செவ்வாய், 17 மார்ச், 2020

வர்த்தக முத்திரையை(Trade MarK) எவ்வாறு ஒரு நிறுவனத்திற்காக பதிவுசெய்வது


புதியதாக துவங்கிடும் நிறுவனங்கள் தங்களுக்கெனபுதிய பிராண்டுகள், லோகோக்கள் அல்லது வர்த்தக முத்திரைகளை உருவாக்க அதிக அளவில் பணம் செலவழிக்கின்றன. ஆனால் இதனை பதிவுசெய்திடமட்டும் மறந்துவிடுகின்றன இதனால் நிறுவனங்களுக்-கிடையே தகராறும், பிணக்கும் ,சிக்கலும் ஏற்படுகின்றன இதனை தவிர்த்து புதியதாக தொழில் துவங்கும் எந்தவொரு நிறுவனமும் தங்களுடைய நிறுவனத்திற்குஎன தனியாக வர்த்தக முத்திரையை இந்திய அரசின் Patent and Trademark பதிவு அலுவலகத்தில் பதிவுசெய்து கொள்ளவேண்டும் இவ்வாறு அந்நிறுவனத்திற்காக பதிவுசெய்து கொள்ளப்படும் வர்த்தக முத்திரையானது வேறுநிறுவனங்கள் இதே வர்த்தகபெயரை பதிவுசெய்வதிலிருந்து தவிர்ப்பதற்கும் நாடுமுழுவதும் நம்முடைய நிறுவனத்தின் உற்பத்தி பொருளை அல்லது சேவையை சந்தைபடுத்தவும் அத்தியாவசியமாக தேவையாகும் இந்நிலையில் ஒரு வர்த்தக முத்திரை என்றால் என்ன? என்ற சந்தேகம் அனைவருக்கும் எழும்நிற்க ஒருநிறுவனத்திற்கான சொற்கள், பெயர்கள், சின்னங்கள், ஒலிகள் அல்லது நிறங்கள் ஆகியவற்றாலான வர்த்தக முத்திரை யெனும் பிராண்ட் பெயரானது தங்களுடைய உற்பத்தி பொருளை அல்லது சேவையை பொதுமக்களுக்கு பொதுவான குறியீட்டின் அடிப்படையில் விற்பனை செய்வதற்கு அல்லது சேவையை வழங்குவதற்கு பயன்படுத்தப் படுவதையே வர்த்தகமுத்திரை என அழைக்கப் படுகின்றது. இந்தியாவில்முதன்முதலில் வர்த்தகமுத்திரைசட்டம்1940 இல் இயற்றப்பட்டது ஆயினும் அதனை யாரும்சரியாக பயன்படுத்தி கொள்ளாததாலும் கடுமையான வரன்முறைகளை கொண்டிருந்ததாலும் வர்த்தகமுத்திரை மற்றும் வியாபாரசட்டம்1958 என்ற புதியபெயரில் நடைமுறைபடுத்தப்பட்டது அதன்பின்னர் 1994 இல் TRIPS ஒப்பந்தப்படி அறிவுசார் சொத்துரிமைகளில் அடிப்படையானசெந்தரங்களை பராமரித்திடவேண்டியநிலையேற் பட்டது அதனை தொடர்ந்து ஏராளமான அளவில் வர்த்தகமுத்திரை தொடர்பான திருத்தங்கள் 1958 ஆம் ஆண்டு சட்டத்தில் கொண்டுவரப்பட்டன அதற்குபதிலாக புதிய வர்த்தகமுத்திரைசட்டம்1999 என்றும் வர்த்தகமுத்திரை விதிகள்2002 என்றும் தற்போது நடைமுறையில் உள்ள சட்டத்தையும் விதிமுறைகளையும் இயற்றப்பட்டு நடைமுறைக்கு கொண்டவரப்பட்டது இதன்படி ஒரு வர்த்தக சின்னத்தை பதிவு செய்வதால் ஏற்படும் நன்மைகள்பின்வருமாறு நம்முடைய வாடிக்கையாளர்கள் நம்முடைய பொருளைஅல்லது சேவையே எளிதாக அடையாளம் காண இது உதவுகின்றது நம்முடைய போட்டியாளர்களிடமிருந்து நம்முடைய