திங்கள், 30 ஏப்ரல், 2012

2ஜிஅல்லது 3ஜிஅல்லது 4ஜி என்றால் என்ன?


தற்போது இந்தியாவில் 2ஜி என்பது மிகபிரபலமான செய்தியாகி விட்டது இந்த ஜி என்பது தொலைதொடர்பு நிறுவனங்கள் தங்களுடைய விளம்பரத்திற்காக வாடிக்கையாளர்களை கவருவதற்காக யன்படுத்தும் மிகபிரபலமான சொல்லாகும் உண்மையில் இந்த ஜி என்பது Generation என்ற சொல்லின் முதலெழுத்தாகும் அதாவது தொலைத் தொடர்புத் துறையில் 1ஜி, 2ஜி, 3ஜி, 4ஜி என்றால் முதலாவது தலைமுறை அலைக்கற்றை, இரண்டாவது தலைமுறை அலைக்கற்றை ,மூன்றாவது தலைமுறை அலைக்கற்றை, நான்காவது தலைமுறை அலைக்கற்றை என்ற சொற்களின் முதலெழுத்தாகும்

1ஜி தொலைபேசி:முதலாவது தலைமுறை அலைக்கற்றையானது 1980 ஆம் ஆண்டுகளில் வெளியிடபட்டது. மோட்டோரோலா டைனோடாக் தொலைபேசியானது இந்த முதலாவது தலைமுறை அலைக்கற்றையை சார்ந்த்ததாகும். இது மிகப்பெரிய உருவில் இருந்தது.இது வானொலி ஒலிபரப்பான சிற்றலை (AM ), மத்தியலை( FM), ஆகியவற்றிற்கு மட்டும் பயன்படுத்தபட்டது

2ஜிதொலைபேசி : இரண்டாவது தலைமுறை அலைக்கற்றையானது 1991 ஆம் ஆண்டுகளில் பின்லாண்டு நாட்டில் வெளியிடபட்டது இது வானொலி ஒலிபரப்பிற்கு மட்டும் பயன்பட்ட முதலாவது தலைமுறை அலைக்கற்றையைவிட மேம்பட்ட டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் செயல்படுமாறு வடிவமைக்கபட்டது அதனால் தற்போது நாம் பயன்படுத்திவரும் அனைத்து செல்லிடத்து பேசிகளும் இந்த வகையை சார்ந்ததாகும் ,பேச்சொலியுடன் உரையை செய்தியாக கொண்டுசெல்லவும் இணையத்தொடர்பிற்கும் இது பயன்படுகின்றது இதில் இணையத்தை தொடர்பு கொள்ளும்போது தொலைபேசியாக பயன்படுத்தமுடியாது அதாவது ஒருசமயத்தில் ஏதாவது ஒருசெயலைமட்டுமே செய்யமுடியும்

3ஜிதொலைபேசி இந்த மூன்றாவது தலைமுறை அலைக் கற்றையானது ஜப்பான் நாட்டில் 2001 ஆம் ஆண்டுகளில் வெளியிடபட்டது இதன் மூலம் பயனாளர் ஒருவர் இணையத்தில் உலாவரும்போதே தொலைபேசிமூலம் பேசமுடியும் அதாவது ஒரேசமயத்தில் இணையஉலாவலும் தொலைபேசியாக பேசவும் முடியும் அதுமட்டுமல்லாது இதன்மூலம் இணையஉலாவானது மிகவேகமாக நடைபெறுகின்றது

4ஜிதொலைபேசி இந்த நான்காவது தலைமுறை அலைக்கற்றையானது சமீபத்தில்2011 –ல் வெளியிடபட்டது இது மூன்றாவதுதலைமுறை அலைகற்றையின் மேம்படுத்தபட்டதாகும் அதாவது இணையஉலாவலின் வேகமானது ஒருநொடிக்கு 6 மெகாபிட் ஆகும் இணையத்தை மிகவேகஇணைத்திடவும் மிகைவேகத்தில் இணையஉலாவலை செய்யவும் து பயன்படுகின்றது இது அகல்கற்றையைவிட மிகைவேகமாக செயல்படுகின்றது

