சனி, 28 மே, 2022

தந்தையின் கடிதம்


ஒரு நகரத்தில், ஒரு சிறுவன் தனது பெற்றோருடன் வாழ்ந்தான், அவனது தாத்தா பாட்டி வெகுதூரத்தில் வேறொரு நகரத்தில் வசித்து வந்தனர். ஒவ்வொரு ஆண்டும் கோடை விடுமுறையின் போது பெற்றோர்கள் தங்களுடைய மகனை அவனது தாத்தா பாட்டி வீட்டிற்கு அழைத்துச் செல்வார்கள். 15-20 நாட்கள் அங்கேயே தங்கிவிட்டு திரும்புவார்கள். அந்த சிறுவன் தொடர்ந்து அங்கு தங்குவதையே விரும்பினான்.இது ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்தது.

காலப்போக்கில், அந்த சிறுவன் வளர்ந்து பெரியவனாகி வந்தான். ஒரு நாள் சிறுவன் தன் பெற்றோரிடம், “இப்போது, நான் பெரியவனாகிவிட்டேன், அதனால் நான் தாத்தா பாட்டி வீட்டிற்கு தனியாக செல்ல முடியும். எனவே என்னைத் தனியாகப் போக விடுங்கள்.”என்கூறினானஅ

 பெற்றோர்கள் முதலில் சம்மதிக்கவில்லை ஆனால் சிறுவன் வற்புறுத்தியபோது அவர்கள் ஒப்புக்கொண்டனர். ஆனால் பெற்றோர்கள் அந்த சிறுவனது பாதுகாப்பு பற்றி. கவலைப்பட்டனர் அதனால், சிறுவன் தனியாகப் பயணம் செய்யத் தேவையானவாறு அனைத்தையும் அந்த சிறுவனுக்கு பயிற்சி அளித்தனர்.

சிறுவன் தன் தாத்தா பாட்டி வீட்டிற்கு தனியாக செல்ல வேண்டிய நாள் வந்தது.

சிறுவனை வழிகூட்டி அனுப்பவதற்காக பெற்றோர்கள் சிறுவனுடன் வந்தனர். சிறுவன் தொடர்வண்டியின் படுக்கைவசதியுடன்  கூடியஉட்காருமிடத்தில் வசதியாகஉட்கார்ந்த பின்னர், அவனது பெற்றோர் தொடர்வண்டியை விட்டு வெளியே வந்தனர், தொடர்வண்டி புறப்படும் வரை காத்திருந்து வழிகூட்டி அனுப்பினர்

அவ்வாறு தொடர்வண்டிக்கு அருகில் காத்திருந்தபோது, அந்தசிறுவனுடைய தந்தை ஜன்னல் அருகில் நின்று கொண்டு மகனுடன் பேசிக் கொண்டே இருந்தார். அவ்வாறு தந்தை பேசிக்கொண்டிருக்கும் போது  ஜன்னல் வழியாக ஒரு உறையை அவனிடம் கொடுத்து, “மகனே, வழியில் பயனத்தின்போது தனிமையாக இருப்பதால் பயம் உருவானால்,இதை திறந்து படித்திடுக. இது உன் பயத்தினை போக்கி உனக்கு அமைதிப்படுத்த உதவும்.” எனக்கூறினார் 

அவருடைய மகன் அந்த உறையைவாங்கி  கவனமாக தன்சட்டைபையில் வைத்துக் கொண்டு அவனது பெற்றோரிடமிருந்து விடைபெற்றான்.

மேலும் சிறுவன் சிரித்துக்கொண்டே தன் தந்தையிடம், “அப்பா எனக்கு எல்லாம் நினைவிருக்கிறது. கவலைப்படாதீர்கள்” எனக்கூறினான் தொடர்வண்டி புறப்படுவதற்கான சமிக்ஞை கிடைத்ததால் உடன் அந்த சிறுவன் பயனம் செய்த தொடர்வண்டி தன்னுடைய பயனத்தினை துவங்கியது

தொடர்வண்டி நிற்கும் ஒவ்வொரு  தொடர்வண்டி நிலையத்திலும் பொதுமக்கள் அந்த தொடர்வண்டியில் ஏறுவதும் இறங்கி செல்வதுமாகதங்களுடைய பயனத்தினை தொடர்ந்தார்கள். சிறுவன் இதையெல்லாம் வேடிக்கையாக பார்த்துக் கொண்டிருந்தான். எல்லோரும் யாரோ ஒருவரின் துனையுடன் பயனம் செய்வதைக் கண்ட அந்த சிறுவன், விரைவில் தனிமையாக இருப்பதாக உணர ஆரம்பித்தான்.

ஒரு தொடர்வண்டி நிலையத்தில், வாட்டசாட்டமான பெரிய மனிதர் ஒருவர் அந்த சிறுவனின் பெட்டிக்குள் நுழைந்து உட்கார்ந்தார். முதல்முறையாக தனியாக பயணம் செய்த சிறுவன் அந்த மனிதனை பார்த்து பயந்தான். இரவு தூங்க முயன்றான்,  அந்த மனிதனைப் பற்றி நினைத்ததால் அந்த சிறுவனுக்கு தூக்கம் வரவில்லை

அதிகம் பயந்து நடுங்கினான் அப்போதுதான் தன்னுடைய தந்தையின் கடிதம் நினைவுக்கு வந்தது. தன்னுடைய சட்டை பையிலிரு்நது அந்த உறையை திறந்து அதிலுள்ள கடிதத்தினை  படித்தான்

அந்த சிறுவனின் தந்தை  - “ அன்பு மகனே பயப்படாதே.  நானும் இந்த தொடர்வண்டியின், பக்கத்து பெட்டியில் உன்னுடன் பயனம் செய்து கொண்டுஇருக்கிறேன்..” என எழுதியிருந்த அந்தக் கடிதத்தைப் படித்தவுடன், சிறுவன் முகம் பிரகாசமாகி, பயம் மறைந்தது மகிழ்ச்சியுடன்பயம் எதுவுமில்லாமல் தூங்க ஆரம்பித்தான் 

சனி, 21 மே, 2022

கனவின் பலன்கூறுவதற்கான பரிசு

 

ஒருமுறை அரசன் ஒருவனின் கனவில் தன் பற்கள் அனைத்தும் உடைந்திருப்பதை போன்றும்  பெரிய முன்பல் ஒன்று மட்டும் எஞ்சியிருந்ததைபோன்றும். கண்டார்  அந்த அரசன் அத்தகைய கனவைக் கண்டதால் மிகவும் மனம்கலங்கினார்.

மறுநாள் காலையில், அந்த அரசன் தனது கனவை அமைச்சரிடம் விவரித்தார், அதன் அர்த்தத்தை அறிய விரும்பினார். உடன் அவ்வாறான கனவுகளுக்கான அர்த்தத்தை கூறுகின்ற கனவு நிபுணர்களை அழைத்து அந்த கனவின் அர்த்தம் குறித்து கேட்க வேண்டும் என்று அமைச்சர் அரசனிடம் அறிவுறுத்தினார்.

அதனால் தன்னுடைய நாட்டில்  உள்ள கனவு நிபுணர்கள் அரசவைக்கு நேரில் வந்து, அரசனின் கனவின் அர்த்தத்தை சரியாக கூறிடுமாறும் அதைச் சரியாகக் கணிக்கக்கூடிய எவருக்கும்தகுந்த பரிசுப்பொருட்கள் வழங்கப்படும் என்றும் அந்த நாடுமுழுவதும்  அறிவிப்பு ஒன்று  வெளியிடப்பட்டது, .

ஒரு நாள் கழித்து,  கனவு நிபுணர் ஒருவர்அரசவைக்கு வந்து அந்த அரசனை வணங்கி, “அரசே!  உங்கள் கனவின் சரியான அர்த்தத்தை என்னால் கூற முடியும்". எனக்கூறினார் 

அரசன் தான் கண்ட தனது கனவு முழுவதையும் அவரிடம் கூறியபின்னர் , "சொல்லுங்கள், இந்த கனவின் அர்த்தம் என்ன?" என அவரிடம் வினவினார் 

தொடர்ந்து  கனவு நிபுணர் சோகமான முகத்துடன், “அரசே! உங்கள் கனவு சோகமானது. உங்களது உறவினர்கள் அனைவரும் உங்களுக்கு முன் ஒருவர் பின் ஒருவராக இறந்துவிடுவார்கள் என்பதை இந்தக் கனவு உணர்த்துகின்றது". என அரசனின கனவிற்கான அர்த்தமாவதாகக் கூறினார்

இதைக் கேட்ட மன்னன் கோபமும் வருத்தமும் அடைந்து தன் காவலாளிகளை அழைத்து உடனடியாக அந்த  கனவு நிபுணரை கைது செய்து சிறையில் அடைக்கு மாறு  உத்தரவிட்டார்.

அடுத்த நாள், மற்றொரு கனவு நிபணர் அந்த அரசவைக்கு வந்து, “அரசே! இப்போது என்னிடம் உங்கள் கனவைச் சொல்லுங்கள்,  அதன் அர்த்தத்தை நான் உங்களுக்குச் சொல்ல முடியுமா என முயற்சிசெய்கின்றேன்" என வேண்டி நின்றார். அரசன் அந்த கனவு நிபுணரிடம் தனது கனவை விவரித்தார்

அதைக் கேட்டஅந்தமற்றொரு கனவு நிபணர் சிறிது நேரம் யோசித்துவிட்டு, “அரசே இது ஒரு நல்ல கனவு. நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. அந்த கனவு உங்கள் உறவினர்களை விட நீங்கள் நீண்டநாட்கள் நிறைவான வாழ்க்கையைப் பெறுவீர்கள் என்பதே இதன்அர்த்தமாகும்" எனக்கூறினார்

இதைக் கேட்ட அரசன் மிக்க மகிழ்ச்சி அடைந்தான். அவருக்கு ஏராளமான பொற்காசுகளை பரிசாக வழங்கினார்

, இருவரும் அரசனின் கனவுக்கு ஒரே அர்த்தத்தைதான் கூறினார்கள், ஆனால் ஒருவர் சிறையில் அடைக்கப்பட்டார், மற்றவர் பரிசு பெற்றார். முதல் கனவு நிபுணர் அரசனுக்கு கனவின் அர்த்தத்தை சொல்ல நேர்மறையானசொற்களை பயன்படுத்தாததால் கைது செய்யப்பட்டார், மற்றொருவர் அதே செய்தியை தெரிவிக்க நேர்மறையான சொற்களை பயன்படுத்தி கனவின் அர்த்தத்தை கூறினார் அதனால் பரிசுகளை பெற்றார்.

கற்றல்: நாம் ஒரு செய்தியைச் சொல்லும்போது, அதை எவ்வாறுச் சொல்கிறோம்,அதாவது  அந்தச் செய்தியை மற்றவர்கள் தெரிந்து கொள்வதற்கு நாம் தேர்ந்தெடுக்கும்சொற்கள் நேர்மறையாகவா அல்லது எதிர்மறையாகவாஎன்பதை பொருத்து,  பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது. அதனால் எப்போதும்  செய்திகளை கூறும் சொற்களை புத்திசாலித்தனமாக நேர்மறையானதைதேர்ந்தெடுத்திடுக.


சனி, 14 மே, 2022

வாழ்க்கையில் மிகவும் மகிழ்ச்சியாக உணர்ந்த நேரம் எது


ஒருமுறை கோடீஸ்வரர் ஒருவரிடம் ஒருவர் நேர்காணல் செய்தார். நேர்காணல் செய்பவர் கோடீஸ்வரரிடம், "ஐயா, உங்கள் வாழ்க்கையில் நீங்கள் மிகவும் மகிழ்ச்சியாக உணர்ந்த நேரம் எது?" என வினவினார்
  இதற்கு கோடீஸ்வரர், “நான் வாழ்க்கையின் மகிழ்ச்சியில் நான்கு நிலைகளைக் கடந்துள்ளேன், இறுதியாக  உண்மையான மகிழ்ச்சியின் அர்த்தம் புரிந்தது.
 நான் செல்வத்தையும் வளங்களையும் குவித்தது என்னுடைய முதல் கட்டமகிழ்ச்சியாகும். அதாவது இந்த கட்டத்தில் நான் மகிழ்ச்சியாக இருந்தேன், ஆனால் நான் விரும்பிய மகிழ்ச்சி எனக்கு கிடைக்கவில்லை.
நான் மதிப்புமிக்க பொருட்களையும் அரிய பொருட்களையும் சேகரிக்கத் தொடங்கியபோது இரண்டாவது கட்டமகிழ்ச்சியாகும், ஆனால் இதுவும் தற்காலிகமானது விலைமதிப்பற்ற பொருட்களின் பளபளப்பினால் உருவான என்னுடைய மகிழ்ச்சி  நீண்ட காலம் நீடிக்காது என்பதை உணர்ந்தேன்.
பின்னர் மூன்றாவது கட்டம் வந்தது, அதில் எனக்கு பெரிய செயல்திட்டம் கிடைத்தது, அந்த நேரத்தில் எனது நாட்டில் பெட்ரோலிய விநியோகத்தில் 95% மீது நான் கட்டுப்பாட்டை வைத்திருந்தேன், மேலும் ஆசியாவிலும்  ஆப்பிரிக்காவிலும் உள்ள நாடுகளுக்கு கிடையே கடல் போக்குவரத்தினை கட்டுபடுத்திடுகின்ற மிகப்பெரிய கப்பல் உரிமையாளரானேன். ஆனால் அந்த நேரத்திலும் நான் நினைத்த மகிழ்ச்சி எனக்கு கிடைக்கவில்லை.
பின்னர் நான்காவது கட்டம் வந்தது.
மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு சக்கர நாற்காலிகள் வாங்கித் தருமாறு எனது நண்பர் ஒருவர் என்னிடம் கேட்டபோது. நண்பரின் ஆலோசனையின்படி உடனடியாக அவற்றை கொள்முதல் செய்தேன் அதனை தொடர்ந்து  அவருடன் சென்று மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு சக்கர நாற்காலிகளை நானே ஒப்படைக்க வேண்டும் என்று என் நண்பர் வலியுறுத்தினார். அவர் மீண்டும் மீண்டும் வற்புறுத்தியதால் நான் ஒப்புக்கொண்டு அவருடன் சென்றேன்.
நான் அந்த இடத்தை அடைந்து, அந்தக் குழந்தைகளுக்கு நானே சக்கர நாற்காலிகளைக் கொடுத்தேன். அந்த சக்கர நாற்காலிகளை அவர்களிடம் ஒப்படைக்கும் போது, அந்தக் குழந்தைகளின் முகத்தில் ஒரு வித்தியாசமான மகிழ்ச்சியை கண்டேன். பின்னர், அவர்கள் அனைவரும் அந்த சக்கர நாற்காலியில் அமர்ந்துமிகவும் மகிழ்ச்சியுடன் இருப்பதை கண்டேன்.
நாங்கள் அனைவரும் சுற்றுலா மையத்தில் இருப்பது போலவும், அவர்கள் அனைவரும் தங்கள் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்வது போலவும் எனக்கு மனத்தில் காட்சி தோன்றியது.
அப்போது எனக்குள் உன்மையான மகிழ்ச்சியை உணர்ந்தேன். நான் அவ்விடத்தை விட்டு கிளம்பும் போது, அந்தக் குழந்தைகளில் ஒருவன் என் கால்களை இறுக்கமாக கட்டிபிடித்துகொண்டான்.
நான் குனிந்து அக்குழந்தையிடம்  - உனக்கு வேறு ஏதாவது தேவையா? என வினவியபோது அந்த குழந்தை  - இல்லை, நான் உங்கள் முகத்தை எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ள விரும்புகிறேன், அதனால் நான் உங்களைமீண்டும் சந்திக்கும் போது, நான் உங்களை அடையாளம் கண்டு மீண்டும் ஒருமுறை நன்றி கூற முடியும்.
எனப்பதில் கூறியது இந்த பதில் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது மட்டுமல்லாமல், வாழ்க்கையைப் பற்றிய எனது பார்வையை முற்றிலும் மாற்றியது. அந்த நேரத்தில் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக உணர்ந்தேன், உண்மையான மகிழ்ச்சி என்றால் என்ன என்பதை உணர்ந்தேன்.
கற்றல்: மற்றவர்களுக்கு மகிழ்ச்சியைத் தருகின்ற செயலே உண்மையான மகிழ்ச்சியாகும்

