வெள்ளி, 30 நவம்பர், 2012

முயன்றால் முடியாதது இல்லை


தவளைகளின் குழுவொன்று தாங்கள் வாழும்இடத்தில் போதுமான உணவு கிடைக்காததால் வேறு இடம்நோக்கி சென்றுகொண்டிருந்தன அவ்வாறு சென்று கொண்டிருக்கும்போது இரண்டு தவளைகள் மட்டும் வழியில் இருந்த மிகஆழமான ஒரு கிணற்றில் தவறிவிழுந்து விட்டன

மற்ற தவளைகள் அனைத்தும் "அவ்வளவுதான உங்களிருவரால் இந்த கிணற்றிலிருந்து மேலேஏறிவரமுடியாது அதனால் இதில் கிடைக்கும் உணவை உண்டு உங்கள் வாழ்நாளைஇதிலேயே முடித்துகொள்ளுங்கள்" என அறிவுரைகூறின

கினற்றிற்குள் விழுந்த தவளைகளுள் ஒன்றுமட்டும் நமக்கு விதித்தது அவ்வளவுதான் என உணவை தேடிபார்த்து கிடைக்காமல் பட்டினியாகவும் மேலே ஏறுவதற்கு முயற்சியின்றியும் சோம்பி அப்படியே உயிர்விட்டது

ஆனால் மற்றொரு தவளையோ கடுமையான முயற்சிசெய்து மேலே ஏறிவருவதற்காக எகிறி எகிறி குதித்து பார்த்தது மேலே தரையில் இருந்த தவளைகள் "ஏன் வீனாக உன்னுடைய உடலை வருத்திகொள்கின்றாய் மற்ற தவளைபோன்று அப்படியே இந்த கிணற்றிற்குள் கிடந்து சாகவேண்டியதுதானே" என ஒரேகூச்சலிட்டன ஆயினும் உயிருடன் கினற்றிற்குள் இருந்த தவளை மடடும் இந்த அறிவுரை எதனையும் கேட்டுகொண்டு சும்மா இல்லாமல் பகீரதபிரயத்தனம் செய்து கடுமையாக முயன்று தாவிகுதித்து ஒருவழியாக கரையேறிவிட்டது

உடன் "நாங்கள் கூச்சலிட்டுது எதுவும் உனக்கு கேட்கவில்லையா?" என அனைத்து தவளைகளும் வினவியபோது

"என்னுடைய கவனம்முழுவதும் எவ்வாறு வேலேஏறிவருவது என்பதில் மட்டுமே குறியாக இருந்ததால் எனக்கு நீங்கள் அனைவரும் கூறிய சொற்கள் எதுவும் சுத்தமாக என்னுடைய காதில் கேட்கவில்லை " என பதில் கூறிதன்னுடைய உணவை தேட சென்றது

ஆம் நம்முடைய குறிக்கோளில் அல்லது செயலில் முழுக்கவனமும் செலுத்தினால் நாம் எளிதில் வெற்றிபெறமுடியும் என இதிலிருந்து தெரிந்து கொள்ளமுடியும்

ஞாயிறு, 25 நவம்பர், 2012

என்னுடைய வாழ்வில் நடந்த ஒரு நிகழ்வு


நான் சிறுவயதாக இருக்கும்போது ஒருநாள் இரவு சாப்பாட்டில் எங்களுடைய அம்மா தண்ணீர்இல்லாமல் வற்றி சிறிது அடிபிடித்த சோற்றினை எங்களுடைய அப்பாவின் தட்டில் இட்டு சாம்பார் ஊற்றியிபின் “இன்று சோற்றினை சமைக்கும்போது கவனக்குறைவாக அரிசியின் அளவிற்கேற்ப தண்ணீர் ஊற்றிவைக்காமல் சிறிது குறைவாக ஊற்றி வைத்துவிட்டதால் சோறு அடிபிடித்துவிட்டது இன்று ஒருநாள் மட்டும் பொறுத்தருளவேண்டும்” என மிகப்பணிவுடன் கேட்டுக்கொண்டார்

.உடன் எங்களுடைய அப்பா “அடடா அப்படியா ஆகிவிட்டது பரவாயில்லை வறுத்தசோறும் உடலுக்கு நல்லதுதான் நாங்கள் சாப்பிடுகின்றோம் இந்நிகழ்வைபற்றி வருத்தபடாதே கவலையும் படாதே அதற்காக உன்னிடம் சண்டையிட்டேனா உடன் நீயும் சாப்பிட்டுவிட்டு போய் வேறு வீட்டுபணியிருந்தால் அதையும்முடித்து விரைவில் இரவு தூங்க செல்” என அன்புடன் கூறினார்.

அதோடு அல்லாமல் அந்த அடிபிடித்த சோறுமற்றவர்களின் தட்டுகளில் இருக்கின்றதாவென தேடிபிடித்து அவையனைத்தையும் சேகரித்து தன்னுடைய தட்டில் வைத்துகொண்டு மிகஇரசித்து சாப்பிட்டபின் கைகழுவினார்

பின்னர் நாங்கள் அனைவரும் அவரவர் அறைகளில் படுத்து உறங்க சென்றோம் நான் எப்போதும் இரவு சாப்பாடிற்கு பிறகு அப்பாவிற்கு அருகில் தினமும் படுத்துகொண்டு ஏதனுமொரு கதையை கூறும்படி கேட்டு மகிழ்ந்தபின் என்னுடைய படுக்கைக்கு சென்று படுத்துஉறங்குவது வழக்கமாகும்

அவ்வாறே அன்றிரவும் அப்பாவிடம் சென்று கதை கூறும் படி கேட்பதற்கு பதிலாக “அடிபிடித்து சோறுகருகியதற்காக அம்மாவை திட்டாமல் எவ்வாறு அடிபிடித்து கருகிய சோறு அனைத்தையும் சேகரித்து மிகஇரசித்து உங்களால் சாப்பிடமுடிந்தது” என ஆற்றுபடுத்தமுடியாமல் கேட்டபோது எங்களுடைய அப்பாவானவர் “ஏன் இன்று நல்ல கதை வேண்டாமா “என கேட்டார் “கதையெல்லாம் நாளை கேட்டுகொள்கின்றேன்

இன்று எவ்வாறு உங்களால் இவ்வாறு நடக்கமுடிந்தது என முதலில் தெரியவேண்டும்” என நான் அடம்படித்ததால். “அடடா அதெல்லாம் பெரியவர்களின் பணியாயிற்றே இருந்தாலும் உனக்கு கூறுகின்றேன்

நல்லது ,உங்களுடைய அம்மா பகல்முழுவதும் நமக்காக மாடாக உழைக்கின்றாள் அவ்வாறு உழைத்து சோர்வுற்ற நிலையில் இரவு உணவு தயார்செய்யும் போது தவறுதலாக அரிசிக்கு தேவையானஅளவைவிட சிறிது குறைவாக தண்ணீர் இட்டு சோற்றினை சமையல் செய்ததால் கொஞ்சமாக தீய்ந்து விட்டது அதனால் மிகுதி சோற்றுக்கு பாதிப்பெதுவுமில்லையே

உனக்கு தெரியுமா நம்முடைய வாழ்வில் எப்போதும் நம்மால் மிகச்சரியாக நடந்துகொள்ளமுடியாது ஏதேனுமொரு சந்தர்பத்தில் ஏதாவதொரு சிறியதவறு நம்முடைய செயலில் நடைபெற ஏராளமான வாய்ப்புள்ளன

அந்நிலையில் செய்த நல்லசெயலையெல்லாம் விடுத்து அவ்வாறான சிறிய தவறை மட்டும் பெரியதாக்கி வாழ்க்கையையே சண்டை சச்சரவு என போராட்டகளமாக மாற்றக்கூடாது

மேலும் இந்த புவியில் நம்முடைய இருப்போ மிகமிகச்சிறிய காலஅளவே அதனால் நாம் இருக்கும்வரை மற்றவர்களுக்கு அதிகம் தொந்தரவு ஏதும் தராமலும் மற்றவர்கள் ஏதேனும் ஒருசில தவறுசெய்தால் அதனை திருத்தி செய்வதற்கு வாய்ப்பளித்து வாழ்க்கையை இனிமையான அனுபவமாக கொண்டு செல்லவேண்டும

இவ்வாறு நாம் நடந்து கொண்டால் நம்முடைய வாழ்வு அமைதியாக தெளிந்த ஆற்றின் நீரோட்டம் போன்று செல்லும் நம்முடைய வாழ்வில் நல்லது, கெட்டது எது நடந்தாலும் அதனை அப்படியே நமக்கு கிடைத்ததை நம்முடைய அடுத்த வெற்றிக்கு அடித்தளமாகவும் படிக்கட்டாகவும் படிப்பினையாகவும் பயன்படுத்தி நம்முடைய வாழ்வின் அடுத்த கட்ட செயலிற்கு செல்வதற்கு தயாராக வேண்டும்

இதனால் கணவன் மனைவி உறவு மட்டுமல்லாமல் பெற்றோர்கள் பிள்ளைகளின் உறவும் , நண்பர்களின் உறவும் பல்கிபெருகி நம்முடைய வாழ்வு வளம் பெறும் போய் உன்னுடைய படுக்கையில் படுத்து அமைதியாக உறங்கு” என அறிவுரை கூறினார்.

புதன், 21 நவம்பர், 2012

உத்திரவாதத்திற்கும்(guarantee) உறுதியளிப்பிற்கும்(Warranty) இடையிலான வேறுபாடு


உத்திரவாதம்(guarantee) இது ஏதனுமொரு பொருளை கொள்முதல் செய்திடும்போது வழங்கபடும் ஒரு ஆவணமாகும் இதன்மூலம் குறிப்பிட்ட பொருளை கொள்முதல் செய்து பயன்படுத்திவரும்போதும் குறிப்பிட்ட காலம் வரை ஏதேனும் பிரச்சினை எழுந்தால் உடன் உற்பத்தியாளர் அப்பொருளிற்கீடாக வேறொரு புதிய பொருளை மாற்றியளிப்பதாக கூரும் உத்திரவாத கடிதமாகும்

இந்த உத்திரவாத ஆவணமானது சட்டப்படியான நடவடிக்கை எடுப்பதற்கான ஒரு ஆவணமாகும் இந்த ஆவணத்தை கொண்டு நுகர்வோர் ஒருவர் நீதிமன்றத்திற்கு சென்றுகுறிப்பிட்ட பொருளை நீதிமன்ற செலவின்றி அல்லது நீதிமன்ற செலவுடன் பெறுவதற்கு ஆதாரமாக விளங்குகின்றது இந்த உத்திரவாதகடிதமானது உற்பத்தியாளர் மட்டுமே வழங்குவார்

உறுதியளிப்பு(Warranty) இது ஒரு நுகர்வோருக்கு தன்னுடைய உரிமையை நிலைநாட்டிட உதவிசெய்வதற்காக குறிப்பிட்ட பொருள் சரியாக உள்ளது எனக்காட்டிடும் ஆதாரக்கடிதமாகும் இதனை விற்பனையாளர் நுகர்வோருக்கு ஒரு பொருள் விற்பனையாகும்போது அதனோடு அந்த பொருள் சரியாக உள்ளது என உறுதிஅளிப்பதற்கான கடிதமொன்றை அளிப்பார் இது ஏறத்தாழ ஒரு காப்பீட்டு நிறுவனம் அளிக்கும் உத்திரவாதம் போன்றதாகும் குறிப்பிட்ட காலம்வரை அப்பொருளை பயன்படுத்திடும் போது குறிப்பிட்ட வரைமுறைக்குள் ஏற்படும் பழுதுகளைமட்டும் சரிசெய்து நன்கு இயங்குமாறு செய்வதற்கான உறுதிமொழிகடிதமாகும்