சேவை அல்லது உற்பத்தி பொருளை நம்முடைய வர்த்தக முத்திரைகள் வேறுபடுத்துகின்றன மேலும் நம்முடைய சேவை அல்லது உற்பத்தி பொருளின் நிலையான தரத்தை இது குறிக்கின்றது அதனால் நம்முடைய வர்த்தக சின்னத்தின்மீது நல்லெண்ணத்தை பொதுமக்களிடம் அதிகரி்க்கசெய்கின்றது அதுமட்டுமல்லாது சந்தையில் கிடைக்கும் பல்வேறு பொருளின் அல்லது சேவையின்மீது ஏற்படும் குழப்பத்தை தடுக்கின்றது அதைவிட நம்முடைய வியாபாரத்தின் வளர்ச்சியை இந்த பிராண்ட்பெயரானது போட்டியாளர் இல்லாத ஏகபோகத்தை வழங்குகின்றது வர்த்தக முத்திரைகளின் வகைகள் வர்த்தக முத்திரை சட்டம், 1999 இன்கீழ் பதிவு செய்யக்கூடிய பல்வேறு வகையான வர்த்தக முத்திரைகள்பின்வருமாறு: - • பொருட்களுக்கான வர்த்தக முத்திரைகள்: இவை நிறுவனத்தினால் உற்பத்திசெய்யப்படும் பொருட்களை அடையாளம் காண உதவுகின்றன • சேவைக்கான வர்த்தக முத்திரைகள்: இவை நிறுவனங்களின் சேவைகளை அடையாளம் காணப் பயன்படுகின்றன. உதாரணமாக, கைபேசி வலைைபின்னல் மற்றும் ஒலிபரப்பு சேவைக்கான வர்த்தக முத்திரை. ஒரு நிறுவனம் வழங்கும் சேவையை விளம்பரப்படுத்த உதவுகின்றது. • கூட்டு வர்த்தக முத்திரைகள்: இந்த முத்திரைகள் குழுக்கள் அல்லது அமைப்புகளின் பெயரில் பதிவு செய்யப்படுகின்றன. வணிக நடவடிக்கைகளின்போது குழு உறுப்பினர்களை குழுவுடன் இணைக்க உதவுகின்றன. • சான்றிதழ் வர்த்தக முத்திரைகள்: பொருட்கள்அல்லது சேவைகளின் பயன்பாட்டின்போது அந்த பொருள் அல்லது சேவையின் தரம் உண்மையில் பயன்படுத்தப்பட்ட அளவு போன்ற பிற சிறப்பு காரணிகளைத் தீர்மாணிப்பதற்காக இவை உதவுகின்றன வர்த்தக முத்திரைகளைப் பதிவு செய்வது எவ்வாறு இந்தியாவில் வர்த்தக முத்திரையை பதிவு செய்வது என்பது யார்முதலில் பதிவு-செய்வதற்காக விண்ணப்பத்தை சமர்ப்பிக்கின்றார்களோ அவர்களுக்கே முதன்மையுரிமையாகும் என்ற அடிப்படை பின்பற்றபடுவதால். எந்தவொரு நிறுவனமும் மிகவிரைவாக தங்களுடைய வர்த்தக முத்திரையை பதிவுசெய்துகொள்வது நல்லது .மூன்றாம் தரப்பினர் யாரும் எதிர்க்காவிட்டால் இவ்வாறான வர்த்தக முத்திரைபதிவு செய்திடும் நடைமுறை இந்தியாவில் ஏறத்தாழஇரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் எடுத்து கொள்ளும் சென்னை புதுதில்லி மும்பை கொல்கத்தா ,அகமதாபாத் ஆகிய நகரங்களில்உள்ள Controller General of Patents, Trade Marks, Industrial Designs and Geographical Indications அலுவலகஙகலில் வர்த்தக முத்திரை பதிவுவிவரகாரங்கள் கையாளபடுகின்றன வர்த்தக முத்திரையை பதிவுசெய்வதற்காக பின்வரும் வழிமுறைகளை