ஞாயிறு, 18 ஜூலை, 2021

குதிரை திருடன் ..!

 


தற்போதைய பேருந்து,மகிழ்வுந்து .இருசக்கர வண்டி ஆகியவை இல்லாத முற்காலத்தில் ஒருநாள்  மனிதன் ஒருவன் தனது குதிரையில் மிகமுக்கியமான பணியை செய்து முடிப்பதற்காக அருகிலிருந்த கிராமத்திற்குச் சென்று கொண்டிருந்தார். .இடையில்  மிகப்பெரியகாடு ஒன்று இருந்தது  அதனால் அந்த பெரிய காட்டை குதிரையின் மீது  கடக்கும்போது அம்மனிதனுக்கு மிகவும் சோர்வாகிவிட்டது . எனவே, அவர்  ஏதேனும் மரத்தின் நிழலில் சிறிது ஓய்வெடுத்து சென்றால் நன்றாக இருக்கும் என எண்ணி ஓய்வெடுப்பதற்காக தனது குதிரையி லிருந்து கீழிறங்கி ஒரு மரத்தின்  நிழலில்தனது குதிரையை  கட்டிய பின்னர் அதே நிழலில் அந்த குதிரைக்கு அருகில்அவரும் படுத்தார் அவ்வாறு  அவர்படுத்தவுடன் விரைவில் தூங்கிவிட்டார்.   சிறிது நேரம் கழித்து அவர் தூங்கி எழுந்தபோது,தனது குதிரையை யாரோ திருடி கொண்டு சென்றுவிட்டதை அறிந்து என்னசெய்வது என பதைபதைப்புடன் சுற்றிலும் தேடிபார்த்தார்    ஆனால் அவரது குதிரையை மட்டும் அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர் தனது குதிரையின் காலடிச்சுவடுகளை வைத்து  எந்த பக்கம் தனது குதிரையானது திருடி கொண்டு செல்லப்பட்டுள்ளது  என அவர் தெரிந்துகொண்டார். அதனைதொடர்ந்து அவர் காட்டில் இருந்து ஒரு நீண்ட மரக் குச்சியை ஒடித்து தனது கையில் எடுத்து கொண்டு  குதிரைத் திருடனைத் தேடத் தொடங்கினார். அவ்வாறு  தேடிச்சென்றுகொண்டேயிருந்தபோது, கடைசியில் அவர் அருகிலிருந்த கிராமத்திற்கு  வந்து சேர்ந்தார். அங்கே, அவர் தனது கையிலிருந்த நீண்டகுச்சியை கம்பம் சுழற்றுவதை போன்று சுழற்றிக்கொண்டு, “என் குதிரையைத் திருடியது யார்? அவ்வாறு திருடிய யாராயிருந்தாலும் என்னுடைய குதிரையைத் திருப்பித் தரப்போகின்றீர் களா,இல்லையா? இல்லையெனில் கடைசியாக  எனது குதிரை திருடப்பட்டபோது நான் என்ன செய்தேனோ அதை இப்போது  செய்வேன். ” எனச் சத்தமாக அறிவிப்பு செய்து கொண்டிருந்தார் .அவர் மீண்டும் மீண்டும் இதே போன்று தனது கையிலிருந்த நீண்டகுச்சியை கம்பம் சுழற்றுவதை போன்று சுழற்றியவாறு சத்தமாக அறிவிப்பினை செய்து அந்த கிராமத்தாரை எச்சரித்து கொண்டிருந்தார். அவர் அவ்வாறு தொடர்ந்து சத்திமிட்டு அறிவிப்பு செய்வதை கண்ட அந்த கிராம மக்கள் அனைவரும் அவரை சுற்றி கூடிவேடிக்கை பார்க்க ஆரம்பித்தனர் , அவருடைய குதிரையை திருடிய  திருடனும் அதே கிராமத்தைச் சேர்ந்தவன். இவ்வாறு எச்சரிக்கை செய்வதைக் கேட்ட திருடன்  குதிரையின் சொந்தக்காரர் தன்னைஎன்ன செய்துவிடுவாரோ நமக்கு ஏதாவது ஆபத்து வந்துவிடுமோ என பயந்து உடனே அந்த குதிரையை மறைத்து வைத்திருந்த இடத்திற்குச் சென்று அதை அவிழ்த்து விட்டிட்டான். அதனால் அந்த குதிரையும் விரைவாக, தன்னுடைய உரிமையாளரிடம் திரும்பி வந்து சேர்ந்ததுஇவ்வாறு நாள்முழுக்க குதிரையை தேடுவதிலேயே கழிந்துவிட்டதால் அன்று செய்து முடிப்பதற்காக எண்ணிய பணியை வேறொரு நாள் செய்து முடிப்போம் முதலில் நாம் நம்முடைய  கிராமத்திற்கு போய்ச்சேர்வோம் என அந்த குதிரையின் உரிமையாளர் தன்னுடைய குதிரையின் மீதுஏறி புறப்பட தயாரானபோது, ஏற்கனேவே குதிரை திருடு போன போது அவர் செய்த செயல் என்னவென தெரிந்து கொள்ள மிகவும்  ஆர்வமாக அந்த குதிரையை திருடியவன் அவரிடம் சென்று, “ஐயா  உங்களுடைய  குதிரை கிடைத்து விட்டது அதனால் உங்களுக்கு மிக்கமகிழ்ச்சிதான், ஆனால் நீங்கள் புறப்படுவதற்கு முன்பு கடைசியாக உங்களுடைய குதிரை திருடு போனபோது நீங்கள்  என்ன செய்தீர்கள்? என்ற தகவலை மட்டும்  சொல்லி விட்டு செல்லுங்களேன், நானும் தெரிந்து கொள்கின்றேன்என்று கேட்டான். அதனைதொடர்ந்து அந்த குதிரைக்காரன்  புன்முறுவலுடன் , “அது ஒன்றுமில்லை! ஐயா| அவ்வாறு குதிரை திருட போன்பின்னர்  உடன் நான் ஒரு புதிய குதிரை வாங்கி விட்டேன்.அவ்வளவுதான் " எனக்கூறி அவர் குதிரையுடன் புறப்பட்டு சென்றார்

1 கருத்து:

Viswanathan’s சொன்னது…

Unable to read because of dark background and font shade..Please fix

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...