திங்கள், 31 டிசம்பர், 2012

எந்தவொரு இக்கட்டான சூழலிலும் நாம் சமயோசிதமாகவும் புத்திசாலித்தனமாகவும் செயல்படவேண்டும்


வேட்டைகாரன் ஒருவன் காட்டில் ஒரு முயலை பிடிப்பதற்காக அந்த காட்டின் மையபகுதிவரை துரத்தி சென்றிடும்போது அது தப்பித்து புதருக்குள் சென்று மறைந்து போய்விட்டது அதனால் அம்முயலை பிடிக்கமுடியாமல் சோர்வுற்று திரும்பி வரும்போது வழியில் ஏராளமான எலும்புத்துண்டுகள் கறித்துண்டுகளும் இருப்பதை பார்த்தான்

அந்நிலையில் அவனுக்கு அருகே சிறுத்தை ஒன்று இவனை பார்த்துவிட்டு இவனை அடித்து கொன்று தின்றிட இவனைநோக்கி பாய்ந்து வந்தது

உடன் அவ்வேட்டைக்காரண் ஏ நண்பா நம்முடைய முயற்சியில் பாதிகூட வெற்றிபெறமுடியாது போல் இருக்கின்றது ஒன்றிற்கு மேற்பட்ட சிறுத்தையை பிடிக்கலாம் என இவ்விடத்தில் எலும்புத்துண்டுகளையும் கறித்துண்டுகளையும் போட்டு வைத்தோம் ஆனால் இப்போதுதான் ஒரு சிறுத்தை வருகின்றது சரி பரவாயில்லை இதனை மட்டுமாவது முதலில் பிடிப்போம் பின்னர் அடுத்து என்ன செய்வது என முடிவு செய்வோம் என மிக சத்தமாக கூறினான்

இதனை காதால் கேட்ட அந்த சிறுத்தையானது இவன் நம்மை பிடிப்பதற்காக இந்த எலும்புத்துண்டுகளையும் கறித்துண்டுகளையும் போட்டு வைத்துள்ளான் நாம் மாட்டினால் நம்முடைய உயிர் அவ்வளவுதான் என தப்பித்தோம் பிழைத்தோம் என ஓடி போய்விட்டது

வேட்டைக்காரணும் இன்று வேட்டையில் ஒன்றும் கிடைக்கவில்லையென்றாலும் பரவாயில்லை நாம் உயிரோடு வீடுபோய்சேருவோம் என வீட்டிற்கு திரும்பி சென்றான்

எந்தவொரு இக்கட்டான சூழலிலும் நாம் சமயோசிதமாக அதிலிருந்து மீண்டு வந்து சேருவதற்காக மிகச்சரியாகவும் புத்திசாலித்தனமாகவும் செயல்படவேண்டும் என்பதே இதில் நாம் அறியவேண்டிய நீதியாகும்

ஞாயிறு, 30 டிசம்பர், 2012

உயர்ந்த இலட்சியத்தை /இலக்கை அடைவதற்காக மிகச்சரியாக முயற்சிசெய்து பாடுபட்டால் வெற்றி பெறுவோம்


ஒருமீனவபெண் ஒருநாள் அதிகாலையிலிருந்த மதியம் வரை முயற்சிசெய்தும் ஒரு சிறுமீன் கூட கிடைக்காமல் மிக அதிக சோர்வுற்றிருந்தாள் அந்நிலையில் அவளுக்கு அருகே மற்றொருவளின் வலையில் பெரிய பெரிய மீனாக கீடைத்தும் அதனை தூக்கி மீண்டும் தண்ணீரில் எறிந்து வந்தாள் பின்அவளும் சலிப்புற்று இருந்தாள்

அவ்வழியே சென்ற சாமியார் ஒருவரை பார்த்து அவர்கள் இருவரும் தம்முடைய குறைகளை கூறினார்கள் இவ்வாறுதான் நாமும் நம்முடைய வாழ்வில் நமக்கு ஒன்றுமே கிடைக்கவில்லையே யென அதற்கான மிகச்சரியான முயற்சி செய்யாமல் முதலாவது மீனவபெண் போன்று மீன் எங்கு கீடைக்குமோ அங்கு வலைவீசினால் மட்டுமே கிடைக்கும் என தெரிந்து கொள்ளாமலும் அறிந்து கொள்ளாமலும் மற்றவர் களை குறைகூறுவதிலும் வீனாக பொழுதை கழிக்கின்றோம்

