ஒரு புதிய தொழிலை துவங்கிடும்போது அந்த தொழிலிற்கான நிறுவன கட்டமைப்பை வடிவமைப்பதில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். இந்த நிறுவனத்தின் முதலீடு , உற்பத்தி அளவு, மேற்கொள்ளபோகும் தொழில் , குறிக்கோள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த கட்டமைப்பானது தீர்மானிக்கப்பட வேண்டும். தகவல்தொடர்பினையும் இதற்காக கூடுதலாக கவனத்தில் கொள்ள வேண்டும்.
இவ்வாறான நிறுவனகட்டமைப்பின் பல மட்டங்களில் உள்ள மேலாளர்கள் அதிக அளவில் தங்களுடைய மேலதிகாரஅமைப்பின் ஒப்புதலுக்காக காத்தி ருக்கவேண்டும். அதனால் மிகச்சரியான நேரத்தில் மிகச்சரியான முடிவை எடுத்து செயல்படுத்த முடியாமல் நிறுவனம் தள்ளாடும் நிலைக்குதள்ளப்படுகின்றது அதற்கு பதிலாக நன்கு வடிவமைக்கப்பட்ட நிறுவன கட்டமைப்புகளுடன் இருந்தால் சரியான தகவல் தொடர்புடன் விரைவான, சரியான முடிவுகளை செயல்படுத்தி நிறுவனம் நன்கு வெற்றிகரமாக செயலபடுமாறு அமைந்திருக்கும். நிறுவனத்தின் கட்டமைப்புகள் பொதுவான வடிவங்கள்பின்வருமாறு.
செயல்பாட்டு கட்டமைப்பு
தற்போது நடைமுறையில் பெரும்பாலான வியாபார நிறுவனங்களில் இந்த கட்டமைப்பே பின்பற்றபடுகின்றது. இந்த கட்டமைப்பின் மேல்மட்டத்தில் நிர்வாக இயக்குனரும் அவருக்கும் கீழ் இடைநிலையில் - மனித வளநிருவாகத்துறை, சந்தைப்படுத்தும்துறை, கணக்கியல்துறை பொறியியல் துறை உற்பத்தி துறை போன்ற வாறு குறிப்பிட்ட செயலிற்கேற்ப நிறுவனங்களின் கட்டமைப்பு பிரிக்கப்பட்டு அந்ததுறையும் ஒவ்வொரு தலைதுறைத்தலைவர்களால் நிருவகிக்குமாறும் இவையனத்திற்கும் சேர்ந்து நிர்வாக இயக்குநரும் இருக்குமாறு கட்டமைக்கப்பட்டிருக்கும் குறிப்பிட்ட துறைத்தலைவர்கள் இல்லையெனில் அந்த குறிப்பிட்ட துறைசரியாக இயங்காது என்பதுதான் இந்த கட்டமைப்பின் மிகப்பெரியகுறைபாடாகும்
தயாரிப்பு கட்டமைப்பு
இதன் மேல்மட்டத்தில் நிருவாக இயக்குநரும் அவரின்கீழ் பல்வேறு தயாரிப்புகள் தனித்தனியாக பிரிக்கப்படுகின்றன ஒவ்வொரு உற்பத்திக்கும் ஒவ்வொரு தலைவர் இருந்துகொண்டு அதாவது , உணவு தயாரிப்பு நிறுவனம், குளிர்பானங்கள், சிற்றுண்டி, பால் பொருட்கள் என்றவாரு ஒரேநிறுவனமானது உற்பத்தி கேற்ப தனித்தனியாக பிரிக்கப்பட்டு நிறுவனம் செயல்படும் இவை ஒன்றுக்கு மற்றொன்று நேரடியாக சார்ந்து இருக்காது என்பதால் குறிப்பிட்ட உற்பத்தி தலைவர் இல்லையெனில் மிகுதி உற்பத்தி தொடர்ந்து நடைபெற்று நிறுவனத்தின் இயக்கம் தடைபெறாமல் இருக்கும்
வாடிக்கையாளர் கட்டமைப்பு
உடல்நல பராமரிப்பு போன்ற சேவைகளை ஒரு நிறுவனம் வழங்குகிறது என்றால்,இதில் உள்ள பல்வேறு பிரிவுகளில் ஒவ்வொரு குறிப்பிட்ட பிரிவிலும் ஒரு குறிப்பிட்ட வாடிக்கையாளர்களுக்கு சேவைசெய்வதற்காக தனித்தனி குழுவாக பிரிக்கப்படுகின்றன - உதாரணமாக, உள்நோயாளிகள், வெளிநோயாளிகள், இலவச மருத்துவ நோயாளிகள் எனபிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவிற்கும் தனித்தனியாக ஒரு மேலாளர் எனறவாறு இவர்களனைவரும் நேரடியாக அந்த மருத்துவமனையின் தலைமைநிருவாகிக்கு கடமைப்பட்டவராகும் கட்டமைக்கப்பட்டிருக்கும் இதில் குறிப்பிட்ட பிரிவு தலைவர் இல்லையென்றாலும்மற்றபகுதி தொடர்ந்து இயங்கும்
வட்டாரகட்டமைப்பு
மிகப்பெரியநிறுவனம் நாடுமுழுவதும் விரிந்து பரந்து உள்ளது எனில் அந்தந்த பகுதியும் ஒவவொரு மேலாளரின் பொறுப்பின்கீழ் செயல்படுமாறும இவையனைத்திற்கும் பொதுவானநிருவாகி தலைமையிடத்திலும் இருந்தவாறு நிறுவனத்தினை கட்டுபடுத்துவார் இவ்வாறான பல்வேறு கட்டமைப்புகளில் நம்முடைய நிறுவனத்திற்கு பொருத்தமானகட்டமைவுஎதுவெ ன முடிவுசெய்து கட்டமைவுசெய்து கொள்க
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக