சனி, 29 மே, 2021
மதிப்பு இல்லாத செல்வம்
ஒரு பேராசைக்காரர் தான் சேகரித்துவைத்திருந்த தங்க நாணயங்களை பாதுகாப்பாக இருக்கவேண்டுமென தனது தோட்டத்தில் ஒரு இரகசிய இடத்தில் புதைத்து வைத்திருந்தார். ஒவ்வொரு நாளும் அவர் தன்னுடையதோட்டத்தில் அவைகளை புதைத்து வைத்திருந்த இடத்திற்குச் சென்று, தரையை தோண்டி வெளியிலெடுத்த பின்னர் அவற்றை, ஒவ்வொன்றாக எண்ணிக்கைசெய்து, அனைத்தும் சரியாக இருப்பதை உறுதிசெய்து கொண்டிருந்தார். பேராசைக்காரர் , இவ்வாறு தினமும் செய்வதை கவனித்துக் கொண்டிருந்த ஒரு திருடன், தோட்டத்தில் அப் பேராசைக்காரர் என்ன மறைத்து வைத்திருக்கின்றார் என யூகித்து அறிந்து கொண்டான், அதனை தொடர்ந்து ஒரு இரவு அந்த பேராசைக்காரரின் தோட்டத்திற்குள் வந்து அப் பேராசைக்காரர் புதைத்து வைத்திருந்த இடத்தினைத் தோண்டி தங்க நாணயங்கள் முழுவதையும் எடுத்துக் கொண்டு சென்றுவிட்டான். பேராசைக்காரர் வழக்கம் போன்று மறுநாள் தன்னுடையதோட்டத்தில் தங்க நாணயங்களை புதைத்து வைத்திருந்த இடத்திற்குச் சென்று, தரையை தோண்டிபார்த்தபோது எதுவும் இல்லாததை கண்டவுடன் மிகவும் துக்கத்தோடும் விரக்தியோடும் . தன்னுடைய தலைமுடியைபிய்த்து கொண்டு கூக்குரலிட்டு அழுதார் . ஒரு வழிப்போக்கன் அவர் அழுகையைக் கேட்டு என்ன நடந்தது என்று அவரிடம் கேட்டபோது. “என்னுடைய தங்க நாணயங்கள்அனைத்தும் காணாமல் போய்விட்டது ! என்னுடைய தங்க நாணயங்கள் அனைத்தும் காணாமல் போய்விட்டது ! ” என அப் பேராசைக்காரர் அழுது புலம்பினார் மேலும் "யாரோ என்னுடைய தங்கநாணயங்கள் அனைத்தையும் கொள்ளையடித்துகொண்டு சென்றவிட்டனர்!" என அப் பேராசைக்காரர் அழுதுகொண்டே கூறினார் உடன் “உங்களுடைய தங்கநாணயங்கள்! இங்கு இருந்ததா? ஏன் அவற்றை இங்கே வைத்தீர்கள்? அதற்கு பதிலாக வேறு பொருட்களாக வாங்கி உங்கள் வீட்டிற்குள்ளாகவே ஏன் வைத்திருக்கவில்லை? ” என அவ்வழிபோக்கன் கேட்டபோது “பொருட்களை வாங்குவதா!” அப்பேராசைக்காரர் கோபமாக கத்தினார்.மேலும் “ நான் ஒருபோதும் தங்கநாணயங்களைத் பயன்படுத்த நினைக்கவில்லை. அதில் எதையும் செலவழிக்க வேண்டும் என என்னால் நினைத்துகூட பார்க்க முடியவில்லை. ” என அப் பேராசைக்காரர் பதில் கூறினார் அதனை தொடர்ந்து வழிபோக்கன். "அப்படியானால், வீட்டிற்கு சென்று அமைதியாக தூங்குங்கள் . தங்கநாணயங்களை விட சரியான பொருளாக சேமிப்பது மிகமுக்கியமாகும்! ”என அறிவுறுத்தல் செய்து தன்வழியே சென்றார்
நீதி: செல்வத்தை (பொருட்களை), புத்திசாலித்தனமாகவும் சரியான முறையிலும் சேமிப்பது மிக நன்று..
சனி, 22 மே, 2021
ஏழையாக இருந்தாலும் நேர்மையானவர்கள்
நீதி: நேர்மையாக இருப்பதற்கு இனப்பாகுபாடு நிதிநிலை பாகுபாடு ஆகிய எதுவும் இல்லை. ஏழையாக இருந்தாலும் நேர்மையாக இருப்பார்கள் .
சனி, 15 மே, 2021
நான்கு கல்லூரி மாணவர்களும் ஆண்டுஇறுதி தேர்வும்
நான்கு கல்லூரி மாணவர்கள் அடுத்த நாள் காலையில் திட்டமிடப்பட்ட ஆண்டிறுதி தேர்விற்கு படிக்காமல் இரவு விருந்திலும் கேளிக்கைகளிலும் ஈடுபட்டுகொண்டிருந்தனர்,அதனால் அவர்கள் மறுநாள் காலையில் நடைபெறவிருந்த ஆண்டுஇறுதி தேர்விற்கு ஒரு திட்டத்தை செயல்படுத்தமுடிவுசெய்தார்கள். அதன்படி அவர்கள் தங்களுடைய உடைகள் முழுவதும் கிரீஸை பூசிக்கொண்டும் அழுக்குகாகவும் வீனாக்கிகொண்டனர். பின்னர் அவர்கள் அவ்வாறான தங்களுடைய அழுக்கான உடைகளுடன் தங்களுடைய கல்லூரியின் துறைத்தலைவரிடம் நேரில் சென்று , தாங்கள் நேற்றிரவு நண்பர் ஒருவரின் திருமணத்திற்கு வெளியூர் சென்றதாகவும், திரும்பி வரும் வழியில் தங்களுடைய காரின் டயர் வெடித்துவிட்டதாகவும், அதனைதொடர்ந்து அவர்கள் தாங்கள் பயனம் செய்த காரைத் தள்ளிகொண்டே வந்து சேர்ந்ததாகவும் கூறினார்கள். அதனால் தங்களால் அன்று நடைபெறவிருக்கும் ஆண்டுஇறுதி தேர்விற்கு தயாராக முடியவில்லை என்றும் கூறினார்கள்ர் . துறைத்தலைவர் ஒரு நிமிடம் யோசித்த பின்னர் , அந்நான்கு மாணவர்களும் 3 நாட்களுக்குப் பிறகு தங்களுடையஆண்டுஇறுதி தேர்வினை எழுதலாம் என்று அனுமதிப்பதாக கூறினார். அதனால் அந்நான்கு கல்லூரிமாணவர்களும் தங்களுடைய துறைத்தலைவருக்கு நன்றி தெரிவித்தார்கள், மூன்றுநாட்களில் அந்நான்கு கல்லூரிமாணவர்களும் ஆண்டுஇறுதி தேர்விற்கு தயாராகிய பின்னர் தங்களுடைய துறைத்தலைவரிடம் நேரில் சென்று தாங்கள் தேர்வு எழுத தயாராக இருப்பதாக கூறினார்கள் அதனால் . மூன்று நாட்கள் முடிந்தவுடன் நான்காவது நாள், துறைத்தலைவர் . நிபந்தனையுடன் கூடிய ஒரு தனித்தேர்வினை அவர்களுகாகவென நடத்துவதாக கூறினார் அதன்படி அந்த நான்கு பேரும் தேர்வினை எழுவதற்காக ஒவ்வொருவரும் தனித்தனி வகுப்பறைகளில் அமர வேண்டும் என்று துறைத்தலைவர் கூறினார். கடந்த 3 நாட்களாக அந்நான்கு கல்லூரி மாணவர்களும் ஆண்டு இறுதி தேர்விற்காக நன்றாகத் தயார் செய்திருந்ததால் அந்த நிபந்தனைக்கு அவர்கள் அனைவரும் ஒப்புக் கொண்டனர். அந்த தேர்வானது மொத்தம் 100 மதிப்பெண்களுடன் இரண்டேயிரண்டு கேள்விகளை மட்டுமே கொண்டிருந்தது.
1) மாணவரின் பெயர் __________ (1 மதிப்பெண்)
2) மாணவர்கள் பயனம் செய்த காரின் எந்த டயர் வெடித்தது? __________ (99 மதிப்பெண்கள்)
அதற்கான வாய்ப்புகள் - (அ) முன் இடது (ஆ) முன் வலது (இ) பின் இடது (ஈ) பின் வலது
அந்நால்வரும் அவர்களுக்காகவென நடைபெறும் சிறப்புதேர்வில் இவ்வாறான கேள்விகளை எதிர்பார்க்காததாலும் வெவ்வேறு வகுப்பறைகளில் அமர்ந்து எழுவேண்டியிருந்ததாலும் இரண்டாவது கேள்விக்கு மட்டும் வெவ்வேறு பதில்களை தெரிவுசெய்திருந்தனர். அதனால் அந்நான்கு பேரும் ஆண்டிறுதி தேர்வில் தோல்விஅடைந்ததாக அறிவிப்பு செய்யப்பட்டது
நீதி: எந்தவொரு செயலையும் செயற்படுத்திடும்போது பொறுப்பாக நடந்து கொள்க,
சனி, 8 மே, 2021
வயதான பெற்றோர்களை நன்கு சரியாக பராமரித்திடுக
ஒரு நாள் இரவு உணவினை தயார்செய்ய இயலாததால் ஒரு மகன் தனது வயதான தந்தையை தங்களுடைய வீட்டிற்குஅருகிலிருந்த உணவகத்திற்கு அழைத்துச் சென்றார். அவருடைய தந்தை மிகவும் வயதானவர், பலவீனமானவர், கைகால்கள் அனைத்தும் நடுங்கி கொண்டு இருந்தது அதனால் அவர் சாப்பிடும்போது , அவரது உடைகளில் உணவை சிந்திகொண்டும் சிதறிகொண்டும் சாப்பிட்டார். அவரது மகன் அவர் சாப்பிட்டு முடியும் வரை அமைதியாக காத்திருந்தார் ஆனால் அவ்வுணவகத்தில் உணவு உட்கொண்ட மற்றவர்கள் அனைவரும் அவரது தந்தை தன்னுடைய உடைகளின்மீது உணவினை சிந்திகொண்டும் சிதறிகொண்டும் சாப்பிடுவதை கண்டு மிககேவலமாக பார்த்தனர். அதுகுறித்து , வெட்கப்படாத அவரது மகன், அவர் சாப்பிட்டு முடித்ததும் அமைதியாக அவரை கைகழுவும் இடத்திற்கு அழைத்துச் சென்று, அவருடைய தந்தையின் உடைகளின்மீது சிந்திய சிதறிய உணவுத் துகள்களைத் துடைத்து, கறைகளை அகற்றி, அவருடைய கைகளையும் வாயையும் நன்கு கழுவி தலைமுடியை சரிசெய்து, உடைகளை பழையவாறு நன்கு சரிசெய்து இருக்கைக்கு அழைத்துவந்தார். பின்னர் தானும் தன்னுடைய தந்தையும் உண்ட உணவிற்கான கட்டணத்தை செலுத்திவிட்டு உணவகத்தை விட்டு அவர்கள் வெளியே வந்தபோது, உணவகத்தில் இருந்த அனைவரும் அமைதியாக அவர்களையேப் பார்த்துக் கொண்டிருந்தனர், . அந்த நேரத்தில், அந்த உணவகத்தில் உணவருந்தியவர்களில் ஒருவர் அம்மகனிடம், “நீங்கள் இவ்வுணவகத்தில் எதையோ விட்டுசெல்கின்றீர்கள் ” என்று வினவியபோது அம்மகன், “இல்லை ஐயா, நான் எதையும் விட்டு செல்லவில்லை” என்று பதிலளித்தார். அந்த முதியவர், “ஆனால் நீங்கள் ஒவ்வொரு மகனும் தன்னுடைய வயதான தந்தையை எவ்வாறு பராமரிக்கவேண்டும் என்ற பாடத்தை மட்டும்விட்டு,செல்கிறீர்கள் ”.என அம்மகனிடம் கூறினார். அவ்வுணவகம் அமைதியாக இருந்தது.
நீதி: ஒரு காலத்தில் நாம் சிறுகுழந்தையாய் இருந்தபோது நம்முடையபெற்றோர்கள் நம்மைக் எவ்வாறு கவனித்துக்கொண்டார்கள்என அறிந்து அவர்களை நாம் நன்கு கவணித்து பராமரிப்பதோடுமட்டுமல்லாமல் அவர்களை நேசிக்கவும், அவர்களை மதிக்கவும், செய்திடவேண்டியது அவசியமாகும்
சனி, 1 மே, 2021
யாரையும் அவர்களின் தோற்றத்தினை வைத்து முடிவு செய்யாதீர்கள்