இரண்டாவது மீனவபெண் தன்னிடம் சிறிய கூடைதான் உள்ளது ஆனால் தன்னுடைய வலையில் கிடைப்பதோ மிகப்பெரிய மீன் அதனால் அவ்வகை மீன் ஆனது தன்னுடைய கூடைக்குள் கொள்ளாது என விட்டுவிடுவதை போன்று நம்முடைய எண்ணங்களும் முயற்சிகளும் மிகப்பெரியதாக இருந்தால் அவை நமக்கு ஏற்புடையவை அன்று என விட்டுவிடுகின்றோம் ஆனால் நம்முடைய கனவுகளும் எண்ணங்களும் முயற்சிகளும் மிகப்பெரியதாக இருந்தால் நாமும் அந்த அளவிற்கு நம்முடைய வாழ்வில் வெற்றி பெறுவோம் என்பது திண்ணம் என அறிவுரை கூறினார்

உடன் முதலாவது மினவபெண் மீன் கிடைக்கும் இடத்தை தேடி சென்று மீன்பிடிக்க ஆரம்பித்து சிறிது நேரத்தில் தன்னுடைய கூடைநிரம்ப மீன்பிடித்து சென்றாள்

இரண்டாவது மீனவபெண் பெரிய கூடையாக எடுத்துவந்து தனக்கு கிடைத்த பெரிய அளவு மீன்களை தன்னுடைய வீட்டிற்கு எடுத்து சென்றாள்

ஆம் நம்முடைய வாழ்வில் உயர்ந்த இலட்சியத்தை /இலக்கை அடைவதற்கான குறிக்கோளினை மனதில் கொண்டு அதனை அடைவதற்காக மிகச்சரியாக முயற்சிசெய்து பாடுபடுவோம் வெற்றி பெறுவோம்

எந்தவொரு இக்கட்டான சூழலிலும் நாம் சமயோசிதமாக செயல்படவேண்டும்


தொழிலாளி ஒருவர் வார கடைசி நாளன்று தன்னுடைய அந்த வார கூலித்தொகையை வாங்கிகொண்டு தன்னுடைய வீட்டிற்கு குறுக்கே இருக்கும் சிறு முட்புதர்காட்டின் வழியே திரும்பி வந்து கொண்டிருந்தார் ு

அந்த சமயத்தில் திடீரென வழிப்பறி திருடன் ஒருவன் அவர்முன் துப்பாக்கியுடன் வந்து ஒழுங்காக பையில் உள்ள அந்த வார கூலி தொகையை அனைத்தையும் கொடுத்துவிடும்படியும் இல்லையென்றால் தன்னுடைய கையில் உள்ள துப்பாக்கியால் அவரை சுட்டு கொன்று விடப்போவதாகவும் மிரட்டினான்

உடன் “நான் என்னுடைய பையில் இருக்கும் பணத்தை கொடுத்து விட்டு சென்றால் என்னுடைய மனைவி என்னை சந்தேகபடுவாள் அதனால் என்னுடைய சட்டையில் ஏதாவது ஒரு இடத்தில் இந்த துப்பாக்கியால் சுட்டால் அதனை காண்பித்து திருடன் வந்து இந்த வார கூலித்தொகையை வழிப்பறி செய்துகொண்டு போய்விட்டதாக கூறிவிடுவேன்” எனக்கூறியதை தொடர்ந்து ஒருமுறைமட்டும் அவருடைய சட்டையில் தன்னுடைய துப்பாக்கியால் சுட்டுவிட்டு “சரி பணத்தை எடு” என கூறினான்

பின்னர்“இது பத்தாது என்னுடைய சட்டை முழுவதும் சல்லடையாக உன்னுடைய துப்பாக்கியால் சுட்டால்தான் மிக கடுமையாக உன்னோடு போராடி முடியாமல் இறுதியாகபணத்தை இழந்துவிட்டதாக கூறமுடியும்” எனக்கூறியதை தொடர்ந்து வழிப்பறிதிருடனும் சரியென தன்னுடைய துப்பாக்கியால் அத்தொழிலாளியின் மேற்சட்டையை கழற்றி முழுவதும் சல்லடையாக தோன்றிடுமாறு சுட்டுதள்ளியபின் இறுதியாக “என்னுடைய துப்பாக்கியில் குண்டுகள் ஏதும் இல்லை அனைத்தும் காலியாகிவிட்டன அதனால் இப்போதாவது உன்னுடைய பணத்தை கொடுத்துவிடு” என கூறினான்

இறுதியா க“அப்படி வா என்னுடைய வழிக்கு நண்பா ஒழுங்காக உன்னுடைய வீட்டிற்கு செல்வதாக இருந்தால் விட்டுவிடுகின்றேன் இல்லையெனில் உன்னை அப்படியே கையை கட்டி இழுத்து சென்ற எங்களுடைய ஊரிலிருக்கும் காவல் நிலையத்தில் உன்னை கொண்டு சென்று சேர்த்து நீஎன்னிடம் கூலித்தொகையை வழிப்பறி செய்ய முயன்றதாக கூறி சிறைசாலைக்கு அனுப்பிவைத்துவிடுவேன்” எனக் கூறியதும் “ஐயோ அப்படியெதுவும் செய்தவிடாதீர்கள் நான் உங்களுடைய வழிக்கு குறுக்காக வரமாட்டேன்” என பயந்து ஓடிவிட்டான்

இவ்வாறே எந்தவொரு இக்கட்டான சூழலிலும் நாம் சமயோசிதமாக அதிலிருந்து மீண்டு வந்து சேருவதற்காக மிகச்சரியாகவும் புத்திசாலித்தனமாகவும் செயல்படவேண்டும் என்பதே இதில் நாம் அறியவேண்டிய நீதியாகும்

செவ்வாய், 25 டிசம்பர், 2012

நம்முடைய உணர்வுகள் நாம்அதனை எடுத்துகொள்வதற்கேற்ப அதனுடையஅளவு தோன்றும்


பயிற்சியாசிரியர் ஒருவர் தம்கீழ் பயிற்சிபெறவந்துள்ள இளம் பயிற்சி யாளர்களிடம் ஒரு கைப்பிடி உப்பினை கொடுத்து அதன் சுவையை கூறும்படி கோரினார்

உடன் அனைவரும் உப்பு கரிப்பதாக கூறினார்கள்

பின்னர் அவ்வுப்பை ஒரு டம்ளர் தண்ணீரல் இட்டு அதனை நன்கு தண்ணீரில் கரையுமாறு கலக்கியபின் அந்த உப்புநீரை அருந்து மாறு கோரினார்

தற்போது உப்பின் கரிப்பு சிறிது குறைந்துள்ளதாக கூறினார்கள்

அதன்பின்னர் அருகில் இருந்த நீச்சல் குளத்தில் அவ்வுப்பினை கொட்டி அந்த குளத்தினுடைய தணினீரில் அவ்வுப்பை நன்கு கரையுமாறு செய்தபின் தற்போது அந்த நீச்சல் குளத்தின நீரை அருந்துமாறு கூறினார்

உடன் அனைவரும் அந்த குளத்தின் நீர் கரிப்பு சுவையில்லாமல் சாதாரணமாக இருப்பதாக கருத்து தெரிவித்தார்கள்

அப்பயிற்சியாசிரியர் அந்த உப்பின் அளவு எந்த நிலையிலும் மாறவில்லை ஆனால் அது சேரும் இடம் மாறு படுகின்றது அதற்கேற்ப அதனுடைய சுவையும் மாறி அமைகின்றது அதுபோன்றே நம்முடைய வலி துன்பம் என்பனபோன்ற உணர்வுகளும் ஒரேஅளவுதான் இருக்கும் ஆனால் அதனை பேரளவிற்கு அதாவது குளத்தின் ,ஏரியின், கடலின் நீரில் கரைத்த உப்பினை போன்று எடுத்து கொண்டால் அவ்வுணர்வு மிக சாதாரணமாக அமையும் என தம்மிடம் பயிலவந்த இளம் பயிற்சியாளர்களுக்கு அறிவுரை கூறினார்

ஞாயிறு, 23 டிசம்பர், 2012

நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் உற்பத்தி திறனை உயர்த்துவதற்கான வழிமுறைகள்


ஒரு நிறுவனம் எந்த அளவிற்கு தம்முடைய ஊழியர்களின் உற்பத்தி திறன் உள்ளது என அறிந்து அவர்களை ஊக்குவித்து அவர்களின் உற்பத்தி திறனை உயர்த்துவதற்கான அல்லது மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் இவ்வாறு ஒரு நிறுவனத்தின் ஊழியர்களின் உற்பத்தி திறனை ஊக்குவித்து மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளில்

1.முதல் வழிமுறையாக தம்மிடம் பணிபுரியும் ஊழியர்களுக்கு குறிப்பிட்ட காலஇடைவெளியில் அவ்வப்போது நேரடி பணியில் பயிற்சி ,வகுப்பறை பயிற்சி, இணையத்தின் மூலம் பயிற்சி, கல்விச்சுற்றுலா அழைத்து செல்லுதல் ஆகியவற்றை அளித்தால் ஒருநிறுவனத்தின் வெற்றி ஏறுமுகமாக அமையும்

2. தம்முடைய ஊழியர்களை அவரவர்கள் சார்ந்த தொழில் நுட்பக் குழுக்களில் உறுப்பினராக சேரச்செய்து அதற்கான ஆண்டு சந்தா தொகையை நிறுவனமே செலுத்துமாறு செய்திடும்போது ஊழியர்கள் அவ்வாறான தொழில்பக்குழுக்களின் கூட்டங்களில் கலந்து கொண்டு புதுப்புது ஆலோசனகள் கருத்துகள் உருவாகி ஒருநிறுவனத்தின் உற்பத்திறன் உயர ஏதுவாக அமையும்

3. அவ்வப்போது குறிப்பிட்ட கால இடைவெளியில் ஊழியர்களின் குடும்ப உறுப்பினர்களையும் அழைத்து ஒரு நிறுவன்த்தில் ஏற்பாடு செய்துள்ள விருந்து கலைநிகழ்ச்சிகள் போன்றவற்றில் கலந்துகொள்ளுமாறு செய்திடும்போது அவர்களின் குடும்பத்தில் நல்ல மகிழ்ச்சியான சூழல் ஏற்படுகின்றது அதனை தொடர்ந்து ஒவ்வொரு ஊழியரும் அதற்கேற்ப தம்முடைய பணியை புது உத்வேகத்துடன் செய்துவர காரணமாகின்றது

4. ஒரு நிறுவனத்தில் அதிக உற்பத்தி செய்பவர்களுக்கு பரிசு அளித்தல் தொடர்ந்து விடுப்பு ஏதுவும் துய்க்கமால் தம்முடைய பணிக்கு வரும்ஊழியர்களுக்கு பரிசளித்தல் இவ்வாறான பரிசை ரொக்கமாக அளித்தல் என்பன போன்ற நவடிக்கைகளால் ஒரு நிறுவனத்தின் உற்பத்திறன் உயர வாய்ப்பு ஏற்படுகின்றது

5. ஒவ்வொரு மாதமும் அல்லது வாரமும் தொழில்நுட்ப கருத்தரங்குகள் ,குறிக்கோளை அடைவதற்கான சொற்பொழிவு கூட்டங்களை ஏற்பாடு செய்தல் அவ்வாறான நிகழ்ச்சியை நடத்துதல் இவ்வாறான கருதரங்குகளில் ஊழியர்களும் தம்முடைய கருத்துகளை பகிர்ந்துகொள்வதற்கான வாய்ப்பினை அளித்தல் என்பன போன்ற நிகழ்வுகள் ஒருநிறுவனத்தின் உற்பத்திறன் உயருவதற்கான மறைமுக காரணிகளாக அமைகின்றன

ஞாயிறு, 2 டிசம்பர், 2012

மைக்ரோ ஓவனில் சமையல் செய்து சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்


மைக்ரோ ஓவன் அடுப்பிலும் சாதாரண அடுப்பிலும் தனித்தனியாக தண்ணீரை கொதிக்கவைத்து ஆறவைத்தபின் இருஒரேமாதிரியான செடிகளுக்கு தினமும் ஊற்றிவந்து சிறிதுகாலம் கழித்து பார்வையிட்டால் அவ்விரண்டில் மைக்கரோஓவன் அடுப்பில் சூடுசெய்து ஆறிய தண்ணீரை ஊற்றிய செடியானது வாடிதங்கி இன்றோ நாளையோ என்றிருப்பதை காணலாம்

ஆனால் சாதாரண அடுப்பில் கொதிக்கவைத்து ஆறிய தண்ணீரை ஊற்றிய செடியானது வாடிவதங்காமல் நன்கு உயிருடன் இருப்பதை காணலாம் தாவரங்களுக்கே இந்த நிலையெனில் மைக்ரோ ஓவன் அடுப்பில் சமையல் செய்து சாப்பிடும் மனிதர்களின் உடலவ்நிலை என்னவாகும் என யோசித்து பாருங்கள் நண்பர்களேஇதனால் பின்வரும் மறைமுக விளைவுகள் ஏற்படும்

1தாதுக்கள்,விடடமின்கள்,சத்துபொருச்கள் குறைந்துபோகும் அல்லது தன்மை மாறியமையும்

2 காய்களில் உள்ள சத்துகள் மாறிவிடும்

3 மனிதர்களின் செரிமான வாயில்களான குடல் புற்றுநோய் வருவதற்கு வாய்ப்பாக அமைகின்றது

4 இரத்தபுற்றுநோயேஉருவாவதற்கு கூட ஏராளமான வாய்ப்புகள் உள்ளன

5 மனிதனின் நோய்எதிர்ப்பு சக்தியும் அறவே இல்லாமல் போக ஏதுவாக அமைகினdறது

மனிதனின் நினைவகத்திறன் குறைந்து போகவும் ஒருமுகதன்மை மறையவும் புத்திசாலி தனம் அறவே இல்லாமல் போகவும் வாய்ப்பாக அமைகின்றன

அதனால் இன்றே மைக்ரோ ஓவனில் சமையல் செய்து சாப்பிடுவதை முதலில் விட்டுவிடுமாறு பரிந்துரைக்கபடுகின்றது

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...