ஒருமுறை இளைஞன் ஒருவன் ஒரு இளம் பெண்ணைக் காதலித்தான். அதனை தொடர்ந்து அவ்விருவரும்திருமணம் செய்து கொள்ளவும் முடிவு செய்தனர். அவ்வாறான அவ்விருவரும் திருமணம் செய்துகொள்கின்ற முடிவினை அவ்விளம் பெண்ணின் தந்தை மிகுந்த தயக்கத்துடன் ஒப்புக்கொண்டார்.
ஆனால் அதற்காக ஒரு நிபந்தனையுடன் மட்டுமே தாம் ஏற்றுகொள்வதாக கூறினார். அத்திருமணத்திற்கு அவ்விளைஞனின் கிராமத்திலிருந்தோ அல்லது குடும்பத்திலிருந்தோ மிகவும் வயதுமுதிர்ந்த பெரியவர்கள் யாரும் அம்மண ப்பெண்ணின் கி்ராமத்திற்கு வரக்கூடாது என்று அவர் கூறினார்.
அவரின் அந்நிபநதனையைப் பின்பற்றுவது மிகவும் கடினமான செயலாக இருந்தது,இருந்தபோதிலும் மணமகனி குடும்பத்தினர் அதனை ஒப்புக்கொண்டது.
திருமண நாளும் வந்தது. அத்திருமணத்திற்காக மணமகனின் கிராமத்து வயதுமுதிர்ந்த பெரியவர்கள் அனைவரையும் கிராமத்திலேய விட்டுவிட்டு இளையோர்கள் மட்டும் மணமகளின் கிராமத்திற்கு செல்ல அனைவரும்தயாராக இருந்தனர், ஆனால் அவர்களுள் மணமகனின் தாய்வழி தாத்தா மட்டும் அதனால் என்ன ஆனாலும் பரவாயில்லை தானும் அந்த திருமணத்திற்கு வருவேன் என பிடிவாதமாக இருந்தார். .
எனவே மணகனின் குடும்பத்தினர் அவரை மிக இரகசியமாக அழைத்துச் செல்ல முடிவு செய்தனர், மேலும் தாத்தாவை மறைந்திருக்கும்படி கேட்டுக் கொண்டனர்.
மணமகனின் உறவினர்களும் மணமகளின் கிராமத்தை அடைந்ததும். மணப்பெண்ணின் தந்தை அவ்வனைவரையும் வரவேற்று அவர்களுள் மிகவும் வயதுமுதிர்ந்த பெரியவர் யாராவது வந்திருக்கிறார்களா என்று சரிபார்த்தார் ஆனாலும் அவரால் வயது முதிர்ந்த மணமகனி் தாத்தா மிக இரகசியமாக வந்திருப்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை அவர்கள் ஒரு பெரிய கூடத்தில் நன்கு வசதியுடன் தங்கி ஓய்வெடுக்குமாறு கூறிச்சென்றார்.
மணமகளின் தந்தை திரும்பி சென்றபின்னர்இப்போது, மணப்பெண்ணின் தந்தை மணமகனுக்கு - எங்கள் கிராமத்திற்கு அருகே உள்ள குளத்தை முழுவதும் பாலால் நிரப்ப வேண்டும், அப்போதுதான் இந்த திருமணம் நடக்கும், இல்லையெனில் திரும்பி செல்லுங்கள் என்ற நிபந்தனை செய்தி அனுப்பினார்.
அத்திருமணத்திற்கு வந்திருந்த மணமகனின் கிரமத்தார்களும் உறவினர்களும் எவ்வளவு யோசித்தாலும், மணமகளின் தந்தை கூறிய நிபந்த.னையை எவ்வாறு நிறைவேற்றுவது என்ற வழியை கண்டுபிடிக்கமுடியவில்லை, அதனால் இறுதியில் திருமண முடிவை திரும்பப் பெறப்படும் என்று முடிவு செய்யப்பட்டு அனைவரும் தங்களது கிராமத்திற்கு மணமகனுக்கு திருமணத்தை செயற்படுத்தாமலேயே திரும்ப செல்வது என தயாராகிவிட்டனர்.
இதனை கண்டமணமகனி்ன் தாத்தா வெளியே வந்து - என்ன நடந்தது? என கேட்டார்
உடன் அவரிடம் மணமகளின் தந்தையின் நிபந்தைகுறித்து கூறப்பட்டது. அதைக் கேட்ட தாத்தா சிரித்துக்கொண்டே, போய் மணமகளின் தந்தையிடம் - குளத்தில் பால் நிரப்ப ஏற்பாடுகள் செய்துள்ளோம், ஆனால் குளத்திலுள்ள தண்ணீரை வெளியேற்றினால்தான் அது நடக்கும். என மணமகனி்ன் என்றார்
மணப்பெண்ணின் தந்தைக்கு இந்தச் செய்தி கிடைத்ததும், மணமகன் தரப்பிலிருந்து வயதில்முதியவர் திருமணத்திற்கு வந்திருப்பதை புரிந்துகொண்டு மணமகன்குடும்பத்தார்களின் பதிலை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார் உடன் மிகுதியாக இருந்த மணமகனின் கிராமத்திலிருந்த வயதுமுதிர்ந்த அனைவரையும் திருமணத்திற்காக தனது கிராமத்திற்கு வரச்செய்து மிகுந்த மரியாதையுடன் வரவேற்று அந்த திருமணத்தினை செய்து முடிக்கசெய்தார்.
இந்த எளிய கதை நம் பெரியவர்களையும் அவர்களின் அனுபவத்தையும் மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும் என்பதை நமக்குக் கற்பிக்கிறது.
சனி, 29 ஜூலை, 2023
திருமணத்திற்கான மணமகளின் தந்தையின் நிபந்தனை
திங்கள், 24 ஜூலை, 2023
குயவனுக்கு மகிழ்ச்சியாக வாழ்வதற்கான அரசனின் சலுகை -
ஒரு காலத்தில் எல்லா வசதிவாய்ப்புகளுடனும் ஒரு நாட்டில் அரசன் ஒருவர் அரசாட்சி செய்து கொண்டிருந்தார். அவருக்கு அன்பான மனைவி, நல்ல பிள்ளைகள் நல்ல மக்கள்என்றவாறு இருந்தாலும் அவ்வரசன் மிக்அதிக மன வருத்த்ததுடனே இருந்தார்.
ஒருமுறை அவ்வரசர் தன்னுடைய நாட்டில் உலாவந்துகொண்டிருந்தபோது ஒரு சிறிய கிராமத்தை வந்துஅடைந்தார், அங்கு ஒரு குயவர் (நல்ல களிமண்ணால் பானைகள், பாத்திரங்கள் போன்றவற்றைச் செய்பவர்) அந்த கிராமத்திலிருந்த கோவிலுக்கு வெளியே களிமண்ணாலான பாத்திரங்களை விற்றுக் கொண்டிருந்தார், அவருடைய அங்காடியில் சிலமண் பானைகளில் தண்ணீர் நிரப்பப்பட்டிருந்தது அவரும் அதனஅருகில் அமர்ந்து கொண்டு மகிழ்ச்சியாக கிராமத்து பாடல்களைப் பாடிக்கொண்டிருந்தார். .
மன்னன் அந்த கோயிலுக்குள் சென்று திரும்பி வெளியே வரும்போது மகிழ்ச்சியாக கிராமத்து பாடல்களைப் பாடிக்கொண்டிருந்த குயவனைக் கண்டு அவன் அருகில் அமர்ந்தார்.உடன் தன்அங்காடியில் வந்தமர்ந்த அந்நாட்டு அரசனை கண்டதும் விருந்தினர்கள் எவரேனும் நம்முடையவீடு தேடி வந்தததும் செய்கின்ற நம்முடைய வழக்கமான செயலைபோன்று அந்த குயவன் அரசனுக்கு மரியாதையுடன் பாணையிலிருந்து தண்ணீரை முகர்ந்து அரசர் குடிக்குமாறு கொடுத்தார்.
அம்மன்னனும் குயவனின் இவ்வாறான செயலால் அதிகம் ஈர்க்கப்பட்டார்.அரசன் அந்த குயவனின் வருமானத்தைப் பற்றி சிந்திக்கத் தொடங்கினார்.. மிகவும் குறைந்த அளவே அந்த குயவனுக்க வருமானம் வருவதை யூகித்தபின்னர்
அரசர் அவனிடம், “தம்பி, என்னுடன் நகரத்திற்கு வருவீர்களா?” என்றார். உடன் குயவன் , “இந்த கிராமத்தை விட்டிட்டு உங்களுடன் நகரத்திற்கு நான் வந்தால் என்னுடைய வருமானத்திற்கு நான் என்ன செய்வேன்?” என்று சந்தேக கேள்வி எழுப்பினார்.
அரசன், " நீங்கள் இங்கு செய்வதை விட ஏராளமானஅளவில் மண்பானைகளை அங்கே செய்யலாம்." என்றார் .தொடர்ந்தப குயவன், "அவ்வாறு அதிகஅளவில் மண்பாணைகளை அங்கு செய்தால் அதனை நான் செய்வது?"
அதற்கு அரசர், “அவற்றை விற்று மிக அதிகஅளவில் பணம் சம்பாதிக்கலாம்” என்றார். உடன் குயவன், “அவ்வாறு அதிக அளவில் சம்பாதித்த அந்தப் பணத்தை கொண்டு நான் என்ன செய்வது?” என்று கேட்டார்.
அவனது கேள்வியால் ஆச்சரியப்பட்ட அரசன், “பணத்தை என்ன செய்வீர்கள்? பணம்தான் எல்லாமே.நம்முடைய வாழ்வே பணத்தின் மீதுதானே நடக்கின்றது” என்றார்
திரும்பவும குயவன், "இப்போது, அந்த அதிகஅளவிலான பணத்தை நான் என்ன செய்வது என்று சொல்லுங்கள்" என்ற வினவினார்
அரசன், "நீங்கள்அந்தபணத்தினை கொண்டு மிகவும் வசதியான வாழ்க்கையை வாழலாம், ." என்றார் இதைக் கேட்ட குயவன் மன்னனிடம், “மன்னிக்கவும், ஐயா இப்போது நான் என்ன செய்கிறேன் என்று சொல்லுங்கள்" என வினவினான்.
இந்தக் கேள்வி அரசனை அதிர்ச்சிக்குள்ளாக்கியது அதனால் மேலும் எதுவும் பேசாமல் மௌனமானார்.
சிறிது நேரம் கழித்து, மன்னர் " நீங்கள் இங்கு முழுமையான மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள்." என கூறினார்,
உடன் குயவன் சிரித்துக்கொண்டே, "ஆம் ,ஐயா அதைத்தான் நான் சொல்கிறேன், மகிழ்ச்சியை பணத்தால் வாங்க முடியாது" என்றார்.
அதனால் அரசன் அதிக ஆர்வத்துடன் , நதயவுசெய்து அத்தகைய மகிழ்ச்சியை எப்படி அடைவது என்று சொல்லுங்கள்." என வினவினார் உடன் குயவன், "கவனமாகக் கேளுங்கள், உங்கள் கைகளை கொடுப்பதற்கு மட்டும் பயன்படுத்துங்கள்." பதிலளித்தார்
அரசன், "அது எப்படி?"
அதற்கு குயவன், “அரசே! யாரிடமும் கைநீட்டி கேட்காதீர்கள், கொடுக்கக் கற்றுக்கொள்க.. கொடுக்கக் கற்றுக் கொண்டால், மகிழ்ச்சியின் பாதையில் அடியெடுத்து வைத்துவிட்டீரகள் என்பதை புரிந்துகொள்க.
சுயநலத்தை கைவிட்டு பொதுநலனை தேர்ந்தெடு்த்திடுக..
பெரும்பாலானோரின் துக்கத்திற்கு மிகப் பெரிய காரணம், தங்களிடம் எது இருந்தாலும், அதில் அவர்கள் மகிழ்ச்சியடையாமல் , இல்லாததைப் பெறுவதில் முயன்று அதனை அடையமுடியாமல் அதற்காகள் வருத்தப்படுவதும்தான்.