திங்கள், 23 ஏப்ரல், 2012

எந்தவொரு நற்செயலையும் முதலில் நாம் செய்வதற்கு தயாராக இருக்கவேண்டும் என்ற நீதிக்கதை


ஒருசமயம் பக்கத்து நாட்டில் பஞ்சம் ஏற்பட்டு உணவில்லாமலும் சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு குடிப்பதற்கு பால் கிடைக்காமலும் பெறும் அல்ல்லுற்றனர் அதனால் அந்த பக்கத்து நாட்டிலுள்ள சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு குடிப்பதற்கு தன்னுடைய நாட்டிலிருந்து பசும்பால் மட்டுமாவது வழங்கலாம் என அரசன் முடிவுசெய்து தன்னுடைய மக்கள் அனைவரையும் ஊருக்கு மத்தியில் வைத்துள்ள கொப்பரையில் தத்தமது வீடுகளில் பசுவிலிருந்து கரந்திடும் பசும்பாலை கொண்டுவந்து விடியற்காலைக்குள் ஊற்றி செல்லும்படி அறிவிப்பு செய்தான்

அதனடிப்படையில் அவ்வூரில் வசிக்கும் ஒருவன் தன்னுடைய பசுமாட்டில் பாலை கரந்து கொண்டு சென்று கொப்பரையில் ஊற்றிவரலாம் என புறப்படும்போது ஊரிலுள்ள அனைவரும் பாலினை கொப்பரையில் ஊற்றவிருக்கின்றனர் அதனால் நாம் மட்டும் நம்முடைய பங்கிற்கு தண்ணீர் ஊற்றினால் தெரியவா போகின்றது என முடிவுசெய்து யாரும் பார்க்கவில்லை என உறுதிபடுத்தி கொண்டு தம்முடைய பங்கிற்கு தண்ணீர் கொண்டு அந்த கொப்பரையில் ஊற்றினார்

அவ்வாறே அவ்வூரில் உள்ள அனைவரும் தத்தமது பங்கிற்கு தண்ணீர் ஊற்றினால் தெரியவா போகின்றது என முடிவுசெய்து அனைவரும் கொப்பரையில் தண்ணீரை மட்டுமே கொண்டு வந்து ஊற்றி சென்றனர் மறுநாள் காலையில் அவ்வூர் அரசன் ஊருக்கு மத்தியில் வைத்த கொப்பரையில் எவ்வளவு பால் நிரம்பியிருக்கின்றது என பார்க்கலாம் அதன்பின் பக்கத்து நாட்டிற்கு எடுத்துசென்று வழங்குவதற்கு ஏற்பாடு செய்யலாம் என முடிவுசெய்து தம்முடைய மந்திரிகளோடு அந்த கொப்பரையை சென்று பார்த்தால் அதில் முழுவதும் தண்ணீர் மட்டுமே இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்

உடன் ஊர்மக்கள் அனைவரையும் ஒன்றுகூடச்செய்து எந்த வொரு நற்செயலையும் நாமேமுதலில் செய்யும் எண்ணம் ஒவ்வொருவருக்கும் வரவேண்டும் அதை மற்றவர்கள் செய்து கொள்வார்கள் நாம் நம்முடைய வேலையை மட்டும் செய்வோம் எனஇருந்திடவேண்டாம் என்றும் அவ்வாறே நமக்கு ஒரு பணி வழங்கினால் அதனை நாம் உண்மையாக முழுமனதோடு செய்யும் எண்ணம் நம்ஒவ்வொருக்கும் வரவேண்டும் என்றும் அறிவுரை வழங்கியபின் தன்னுடைய சொந்த பால்பண்ணை யிலிருந்து பசும்பாலினை பக்கத்து நாட்டிற்கு அந்த நாட்டு அரசன் வழங்கினார்

இதிலிருந்து தெரிந்துகொள்ளவேண்டியநீதி என்னவென்றால் : எந்தவொரு நற்செயலையும் முதலில் நாம் செய்வதற்கு தயாராக இருக்கவேண்டும் அவ்வாறே நமக்கு அளித்த பணியை நாம் உண்மையாக முழுமனதோடு செய்து முடிக்கவேண்டும் என்பதே

ஞாயிறு, 22 ஏப்ரல், 2012

கொசுக்களை மிக எளிதான வழியில் செலவு அதிகமில்லாமல் பிடித்து ஒழிக்கலாம்


இதனை ஒவ்வொரு வீட்டிலும் செய்யலாம் இதற்காக தண்ணீர், பிரவுன் சர்க்கரை ,யீஸ்ட்,பயன்படுத்திய பிளாஸ்டிக் பாட்டில் ஒன்று ஆகியமட்டுமே தேவையான பொருளாகும் இதற்கான படிமுறை பின்வருமாறு

1.பிளாஸ்டிக் பாட்டிலை பாதியாக வெட்டி இரண்டு அரைப்பகுதியாக மாற்றி வைத்திடுக

2.அடிப்பகுதியல் சிறிது வெண்ணீரால் நிரப்பி அதில் பிரவுன் சர்க்கரை யை கரைத்துகொண்டு அறைவெப்பநிலை அளவிற்கு குளிர்வித்து கொள்க

3.பின்னர் அந்த ஆறிய பிரவுன் சர்க்கரை கரைசலில் யீஸ்ட்டை சேர்த்திடுக உடன் இந்த கலவையில் கார்பன்-டை- ஆக்ஸைடு உருவாகும் இதுதான் கொசுக்களை கவரக்கூடியதாகும்

4.இந்த அடிப்பகுதி பிளாஸ்டிக் பாட்டிலை மேல்பகுதி தவிர்த்து கறுப்பு வண்ண தாளால் சுற்றி ஒட்டி கொள்க இதனை வீட்டின் ஏதேனுமொரு மூலையில் வைத்துவிடுக

5.ஓரிருவாரம் கழித்து பார்த்தால் அந்த பிளாஸ்டிக் பாட்டில் முழுவதும் இறந்துபோன கொசுவால் நிரம்பிஇருப்பதை காணலாம்

6.இவ்வாறு குறைந்த செலவில் நம்முடைய வீட்டில் கொசுவை பிடித்து ஒழித்திடுக

எச்சரிக்கை இந்த ஆலோசனை கொசுவர்த்தி சுருள் செய்யும் நிறுவனத்திற்கு வருமான இழப்பு ஏற்படும் என்பது உண்மை ஆனால் ஏழைஎளிய மக்கள் பெரிதும் பயன்பெறுவார்கள் என்பதே அதைவிட பேருண்மையாகும்

சனி, 21 ஏப்ரல், 2012

கருத்தினை கூறும் கதை


ஒரு தந்தை தன்னுடைய சிறு மகனுடன் ஒரு ஆற்றின் குறுக்கேயுள்ள பாலத்தை கடந்து மெதுவாக நடந்து சென்றனர் அந்த ஆற்றில் கரைபுரண்டிடும் அளவிற்கு வெள்ளம் ஒடிக்கொண்டிருந்தது அத்தந்தை தன்பிள்ளையை நோக்கி மகனே என்னுடையே கையை கெட்டியாக பிடித்துகெண்டு என்னோடு பத்திரமாக நடந்து வா என கூறினார் அதற்கு அவருடைய சிறு மகனானவன் இல்லையப்பா நான் உங்கள் கையை பிடிப்பதைவிட நீங்கள் என்னுடைய கையை பிடித்து கொண்டால்தான் நான் மிகபாதுகாப்பாக இருப்பேன் என கூறினான் ஏனெனில் நான் பிடித்துகொண்டிருக்கும்போது ஏதேனும் நிகழ்வு ஏற்பட்டால் சிறுகுழந்தையான நான் என்னுடைய பிடியை விட்டிட வாய்ப்பு அதிகம் உள்ளது ஆனால் நீங்கள் என்னுடைய கையை பிடித்திருந்தால் எந்த நிகழ்விலும் என்னுடைய கையை நீங்கள் விடமாட்டீர்கள் அதனால் நான் பத்திரமாக பாதுகாப்பாக அக்கரையை சென்று சேரமுடியும் என கூறினான்

ஞாயிறு, 15 ஏப்ரல், 2012

தற்போதைய ஐக்கிய அமெரிக்காவின் பொருளாதார நடவடிக்கை யாது?