பின்பற்றிடுக முதலில்சிறந்தொடரு வர்த்தக முத்திரையை உருவாக்கிடுக இரண்டாவதாக வர்த்தக முத்திரை முகவர் ஒருவரை தெரிவுசெய்து கொள்க அம்முகவர் மூலமாகவே நம்முடைய வர்த்தக முத்திரை பதிவுதொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் கையாளபடவேண்டும் மூன்றாவதாக நம்முடைய வர்த்தக முத்திரையின் தகுதி, வேறுயாரும் அதனை பயன்படுத்தவில்லை என்ற உறுதிபாடு போன்றகாரணிகளின் அடிப்படையில் நம்முடைய வர்த்தக முத்திரையை தெரிவுசெய்து முடிவுசெய்து கொள்க நான்காவதாக வர்த்தகமுத்திரைக்கான விண்ணப்ப படிவத்தை பூர்த்திசெய்து அதாவது நம்மடைய பொருள் அல்லது சேவையின் பெயர் அதற்கான வர்த்தக முத்திரையின் பெயர் உரிமையாளரின் பெயர் முகவரி போன்றவிவரங்களுடன் போதுமான கட்டணத்துடன் வர்த்தகமுத்திரை பதிவுஅலுவலகத்தில் நம்சார்பாக நம்முடைய முகவர் சமர்ப்பிப்பார் ஐந்தாவதாக இதனை தொடர்ந்து நம்முடைய வர்த்தகமுத்திரை பதிவுவிண்ணப்பம் முழுமையாக பூரத்தி செய்யப்பட்டுள்ளதாவென சரிபார்த்து அதற்கான ஏற்புகை எண் வழங்கப்படும் ஆறாவதாக அதனை தொடர்ந்து வர்த்தக முத்திரைசட்டம்1999 இன்படி தடைசெய்வது தொடர்பான விவரங்கள் அடிப்படையில் முழுவதுமாக மறுக்கப்படுதல் அல்லது அனுமதிக்கலாம்என வர்த்தகமுத்திரை சங்கமானது தீர்மாணிக்கின்றது அதன்பிறகு இந்த வர்த்தக முத்திரை தொடர்பான ஆய்வுஅறிக்கையை ஒருமாதத்திற்குள் பெறப்படும் அந்த ஆய்வறிக்கையின் படி இந்த விண்ணப்பம் ஏற்கபடுகின்றதுஅல்லது மறுக்கப்படுகின்றது அல்லது மறுப்பதற்கான காரணம் கேட்கும் அறிவிப்பு அளிக்கபடுகின்றது அவ்வாறு காரணம் கோரும் அறிவிப்பு கிடைத்தபின்னர் அதற்கான வாத பிரதி வாதங்களை கேட்டு வர்த்தகமுத்திரையை மறுத்தல் ,ஏற்கபடுதல் குறிப்பிட்ட வரணமுறைக்குள் ஏற்கபடுதல் ஆகிய வற்றுள் ஒன்று செயற்படுத்தப்படும் இந்நிலையில் விண்ணப்பம் மறுக்கப்பட்டால் மேல்முறையீடுசெய்திடமுடியும் இறுதியாக ஏற்கபடுவதை மட்டும் வர்த்தகமுத்திரை இதழில் மூன்றுமாதங்களுக்குள் வெளியிடப்படும் வர்த்தகமுத்திரை இதழில் வெளியிடப்பட்டநிலையில் மறுப்பு எதுவும் கிடைக்கபெவில்லையெனில் அந்த வர்த்தக முத்திரையானது பதிவுசெய்யப்பட்டு அதற்கான சான்றிதழ் வழங்கப்படும் முடிவாக வர்த்தக முத்திரையே நம்முடைய வியாபாரத்திற்கானகுறைந்த செலவிலான விளம்பரமாகும் என்றசெய்தியை மனதில் கொண்டு எவ்வளவு விரைவாக நம்முடைய வர்த்தகமுத்திரையை பதிவுசெய்யமுடியுமோ அவ்வளவு விரைவாக பதிவுசெய்திடுங்க என பரிந்துரைக்கப்படுகின்றது

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...