இருப்பதில் மகிழ்ச்சியாக இருக்க கற்றுக்கொள்க, மனவருத்தங்கள் தாமாகவே போய்விடும்” என்று நீண்ட விளக்கமளித்தார்
ஞாயிறு, 16 ஜூலை, 2023
அறிவு அல்லது நடத்தை எது பெரியது
முன்னொரு காலத்தில் ஒரு அரசன் தன் நாட்டின் அரச குருவை மிகவும் மதிக்கும் பழக்கம் கொண்டிருந்தான். அரசகுரு அரசவைக்கு வரும் போதெல்லாம், அரசன் தன் அரியணையிலிருந்து மரியாதைக்காகஎழுந்து நின்று வணக்கம் கூறி தன்னுடைய இருக்கையில் உட்காருவது வழக்கமான செயலாகும்.
ஒரு நாள் அரசர் அரசகுருவிடம், "ஒருவரின் நடத்தை சிறந்ததா அல்லது அவரது அறிவு சிறந்ததா என்பதை கூறுக" என்று கேட்டார்.
அரசகுரு, "எனக்கு சில நாட்கள் அவகாசம் கொடுங்கள், உங்கள் கேள்விக்கு நான் பதிலளிக்கிறேன்" என்றார்.
அடுத்த நாள், அரச குருவானவர் மன்னரின் கருவூலத்திற்குச் சென்று, அங்கிருந்து சில பொற்காசுகளை எடுத்து, தனது பையில் வைத்து எடுத்துக் கொண்டு சென்றார். கருவூலத்தலைவர் இதைப் பார்த்தார், ஆனால் அவர்அரச குருஎன்பதால் அவருடைய பதவியைக் கருத்தில் கொண்டு அமைதியாக இருந்தார்.
அரச குருவானவர் சில நாட்கள் இதேசெயலையே தொடர்ந்து செய்து வந்தார். அதாவது அரசகுரு தினமும் அரசின் கருவூலத்திற்கு வந்து அங்கு சில தங்க நாணயங்களை எடுத்து தனது பையில் வைத்துஎடுத்துக்கொண்டு வெளியே செல்வது வழக்கமாகும். இதை அரசுகருவூலத்தலைவர் பார்த்தும் ஒன்றும் செய்யஇயலாமல் அமைதியாக இருந்துவந்தார்.
இந்த செயல் பல நாட்களாக நடந்து வந்ததால், அரசுகருவூலத்தலைவர் அரசனிடம் சென்று இவ்வாறு நடைபெறுகின்ற முழுவிவரத்தையும் கூறினார்.
இதன்பிறகு அரசகுரு ஒரு நாள் மன்னரின் அரசவைக்கு சென்றார், ஆனால் இப்போது அரசரோ மரியாதையாக எழுந்து நின்று அரசகுருவை வரவேற்க வில்லை அல்லது மரியாதை நிமித்தமாக அரியணையில் எழுந்து சென்று வரவேற்கவுமில்லை.
பொற்காசுகளை எடுத்துச் செல்லும் செய்தி அரசனுக்கு வந்துசேர்ந்துவிட்டது என்பதை அரசகுரு புரிந்து கொண்டார்.
மன்னன் தன் குரலை உயர்த்தி அரசகுருவிடம், "அரசுகருவூலத்திலிருந்து பொற்காசுகளை எடுத்துசென்றவிட்டாயா?" என்று மரியாதை இல்லாமல் கேட்டார். உடன் அரசகுவும் , "ஆம். உண்மைதான்" என்றார்.
உடன் அரசன் மிகவும் அதிககோபமடைந்து, "ஏன் இப்படி செய்தாய்?" என திட்டினார்
அதனை தொடர்ந்து அரசகுருவானவர் புன்னகைத்து, "நான் வேண்டு மென்றேதான் அரசாங்க கருவூலத்திலிருந்து தங்கக் காசுகளை எடுத்துசென்றேன்.அரசே ஒருவரின் நடத்தை பெரியதா அல்லது அறிவாற்றல் பெரியதா என்ற கேள்வியை நீங்கள் கேட்டீர்கள் அல்லவா அந்த கேள்விக்கான சரியான பதில் எதுவென உங்களுக்குக் காட்ட விரும்பினேன்.அதற்காக அரசரின் அனுமதியின்றி நான் அரசாங்க கருவூலத்திலிருந்து தங்கக் காசுகளை எடுத்துசென்றேன் இந்த செயலை அறிந்ததும், வழக்கமாக செய்யும் மரியாதைக்காக எழுந்துநின்று வணக்கம் கூறி வரவேற்பதற்கு பதிலாக நான் இந்த அரவைக்கு வரும்போது அரியணையில் இருந்து எழுந்துநின்று வரவேற்கவில்லை. மாறாக நீங்கள் உங்கள் குரலை உயர்த்தி என் மீது கோபத்துடன் திட்டினீர்கள்.
