பொதுவாக தற்போது வாழும் பெரும்பாலானமக்களின் கண்ணோட்டமானது ஏதோவொரு பாதுகாப்பான பணியில் சேர்ந்தோமா பணம் சம்பாதித்தோமா குறிப்பிட்ட வசதியில வாழ்ந்தோமா பணிஓய்வு பெற்றோமா என்பதைவிடுத்து புதியதாக தொழில் துவங்கி எதற்காக கஷ்டபடவேண்டும் என்ற மனப்பாண்மையில் நம்மில் பெரும்பாலானோர் வாழ்ந்து வருகின்றோம் என்பதே எதார்த்தமான உண்மைநிலவரமாகும் அதனால் இறுதியில் நாம் கற்பனையாககூட நம்முடைய வாழ்வின் உயர்ந்த நிலையை அடையாமல் வாழ்ந்துவருகின்றோம் மேலும் பெரும்பாலான மூத்த தொழில் முனைவோர்கள் அனைவரும்நம்மைத்தவிர வேறுஎவரும் பெரியதொரு தொழிலை துவங்கி நடத்தமுடியாதுஎன்றே தவறாக கணிக்கின்றார்கள் - ஆயினும் நாம் விரும்பும் தொழிலை சரியான சிறு தொழிலை கண்டறிவது என்பது முதலில் சாத்தியமற்றதாகத் தோன்றினாலும் அதனை தெரிவுசெய்வதேநம்முடைய பெரியமுடிவாகும் .அதனை தொடர்ந்து அதனை செயல்படுத்திடமுனையும்போது பெரும்பாலான தொழில் முனைவோர் முதலாவது படிநிலையில் விட்டுக் கொடுக்கிறார்கள் அதன்பின்னரே வெற்றி கொள்கின்றார்கள் என்ற செய்தியை மனதில் கொள்க இவ்வாறான நம்முடைய மனதில் தோன்றிய எண்ணங்களை சிறந்த தொழில்முனைவாக எவ்வாறு ஒழுங்கமைத்து செயல்படுத்திடுவது என்பதற்கான ஒரு சில ஆலோசனைகள் பின்வருமாறு
முதலாவதாக ஸ்டீவ் ஜாப்ஸ், பென் அண்ட் ஜெர்ரி போன்ற பிற தொழிலதிபர்களின் வெற்றிகரமான புதிய தொழில் துவங்குவதற்கான கருத்துகளை படித்தறியுங்கள் நாம் துவக்கவிருக்கும் நம்முடைய தொழில் முதலில் சிறியதாக துவங்கசெய்திடுக எடுத்தவுடனேயே பெரியநிறுவனமாக வெற்றிநடைபோட வேண்டும்என கற்பணைகோட்டை கட்டவேண்டாம் நம்முடையபுதிய தொழில் கருத்துக்களை முதலில் முடிந்தவரை எளிமையாக வைத்திடுக புதிய தொழில்நுட்ப ஆலோசனையிலிருந்து தொடங்கி, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, பொருட்கள் மற்றும் மனிதவள மேம்பாடு ஆகியகாரணிகளை நம்முடைய தொழில் துவங்கவதற்கான செயலின் கருத்தில் கொள்வது மிகவும் கடினமாக இருக்கும் இருந்தபோதிலும் அவற்றையும் கவணத்தில்கொள்ளவேண்டும் நம்முடைய உற்பத்திபொருளானது புதியதாகவும் மக்களிடன் தேவைஅதிகமாகவும் அதிக இலாபம் நமக்கு தருவதாகவும் இருக்கவேண்டும் அதேசமயத்தில் சந்தையில் தரமானபொருளாகவும் மிககுறைந்தவிலையில் உதாரணமாக சீனதயாரிப்பு பொருட்கள் மலிவுவிலையில் நம்முடைய ஊரிலேயே கிடைப்பது போன்று கிடைத்திடவேண்டு்ம் நம்முடைய பொருளிற்கு சந்தையில் போட்டியாளர்கள் உள்ளனரா அவர்களின் உற்பத்தி செலவு இலாப சதவிகிதம் பொருளின் தரம் ஆகியவற்றை கருத்தில் கொள்க நமமுடைய பொருள் மேம்படுத்தப்பட்டதாகவும் அழகாகவும் மக்களின் மனமகிழசெய்வதாகவும் இருக்கவேண்டும் ஆப்பில் கைபேசி இந்த அடிப்படை கருத்தமைவில் உருவாக்கப் பட்டு வெளியிடபடுகின்றன
அதுபோன்று நாம் ஒரு கார் பழுது பார்த்தல் போன்ற சேவையை வழங்குவதாக இருந்தால் இந்த காருக்கான சக்கரங்களின் டயர்களின் பழுபார்ப்பு கட்டணமில்லாமல் செய்து தரப்படும்என்பது போன்று நம்முடைய போட்டியாளர்களிடமிருந்து வித்தியாசமாக ஏதாவது ஒன்றை நம்முடைய சேவையில் இருப்பதை உறுதி செய்து கொள்க
புதிய தொழில் துவங்குவதற்கான ஆலோசனை நம்முடைய மனதில் தோன்றினால் நாம் அதை பின்வரும் கருத்துகளின் அடிப்படையில் பரிசோதித்து . எல்லா சாத்தியங்களையும் ஆராய்ந்து முடிவுசெய்தால் தெளிவாகவும், முழுமையாகவும் மாறிவிடுவதை காணலாம்.
துவக்க முதலீடு
நம்முடைய புதிய வியாபாரத்திற்கு செலவிடுவதற்காக நம்முடைய கையில் முதலீட்டிற்கான தொகை எவ்வளவு இருக்கிறது?
நம்முடைய கடன் பெறுவதற்கான தகுதி மதிப்பீடு எவ்வாறு உள்ளது?
இவ்வாறான தொழிலிற்கு தேவையான துணிகர முதலிடுகள், குடும்பஉறுப்பினர்கள் , நண்பர்கள் அல்லது வங்கியில் இருந்து எவ்வளவு மூலதனம் நம்மால் பெறமுடியும்?
இந்த தொழிலில் இருந்து நம்முடைய முதலீட்டிற்கான இலாபத்தை பெறுவதற்காக எத்தனை ஆண்டுகள் நாம் காத்திருக்க தயாராக இருக்கவேண்டும்?
தொழிலதுவங்குவதற்கானஇடம்
நம்முடைய தொழில் நகர்ப்புறத்திலா அல்லது புறநகர் பகுதியிலா எங்கு துவங்கவிருக்கின்றோம்?
நம்முடைய தொழில் துவங்கிடும் பகுதியின் சராசரி நபர் வருமானம்எவ்வளவு?
ந்ம்முடைய உற்பத்தி பொருள் மிகவும் விலையுயர்ந்ததாஅல்லது விலைமலிவானதா?
சந்தை நிலவரம்
நாம் தொழில் துவங்கவிருக்கும் பகுதியில் இதே போன்ற தொழில்கள் ஏற்கனவே உள்ளனவா?
நம்முடைய நிறுவனத்தின் உற்பத்தி பொறுள் போட்டியாளர்களுடன் ஒப்பிடும்போது அதன் நன்மைகள் தீமைகள் யாவை?
நம்முடைய நிறுவனத்தின் உற்பத்தி பொருள் மற்ற துனைப்பொருட்களை கொண்டு முழுமையாக பூர்த்தி செய்யக்கூடிய எந்தவொரு வியாபாரமும் இருக்கிறதா?
சந்தை தேவை
இப்பகுதியில் நம்முடைய தயாரிப்பு அல்லது சேவைக்கான நிரூபிக்கப்பட்ட தேவையிருக்கின்றதா?
அதே தயாரிப்புகளை அல்லது சேவைகளை வழங்கும்வேறு ஏதேனும் நிறுவனங்கள் இதற்குமுன் முன் முயற்சி செய்து தோல்வியேதனும் அடைந்துள்ளனரா?
பொருளின் தரம் மற்றும் அளவு - நம்முடைய உத்தேச தயாரிப்பு அல்லது சேவையின் தேவை துல்லியமாக கணக்கிடபட்டுள்ளதா.
வளர்ச்சி சாத்தியம்
இலாபம் வந்தாலும் நட்டம் வந்தாலும் நாம் தொடர்ந்து ஐந்துஅல்லது ஆறாண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து நம்முடைய பொருளை உற்பத்தி செய்வோமா?
நம்முடைய தொழிலில் இலாபத்தை அடைவதற்கு எவ்வளவு காலம் எடுத்துகொள்ளும்?
அவ்வாறு இலாபத்தை அடைந்தவுடன், மேலும் வளருவதற்காக எவ்வாறு திட்டமிட்டுள்ளோம்?
தொழில் நுழைவு தடைகள்
வருங்கால போட்டியாளர்களுடன் போட்டியிடுவது எவ்வளவு கடினமாக இருக்கும்?
நம்முடைய தயாரிப்பு அல்லது சேவையை எளிதில் வடிவமைக்க முடியுமா அல்லது காப்புரிமை அல்லது வர்த்தக இரகசியங்களால் பாதுகாக்கப்பட்டதா?
நம்முடைய முதன்மை வணிகத்தை பாதுகாக்கப்படுவதை உறுதிப்படுத்துவதற்காக, நம்முடைய வணிகத்தின் துனை தொழில்களை கொண்டு எவ்வாறு பாதுகாக்க முடியும்?
இந்த அளவுகோல்களின் மூலம் நம்முடைய புதிய தொழில் துவங்க முடியாவிட்டால், நம்முடைய தொழில் துவங்கிடுவதற்கான ஆலோசனையை நாம் தீவிரமாக மறுபரிசீலனை செய்யதயாராக இருக்க வேண்டும். நம்முடைய ஆலோசனை நீண்ட காலத்திற்கு நீடித்து நிலைத்திருப்பதாக இருக்க வேண்டும் நம்முடைய சேமிப்புகள் புத்திசாலித்தனமான திட்டமிடல், கவனமான சந்தை ஆய்வு, நீண்ட தொலைநோக்கு பார்வை ஆகியவைகளே வெற்றிகரமான சிறு வணிகத்தை உருவாக்குவதற்கான விசைகளாகும் என்ற விவரங்களை மனதில் கொண்டு புதிய தொழிலை துவங்கிடுக .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக