வணிக கல்வி வழங்கிடுகின்ற ஒரு கல்லூரியில் கல்வி பயில்வதற்கான மாணவர்களை சேர்ப்பதற்காக நேர்வுமுகத்தேர்வு குழு ஒன்று அமைக்கப்பட்டது. அந்த குழுவானது பல்வேறுமாணவர்களிடம் நேர்முகத்தேர்வு நடத்தியது . அவ்வாறான நேர்முகத் தேர்வின்போது அக்குழுவின்முன் ஒரு துடிப்புமிக்க மாணவன் தனக்கு அந்த வணிக கல்வி வழங்கிடுகின்ற கல்லூரியில் தான் படிப்பதற்காக அனுமதி கிடைக்குமோ! கிடைக்காதோ !என மிகவும் பதட்டத்துடன் வந்துஅமர்ந்தார் . அந்த தேர்வு குழுவின் உறுப்பினர்களுள் ஒருவர்," தம்பி! நாங்கள் உனக்காக மட்டும் ஒரு வாய்ப்பு தருகின்றோம். அதாவது, நாங்கள் உன்னிடம் எளிதான பத்து கேள்விகள் கேட்பதா? அல்லது ஒரேயொரு கடினமான கேள்வி மட்டும் கேட்பதா? எனும் இரு வாய்ப்புகளில் ஒன்றினை நீ தெரிவுசெய்திட்டால் அதனடிப் படையில் நாங்கள் (தேர்வு குழுஉறுப்பினர்கள்) உன்னிடம் கேள்விகளை கேட்போம்", என கூறினார் .
அதனைதொடர்ந்த அந்த மாணவன் தன்னுடைய முகத்தில் புன்முறுவலுடன் "மிக்க நன்றி ஐயா! நீங்கள் என்னிடம் ஒரேயொரு கடினமான கேள்வி மட்டும் கேட்டால் போதும் அதற்கான பதில் நான் கூறத் தயாராக இருக்கின்றேன்", என பதில் கூறியதை தொடர்ந்து அத்தேர்வு குழுஉறுப்பினர்களில் வேறொருவர் , "மிக்க நல்லது தம்பி ! இப்போது எங்களுடைய ஒரேயொரு கேள்விக்கான பதில் சொல்லத்தயாராக இரு . பொதுவாக நாமெல்லோரும் ஒரு நாளினை பகல் என்றும் இரவு என்றும் இரண்டாக பிரித்து அழைக்கின்றோம் அல்லவா ! அவ்வாறாயின் எந்தவொரு நாளிற்கும் பகல் முதலில் வருமா? இரவு முதலில் வருமா? இவ்விரண்டில் எதுமுதலில் வரும் என கூறிடு?" என அம்மாணவரிடம் கேள்வி கேட்டார்.
அந்த மாணவன் இவ்வாறான கடினமான கேள்வியை எதிர்பாராததால் மிகவும் திக்குமுக்காடி விட்டான் . தேர்வு குழு உறுப்பினர்கள்அனைவரும் 'பத்து சுலபமான கேள்விகளுக்கு எளிதாக பதில் கூறி இக்கல்லூரியில் கல்வி பயில்வதற்கான அனுமதியை பெறுவதை விட்டுவிட்டு மிகவும் கடினமான கேள்வியை உன்னுடைய வாய்ப்பாக தெரிவுசெய்தாய் அல்லவா !'என அவனை மிகவும் இளக்காரமாக வும் நக்கலாகவும் பார்த்தனர் .தான் இந்த கோள்விக்கு சரியான பதில் கூறாவிட்டால் தனக்கு இந்த கல்லூரியில் பயில்வதற்கான வாய்ப்பே இல்லாமல் போய்விடுமோ என அம்மாணவன் மிகவும் பயந்துகொண்டிரு ந்தார்? இருந்தபோதிலும் சிறிதுநேரம் ஆலோசித்து இறுதியாக "ஐயா! பகல்தான் முதலில் வரும்", என பதிலிறுத்தார்.
உடன் அந்த தேர்வு குழுஉறுப்பினர் "அது எப்படிதம்பி பகல்முதலில் வரும்?இரவு முதலில் வராதா? எனக்கு அதனை பற்றி விளக்கமளித்திடு தம்பி!" என கோரினார் . அதனை தொடர்ந்து அம்மாணவன் ,"உங்களுடைய இரண்டாவதுகேள்விக்கு என்னால் பதில் கூறமுடியாத நிலைக்கு என்னை மன்னிக்கவேண்டும் ஐயா ! ஏனெனில், நான் இந்த இருக்கையில்வந்து அமர்ந்துவுடன் நீங்கள் அனைவரும் சேர்ந்து எனக்குஒரு வாய்ப்பு கொடுத்தீர்கள் அதன்படி ஒரேயொரு கடினமான கேள்விக்கு மட்டும் தான் என்னால் பதில் கூறமுடியும் அதற்கு பின்னர் கேட்கப்படும் கேள்விக்கு நிபந்தனையின்படி என்னால் பதில் கூற இயலாது", என கூறினான் . அந்த தேர்வுகுழுவானது வேறுவழியில்லாமல் வேறு எந்த கேள்விகளையும் அந்த மாணவனிடம் கேட்காமல் அந்த கல்லூரியில் வணிக கல்வி பயிலுவதற்கு அம்மாணவன் தேர்வு செய்யப்பட்டதாக வாழ்த்து கூறி அனுப்பிவைத்தனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக