சனி, 3 ஜூலை, 2021

பிரச்சினைக்கான ஒரு பெண்ணின் திறன்மிகு தீர்வு


கடந்த இருபதாம் நூற்றாண்டில் தமிழ்நாட்டின் பெரிய கிராமம்ஒன்றில் அதிக கருணையுள்ள ஒரு மனிதனும் அவனுடைய மனைவியும் வாழ்ந்துவந்தனர் . வாய்க்கும் கைக்குமாக அவர்களுடைய வாழ்க்கை சென்றுகொண்டிருந்தது. இருந்தபோதிலும், அந்த கருணையுள்ள மனிதர் யாராவது விருந்தினர்களுடன் மட்டுமே மதியம் சாப்பிடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். அதனால் அவருடைய மனைவி விருந்தினர்களுக்கு வீட்டிலிருந்த உணவு முழுவதையும் விருந்தளித்துவிடுவதால் ஒவ்வொரு நாளும் மதியம் சாப்பிடாமல் பட்டினியாக காலத்தை ஓட்டிவந்தார் . வெகுநாட்களாக தன்னுடைய கணவரிடம் தங்களுடைய வீட்டின் நிலைகுறித்து எவ்வளவோ எடுத்து கூறினாலும் அதை காதில் போட்டுகொள்ளாமல் "திருவள்ளுவர் கூட விருந்தோடு உண்ணுவது நல்லது என கூறியுள்ளார் நமக்கு எப்படியாவது உணவிற்கான பொருட்கள் கிடைத்துவிடும் நீ கவலைப் படாதே!" எனக்கூறி யாராவது விருந்தினர்களுடன் மட்டுமே மதியம் சாப்பிடு வதை வழக்கமாக கொண்டிருந்தார் அவர். அதனால் தன்னுடைய கணவர் மதியம் விருந்தினருடன் மட்டுமே சாப்பிடும் இவ்வாறான பழக்கத்தை எப்படியாவது தவிர்த்திட வேண்டும் இல்லையெனில் நாம் தினமும் மதியம் பட்டினியாக இருக்க வேண்டியதுதான் அதற்குஎன்ன செய்யலாம் என சிந்தித்து இறுதியாக அவருடைய மனைவி புதிய திட்டமொன்றினை செயல்படுத்த முடிவுசெய்தார் .

அன்று ஒருநாள் அந்த கருணையுள்ள மனிதர் தன்னுடைய மனைவியிடம் "இன்று மூன்று விருந்தினர்கள் வருவார்கள் அதனால் அதற்கேற்றவாறு மதியம் விருந்தினை தயார் செய்துவிடு", எனக்கேட்டுகொண்டு வெளியில் எங்கோ சென்றார் .

அவருடைய மனைவிக்கு அன்று மூன்றுவிருந்தினர்களுக்குபோதுமான அரிசி பருப்பு காய்கறிகள் இல்லையென்பது தெரியும். இருந்தாலும் என்னசெய்வது என எதிர்த்து பேசாமல்அமைதியாக இருந்தார். அந்த கருணையுள்ள மனிதர் வெளியே சென்ற சிறிது நேரம் கழித்து அவர்கூறியவாறு மூன்று விருந்தினர்கள வர்களுடையவீட்டிற்கு வந்துசேர்ந்னர் அப்போது கருணையுள்ள மனிதருடைய மனைவி அவர்கள்மூவரையும் வரவேற்று தங்களுடைய வீட்டின் முகப்பிலுள்ள திண்ணையில் உட்காரச்செய்து அவர்கள் குடிப்பதற்கு தண்ணீர் கொடு்த்தபின்னர் அம்மூவரும் அந்த தண்ணீரை குடித்து கொண்டிருக்கும் போது "ஐயா! சிறிது பொறுத்து கொள்ளுங்கள் வீட்டின் உள்ளே ஒரு வேலைஇருக்கின்றது அந்த பணியை முடித்துவிட்டு வருகின்றேன்", என க்கூறியபடி அந்த வீட்டின் திண்ணையை தாண்டி நடைபகுதியில் உள்ள கல்லுரலில் நெல்லை கொட்டி விருந்தினரின் உணவிற்கு தேவையான அரிசியாக்குவதற்காக உலக்கையால் குத்த ஆரம்பித்தார் .

