திங்கள், 25 மார்ச், 2013

பெற்றோர்களை உதாசினப்படுத்தாமல் பேணிக்காப்போம்


வயதான தந்தையும் அவருடைய மகனும் ஒரு வீட்டில் அமர்ந்து கொண்டிருந்தினர் மகன் மும்முரமாக எதோ எழுதி கொண்டருந்தார் அப்போது அவர்களின் வீட்டு தோட்டத்தில் காகம் ஒன்று காகா என கரைந்தது வயதான தந்தைக்கு காது சிறிது கேட்காது அதனால் என்னப்பா அது சத்தம் என வினாவினார் உடன் மகனும் காகம் ஒன்று கத்துவதாக கூறினார்

மீண்டும் அதே காகம் கரைந்தது மீண்டும் அது என்ன சத்தம் என அந்த தந்தை வினவியபோது மீண்டும் அம்மகன் காகம் ஒன்று கத்துவதாக கூறினார்

மூன்றாவது முறையாக அதே காகம் காகா என கத்தியது மூன்றாவது முறையாக அந்த வயதான தந்தை மகனிடம் அது என்ன சத்தம் என வினவியபோது தோ பெருசு சும்மா வாயை மூடிக்கொண்டு உட்கார்ந்திருப்தை விட்டுவிட்டு அதுஎன்ன இதுஎன்ன என கேள்வியெல்லாம் கேட்காதே எனக்கு கட்டுக்கடங்காத கோபம் வந்துவிடும் அதனை தொடர்ந்து உன்னை முதியோர் இல்லத்தில் கொண்டு சேர்த்துவிடுவேன் என அவருடைய மகனும் கோபமாக கத்தினார்

நிரம்ப சரிமகனே நீ சிறிய வயதில் இதேபோன்று நாம் அமர்ந்து இருந்தபோது இதேபோன்றே ஒரு காகம் பத்து தடவை கத்தியது ஒவ்வொரு தடவையும் அது என்ன என நீ வினவியபோது நானும் இவ்வாறு கோப படாமல் நம்முடைய மகன் இந்த உலகை பற்றிய இதனுடைய செயல்களைபற்றி அறிந்து கொள்ளவேண்டும் என அக்கறையோடு பொறுமையாக மகிழ்வோடு பதில் கூறிவந்தேன் என அமைதியாக பதிலளித்தார்

ஆம் நாம் அனைவரும் இந்த அவசர யுகத்தில் பொறுமை யின்றி மிகவேகமாக ஓடிக்கொண்டிருக்கின்றோம் ஆயினும் நாம் நல்ல மனிதனாக வளருவதற்காக நம்முடைய பெற்றோர்கள் என்னென்ன தியாகம் செய்தார்கள் என்ற நன்றியுனர்வு சிறிதும் இல்லாமல் அவர்களை முதியோர் இல்லத்தில் விட்டுவிடும் நன்றியுனர்வற்ற மனப்பான்மை இன்றி நாளை நமக்கும் இதே நிலைமை வரும் என்ற உணர்வும் சிறிதும் இல்லாமல் உதாசினப்படுத்துகின்றோம்

ஞாயிறு, 24 மார்ச், 2013

உண்மையான குணநலன்களை அறிந்து அதற்கேற்ப உறவை பராமரித்திடுக


நம்முடைய மேலாளர்கள் சக பணியாளர்கள் அருகில் வசிப்பவர்கள் உறவினர்கள் என நம்மை சுற்றி இருப்பவர்களின் அனைவரை பற்றிய நிறை குறைகளையும் அலசிஆராய்ந்து அவர்கள் ஒவ்வொரும் எவ்வாறானவர்கள் என அவர்களை பற்றிய ஒரு கற்பனையான உருவத்தை நம்முடைய மனத்திரையில் பதிந்து வைத்து கொண்டு அதற்கேற்ப அவர்களுடன் நம்முடைய உறவை பராமரித்து வருவோம்

பொதுவாக நம்மை சுற்றியுள்ள பொருட்களை கையாளுவதில் நாம் பெற்ற நம்முடைய அனுபவத்தை கொண்டு மிக எச்சரிக்கையாக நடந்துகொள்ளுவோம் அதாவது மிக சூடான பாத்திரம் எனில் கைகளில் சூடுபடாமல் இருப்பதற்காக துணி அல்லது வேறு பொருட்களை கொண்டு அதனை கையாளு வோம் முட்செடிகளில் மலர்ந்திருக்கும் ரோஜா போன்ற மலர்களை பறிப்பதில் மிககவனமாக கைகளில் முள்குத்தாமல் அதனை பறித்திடுவோம்

