வியாழன், 19 மார்ச், 2020

நிறுமங்களில் பங்காதாய தொகை வழங்குவதை அறிவித்தல்


நிறுமங்களின் சட்டம் 2013 பிரிவு 2(35) இல்எந்தவொரு நிறுமமும் தன்னுடைய பங்குதாரர்களுக்கு அந்நிறுமத்தால் ஈட்டப்பட்ட இலாபத்தை பகிர்ந்து அளிப்பதையே பங்காதாயம் என வரையறுக்கின்றது அதே சட்டத்தின் பிரிவு123 இன்படி எந்தவொரு நிறுவனமும் அந்நிறுவனத்தின் பங்குதாரரர்களின் பொதுப்பேரவைகூட்டத்தில் அந்நிறுவனத்தின் ஆண்டிறுதி கணக்குகளை ஏற்றபின்னர் இயக்குநர்களின் குழுக்கூட்டத்தில் ஏற்றுக்கொண்ட அளவிற்குமிகாமல அவ்வாண்டிற்கான பங்காதாயத்தொகை வழங்குவதற்கான அறிவிப்பை சாதாரண தீர்மானத்தின் வாயிலாக ஆமோதிக்கலாம். குறிப்பாக அந்நிறுமத்தில் நடப்பு நிதியாண்டில் இலாபம் ஈட்டவில்லையென்றாலும் முந்தைய நிதியாண்டுகளின் பகிர்ந்தளிக்கப்படாத இலாபத்தை கொண்டும் அறிவிக்கலாம் இவ்வாறு அறிவிப்பு செய்யப்படும் பங்காதாயமானது முந்தைய மூன்றாண்டுகளின் சராசரியைவிட அதிகமாக கூடாது மேலும் நிறுவனம் ஈட்டிய இலாபத்தினை Reserve Fund ,Free Reserve ஆகியவற்றிற்கு தனியாக நிதி ஒதுக்கீடு செய்திடவேண்டும் முந்தைய ஆண்டுகளின் கொண்டு-வரப்பட்ட நட்டம் ஏதேனும் இருப்பின் அவையனைத்தும் சரிசெய்து கொண்டிருக்க-வேண்டும் அதுமட்டுமல்லாது தேய்மான கணக்கினையும் நேர்செய்துகொண்டருக்க-வேண்டும் இந்த நா ன்கு நிபந்தனைகளையும் பூரத்தி செய்தபின்பே அந்நிறுமம் குறிப்பிட்ட நிதிஆண்டில் இலாபங்கினை இயக்குநர்களின் குழுக்கூட்டத்தில் முடிவுசெய்யப்பட்ட சதவிகிதத்திற்கு மிகாமல் பொதுப்பேரவை கூட்டத்தில் சாதாரண தீர்மானமாத்தின்வாயிலாக ஏற்கலாம் என நிறுமங்களின் பங்காதாய அறிவிப்பு விதிகள்2014 கூறுகின்றன மேலும் இவ்வாறான பங்காதாயஅறிவிப்பிற்கான தொகையானது பங்குமூலதனமும் Free Reserve உம் சேர்ந்த தொகைக்கு பத்து சதிவிகித்திற்கு மேல் இருக்ககூடாது என மற்றொரு கட்டுப்பாடினை இதே பங்காதாய அறிவிப்பு விதிகள்2014 கட்டுபடுத்துகின்றன இவ்வாறாகஅறிவிப்பு செய்யப்படும் பங்காதாயத்தொகையானது பங்குதாரர்களுக்கு ரொக்கமாக ,காசேலையாக ,டிவின்டென்ட்வாரன்ட்டாக ,மின்னனு பணபரிவர்த்தனையின் வாயிலாக அறிவிப்பு செய்த முப்பது நாட்களுக்குள் வழங்கவேண்டும் அவ்வாறு முப்பது நாட்களுக்குள் பங்காதாயத்தொகை கோரப்படாமல் இருந்தால் ஏழுநாட்களுக்குள் தனியாக இதற்கென வங்கியில் கணக்கு ஒன்றினை துவக்கி அதில் இந்த கோரப்படாத தொகைகை இட்டுவைத்திடவேண்டும் தவறினால் அவ்வாறாக வழங்கப்படாத பங்காதாய தொகைக்கு அந்நிறுவனமானது 12 சதவிகிதம் வட்டி செலுத்தவேண்டியிருக்கும் அந்நிறுவனத்தின் பங்குகளானது பங்குசந்தையில் பட்டியிலிடபட்டிருந்தால் பொதுப்பேரவை கூட்டம் நடைபெறுவதற்கு முன் பங்குதாரர்களின் பதிவேட்டை ஏழுநாட்களுக்கு பங்கு பரிவர்த்தனையை நிறுத்தம்செய்து பராமரத்திடவேண்டும் பங்குசந்தையில் பட்டியலிடபடாத நிறுவனங்கள் பொதுப்பேரவை கூட்டுவதற்கான அறிவிப்பை 21 நாட்களுக்குமுன் அனைத்து பங்குதாரர்களுக்கும் அனுப்பவேண்டும் மேலும் அந்த 21 நாட்களுக்கு பங்குதாரர்களின் பதிவேட்டை பங்கு பரிவர்த்தனையை நிறுத்தம்செய்து பராமரத்திடவேண்டும் தொடர்ந்து ஏழாண்டுகள் குறிப்பிட்ட பங்குதாரர் அறிவிக்கப்பட்ட பங்காதாயத்தொகையை கோரிப்பெறாமல் இருந்துவந்தால் ஏழாவது ஆண்டு முடிந்த 30 நாட்களுக்குள் அவ்வாறு கோரப்படாத பங்காதாய தொகையை முதலீட்டாளர்களின் கல்வி பாதுகாப்பு நிதிக்கு மாற்றிடவேண்டும்

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...