உத்திரவாதமும் உறுதியளிப்பும் நுகர்வோர் நலனைகாப்பதற்கான ஆவணங்களே உத்திரவாதம் ஆனது உற்பத்தியாளரால் வழங்கபடுவதாகும் உறுதியளிப்பு விற்பனையாளரால் வழங்கபடுவதாகும்

உத்திரவாத்தத்தில் ஒருநுகர்வோர் தாம் கொள்முதல் செய்த பொருளிற்கீடான பணம் அல்லது புதிய பொருள் ஒன்றினை திரும்ப பெறமுடியும் ஆனால் உறுதியளிப்பின்போது குறிப்பிட்ட பொருள் உறுதியளித்த காலம் வரை மட்டும் இயங்கவில்லை எனில் அதனை பழுதுநீக்கம்மட்டும் செய்து இயங்கசெய்வார்

ஞாயிறு, 18 நவம்பர், 2012

எந்தவொரு செயலையும் அமைதியாக கூர்ந்து கவனித்தால் நம்மால் அதில் வெற்றிகொள்ளமுடியும் வீண் ஆரவாரமும் அவசரமும் வெற்றிகொள்ள தடைகற்களாகும்


விவசாயி ஒருவர் தன்னுடைய கையில் கட்டியிருந்த கைகடிகாரத்தை அவருடைய தானிய கிடங்கில் தவறவிட்டுவிட்டார் அதனை மிகமுக்கியமான நபரின் நினைவாக அவருடைய கையில் கட்டியிருந்தார் அதனால் அதனை எப்படியாவது தேடிக்கண்டுபிடித்திட வேண்டுமென விரும்பி ,”அதனை தேடிகண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு தக்க பரிசு அளிக்கப்படும்” என அறிவித்தார்

உடன் ஏராளமான நபர்கள் அவருடைய தானிய கிடங்கிற்குள் புகுந்து குறுக்கும் நெடுக்குமாக அலைந்து தேடினார்கள் அந்த கைக்கடிகாரம் மட்டும் யாருக்கும் கிடைக்கவேயில்லை அனைவரும் சோர்வுற்று வெறுங்கையுடனே திரும்பி சென்றனர்

ஒரு சிறுவன் “தான் அந்த தேடுதலை செய்யட்டுமா “என அவரிடம் அனுமதி கேட்டான் “அதற்கென்ன தாராளமாக தேடிகண்டுபிடித்து கொடு” என அவனுக்கு அனுமதிஅளித்தார்

அச்சிறுவன் அவருடைய தானிய கிடங்கிற்குள் சென்று ஒருசில நிமிடங்களுக்குள் வெற்றிகரமாக அவருடைய தொலைந்துபோன கைக்கடிகாரத்தை எடுத்துவந்து அவரிடம் கொடுத்தான்

“என்ன ஆச்சரியம்! தம்பி! இவ்வளவு நபர்கள் என்னுடைய தானிய கிடங்கு முழுவதையும் தேடிகிடைக்காததை ஒருசில நிமிடங்களில் உன்னால் எவ்வாறு தேடிக்கண்டுபிடித்து எடுத்துவரமுடிந்தது?” என வினவியபோது “அதுஒன்றும் பெரிய சிக்கலான தீர்வு இல்லை ஐயா மற்றவர்கள் ஆரவாரத்தோடு தேடியபோது நான் அமைதியாக இருந்து கவணித்தேன் அப்போது கைக்கடிகாரம் இயங்கிடும் ஒலி என்னுடைய காதிற்கு மட்டும் கேட்டது அந்த ஒலி வந்த திசையில் சென்று எடுத்துவந்தேன்” என்று கூறினான்