அதே போன்றே சுற்றுபுறத்தில் நாம் தினமும் சந்திக்கும் பல்வேறு நபர்களை பற்றிய நம்முடைய மனதில் கற்பனையாக பதிந்து வைத்துள்ள தவறான உருவத்திற்கு பதிலாக அவர்களின் உண்மையான குணநலன்களை அறிந்து அதற்கேற்ப நாம் சந்திக்கும் நபர்களுடன் நம்முடைய உறவை பராமரிப்பது நல்லதுஎன பரிந்துரைக்கபடுகின்றது

தன்னையே அழித்து மற்றவர்களை திருத்துவது


ஒரு பென்சில் தவறாக எழுதியதை அழிக்கும் ரப்பரானது அந்த தவற்றை அழித்து நீக்கம் செய்து பென்சிலானது சரியாக எழுதிடுமாறு தூண்டு கின்றது அவ்வாறான செயலின்போது ரப்பரானது தன்னையே சிறிது சிறிதாக அழித்து கொண்டு வருகின்றது

ஒரு குறிப்பிட்ட நாளிற்கு பிறகு அந்த ரப்பரானது தன்னையே முழுவதுமாக அழித்து கொண்டு பென்சில் செய்யும் தவறுகளை அழித்துவிட்டு காணாமல் போய்விடுகின்றது

ஆம் அதுபோன்றே பெற்றோர்கள் தம்முடைய பிள்ளைகள் செய்யும் தவறுகளை தம்மை அழித்தாவது அவர்களை திருத்தி ஒரு நல்ல மனிதானாக உருவாக்கியபின் அப்பெற்றோர்கள் இந்த உலகிலிருந்தே விடபட்டு சென்றவிடுகின்றனர்

அவ்வாறே ஒரு நிறுவனத்தின் நல்ல தலைவர்களும் தான் பணிபுரியும் நிறுவனத்தின் தோல்வியை வெற்றியாக்கு வதற்காக தன்உடல்பொருள் ஆவி என அனைத்தையும் வழங்கி இறுதியில் அந்த நிறுவனத்தினை வெற்றிப்பாதையில் அதனை நல்லதொரு நிறுவனமாக மிளிரச்செய்து அந்த தலைவர்கள் இந்த உலகைவிட்டே காணாமல் போய்விடுகின்றனர்

வியாழன், 21 மார்ச், 2013

ஒரு நிறுவனத்தின் வெற்றி அந்தநிறுவனத்தின் நல்ல திறன்வாய்ந்தவர்களை பணிக்கு அமர்த்திகொள்ளுதல் மூலம் அமையும்


திருவிழாவில் ஒரு பலூன் வியாபாரி வெவ்வேறு வண்ண பலூன்களை விற்றுவந்தார் அந்ததிருவிழாவை காணவந்த சின்னஞ்சிறார்களும் அவர் விற்பனை செய்துவந்த பல்வேறு வண்ண பலூன்களில் கருப்பு வண்ண பலூன் தவிர மற்ற பலூன்களை வாங்கி அதில் காற்றினை ஊதி மேலே பறக்கவிட்டனர்

இந்தநிலையில் சிறுவன் ஒருவன் அந்த வியாபாரியிடம் ஐயா கருப்பு வண்ண பலூனில் காற்றினை ஊதி வானத்தில் பறக்கவிட்டால் அது பறந்து உயரேசெல்லுமா என்ற சந்தேகத்தை தெளிவுபடுத்த விரும்பினான்

உடன் அந்த பலூன் வியாபாரி ஆம் அதிலென்ன சந்தேகம் தம்பி எல்லா பலூனும் காற்றில் மேலே பறந்து செல்லக் கூடியுதான் ஒரு பலூனின் வண்ணம் பறப்பதற்கான அடிப்படை யான காரணம் அன்று அதிலுள்ள நாம் ஊதும் வெப்பக்காற்றே அதனை மேலே பறக்கசெய்கின்றது என தெளிவுபடுத்தினார்

ஆம் அதுபோன்றே நம்முடைய உருவம் மட்டும் நம்மை மற்றவர்கள் திரும்பி பார்த்திடுமாறு செய்வதன்று நம்முடைய குறிக்கோள் அதனை தொடர்ந்து நாம் செய்யும் பணி அதனால் நாம் பெற்ற வெற்றியும் நம்முடைய நல்ல செயல்கள் ஆகியவை மட்டுமே நம்மை அனைவரும் வியந்து பார்த்திட வைக்கும் காரணியாகும்

அவ்வாறே ஒரு நிறுவனத்தின் வெற்றியும் அந்தநிறுவனத்தின் நல்ல திறன்வாய்ந்தவர்களை பணிக்கு அமர்த்திகொள்ளுதல் அவர்களின் மூலம் மிகச்சிறந்த வழிகளில் அந்நிறுவனத்தை வழிநடத்தி செல்வதன் வாயிலாக அமைகின்றது

புதன், 20 மார்ச், 2013

செய்யும் பணியை முழு ஈடுபாட்டுடனும் அக்கறையுடனும் செய்திடுக


மூன்று தொழிலாளர்கள் செங்கல்லை கொண்டு ஒரு வீட்டிற்கான சுவற்றினை கட்டும் பணியினை செய்துகொண்டு இருந்தனர் அந்தவழியே சென்ற வழிபோக்கன் அவர்கள் ஒவ்வொருவரையும் நோக்கி என்ன செய்து கொண்டு உள்ளனர் என வினவியபோது

முதலாமவன் இது கூடவா தெரியவில்லை நான் மனிதர்கள் வாழும் வீட்டினை கட்டுகின்றேன் என பதில் கூறினார்

இரண்டாவது நபர் நான் செய்யும் பணியை பார்த்தால் தெரியவில்லையா செங்கல்லை கொண்டு சுவற்றினை கட்டும் பணியினை செய்துகொண்டு இருக்கின்றேன் என பதில் கூறினார்

மூன்றாமவர் நான் மிக அழகான நினைவிடத்தை கட்டும் பணியை செய்து கொண்டு இருக்கின்றேன் என பதில் வழங்கினார்

இங்கு நன்றாக கவணியுங்கள் அந்த மூவர்களும் செய்யும் பணிஎன்னவோ ஒன்றுதான் ஆனால் இவர்கள் மூவரும் தங்களுடைய பணியினை வெவ்வேறு நோக்கத்தோடும் அக்கறையோடும் செய்து வந்தனர் அதனால் அவர்கள் அதனை வெவ்வேறு தோற்றமாக காணுகின்றனர் என்பதேயாகும்

பொதுவாக நாம் செய்யும் பணியானது தெருவை சுத்தம் செய்வதாக அல்லது ,தட்டச்சு செய்வதாக அல்லது சுத்தியலை தூக்கி அடிப்பது என எதுவாக இருந்தாலும் அதனை முழு ஈடுபாட்டுடனும் அக்கறையுடனும் செய்யும்போதுதான் அந்த பணியானது முழுமையாக நிறைவு பெறுகின்றது அதன்மூலம் அந்த பணியினை செய்கின்ற நமக்கும் முழு மனத்திருப்தியும் மனமகிழ்வும் கிடைக்கின்றது

அதாவது அரைகுறையாக செய்யும் பணியானது அரைகுறை யாகவும் இறுதியில் ஒன்றும் இல்லாதும் முடியும் மேலும் எந்தவொரு பணியின் பண்பும் அந்த பணியை செய்கின்ற நபரின் பண்பும் பிரிக்கமுடியாது அதனால் எந்த நோக்கோடு அல்லது பண்போடு ஒருவர் ஒரு பணியை செய்கின்றாரோ அதே பண்புதான் அவருடைய பணியிலும் பிரதிபலிக்கும் என்பதே எதார்த்தமான உண்மையாகும் என இதிலிருந்து அறிந்து கொள்க

புதன், 13 மார்ச், 2013

பேராசையின் விளைவு


ஒரு காட்டில் இருந்த குரங்கு ஒன்று பசிஎடுத்தால் மட்டும் மரத்திலுள்ள பழங்களை பறித்து தின்று தன்னுடைய பசியாற்றி கொண்டபின் நன்கு தூங்கி தன்னுடைய பொழுதை கழித்துவந்தது

இந்நிலையில் அந்த குரங்கிற்கு இதைவிட நல்ல பொருளை உண்ண வேண்டும் என்ற போராசை ஏற்பட்டது அதனால் மனிதர்கள் வாழும் குடியிருப்பு பகுதிக்கு வந்தது அங்கு ஒரு குடியானவன் தன்வீட்டு முற்றத்தில் தன்னுடைய தோட்டத்தின் மரத்தில் விளைந்த (காய்த்த) மாம்பழங்களை அறுவடைசெய்து விற்பனை செய்வதற்காக குவியலாக கொட்டி வைத்திருந்தார் அதை பார்த்த அக்குரங்கானது வாயில் ஒன்றும் இரண்டு கை கொள்ளும் அளவிற்கு மற்றொன்றும் என இரண்டை மட்டும் எடுத்து கொண்டு காட்டிற்கு திரும்பியது

அங்கு தன்னுடைய கையிலிருந்ததை கீழேவைத்தால் வேறு குரங்கு ஏதாவது அதனை எடுத்து தின்றவிடுமோ என்ற பயத்தினால் கையிலியே வைத்து கொண்டு வாயிலிருந்ததை பசிஎடுத்தும் தின்ன முடியாமல் தவித்தது. இரண்டு கைகளாலும் பழத்தை பிடித்து கொண்டிருந்த்தால் மரத்தில் ஏறி இதைவிட வேறுநல்ல பழங்களை பறித்து தின்று பசியாற முடியாதநிலையில் இருந்தது.

அப் போது அந்த வழியே சென்ற வயதான குரங்கு ஒன்று அடேய் மடையாமுதலில் நன்றாக தரையில் அமர்ந்துகொண்டு அதன்பின் கையிலிருக்கும் பழத்தை பத்திரமாக கால்களால் பிடித்துகொண்டு வாயிலிருக்கும் பழத்தை கைகளால் பிடித்து நன்றாக பசியாற உண்டபின் கால்களில் பிடித்து வைத்துள்ள பழத்தை கைகளால் எடுத்து தேவையெனில் தின்றுபார் கையில் வெண்ணெய் வைத்து கொண்டு நெய் அலைந்தது போன்று பேராசையால் பசியில் பட்டினியோடு சாகாதே என அறிவுரை கூறிசென்றது அதன்பின் அக்குரங்கும் அவ்வாறே செய்து தம்முடைய பசியாற்றியபின் முந்தைய நிலையை பின்பற்றி மகிழ்ச்சியோடு வாழ்ந்துவர ஆரம்பித்தது

இந்த குரங்கு போன்றே நம்மில் பலர் பேராசையினால் கையிலிருக்கும் பொருளை சிறியதாக இருந்தாலும் பரவாயில்லை என அதனை வைத்து அனுபவிக்க தெரியாமல் அல்லல் பட்டு தானும் அனுபவிக்கமால் மற்றவர்களுக்கு கொடுப்பதற்கும் மனம் வராமல் வீணாக்கி மற்றவர்கள் இந்த தவறை சுட்டி காட்டினால் மட்டுமே நமக்கு அதனை பற்றிய அறிவு ஏற்படும் என்ற சூழலில் நாம் தற்போது இருந்து வருகின்றோம் என்பதே உண்மை நிலையாகும்

திங்கள், 11 மார்ச், 2013

நம்முடைய வாழ்வில் நேர்மறையான மனப்பாங்கினை வளர்த்திட


தற்போதைய சமூக வாழ்க்கை சூழலில் நம் ஒவ்வொருவரையும் கவலைகளும் மனவருத்தமும் கும்பலாக சேர்ந்து சூழ்ந்து கொள்வதால் நம்மால் நேர்மறையான சிந்தனையை எண்ணிபார்க்கவே முடியாத நிலை ஏற்படுகின்றது மேலும் அந்நேர்மறை மனப்பாங்கினை நம்மிடம் பராமரிக்க மிகவும் கடினமானதாகவும் உள்ளது , இருந்தாலும் நாம் நேர்மறையாக சிந்திக்கலாம் என முயற்சியை மேற்கொண்டால் எதிர்மறை சிந்தனை மிகவலுபெற்று அதனை தடுக்கின்றது அதனால் பின்வரும் வகை செயல்முறையை பின்பற்றி நேர்மறையான சிந்தனையையும் நல்ல ஆரோக்கியமான வாழ்க்கையையும் பெறுவதற்கான வழியை கண்டிடுக மகிழ்ச்சிக்காக காத்திருக்க வேண்டாம்.

நமக்கு மகிழ்ச்சியான வாழ்வு தானாக வரும் என காத்திருக்கவேண்டாம் அந்த மகிழ்ச்சியான வாழ்வை நோக்கி பணியாற்றிடுக அதாவது இன்றைக்கு நம்மைசுற்றி நல்ல மகிழ்ச்சியான சூழலை உருவாக்கினால் அது நாளை நமக்கான மகிழ்ச்சியான சூழல் தானாகவே உருவாக்கிவிடும் இதுவே ஒருநல்ல அணுகுமுறையாகும் என்றும் நல்ல நடத்தையென்றும் கூறப்படுகின்றது நாம் எப்போதும் நம்முடைய வாழ்வில் நல்ல அணுகுமுறையை அல்லது நன்னடத்தையை மேற்கொண்டால் நம்முடைய வாழ்க்கையானது சாதனைபூங்காவாக மலரும் இல்லையெனில் போராட்டமாகவே அமைந்து நம்மை வாழ்க்கை சூழலிலிருந்து வெளியேற்றிவிடும்

தெளிவுபடுத்திடுக முன்னுரிமைவழங்கிடுக நாம் என்ன விரும்புகின்றோம் என முதலில் அறிந்து கொள்க நம்மிடமிருந்து நாம் என்ன எதிர்பாக்கின்றோம் என தெரிந்து கொண்டால் நம்முடைய எதிர்காலம் மிகத்தெளிவாகவும நம்முடைய இலக்கு எளிதில் அடையக்கூடியதாகவும் இருக்கும் நம்முடைய வாழ்க்கையை முழுமையாக வாழ்வதே நம்முடைய நோக்கமாகும் அதனால் முதலில் அந்நோக்கத்தை தெளிவுபடுத்துக பின்னர் அந்நோக்கத்தை கண்டறிந்திடுக அதன்பின்னர் நம்முடைய மனதில் எதிர்காலத்தை பற்றிய கனவுகளை காட்சியாக கண்ணுற்று. நம்முடைய வாழ்க்கையின் இலக்குகளை அடைய உறுதிய செய்து கொள்க வாழ்வின் நீண்ட இலக்கான முன்னேற்ற பட்டியலை அடைவதற்காக அதனை சிறுசிறு இடைக்கால குறுகிய கால இலக்காக பிரித்து பட்டியலாக ஆக்கிகொண்டு அவை ஒவ்வொன்றையும் அடைவதற்கு குறியீட்டை நிர்ணயித்து கொள்க

நெகிழ்திறன் இந்த நெகிழ்திறன் ஆனது மக்களை விடாமுயற்சி கொண்டு ஆபத்திலிருந்து மீட்டிடவும் பாதுகாத்திடவும் செய்வதற்கான வழியை எதிர்கொள்ள செய்கின்றது , ஒரு வலுவான விடாமுயற்சியை மேற்கொண்டு, வாழ்வின் கஷ்டங்களையும் சவால்களையும் வெற்றிகொள்க; எந்தவொரு செயலிற்கு ஏற்ற எதிர் செயலை செய்திடுக , அதற்கு மாறாக அச்சம், சுய இரக்கம், தாழ்வுமனப்பான்மை அல்லது குற்றச்சாட்டிடும் மனப்பான்மை கொள்ளவேண்டாம் . வாழ்க்கை மிகவும் சவாலானதாக முடியும் போது இந்த நெகிழ்திறன் நம்முன் ஒரு முக்கியமான படிக்கல்லாக அமைந்து வலுவானதும் வாழ்க்கை சவால்களை கையாளக்க்கூடியதுமான புத்திசாலித்தன்மையை நமக்கு வழங்குகின்றது உள்நோக்கு உரையாடல் நம்மை பற்றி நமக்கு நாமே உள்நோக்கு உரையாடல் செய்து கொள்வது நமக்கான மிகப்பெரிய பலமும் நல்ல விமர்சனமும் ஆகும்.அதனால் நம்மை பற்றி ய உள்நோக்கு உரையாடலை கவனித்து அதனோடு உரையாடிடுக மற்றவர்கள் நம்மை ஊக்குவிப்பார்கள் என எதிர்பார்த்திடாமல் நமக்கு நாமே உக்குவித்துடிகு அதுவே நம்முடையஆத்மாவின் குரலாகும் அது நம்மை விமர்சனம் செய்துநம்மை ஆட்சி செய்கின்றது