குறிப்பு இப்போது இயந்திரத்தினால் பட்டை தீட்டப்பட்ட அரிசியை நாம் பயன்படுத்தி வருகின்றோம் ஆனால் இந்த நிகழ்வின்போது அவ்வாறான நெல் அரவைஇயந்திரம் எதுவும் பயன்பாட்டில் இல்லாத நாளாகும்

.அவ்விருந்தினர் மூவரும் தான் கொடுத்த தண்ணீரை குடித்துவிட்டார்களா என பார்த்த பின்னர் நெல்லை உரலில் குத்துவதற்காக தன்னுடைய கையில் வைத்திருந்த உலக்கையை அப்படியே எடுத்து கொண்டே வந்து" ஐயன்மீர்! என்னை மன்னிக்கவேண்டும் எங்களுடைய வீட்டிற்கு வந்த விருந்தாளிகளின் தலையில் இந்த உலக்கையால் மூன்று அடிகளை அடித்தபின்னர் தான் விருந்து அளிப்பது வழக்கம் அதனால் உங்கள் மூவருக்கும் ஆளுக்கு மும்மூன்று அடிகளை இந்த உலக்கையால் கொடுக்க போகின்றேன்", எனக்கூறி உலக்கையை அந்தஅம்மாள் ஒங்கிபோது," உங்கள்வீட்டில் எங்களுக்கு விருந்தும் வேண்டாம் உலக்கையால் மூன்று அடியும் வேண்டாம்", என மூவரும் துண்டை காணோமஂ துனியை காணோம் என அந்த வட்டைவிட்டு வெளியில் ஓடஆரம்பித்தனர்.

அதன்பின்னர் அந்த கருணையுள்ள மனிதர் தன்னுடைய வீட்டிற்கு வந்துசேர்ந்தார் ஆனால் தங்களுடைய வீட்டில் அந்த விருந்தாளிகள்மூவரும் இல்லாமல் தன்னுடைய மனைவி மட்டும் இருப்பதை கண்டு, "அந்த மூன்று விருந்தினர்கள் எங்கே ? மதியம் நம்முடைய வீட்டில் விருந்துசாப்பிடாமல் அந்த மூவரும் போய்விட்டார்களா!" என கேட்டபோது "அது ஒன்றும் இல்லங்க! விருந்தினர்கள்மூவரும் இந்த ஒரு உலக்கையை தங்களுக்கு வண்டுமென்றார்கள் 'நான் எங்களுடை அம்மா இந்த உலக்கையை எனக்கு சீதனமாக கொடுத்தர்' என்றும் அதைவிட இந்த ஒரு உலக்கையை விட்டால் நெல்லை குற்றி அரிசி ஆக்குவதற்கு ங்களுடைய வீட்டில் வேறு உலக்கை எதுவும் இல்லாததால் நான் தரமுடியாது!, ன்றும்கூறிவிட்டேன் . அதனால் அம்மூவரும் கோபித்து கொண்டு போய்விட்டனர்", என பதில் கூறியதை தொடர்ந்து, "நம்முடைய வீட்டிற்கு வந்த விருந்தாளிகளை திருப்தியாக அனுப்பிவைப்பதே நம்முடைய பண்பாடு அதனால் ந்த உலக்கையை கொடு அவர்களுக்கு னை கொடுத்துவிட்டு வருகின்றேன்," என அந்த உலக்கையை எடுத்து கொண்டு அந்த விருந்தினர்களை நோக்கி ஓடினார். அவர்கள் மூவரும் தூரத்தில் செல்வதை பார்த்ததும் ,"ஐயன்மீர்! இதனை வாங்கி கொண்டு செல்லுங்கள்", என சத்தமாக கூறினார். ஆனால்அம்மூவரும் தன்னை அந்த உலக்கையால் மூன்று அடிகொடுப்பதற்கா கத்தான் தன்னை வாங்கி கொண்டு போங்கள் என கூறி அவர் நம்மை பின்பக்கம் துரத்தி கொண்டு வருகின்றார்என மிகவும் வேகமாக தப்பித்து ஒடினார்கள். இதனை கண்ணுற்ற அந்தஊரின்பொதுமக்கள் இனி அந்த கருணையுள்ள மனிதன் வீட்டிற்கு சென்று உலக்கையால் மூன்று அடிவாங்கி கொண்டுவிருந்து சாப்பிடுவதைவிட அவ்வாறான விருந்திற்கு செல்லாமலேயேஇருந்துவிடலாம் என முடிவுசெய்தனர் அதன்பிறகு அந்த கருணையுள்ள மனிதன் வீட்டிற்கு விருந்திற்காக யாரும் வருவதேஇல்லை .

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...