ஞாயிறு, 26 மார்ச், 2023

பணக்காரனாக வேண்டும் - ஏழையின் வேண்டுகோள்

 முன்னொரு காலத்தில் ஒரு பரமஏழை இருந்தார். அவர் தனது கிராமத்திற்கு அருகிலுள்ள ஒரு ஆசிரமத்திற்கு தினமும் செல்வார்
தினமும் அவ்வாசிரமத்தில் துப்புரவு பணி செய்து  வந்தார். அதன் பிறகுதான் அவர் தன்னுடைய அன்றாட பணிசெய்வதற்குச் செல்வார்.
ஒரு நாள், அவ்வாசிரமத்தின் குரு அவ்வேழையிடம், "நீங்கள் ஏன் தினமும் ஆசிரமத்திற்கு வருகிறீர்கள்?" என வினவியபோது
அதற்கு ஏழை, "ஐயா நீங்கள் என்னை ஆசீர்வதித்தால், எனக்கு நிறைய செல்வம் கிடைக்கும் அதனால் நான் பெரிய பணக்காரனாகி நிம்மதியாக வாழ்வேன்" என்று பதிலளித்தார்.
குரு , "நீ இங்கு வருவது அதற்காக மட்டும்தானா?" என வினவியபோது
உடன் அந்த ஏழையானவர் "ஆம்,ஐயா" என நேர்மையாக ஒப்புக்கொண்டார்.
அந்த ஏழையானவர் தொடர்ந்து, "ஒரு வண்டியில் ஏராளமாக சரக்குகளை  ஏற்றி சென்று விற்பதும். அதனடிப்படையில் நிறைய பணம் சம்பாதிப்பதும்தான் எனது நோக்கம், அதனால்தான் உங்களுடைய ஆசிரமத்திற்கு தினமும் உங்களை பார்க்க வந்து செல்கின்றேன், நான் மகிழ்ச்சியாக வாழும் நாட்கள் எப்போது வரும் என்று எனக்குத் தெரியவில்லை." என கூறினார்
குரு, "கவலைப்படாதே. நேரம் வரும்போது வாய்ப்புகளின் கதவுகள் உன் முன் திறக்கும்" என்றார்.
ஏழை தன்னுடைய வழக்கமான பணி செய்வதற்கு சென்றார் காலம் மிகப்பெரிய  திருப்பத்தை கொடுத்தது, விரைவில் அந்த ஏழை மனிதன் அதிக பணம் சம்பாதிக்க ஆரம்பித்தார். அதனால் ஏற்பட்ட  அதிக பணிச்சுமை யினால் ஆசிரத்திற்கு வழக்கமாக செல்வதை நிறுத்தினார்.
பல வருடங்களுக்குப் பிறகு, ஒரு நாள் காலை , அந்த மனிதர் ஆசிரமத்தில் முன்பு போன்று சுத்தம் செய்யும் பணியை செய்து கொண்டிருந்தார்.
அதனைப் பார்த்த குரு ஆச்சரியமாக, " ஏன் என்ன செய்தி இத்தனை வருடங்களுக்குப் பிறகு வந்திருக்கிறாய். நீ பெரிய பணக்காரன் ஆனாய் என்று கேள்விப்பட்டேன்" என்று கேட்டார்.
அதற்கு அந்த மனிதர், "நான் நிறைய பணம் சம்பாதித்தேன். என் பிள்ளைகளுக்கு நல்ல வீடுகளில் திருமணம் நடந்தது. எதற்கும் குறைவில்லை ஆனால் இன்னும் என்  மனதில் மட்டும் அமைதி இல்லை.
நான் தினமும் இங்கு வந்து சேவை செய்ய வேண்டும் என்று நினைத்தேன் ஆனால் வர முடியவில்லை. ஐயா, நீங்கள் எனக்கு எல்லாவற்றையும் கொடுத்தீர்கள், ஆனால் வாழ்க்கையின் அமைதியை மட்டும் கொடுக்கவில்லை." எனக்கூறினார்.
தொடர்ந்து குரு, "ஆனால் நீங்கள் அதை எப்போது கேட்டீர்கள்? நீங்கள் கேட்டது உங்களுக்கு கிடைத்தது, இல்லையா? பிறகு ஏன் இப்போது  வந்தீர்கள்?" என வினவினார்
அம்மனிதனின் கண்கள் கண்ணீரால் நிரம்பி வழிந்தன, அவர் குருவிடம், " இனி நான் உங்களிடம் எதையும் கேட்க மாட்டேன், எனக்கு மனஅமைதி மட்டும் கிடைச்செய்யங்கள்" என வேண்டினார்.
குரு, "நிச்சயமா, அமைதிக்காக மட்டுமே இங்கு வருவீர்களா? உங்கள் சேவைக்கு ஈடாக வேறு எதையும் கேட்க மாட்டீர்களா?" என்றார்.
அம்மனிதன் குருவிடம், "எனக்கு எதுவும் வேண்டாம். ஐயா பணம் சம்பாதிப்பதைவிட மன அமைதி மிகவும் விலைமதிப்பற்றது என்பதை நான் புரிந்துகொண்டேன். ஐயா நான் தினமும் இங்கு வந்த சேவைசெய்கின்றேன்" என்றார்  