அதாவது எந்தவொரு செயலையும் அமைதியாக கூர்ந்து கவணித்தால் நம்மால் அதில் வெற்றிகொள்ளமுடியும் வீண் ஆரவாரமும் அவசரமும் வெற்றிகொள்ள தடைகற்களாகும் என்பதே இதிலிருந்த நாம் அறிந்து கொள்ளவேண்டிய உண்மையாகும்

வெள்ளி, 16 நவம்பர், 2012

திறமைசாலியான மதிப்புமிக்க ஊழியர்கள் யார் என அடையாளம் கண்டு அவர்களை ஊக்குவித்தல்


ஒரு நிறுவனத்தில் புதியதாக பணியில் சேர்ந்த இளம் ஊழியர்களில் சிலர் தாம் பெறும் ஊதியத்திற்கேற்ற அளவிற்கு மட்டும் தம்முடைய கடமையை ஆற்றினால் போதும் என இல்லாமல் தமக்கு வழங்கபடும் ஊதியத்தின் அளவைவிட மிக அதிகஅளவில் செயல்பட்டு அவர்கள் பணிபுரியும் நிறுவனத்தினுடைய வளர்ச்சிக்காகவும் மேம்பாட்டிற்கா கவும் மிகத்திறனுடன் ஆர்வுமுடன் தங்களுடைய உழைப்பை பங்களிப்பை நல்குவார்கள் .

முதலில் ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் அவ்வாறான திறமைசாலியான மதிப்புமிக்க ஊழியர்கள் யார் என அடையாளம் கண்டு அவர்களின் திறன்மிகு பங்களிப்பை அங்கீகரித்து ஊக்குவித்து அவர்களின் திறனை மேலும் மேம்படுத்துவதற்கான வசதி வாய்ப்புகளை அளித்து அவ்வாறான ஊழியர்களே மற்றவர்களுக்கு எடுத்தகாட்டாக விளங்கும்படி அனைவருக்கும் அறிவித்து மற்றவர்களும் தம்மிடம் மறைந்துள்ள திறன்களை வெளிக்கொணர்ந்து அந்நிறுவனத்தின் வளர்ச்சிக்காகவும் மேம்பாட்டிற்காகவும் பாடுபடுமாறான ஊக்குவிப்பு சூழலை ஏற்படுத்திடவேண்டும்

இவ்வாறான தனிநபர்களிடம் ஊழியர்களிடம் கவனிக்கவேண்டிய பின்வரும் மூன்று பண்புகள் உள்ளன:

1.அவர்கள் ஒரு செயலின் முடிவில் மட்டுமே கவனம். செலுத்துவார்கள் ஏனெனில் அவர்கள் ஒரு செயலிற்கான செயல்முறைகளை காட்டிலும் அதன் இறுதி விளைவுகள் மிகச்சரியாக வரவேண்டும் என்பதில் மட்டுமே கவனம் செலுத்திடுவார்கள்,

2.அவர்கள் ஒவ்வொரு செயலிற்காகவும் ஏற்படுத்தபட்டுள்ள விதிகளை உடைத்தெறிந்திடுவார்கள் ஆயினும் அவர்கள் அதற்காக நிருவாகத்திற்கு எதிராக கட்டுக்கடங்காத கலகமோ போராட்டங்களையோ செய்திடமாட்டார்கள்

3.அவர்களுக்கு இளையவர்கள் என்ற முதுநிலை வரிசையின் பெயரிருந்தாலும் அவர்கள் தம்முடைய தனிமனித திறமை யினாலும் நட்சத்திர செல்வாக்கினாலும் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக விளங்கிடுவார்கள் மேலும் அவர்கள் மற்றவர்களையும் தம்மோடு ஒருங்கிணைப்பதன் மூலம் நிறுவனத்தின் வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் ஆன சூழலை உருவாக்கிடுவார்கள் .

