெட்டஆரம்பித்தார் என்ன ஆச்சரியம் பணியில்சேர்ந்த முதல் நாளில்வெட்டிய அளவு அன்று மரங்களை அந்த தொழிலாளியால் வெட்டிமுடிக்கமுடிந்தது அதேபோன்று நாம் அன்றன்றுநம்முடைய பணியை துவங்கிடும் முன் அந்த பணியை எவ்வாறு செய்து முடிப்பது என நன்கு சிந்தித்து திட்டமிட்டு செயல்படுத்தினால் நம்முடைய பணியின்எண்ணிக்கையும் அதன் தன்மையும் குறைவுபடாமல்தொடர்ந்து செய்து முடிக்கமுடியும் என தெரிந்து கொள்க

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...