ஞாயிறு, 19 மார்ச், 2023

அமைதியற்ற மனம்

 குளிர்காலத்தில் ஒரு நாள், குருவும் அவரது சீடனும்  அருகிலிருந்த கடற்கரையில் நடந்து வந்துகொண்டிருந்தனர், அப்போது புயலுடன் கூடியகடல்காற்று பலமாக வீசியது அதனால் கடலில் உயரமான அலைகள் எழுந்தகரைக்குவந்து .சேர்ந்தன.
சிறிது நேரம் நடந்த பிறகு, குரு தனது சீடரைப் பார்த்து, "தற்போதைய இந்தக் கடல்காட்சி உனக்கு என்ன நினைவூட்டுகிறது?" என வினவினார்
அதற்கு அவருடைய சீடன், "இது என் மனதையும் அதன் அமைதியற்ற எண்ணங்களையும் நினைவூட்டுகிறது ஐயா" எனபதிலளித்தார்.
உடன் குரு, "ஆமாம், நம்மனம் கடலிலுள்ள நடுநிலையான நீர் போன்றது. அதில் நல்லதும் இல்லை கெட்டதும் இல்லை அமைதியாக உள்ளது . ஆனால் கடலின் மீது வீசும்  கடுமையான புயலுடன் கூடிய இந்த கடல் காற்று ஆனது அதிக அலைகளை உருவாக்குகிறது, அவ்வாறே ஆசைகளும் அச்சங்களும் அமைதியான நம்முடைய மனதைஅலைகழித்து புதிய எண்ணங்களையும் கருத்துகளையும் உருவாக்குகின்றன." என்றார்
தொடர்ந்து குரு, "சரி, இப்போது சொல்லுங்கள், இவ்வளவு புயல் நிறைந்த கடலின் நடுவில் நீங்கள் படகில் செல்ல விரும்புகிறீர்களா?" என வினவினார்
உடன்அவருடைய  சீடன், "நான் செல்லமாட்டேன் ஐயா" என்று பதிலளித்தார்.
தொடர்ந்து குரு, "அதெல்லாம் சரிதான். ஆனால் உண்மையில், தற்போதைய கடுமையாக வீசிடும் இந்தப் புயலுக்குள்தான் நாம் எப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். அதுமட்டுமன்று பெரும்பாலான மக்கள் கடுமையான இவ்வாறான புயல்காற்றுடன் கூடிய கடலின் நடுவில் சுக்கான் இல்லாத படகில் பயனம் செய்வதை போன்றே தாங்கள் அவ்வாறான சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என உணராவிட்டாலும் கூட வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள், .
பொதுவாக நம்முடைய மனம் மிகவும் அமைதியற்றது, எல்லா வகையான எண்ணங்களும் கடல் அலைகளைப் போன்று குறுக்கும் நெடுக்குமாக இடைவிடாமல் வந்து செல்கின்றன, நம்முடைய மனதைக் கிளர்ச்சியுறச் செய்கிறது." என நீண்ட விளக்கமளித்தார்
அதற்கு அவருடையசீடன், "ஆமாம்..ஐயா. நான் இவ்வாறான செய்தியைதான்   உங்களிடமிருந்து கற்றுக்கொள்ள விரும்புகிறேன்" என்று பதிலளித்தார்.
குரு தன்னுடைய சீடனைப் பார்த்து புன்னகைத்து, "தண்ணீரை அசைய விடாமல் பிடித்துநிறுத்தி கடலை அமைதிப்படுத்த முடியாது. அமைதியான கடலின்மீது வீசும் காற்றை நிறுத்துவதுதான் அதற்கான ஒரேவழியாகும்.
நம்மனதில் எழும் பல்வேறு எண்ணங்கள், ஆசைகள், அச்சங்கள் இந்த கடல் காற்றைப் போன்றது, அதனை அமைதிப்படுத்த வேண்டும்.  கவனத்தையும் செயல்களையும் கட்டுப்படுத்துவதன் மூலம் அவற்றைக் கட்டுப்படுத்த முடியும், அப்போதுதான்  கடலின் தண்ணீர் போன்ற நம்முடையமனம் அமைதியாக இருக்கும்." என அறிவுரை கூறினார்
தொடர்ந்து குரு தன்னுடைய சீடனிடம், "கடல் காற்றை அலட்சியப்படுத்துவது சாத்தியம் என்று வைத்துக்கொள்வோம். அப்போது என்ன நடக்கும்?" என வினவினார்
அதற்கு சீடன், "அவ்வாறு நடந்தால் கடலில் அலைகள் நின்றுவிடும்" என்றார்.
பின்னர் குரு, "உண்மையில், நீங்கள் இயற்கையாக  காற்றை புயல்காற்றைக் உங்களால் கட்டுப்படுத்த முடியாது, ஆனால் உங்கள் மனதில் எழும் புயலுடன்கூடிய காற்று போன்ற பல்வேறு எண்ணங்களை கட்டுப்படுத்தலாம், இது  மனதை அமைதியாக்குகிறது." என்றார்
உடன் அவருடைய சீடன், "ஐயா, என் மனதில் எழும் புயலாக வீசும் காற்றினை போன்ற எண்ணங்களை தணிப்பதில் நான் வெற்றி பெற்றால், என்னைச் சுற்றியுள்ள உலகில் இன்னும் அமைதியையு கொண்டு வர முடியுமா?"என ஐயம் எழுப்பினார்

அதற்கு குரு, "உங்கள் மனதை ஒருமுகப்படுத்த கற்றுக்கொள்ளுங்கள், ஆற்றல் மற்றும் சுய ஒழுக்கத்தை வளர்த்துக் கொள்ளுங்கள் . உங்கள் மனதைக் கட்டுப்படுத்தி அதை அமைதியானதாக மாற்றினால், உங்கள் வாழ்க்கையை நீங்கள் கட்டுப்படுத்துவீர்கள்.
இருப்பினும், வெளி உலகத்தை மாற்றுவதில் கவனம் செலுத்த வேண்டாம். உங்கள் உள் உலகத்தை மாற்றுவதற்கும் அமைதிப்படுத்துவதற்கும் கவனம் செலுத்துங்கள். உங்கள் உள் உலகத்தை நீங்கள் கட்டுப்படுத்த முடிந்த பிறகே, உங்களைச் சுற்றியுள்ள உலகத்தை உங்களால் கட்டுப்படுத்த முடியும்". என அறிவுரை கூறினார்



ஞாயிறு, 12 மார்ச், 2023

யார் உயர்ந்தவர் கொடுப்பவரா அல்லது பெறுபவரா?

 முன்பு பணக்காரர் ஒருவர் பெரிய தொழிற்சாலைகளுக்கு முதலாளியாக இருந்தார். ஆயினும் ஒரு நாள் அவர் தனது தொழிற்சாலைகளிலிருந்தும் வணிகங்களிலிருந்தும் வெளியேறி துறவியானார்.
 விரைவில் அவர் பிரபலமானார். அவருடைய சொற்பொழிவைக் கேட்க ஏராளமான மக்கள் கு வரத் தொடங்கினர்.
அவ்வாறான சொற்பொழிவின்போது ஒரு நாள், தான் தன்னுடைய வணிக நிறுவனத்திலிருந்து வெளியேி துறவியாக ஆக்க தூண்டியச் செய்த நிகழ்வைப் பற்றி பின்வருமாறுகூறினார்

அவர் , "ஒரு நாள் நான் எனது தொழிற்சாலையில் சுற்றி மேற்பார்வை பார்த்து கொண்டுவந்தபோது, ஒரு நாயின் மீது வாகனம் ஒன்று மோதியது, அதனால் அதன் மூன்று கால்கள் உடைந்தன, விபத்துக்குப் பிறகு அது ஒரு காலால் மட்டும் ஊர்ந்து செல்லத்துவங்கியது.
அதைகண்டு நான் மிகவும் வருந்தினேன், உடன ஒரு விலங்குகளுக்கான மருத்துவமனைக்கு அடிபட்ட நாயை எடுத்து செல்ல ஏற்பாடு செய்தேன், அப்போது என் மனதில் ஒரு எண்ணம் தோன்றியது.
 இதன்பிறகு இந்த நாய்க்கு தேவையான உணவு கிடைக்கும் என காண வேண்டும் என்று நான் நினைத்தேன்
 அடிபட்ட நாய்க்கு தேவையானசிகிச்சை அளித்தபின் சாலையோரம் விடபட்டது அதன்பின்னர் என்ன ஆச்சரியம் மற்றொரு நாய் வாயில் ரொட்டிதுண்டு எடுத்துவந்து அடிபட்ட நாய்க்கு கொடுத்தது.
அடிபட்ட நாயும் அந்த ரொட்டியை சாப்பிட்டு தன்னுடைய பசியாற்றிக்கொண்டது. அதன் பிறகு, மற்றொரு நாய் அடிபட்ட நாய்க்கு தினமும் ரொட்டி துண்டுகளை கொண்டு வந்து கொடுத்துது வந்தது , அடிபட்ட நாயும் விரைவில் குணமடைந்து தானாகவே நடக்கதுவங்கியது.
இந்த நிகழ்வை கண்டவுடன் எல்லோருக்கும் அவரவர்கள் உயிர்வாழத்தேவையான பொருட்கள் இயற்கையான நிகழவாக அனைவருக்கும் கிடைத்து கொண்டே இருக்கின்றன என்பதை உணர்ந்து, நாம் ஏன் இவ்வளவு தொழிற்சாலைகளுக்கு முதலாளியாக இருக்கவேண்டும் என முடிவுசெய்து அன்றே நான்  தொழிற்சாலைகள் வணிகங்கள் ஆகியவற்றினை விட்டுவிட்டு  துறவியாகிவிட்டேன்  ."
அந்த துறவியின் சொற்பொழிவை கேட்பதற்காக அங்கே அமர்ந்திருந்த  ஒருவர் இந்த விளக்கத்தை கேட்டு சத்தமாகச் சிரிக்கத் தொடங்கினார்.தொடர்ந்துஅந்த நபர், "காயமடைந்த அந்த நாய்க்கு வேறொரு நாய் உணவு வழங்குவதை நீங்கள் பார்த்தீர்கள், ஆனால் அவ்விரண்டில்  யார் உயர்ந்தவர் உணவளித்தவரா அல்லது உணவினை பெற்றவரா?  என்பதை நீங்கள் அறிந்து  கொள்ளமுயற்சி செய்யவில்லை  ஆனாலும் மற்றவர்களுக்கு உணவளிப்பவரே உயர்ந்தவர் என்பதை புரிந்து கொள்ளவில்லையா?
 அதைப் பார்த்த பிறகு, மற்றவர்களுக்கு உணவளிக்க வேண்டியஉயர்ந்த நிலையலிருந்து தாழ்ந்து உங்களுடைய உணவிற்காக மற்றவர்களைச் சார்ந்து வாழத்துவங்கி அடிபட்ட நாய் போன்று ஆகிவிட்டீர்கள். முன்பெல்லாம் அடிபட்ட நாய்க்கு உணவளித்த நாய்போன்று மற்றவர்களுக்கு உணவளிக்கும்உயர்ந்த நிலையில். பலருக்கு வாழ்வளிக்கும் தொழிற்சாலைகளை நடத்தினீர்கள்.
நீங்கள் முன்பு செய்து கொண்டிருந்தது  பெரிய பணியா அல்லது இப்போது நீங்கள் செய்வது பெரிய பணியா எது உயர்ந்தது  என்று நீங்களே நினைக்கிறீர்கள்?" என பதிலுக்கு நீண்ட விளக்கமளித்தார்
இதனை கேட்டபின்னர் துறவி தனது தவறை உணர்ந்து திரும்பிச் சென்று  மீண்டும் தனது வணிகத்திலும் தொழிற்சாலையிலும் தன்னுடைய பணியை தொடர்ந்து நடத்த தொடங்கினார்.
கற்றல்:
 தற்போது நாம் செய்யும் பணியைநிறுத்தக் கூடாது என்பதை நாம் புரிந்து கொள்க.  நாம் உழைத்து மற்றவர்களுக்கு உணவளிக்கவேண்டும் நாம் உழைக்காமல் நம்முடைய  உணவிற்காக மற்றவர்களிடம் பிச்சையெடுக்கக்கூடாது.

ஞாயிறு, 5 மார்ச், 2023

பறவையின் கோரிக்கை மரம் மறுப்பு! நிராகரிப்பு பற்றிய கதை

 
பருவகாலம் மாறி மழைகாலம் வரவிருந்தது. அதனால் மழைவருவதற்குள் தங்களுக்கு ஒரு கூடு கட்டினால்தான் தாங்கள் மழைகாலத்தில் பாதுகாப்பாக வாழமுடியும் என முடிவுசெய்து எந்த மரத்தில் கூடுகட்டினால் நன்றாக இருக்கும் என ஒரு ஜோடி பறவைகள் தங்களுக்கான கூடு கட்ட மரத்தைத் தேடிக் கொண்டிருந்தன. அவ்வாறு அவை பொருத்தமான மரத்தினை தேடிபறக்கும் போது ஆற்றின் கரையோரத்தில் பலமரங்கள் இருப்பதைப் பார்த்தன . அவைகளுள் தங்களுக்கு கூடு கட்டுவதற்கு ஏற்ற மரம் ஒன்றைக் கண்டன.
அப்பறவைகள் அம்மரத்திற்குஅருகில் சென்று, "மழைக்காலம் வருவதற்கு முன் நாங்கள் வாழ்வதற்கான ஒரு கூடு கட்ட வேண்டும், தயவுசெய்து உங்கள் கிளைகளில் ஒன்றில் எங்களுக்கான கூடு கட்ட அனுமதிக்கின்றீர்களா" என அனுமதி கேட்டன.
உடன் அந்த மரமானது, "இல்லை, என்னுடைய கிளைகளில் உங்களுக்கான கூட கட்ட அனுமதிக்க முடியாது" என்று மறுத்தது. அப்பறவைகள் அம்மரத்திடம் பலமுறை கெஞ்சியும் அம்மரம் ஒப்புக்கொள்ளவில்லை
அந்த மரம் தங்களுக்கான கூடகட்டமறுத்ததால் பறவைகள் சோகமடைந்தன. அப்பறவைகள் தங்களுக்கான கூடுகட்டுவதற்காக வேறு ஏதாவது பொருத்தமான மரத்தினை தேடிகண்டுபிடிப்போம் என புறப்படத் தயாராகும்போது அவை அம்மரத்திடம், "இப்படிப்பட்ட ஆணவம் நல்லதன்று. ஒரு நாள் நீ உன் அகங்காரத்தினால்வேரோடு முறிந்து அழிந்து போவாய், ." எனக்கூறிச் சென்றன.
அப்பறவைகள் அவ்வாறு கூறியபோது மரம் எதுவும் பதிலுக்கு சொல்லும் முன், அப்பறவைகள் விருட்டென்று பறந்து சென்றன.
பறவைகள் தங்கள் தேடலைத் தொடர்ந்தன, விரைவில் அருகிலிருந்த காட்டினை அடைந்தன.அந்தகாட்டில் ஏராளமாக மரங்கள் இருந்ததால் அந்த பறவைகள் மிகவும் மகிழ்ச்சியுற்று தங்களுக்கு கூடுகட்டுவதற்கான பொருத்தமான மரமொன்றினை தேடிக்கண்டுபிடித்து அதில் தங்களுக்கான கூடுஒன்றினை கட்டி மகிழ்ச்சியாக வாழ ஆரம்பித்தன, விரைவில் மழைக்காலம் வந்தது. இரண்டு பறவைகளும் இப்போது தங்கள் கூட்டில் மிகவும்பாதுகாப்பாக இருந்தன
ஒரு நாள் மிக பலமாக புயல் ஒன்று வீசியது அதனோடு இடியுடன் கூடிய பலத்த மழையும் பெய்தது, அந்த பலமாக வீசி புயலாலும், பலத்த மழையினாலும், பறவைகளுக்கு கூடு கட்டுவதற்கு அனுமதி மறுத்த  மரம் வேறோடு தரையில்  விழுந்தது. அதனோடு மழையினால் ஆற்றில் வெள்ளம்பெருக்கெடுத்து ஓடியது அவ்வெள்ளத்தில்  பறவைகளுக்கு கூடு கட்டுவதற்கு அனுமதி மறுத்த  மரம் அடித்து செல்லப்பட்டது
மழை நின்றதும்.அப் பறவைகள் உணவு தேடி பறந்தன. அவை ஆற்றின் மேல் பறந்து சென்றுகொண்டிருந்தபோது, ஆற்றின்  வெள்ளத்தில் தங்களுக்கு கூடு கட்டுவதற்கு அனுமதி மறுத்த  மரம் அடித்துச் செல்லப்படுவதைக் கண்டன.
 மரத்தின் நிலையைப் பார்த்த, அப்பறவைகள் கீழே தாழபறந்து அந்த மரத்தின் அருகே சென்று, "ஒரு நாள் நீ உன் அகங்காரத்தினால்  உன்  வேரோடு முறிந்து அழிந்து போவாய், என்று நாங்கள் கூறினோம். இன்று அந்த நாள் வந்துவிட்டது. இது உன் அகங்காரத்தின் விளைவு" என்றன.
அதற்கு மரம், "பறவைகளே நீங்கள் என்னைத் தவறாகப் புரிந்து கொண்டீர்கள். மழைகாலத்தில் நான் இவ்வாறு வேறோடு பெயர்ந்து வீழ்ந்து வெள்ளத்தில் அடித்து செல்லப்படுவேன் என்றும், இந்த மழைக்காலத்தில் தொடர்ந்து என்னால் வாழ முடியாது என்றும் எனக்குத் தெரியும். அதனால்தான் நான் அன்று உங்களுக்கான கூடுகட்டுவதற்காக மறுத்தேன்.
என் கிளையில் நீங்கள் கூடு கட்டியிருந்தால் இன்று நீங்களும் உயிருடன் இருந்திருக்க மாட்டீர்கள் உங்களுடைய கூட அழிந்து போயிருக்கும். அன்று, இதையெல்லாம் உங்களிடம் விவரமாக சொல்ல முடியவில்லை, நான் மறுத்ததால் நீங்கள் வருத்தப்பட்டீர்கள். பரவாயில்லை நீங்களாவது மகிழ்ச்சியோடு வாழுங்கள்." என நீண்ட விளக்கமளித்தது
மரத்தின அவ்வாறான நீண்ட விளக்கத்தை கேட்டவுடன், பறவைகள் அன்று தாங்கள் மரத்திடம் அவ்வாறு கோபமாக பேசியதை எண்ணி மிகவும் வருத்தமடைந்தன, தாங்கள் முன்பு அவ்வாறு கூறியதற்கு தங்களை மன்னித்திடுமாறு அமரத்திடம் மன்னிப்பு கோரின.
கற்றல்:
நாம் நம்முடைய வாழ்க்கையில் பல நேரங்களில் ஏதாவதொரு நிராகரிப்பை  சந்திக்க வேண்டியிருக்கும். கண்டிப்பாக அவ்வாறான, நிராகரிப்பைக் கேட்க யாரும் விரும்ப மாட்டார்கள். நிராகரிப்பு நம் உணர்வுகளைப் புண்படுத்துகிறது, இருந்தபோதிலும் அந்த நேரத்தில் நாம் நம்முடைய உணர்வுகளைப் பற்றி மட்டுமே சிந்திக்கிறோம்.
அவ்வாறு மறுத்தவர்களுக்கு அதற்கான காரணங்கள் இருந்திருக்க வேண்டும் அல்லது நம்முடைய நலனுக்காக கூட மறுத்திருக்க முடியும் என்பதை நாம் திறந்த மனதுடன் சிந்திப்பதில்லை.
எனவே, "இல்லை" என்று யாராவது கூறினால், அதனால் மனதில் வருத்தம் கொள்ளாதீர்கள் அவர்மீது கோபப்படாதீர்கள். அவரைப் பற்றி தவறாக நினைக்காதீர்கள். யாரோ ஒருவரின் "இல்லை" என்பது நம்மை ஏதேனுமொரு பெரிய சிக்கலில் இருந்து நம்மைக் காப்பாற்றுவதற்காக கூட இருக்கலாம். என மனத்தில் மகிழ்ச்சியடைந்திடுக

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...