எப்போதும் முகத்தில் மகிழ்ச்சி புன்முருவலோடு இருந்திடுக மனதின் கவலையை மறப்பதற்கு நகைச்சுவை சிறந்த மருந்தாகும் . அதனால் எப்போதும் கவலையை மறந்த சிரிப்பை நம்முடைய வாழ்க்கையின் பகுதியாக உருவாக்கிகொள்க. இந்த சிரிப்பு மனநிலையானது நமக்கான மகிழ்ச்சியான வாழ்விற்கு நம்மை உயர்த்தி செல்வதற்கான ஒரு காரணியென அறிந்து கொள்க. அதனால் நம்முடைய வாழ்வில் சிரிப்பு குறைந்த்தாக உணரும் போது, உடனடியாக வேடிக்கை கதைகளை அல்லது ஒரு நகைச்சுவை புத்தகங்களை படித்திடுக. எப்போதும் நம்முடைய மனநிலையை சிரிப்பு பகுதிநோக்கி திறந்திருக்க அனுமதித்திடுக. வாழ்க்கை ஒரு சிக்கலான தாகும் அதனால் வேடிக்கையான விளையாட்டு சிரிப்பு என மற்றொரு சிறந்த பகுதியையும் நம்முடைய வாழ்வில் இருக்குமாறு பார்த்து கொள்க

வெட்டியாக பொழுதை வீணாக்கவேண்டாம் எப்போதும் இப்போதைய நிகழ்காலத்தை மட்டும் மகிழ்வோடு எதிர்கொண்டு வாழ்ந்திடுக கடந்த காலத்தை பற்றிய வருத்தமோ எதிர்காலத்தை பற்றிய பயமோ தேவையில்லை அதாவது கடந்தகாலம் செயல்முடிந்துபோனதொரு வரலாறாகும் எதிர்காலம் என்பது என்ன நடக்குமோ என யாருக்கும் தெரியாதவொரு புதிராகும் ஆனால் இன்றைய நிலையே நமக்கு இயற்கை அளித்த சிறந்த பரிசாகும் அதனால் நாம் நடப்பு நிகழ்காலத்தை மட்டும் பார்த்து நன்றாக வாழபழகினால் போதும்

நேர்மறையான அணுகுமுறை பராமரித்திடுக நேர்மறையான அணுகுமுறை பராமரித்தலே ஒரு சிறந்த விதியாகும் . நம்மை பற்றி முதலில் எப்போதும் நல்ல நம்பிக்கை வேண்டும் அந்த நன்னம்பிக்கை நம்மிடம் இருப்பது நம்முடைய வாழ்க்கையின் பிரகாசமான பக்கத்தை பார்ப்பதற்கு மட்டுமன்று. ஒரு நன்னம்பிக்கை இருக்கும் சூழலில் நம்முடைய பலங்களையும் சாதனைகளையும் அதிகரிக்கவும் நம்முடைய பலவீனங்களையும் பதட்டத்தையும் குறைக்கவும் பயன்படுத்தி கொள்கம் . அதற்காக நம்மை ஒரே நாளில் மாற்றி கொள்ளமுடியாது ஆனால் அதை பெறுவதற்கு குறைந்த பட்சம் ஒரு சிறு முயற்சியாவது மேற்கொள்க . வாழ்வில் ஒரு நேர்மறையான அணுகுமுறையானது நாம் செல்லவேண்டிய பகுதிக்கு செல்வதற்காக நமக்கு உதவுகின்றது. நேர்மறையான அணுகுமுறையை மேற்கொள்ளவேண்டும் என்ற அந்த பயம் நம்மனதில் இருந்தால் அது நம்மை கட்டுப்படுத்தி சரியான பாதையை நோக்கி நகர்த்தி செல்லும்

என்னால் முடியும் நான் வெற்றிபெறுவேன் ! என்ற மந்திர சொல்லை எப்போதும் நினைவில் வைத்து கொள்க

முக்கியபணிக்கும் உடனே செய்யவேண்டிய பணிக்குமானவேறுபாடு யாது


இன்றைய நாகரிக வாழ்க்கையில் நாம் செய்து முடிக்க வேண்டிய பணிகள் ஏராளமாக உள்ளன அவற்றுள் எதனை உடனே செய்வது எதனை சிறிது காலம் தாழ்த்தி செய்வது அல்லது எது முக்கியபணி எது முக்கியமற்ற பணி என முதலில் தெரிந்து அறிந்து கொள்ளவேண்டும் .