அவர்கள் தம்முடைய நிறுவனத்திற்கான அதிக நம்பகத்தன்மையை நிரூபித்திடுவார்கள் . மேலும் அவர்களின் நடவடிக்கைகளும் சொற்களும் எப்போதும் மாறாதஒரே நிலைத்த தன்மையுடையதாக இருக்கும்

நிருவாகச்சிக்கல் ஏதேனும் எழுகின்ற சூழ்நிலையில் வழக்கமான நிருவாக தலைவர்களைவிட இவ்வாறான துடிப்புமிக்க செயல்திறன் கொண்ட ஊழியர்களின் செயல் எவ்வாறு வழிகாட்டியாக அமைய போகின்றது என அனைவரின் கவனமும் இவ்வாறானவர்களின் மீதே இருக்கும்

செவ்வாய், 13 நவம்பர், 2012

நம் ஒவ்வொருவருக்கும் ஒருமதிப்பு, தனித்தன்மை உள்ளது. அதன் மதிப்பு எப்போதும் மாறாது


மேடைபேச்சாளர் ஒருவர் தம்முடைய பேச்சினிடையே ஆயிரம் ரூபாய் தாள் ஒன்றை தம்முடைய பையிலிருந்து கையில் எடுத்துகொண்டு தம்முன் அமர்ந்து தம்முடைய பேச்சினை கேட்டுகொண்டிருக்கும் பார்வையாளர்களை நோக்கி “இது, என்ன?” என கேள்வி எழுப்பினார்

உடன் பார்வையாளர்கள் அனைவரும் ஒரே சமயத்தில் “ஆயிரம் ரூபாய் தாள்!” என கூறினர்

உடன் அந்த ஆயிரம் ரூபாய் தாளை கசக்கி அருகில் தரையில் கிடந்த ஒருசிறுகல்லின் மீது அதனை சுற்றி மீண்டும் பார்வையாளர்களை நோக்கி “இது, என்ன?” என கேள்வி எழுப்பினார்

உடன் பார்வையாளர்கள் அனைவரும் ஒரே சமயத்தில் மீண்டும் “ஆயிரம் ரூபாய் தாள்!” என கூறினர்

அதன்பின் அவ்வாறு சிறு கல்லில் சுற்றபட்ட அந்த தாளை மேலும் நன்கு கசக்கி தரையில் வீசிஎறிந்த பின் மீண்டும் பார்வையாளர்களை நோக்கி “இது, என்ன?” என கேள்வி எழுப்பினார்

உடன் பார்வையாளர்கள் அனைவரும் ஒரே சமயத்தில் மீண்டும் “ஆயிரம் ரூபாய் தாள்!” என கூறினர்

பிறகு “நன்கு கவணியுங்கள் பார்வையாளர்களே! இந்த ஆயிரம் ரூபாய்தாளானது, என்னதான் கசக்கினாலும சுருட்டி வீசிஎறிந்தாலும் அதனுடைய மதிப்பு எப்போதும் மாறவில்லை அல்லவா?

அவ்வாறே நம் ஒவ்வொருவருக்கும் ஒருமதிப்பு, தனித்தன்மை உள்ளது. அது என்னதான் நம்மை கசக்கி பிழிந்தாலும், அடித்து துவைத்தாலும் ,எந்தவொரு துன்பம் அல்லது கஷ்டம் நமக்கு வந்தாலும், நம்முடைய ஒவ்வொருவரின் தனித்தன்மையும் மதிப்பும் மாறாதவையாகும்.

அதனை பேணிக்காத்து நல்வழியில் பயனபடுத்திகொள்வது நம் ஒவ்வொருவரின் அடிப்படை கடமையாகும்” என கூறி தன்னுடைய பேச்சினை முடித்தார்

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...