ஞாயிறு, 8 மார்ச், 2020

நம்முடைய நோக்கத்திற்கு ஏற்றவாறான முதலீட்டு வாய்ப்பினை பயன்படுத்தி கொள்க


ஒருதந்தையானவர் தன்னுடைய நான்கு மகன்களையும் அழைத்து ஊருக்கு வெகுதூரத்தில் காட்டில் உள்ள ஆலமரத்தினை ஆண்டின் வெவ்வேறு பருவத்தில் வெவ்வாறு மகன்களை சென்று பார்த்து வருமாறு அறிவுறுத்தினார் அதாவது ஒருமகனை குறிப்பிட்ட ஆண்டின் இலையுதிர்காலத்திலும் மற்றொருமகனை இளவேனிற்காலத்திலும் என்றவாறு நான்கு வெவ்வேறு பருவகாலங்களில் அனுப்பி வைத்தார் ஒருமகன் அந்த ஆலமரத்தினை பார்த்து வந்து இலையெல்லாம் உதிர்ந்து மரம் பார்க்கவே சகிக்கவில்லை யென கூறினான் மற்றொரு மகனோ புதிய இலை துளிர் விட்டுகொண்டிருப்பதாக கூறினான் மூன்றாமவன் பூபூத்து கொண்டிருப்பதாக கூறினான் நான்காமவன் கிளை ஒடிந்து விழுமாறு மரம் முழுவதும் பழங்கள் காய்த்து தொங்குகின்றன அதனால் ஏராளமான பறவைகள் அந்த ஆலமரத்திற்கு வந்து அந்த பழங்களை கடித்து தின்று பசியாறுகின்றன என கூறினான் இந்த நான்கு மகன்களையும் ஒவ்வொருவராக அழைத்து அந்த ஆலமரத்தினை பற்றிய அவர்களின் கருத்து என்னெவென வினவியபோது அந்நால்வர்களும் அவரவர் பார்த்த நிலைக்கு ஏற்றவாறு அம்மரத்தினை பற்றிய கருத்தினை வெவ்வேறாக கூறினர் அதனால் அந்த ஆலமரத்தின் தன்மை வெவ்வேறாக இருக்கமுடியுமா இருக்காதுஅல்லவா அதேபோன்றே பல்வேறு வியாபார நிறுவனங்களால் வெளியிடபடும் சாதாரன பங்குகளின் தன்மையும் குறிபிட்ட காலத்திற்கேற்றவாறு அதன் தன்மையும் ஏற்றஇறக்கங்களுடன் இருக்கும் என்ற கருத்தினை மனதில் கொண்டு சாதாரணபங்குகளை நீண்டகால நோக்கிலான முதலீட்டிற்கு பயன்படுத்தி கொள்க குறுகிய காலம் எனில் இட்டுவைப்பு போன்றவைகளில் முதலீடு செய்திடுக என பரிந்துரைக்கப்படுகின்றது

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...