ஒரு கிராமத்தில் வயதானவர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் எல்லா கலைகளையும் நன்கு அறிந்தவர். அவர் எல்லாவற்றையும் அறிந்திருந்தார், ஆனால், அவர் மிகவும் ஏழை. அவருக்கு என்று தனியாக வீடு இல்லை. அவர் தனக்கான உணவை மிகுந்த சிரமங்களுடன் பெற்று வாழந்துகொண்டிருந்தார். அந்த பெரியவர் தனது உணவுக்காக அவ்வூரில் வீடுவீடாக சென்று பிச்சை எடுத்து சாப்பிட்டு காலம் கழித்துவந்தார். அவரது உடைகள் கூட மிகவும் கிழிந்து கந்தாலாகி இருந்தன. . அவரது பழைய ஆடைகளைப் பார்த்ததும் பலர் அவரை, “போ போ” என்று விரட்டி அவருக்கு தேவையான உணவினை வழங்காமல் தங்களுடைய வீட்டின் கதவை மூடினார்கள். அதனால் பல நாட்கள் அவர் உண்பதற்கு உணவு கிடைக்காததால் சாப்பிடாமல் பட்டினியாக காலம் கழித்துவந்தார். ஒருமுறை பணக்காரர் ஒருவர் அவருக்கு புதிய ஆடைகளை வழங்கினார். அந்த பெரியவர் தனக்கு கிடைத்த அந்த புதிய ஆடைகளை அணிந்து முன்பு போலவே அந்த கிராமத்தில் பிச்சை எடுக்கச் சென்றார். அவர் சென்ற முதல் வீட்டின், வீட்டுக்காரர், “ஐயா, தயவுசெய்து உள்ளே வாருங்கள். தயவுசெய்து நீங்கள் எங்கள் வீட்டில் அமர்ந்து உங்களுடைய வயிறார உணவை சாப்பிடுங்கள்” என்றார். இவ்வாறு கூறி, மிகுந்த மரியாதையுடன், வயதானவரை தங்களுடைய வீ்ட்டின் உள்ளே அழைத்துச் சென்று உட்காரசெய்து அவருக்கு பல்வேறு உணவுவகைகளை பரிமாறினார். அவ்வயதானவர் அந்த வீட்டில் சாப்பிட அமர்ந்தார். அவருக்கு பலவிதமான, உணவு வகைகள், இனிப்புகள் சாப்பிடுவதற்கு வழங்கப்பட்டன. முதலில் வயதானவர் தன்னுடைய , கையால் இனிப்பு ஒன்றினை எடுத்து, “சாப்பிடு, சாப்பிடு!” என தன்னுடைய புதிய உடைமீது தேய்த்தார் .அதைப் பார்த்ததும் அவ்வீட்டிலுள்ள அனைவரும் மிகவும் ஆச்சரியப்பட்டனர், அவர்களால் அந்த பெரியவரின் செயலை புரிந்து கொள்ள முடியவில்லை. எனவே, அவர்கள் , “உடைகள் எவ்வாறு உணவினை சாப்பிடும்? ஓ, பெரியவரே, ஏன் நீங்கள்அணிந்துள்ள உடைகளுக்கு உணவு வழங்குகிறீர்கள்? ” என வினவினர் .அதற்கு அந்த பெரியவர், “உண்மையில் இந்த புதிய ஆடைகளின் காரணமாகதான் இன்று நீங்கள் என்னை உங்களுடைய வீட்டிற்குள் அழைத்து அமர்ந்து உணவினை உண்ணும்படி எனக்கு உணவு வழங்கினீர்கள். நேற்று நான் பழைய உடையில் வந்து உணவு வழங்கிடுமாறு கோரியபோது நீங்கள் என்னை விரட்டினீர்கள். இந்த புதிய உடைகள் காரணமாக நான் உணவைப் பெற்றதால், நான் இந்த புதிய உடைகளுக்கு நன்றியுள்ளவனாக இருக்கிறேன். இதனால்தான் நான் இந்த உடைகளுக்கு உணவளிக்கிறேன். ” என பதில் கூறினார் அந்த பெரியவர். அந்த பெரியவரின் இந்த பதிலை தொடர்ந்து அந்த வீட்டுக்காரர் மிகவும் வெட்கப்பட்டார்.
நீதி: ஒருபோதும் யாரையும் அவர்களின் தோற்றத்தினை வைத்து முடிவு செய்யாதீர்கள்.
பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்
இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...
-
இந்தியாவில் 2008 ஆம் ஆண்டிற்கு முன்புவரை இந்திய கூட்டாண்மைசட்டம்1932 என்பது நடைமுறையில் இருந்துவந்தது மனிதநாகரிகம் தோன்றியபின்னர் ஏராளமான...
-
ஒரு கிராமத்தில் ஒரேயொரு விவசாயிமட்டும் கோடைகாலத்தில் பயன்படும் தர்பூசனியை தன்னுடைய நிலத்தில் பயிரிட்டிருந்தார் அவருடைய விளைநிலம் முழுவதும்...
-
அன்புதமிழ் நேயர்களுக்கு என்னுடைய தாழ்மையான வணக்கத்துடன் அருகுசருகுஎனும் என்னுடைய முதல் வலைபூவை இணையத்தின்வாயிலாக உங்கள் முன் சமர்ப்பிப்பதில்...