தங்க நாணயங்களை எடுத்துச்செல்வதற்கு முன்பும் என்னுடைய அறிவு என்னுடன் இருந்தது, தங்கக் காசுகளை அரசனிடம் கேட்காமல் எடுத்துச்சென்ற பிறகும் அது என்னிடம் உள்ளது. ஆனால், நான் நடத்தையில் தவறியவன் என என்னைப் பற்றி உங்களுக்குத் தெரிந்தவுடனே, என் மேல் கொண்டுள்ள மரியாதையை இழந்துவிட்டீர்கள்.
என் நடத்தையின் காரணமாகவே நீங்கள் என்னை மதிக்கிறீர்கள், ஆனால் எனது நடத்தை மாறியவுடன், என்னைப் பற்றிய எண்ணங்களும் மாறிவிட்டன, அதனால் உங்களால் என்னை மதிக்க முடியவில்லை." என நீண்ட விளக்கமளித்தார்.அரசன் அதனை புரிந்துகொண்டு அரசகுவைப் பாராட்டினார்.நமது நடத்தை நன்றாக இல்லை என்றால், நாம் எவ்வளவுதான் கல்வி, பதவி , செல்வம் கூட நம்மிடம் இருந்தாலும் நம்மை யாரும் மதிக்கமாட்டார்கள்.
சனி, 1 ஜூலை, 2023
அரசனுக்கு பிச்சைக்காரன் பிச்சையிடுதல்
ஒரு பிச்சைக்காரன் பிச்சை எடுக்கச் செல்ல அதிகாலையில் எழுந்தான். வெளியே செல்லும் முன், பிச்சை எடுக்கச் செல்லும் போது பிச்சைக்காரன் தன் பைகளை காலியாக வைக்கக் கூடாது என்ற மூடநம்பிக்கையின் காரணமாக ஒரு கை நிறைய ஏதாவது உணவுதானியத்தை எடுத்துபையில் வைத்தபின் வெளியில்செல்வது அவனுடைய வழக்கமான செயலாகும்.
இன்று மாலைக்குள் தன் பையை நிரப்பிவிடலாம் எனநினைத்துக் கொண்டு பிச்சைக்காரன் தன் குடிசையை விட்டு வெளியே வந்தான்.
அப்போது, அந்நாட்டு அரசனின் தேர் தான் செல்லும் வழியில் எதிரே வருவதைக் கண்டான். அதைக் கண்ட பிச்சைக்காரன் மிகவும் மகிழ்ச்சி யடைந்தான், இன்று தனது வறுமை அனைத்தும் நீங்கிட, அரசனிடம் பிச்சை பெற்றால் போதும் தன் வாழ்க்கை சிறப்பாக அமையும் என்று எண்ணினான்.
அரசனின் தேர் நெருங்க நெருங்க, பிச்சைக்காரனின் கற்பனையும் உற்சாகமும் பெருகியது
அரசனின் தேர் பிச்சைக்காரன் அருகே வந்தவுடன் நின்றது. அரசன் கீழே இறங்கி பிச்சைக்காரனை அணுகினான்.
பிச்சைக்காரன் தனக்கு எதையாவது கொடுப்பதற்குப் பதிலாக, தனது விலையுயர்ந்த துணியை அவன் முன் விரித்து, அவனிடம் அரசனேபிச்சை கேட்கத் தொடங்கினான். அவ்வாறு அரசனே தன்னிடம் பிச்சை கேட்கும் போது தான் என்ன செய்வதென்றே அந்த பிச்சைக்காரனுக்கு புரியவில்லை. பிச்சைக்காரன் மேலும்எதையும் யோசிப்பதற்குள், அரசன் மீண்டும் பிச்சைக்காரனிடம் பிச்சையிடுமாறு கெஞ்சினான்.