அமெரிக்க ஐக்கிய நாட்டின் ஒரு சிறிய நகரத்தில் மிக அதிக மழை பொழிந்து வெள்ளக்காடாக இருந்ததால் வழக்கமான மக்களின் இயக்கம் தடைபட்டது அதனுடன் கூடவே மக்கள் அனைவரும் கடன் தொல்லையில் அவதிபட்டுகொண்டிருந்தனர் அந்நிலையில் வசதியான சுற்றுலா பயனி ஒருவர் தங்கும் விடுதி யொன்றில் தான் தங்குவதற்காக வசதியான அறையொன்று கிடைக்குமாஎன பார்வையிட வந்தார் அவர் வரவேற்பாளரிடம் 100 யூரோ தாளை முன்பணத் தொகையாக கொடுத்துவிட்டு தமக்கு பிடித்தமான அறை அங்குள்ளதாவென உள்ளே சுற்றிபார்க்க சென்றார்

உடன் அந்த தங்கும்விடுதியின் முதலாளி தம்மிடம் சமையல் பணிபுரியும் வேலையாளிற்கு நிலுவையாக இருக்கும் கொடுபடவேண்டிய அந்த மாத சம்பளத்தை அந்த 100 யூரோ தாளை கொண்டு தீர்வுசெய்தார்

உடன் அந்த சமையல் பணிபுரியும் வேலையாள் தாம் நிலுவையாக வைத்திருக்கும் தான்குடியிருக்கும் வீட்டு வாடகையை அந்த 100 யூரோ தாளை கொண்டு தீர்வுசெய்தார்

உடன் அவ்வீட்டு சொந்தகாரர் அந்தமாத எரிபொருள் கட்டணத்தை அந்த 100 யூரோ தாளை கொண்டு செலுத்தினார்

உடன் அந்த எரிபொருள் வழங்குபவர் தம்நிறுவனத்தின் விளம்பரத்தில் நடித்த நடிகைக்கு வழங்கவேண்டிய கட்டணத்தை அந்த 100 யூரோ தாளை கொண்டு தீர்வுசெய்தார்

உடன் அந்த விளம்பர நடிகைஅந்த தங்கும் விடுதியில் தாம் தங்கியிருந்தாதற்கான கட்டணத்தை அந்த 100 யூரோ தாளை கொண்டு செலுத்தினார்

இந்நிலையில் அச்சுற்றுலா பயனி அந்த தங்கும் விடுதியின் உட்புறம் அனைத்தையும் சுற்றி பார்த்துவிட்டு ஒரு அறையும் தாம்விரும்பியவண்ணம் இல்லையென தாம் முன்பனமாக வழங்கியஅந்த 100 யூரோ தாளை வாங்கி கொண்டு கிளம்பிவிட்டார்

இந்நிகழ்வால் அந்நகர மக்கள் பொருள்ஏதும் ஈட்டிடவில்லை ஆனால் அவர்களின் அனைவருடைய கடன்களும் தீர்வுசெய்யபட்டுவிட்டன அதனை தொடர்ந்து மக்களும் நிம்மதியுடன் இருந்தனர் இதுதான் தற்போதைய ஐக்கிய அமெரிக்காவின் பொருளாதார நடவடிக்கையாகும்

