சனி, 24 ஜூலை, 2021

விமானத்தில் ஒரு சிறுவன்

 


 ஒரு விடுமுறை நாளின் பிற்பகலில், ஒரு சிறிய தனியார் விமானத்தில் ஒரு மருத்துவர், ஒரு வழக்கறிஞர், ஒரு சிறுவன் , ஒரு சாமியார் ஆகிய நான்கு பேரும் பயன் செய்து கொண்டிருந்தனர். திடீரென்று அந்த விமானத்தில்  இயந்திர சிக்கல் ஒன்று உருவானது. அந்த விமானத்தின் விமானியானவர் கடுமையாக  முயற்சி செய்தபோதிலும், அவரால் அந்த விமானத்தினை சரியாக பறக்க செய்யமுடியவில்லை, எனவே அந்த விமானமானது வானத்தில் பறந்து செல்வதற்கு பதிலாக  கீழே தரையை நோக்கி விழத் தொடங்கியது விமானம் விபத்துக்குள்ளாகப் போகிறது என்பதை அறிந்த அவ்விமானி தான் தப்பிப்பதற்காக ஒரு பாராசூட்டை எடுத்து தோளில் மாட்டிகொண்டு மற்ற பயனிகளிடம் இப்போது இந்த விமானம் தரையில்விழுந்து விபத்துகுள்ளாக போகின்றது அதனால் பயனிகளில் உயிர் பிழைக்க விரும்புவோர் இந்த விமானத்தில் தயாராக இருக்கும்பாராசூட்களில்  ஒவ்வொருவரும் ஒவ்வொன்றை  எடுத்து தோளில் மாட்டிகொண்டு கீழே குதித்து  தப்பித்துவிடலாம் என சத்தமாக அறிவிப்பு செய்தார், உடன் மற்ற பயனிகள்  அனைவரும் விமானத்திலிருந்து குதித்து தங்களுடைய உயிரைக் காப்பாற்றும் முயற்சியை துவங்கினார்கள். . துரதிர்ஷ்டவசமாக அவ்விமானத்தில் விமானி எடுத்து கொண்டது போக மிகுதி மூன்று பாராசூட்டுகள் மட்டுமே எஞ்சியுள்ளன, ஆனால் அந்த விமானத்தில் இருந்தவர்கள் நான்கு பேராவார்கள். உடனடியாக மருத்துவர் ஒரு பாராசூட்டை எடுத்து தோளில் மாட்டிகொண்டு, "நான் மற்றவர்களின் உயிரைக் காப்பாற்றிடும் பணியை  செய்துவருகின்றேன், அதனால் நான் உயிர்தப்பிக்க போகின்றேன் " எனக்கூறி  விமானத்திலிருந்து குதித்தார். பின்னர் சாமியார், "நான் இந்த புவியில் வாழ்கின்ற மக்கள் அனைவரையும் திருத்தி நல்வழிக்கு கொண்டு செல்ல வேண்டியுள்ளதால் , எத்தனையோ அப்பாவிகளை காப்பாற்றும் பொறுப்பு எனக்கு உள்ளது அதனால் நான் உயிர்தப்பிக்க போகின்றேன் ", என கூறிக்கொண்டு அவரும் ஒரு பாராசூட்டை எடுத்து தோளில் மாட்டிகொண்டு விமானத்திலிருந்து குதித்தார். இப்போது வழக்கறிஞர் சிறுவன் ஆகிய இருவர் மட்டுமே அந்த விமானத்தில் இருந்தனர் ஆனால் ஒரே ஒரு பாராசூட் மட்டுமே மீதமுள்ள நிலையில் விமானத்தில் அவர்கள் தனித்து விடப்பட்டனர். எனவே வழக்கறிஞர்  சிறுவனைப் பார்த்து, ”தம்பி, நீ சிறுவன் இன்னும் நீண்ட காலம்  , முழுமையாக வாழ்ந்து  வாழ்க்கையில் முன்னேற வேண்டியுள்ளது. அதனால் கடைசியாக உள்ள ஒரு  பாராசூட்டை நீ எடுத்து உன்னுடைய உயிரைக் காப்பாற்றி கொள்க "என அமைதியாக க்கூறினார் .ஆனால் அந்த சிறுவன் அந்த பாராசூட்டை வழக்கறிஞரிடம் ஒப்படைத்து, "ஐயா கவலைப்படாதீர்கள்  சாமியார்ஆனவர் நான் தினமும் வழக்கமாக  பள்ளிக்கு எடுத்து செல்லும் எனது  பையை பாராசூட் என தது முதுகில் மாட்டி கொண்டு குதித்துவிட்டார் அதனால் மிகுதி இரண்டு பாராசூட்கள் உள்ளன ஆளுக்கு ஒன்று முதுகில் மாட்டிகொண்டு நாம் இருவரும் குதித்து நம்மிருவருடைய உயிர்களையும் காத்து கொள்ளலாம்  வாருங்கள்" எனக்கூறி ஆளுக்கொரு பாராசூட்களை எடுத்து தோளில் மாட்டிகொண்டுவிமானத்திலிருந்து குதித்தனர்

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...