பிச்சைக்காரன் தன் பைக்குள் கையை வைத்தான் ஆனால் எப்போதும் அப்பிச்சைக்காரண் மற்றவர்களிடம் இருந்து பிச்சை எடுப்பது மட்டுமே வழக்கமாகும் அதன்காரணமாக அவன் மனம் தன்னுடைய பையிலுள்ள உணவுதானியத்தை கொடுக்க சம்மதிக்கவில்லை.
இருந்தபோதிலும் எப்படியோ பையிலிருந்த கையளவு வைத்திருந்த தானியத்தில் இரண்டுதானியங்களை மட்டும்எடுத்து அரசன் தன்னிடம் பிச்சை கேட்டு கையேந்தி இருந்த துணியில் போட்டான். அரசனும் அந்த இரண்டு உணைவுதானியங்களை மட்டும் பிச்சையாக அந்த பிச்சைக்காரணிடம் வாங்கிகொண்டு தன்னுடைய தேரில் பயனத்தை தொடர்ந்தான்
அன்றுநாள் முழுவதும், பிச்சைக்காரனுக்கு வழக்கத்தை விட அதிகமான பிச்சை கிடைத்தாலும், அப்பிச்சைக்காரன் தனது பையில் இருந்து இரண்டு தானியங்களை மட்டும் அரசனுக்கு பிச்சையாக கொடுத்ததை குறித்து அதாவது தன்னிடமிருந்து இரண்டு தானியங்கள் அரசனுக்கு பிச்சையாக போய்விட்டதே என அந்த நாள் முழுவதும் அவ்வாறு பிச்சை கொடுத்ததற்காக வருந்தி கொண்டேயிருந்தான்.
அன்று மாலை தன்னுடை குடிசைக்கு திரும்பியபின் தன்னுடைய பையைச் சரிபார்த்தபோது அவனுடைய ஆச்சரியத்திற்கு அளவேயில்லாமல் போய்விட்டது
அவனுடைய பையில் தங்கத்தால் செய்யப்பட்ட இரண்டு உணவு தானியங்கள் இருந்தன. தான் அரசனுக்கு பிச்சையிட்டதனால் தான் இது நடந்தது என்று புரிந்து கொண்டான். அடடா தான் கைநிறையை அள்ளி போட்டிருந்த தானிங்கள் முழுவதையும் அரசனிற்கு பிச்சையாக கொடுத்திருந்தால் நமக்கு ஏராளமாக தங்கத்திலான உணவுதானியங்கள் கிடைத்திருக்குமே என அந்த நேரத்தில்தான் நினைத்து வருந்தினன் அரசன் தன்னிடம் பிச்சை கோட்டபோது அவ்வாறு கைநிறைய உணவு தானியங்களை அள்ளி கொடுத்திருக்கலாம் ஆனால் அப்பிச்சைக்காரனுக்கு பிச்சையாக அள்ளி கொடுத்து பழக்கமில்லை மற்றவர்களிடம் பிச்சையாக வாங்கிதான் பழக்கம் பிச்சையிடும் பழக்கம் அப்பிச்சைகாரனுக்கு இல்லாததால் அவ்வாறு செய்யமுடியவில்லை.
கற்றல்:
1. கொடுப்பதால் எதுவும் குறையாது.
2. எடுப்பதை விட கொடுப்பது பெரியது.
பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்
இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...
-
இந்தியாவில் 2008 ஆம் ஆண்டிற்கு முன்புவரை இந்திய கூட்டாண்மைசட்டம்1932 என்பது நடைமுறையில் இருந்துவந்தது மனிதநாகரிகம் தோன்றியபின்னர் ஏராளமான...
-
ஒரு கிராமத்தில் ஒரேயொரு விவசாயிமட்டும் கோடைகாலத்தில் பயன்படும் தர்பூசனியை தன்னுடைய நிலத்தில் பயிரிட்டிருந்தார் அவருடைய விளைநிலம் முழுவதும்...
-
அன்புதமிழ் நேயர்களுக்கு என்னுடைய தாழ்மையான வணக்கத்துடன் அருகுசருகுஎனும் என்னுடைய முதல் வலைபூவை இணையத்தின்வாயிலாக உங்கள் முன் சமர்ப்பிப்பதில்...