ஞாயிறு, 8 மே, 2022

இன்று நாம் எதைக்கொடுக்கின்றோமாஅதுவே நாளை நமக்கு கிடைக்கும்


கோடை விடுமுறை என்பதால்,  ஒருவர் தன்னுடைய, மகனுடன்  ஊருக்கு அருகிலிருந்த மலைக்கு சுற்றுலாபோன்று சென்று அன்றைய பொழுதினை கழிககலாம் என முடிவுசெய்தார். அவ்வாறான மலையேறுகின்ற சுற்றுலா செல்வதற்கு தேவையான பொருட்களை சேகரித்த பின் இருவரும் மலையேறுவதற்கு புறப்பட்டனர்.
அவர்கள் இருவரும் மலை ஏறி சென்றுகொண்டிருநத போது, மகன் திடீரென்று கால் இடறி  கீழேவிழுந்தான்,அவ்வாறு கீழேவிழும்போது அவனுடைய வாயிலிருந்து  "ஆஹா" என்றவாரு ஒரு உரத்த குரல் வந்தது
உடன், மலைகளில் இருந்துஅதே "ஆஹா"  எனும் குரல்  மீண்டும் மீண்டும் கேட்டது -.
 தொடர்ந்து அவன் அதைக் கேட்டு ஆச்சரியப்பட்டு, “யார் அங்கே?” என்ற கேள்வியை கேட்டான்.
என்ன ஆச்சரியம் , "யார் அங்கே?", என அதே குரல்திரும்பவும் ஒன்றுக்கு மேற்பட்டமுறைக் கேட்டது
அந்த சிறுவன் மிகஆர்வத்துடன், “யார் அது?” என்று கூவினான்.
உடன் அந்த குரலும், “யார் அது?” பதிலுக்கு பலமுறைவினவியது
யாரோஒருவர் தான் பேசுவதை திருதிரும்பு  பேசுகின்றனரே என இப்போது, சிறுவன் கோபமடைந்து, "கோழையே நீ யார் என பதிலளி" என்று கத்தினான்.
உடன் "கோழையே நீ யார் என பதிலளி.." என்று மீண்டும் அதேகுரல்  திரும்பவும் ஒன்றுக்குமேற்பட்டமுறை கூறுவதை கேட்டான்.
அதனால் மிகவும் கோபமடைந்த அந்த சிறுவன் , "கோழையே வெளியேவா.." என்று கத்தினான்.
அதனை தொடர்ந்து,“கோழையே வெளியேவா.."அந்த சிறுவனின் அதே கூப்பாடு  திரும்பவும் ஒன்றுக்குமேற்பட்டமுறைஒலிப்பதை கேட்டான்
அந்த நேரத்தில் தான் அவனுடைைய தந்தை அவனுடையஅருகில் வந்தார். மகன் தன் தந்தையிடம் இது பற்றி கேட்டான். அவனது தந்தை சிரித்து கொண்டே, "நீ ஒரு வெற்றியாளன்" என்று சத்தமாககூறினார்.
உடன்   "நீ ஒரு வெற்றியாளன்." என மீண்டும் ஒன்று்க்குமேற்பட்டமுறை கூறியதை கேட்டனர்
ஏன் இவ்வாறு  நடக்கின்றது என்று அந்த சிறுவனுக்கு இன்னும் புரியவில்லை. நம்முடைய சொந்தக் குரல் மலைகளின் முகடுகளை அடைந்து  எவ்வாறுத் திரும்புகிறது என்பதை  தந்தைதன்னுடையமகனுக்கு , 'இது ஒரு எதிரொலி' .என்றும் நீ எதைச் சொன்னாலும் இவ்வாறான மலைமுகடுகள் உள்ள பகுதியில்ஒன்றிற்கு மேற்பட்டமுறை அதே குரலில் திரும்பத் திரும்ப கூறுவதை கேட்கலாம்." என்றும்  விளக்கமளித்தார்
தொடர்ந்து தந்தை தன் மகனிடம், “அதபோன்று . நாம் எதைப் பெற்றாலும் அது நமது செயலின் பிரதிபலிப்பே நம்முடைய வாழ்க்கை ஆகும. நாம் என்ன பேசுகிறோம், என்ன நினைக்கிறோம், என்ன செய்கின்றோமோ அதையே நாம் திரும்பப் பெறுகிறோம். நமது எதிர்காலம் இந்தக் எதிரொலிக்கின்ற குரல் போன்றது, நாம் என்ன செய்கின்றோமோ அதுதான்  நாளை நமக்குத் திரும்பவும் கிடைக்கும்.என்ற வாழ்க்கையின் அடிப்படையை தெரிந்துகொண்டால் நாமனைவரும் ஒன்றாக நன்றாக உயர்வாக வாழமுடியும்
மற்றவர்களை மதிக்கின்றோம் எனில்,  அதையே திரும்பப் பெறுவோம்.அதாவது நம்மை மற்றவர்கள் மதிப்பார்கள் நாம் கோழை என்று மனதிற்குள் நினைத்தால் அவ்வாறே நாம் கோழையாகிவிடுவோம்.  வெற்றியாளர் என்று நினைத்தால்,  அவ்வாறே வெற்றியாளராகிவிடுவோம்." என்று ஒரு நீண்ட விளக்கமளித்தார்

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...