சனி, 14 ஏப்ரல், 2012

தேவையற்ற தொல்லையான விளம்பர குறுஞ்செய்திகளை தவிர்ப்பதெவ்வாறு

இந்தியாவில் தற்போது 50 கோடிக்குமேல் செல்லிடத்து பேசியை பயன்படுத்து கின்றனர் இதனால் செல்லிடத்து பேசிவழியாக குறுஞ்செய்திமூலம் விளம்பரமும் ஏராளமாக வெளியிடபடுகின்றன இந்தசெல்லிடத்து பேசிவழியாக குறுஞ்செய்தி விளம்பரத்தினால் பாதிக்காதவர்கள் யாருமே இல்லையென கூறிவிடலாம் அந்தஅளவிற்கு செல்லிடத்துபேசியின் இந்த குறுஞ்செய்தி விளம்பரங்களின் தொல்லை உள்ளன. இதனை தவிர்க்கமுடியுமா எனில் பின்வரும் வழிமுறைகளை பின்பற்றினால் இந்த தொல்லையை தவிர்க்கலாம் http://ndncregistry.gov.in/ndncregistry/index.jsp என்ற இணையதளத்திற்கு சென்று DND Registration Check என்ற இணைப்பை தெரிவுசெய்து சொடுக்கி நம்முடைய செல்லிடத்து பேசிஎண்ணை பதிவுசெய்துகொள்க
1. ஏர்டெல்:பின்னர் நம்முடைய செல்லிடத்து பேசியானது ஏர்டெல் ஆக இருந்தால் START DNDஎன 121 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தியை அனுப்பிடுக
2.வோடாஃபோன்: நம்முடைய செல்லிடத்து பேசியானது வோடாஃபோனாக இருந்தால் ACT DND என 111 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தியை அனுப்பிடுக
3. ரிலையன்ஸ்:நம்முடைய செல்லிடத்து பேசியானது ரிலையன்ஸ் ஆக இருந்தால் முதலில் http://www.reliancecommunications.co.in/Communications/Rm/rm_index.html
என்ற இணையதளத்திற்கு சென்று DND பற்றிய விவரங்களை பதிவு செய்து கொண்டால் போதும்
4. ஐடியா :நம்முடைய செல்லிடத்து பேசியானது ஐடியாவாக இருந்தால் முதலில் 1909 என்ற எண்ணில் DND பற்றிய விவரங்களை பதிவு செய்து கொள்க அல்லது இதனை பதிவுசெய்வதற்கு முதலில் 'START DND' என்ற குறுஞ்செய்தியையும் அதன்பின்னர் 'STOP DND' என்ற குறுஞ்செய்தியையும் இதே எண்ணிற்கு அனுப்பினால் போதும்
5.டாடா இண்டிகாம்: நம்முடைய செல்லிடத்து பேசியானது டாடா இண்டிகாம் ஆக இருந்தால் http://www.tatatele.in/dnd/DNDAction. என்ற இணையதளத்திற்கு சென்று DND பற்றிய விவரங்களை பதிவு செய்து கொண்டால் போதும்
6. டாடா டோகோமா :நம்முடைய செல்லிடத்து பேசியானது டாடா டோகோமாவாக இருந்தால் இதனை பதிவுசெய்வதற்கு முதலில் 'START DND' என்ற குறுஞ்செய்தியையும் அதன்பின்னர் 'STOP DND' என்ற குறுஞ்செய்தியையும் 1909 என்ற எண்ணிற்கு அனுப்பினால் போதும்
7பிஎஸ்என்எல் .நம்முடைய செல்லிடத்து பேசியானது பிஎஸ்என்எல் ஆக இருந்தால் http://pdnc.bsnl.co.in/ என்ற இணையதள்ததிற்கு சென்று பதிவுசெய்து கொள்க அல்லது கட்டணமல்லாத 1909 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு கூறப்படும் கட்டளைகளுக்கேற்ப பதிவுசெய்து கொள்க அல்லது இதனை பதிவுசெய்வதற்கு முதலில் 'START DND' என்ற குறுஞ்செய்தியையும் அதன்பின்னர் 'STOP DND' என்ற குறுஞ்செய்தியையும் 1909 என்ற எண்ணிற்கு அனுப்பினால் போதும்

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...