பின்னர் அதற்கேற்ற வாறு நாம் முடிக்கவேண்டிய பணிகளை வரிசைபடுத்திடாமல் குழம்பி போய் நம்முடைய மனதில் எது சரியென தோன்றுகின்றதோ அவ்வாறே நாமும் செயல்படுகின்றோம் .

அதனால் முக்கிய மற்ற பணியை அதிக சிரமமும் காலவிரயமும் செய்து முடிக்கின்றோம் ஆனால் முக்கியமான பணியை கோட்டை விடுகின்றோம்

அதனால் முக்கியமான பணிஎன்றால் என்ன உடனடியாக செய்யவேண்டிய பணிஎன்றால் என்ன என இவைகளுக்கிடைய உள்ள வித்தியாசத்தை தெரிந்து கொண்டால் நாம் தெளிவாக முடிவுசெய்து அந்த பணியை முடிக்கமுடியும்

இராமேசுவரம் தீவை இணைக்கின்ற பாம்பன் பாலமானது கப்பல் கள் செல்லும்போது தூக்கி நிறுத்தவும் கப்பல் போனபின் தொடர்வண்டி இராமசுவரம் செல்வதற்காக அதே பாலத்தை கீழே தரைமட்டத்தில் படுக்கைவசமாக வைத்திடவேண்டியது ம் அங்கு காவல் பணிசெய்பவரின் அன்றாட பணியாகும்

சில ஆண்டுகளுக்கு முன் அந்த பாம்பன் பாலத்தில் பணிபுரிந்துவந்தார் காவலர் ஒருவர் சிறுகுழந்தைபருவத்தில் உள்ள தன்னுடைய ஒரேஒரு மகனை தான் பணிபுரியும் இடத்தில் வைத்து கொண்டிருந்தார் அக்குழந்தையானது அந்த பாம்பன் பாலத்தை மேலேற்றுதல் செய்வதற்கும் கீழிறக்குதல் செய்வதற்குமான பெரிய பற்சக்கரத்தில் விளையாடுவதை பார்த்து கொண்டிருந்தார் அந்நேரத்தில் தொடர் வண்டியொன்று இராமேசுவரம் தீவிற்கு செல்வதற்காக அருகில் வந்து கொண்டிருந்தது தெரியவந்தது உடன் அக்காவலர் தன்னுடைய ஒரே மகனை தூக்கி வெளியிலெடுக்க முடியாத நிலையில் பாலத்தை கீழிறக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளானார்

அந்நேரத்தில் பாசத்திற்கு உரிய ஒரு உயிர் முக்கியமா தொடர்வண்டியில் பயனம் செய்துவரும் ஆயிரக்கணக்கான உயிர் முக்கியமா என்ற கேள்வி அவர்முன் எழுந்தவுடன் ஆயிரகணக்கான அப்பாவி பயனம் செய்பவர்களே மிகமுக்கியமென கருதி உடன் தொடர்வண்டி செல்வதற்கான பாலத்தை கீழ் இறக்கினார் தொடர்வண்டியின் பயனிகள் பத்திரமாக அந்த பாம்பன் பாலம் வழியாக பயனித்து சென்றனர் ஆனால் அக்காவலரின் பச்சிளம் குழந்தையானது அந்த பற்சக்கரத்தில் நசுங்கி உயிரழந்தது

இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ளவேண்டிய அறிவுரை யாது எனில் முக்கியமான பணியை என்ன விலைகொடுத்தாலும் முதலில் முடித்திடவேண்டும் என்பதேயாகும்

ஞாயிறு, 3 மார்ச், 2013

பிள்ளைகளிடம் நல்லொழுக்கத்தை வளர்த்தல்


நல்லொழுக்கத்துடன் வளரும் பிள்ளைகளே பிற்காலத்தில் ஒரு நல்ல குடிமகனாகவும வாழ்க்கையில் வெற்றிபெற்றவனாகவும் மிளிரமுடியும் அதனால் பிள்ளைகள் நல்லொழுக்கத்துடன் வளருவதற்கு பின்வழிமுறைகளை பின்பற்றிடுக

1 பொதுவாக சமுதாயத்தின் யாரோ ஒருவரின் செயலை முன்மாதிரியாக கொண்டு பின்பற்றுவதுதான் பிள்ளைகளின் நல்லொழுக்கத்திற்கு அடிப்படை செயலாகும். ஆனால் அப்பிள்ளைகளுக்கு சமுதாயத்தின் முதன் தொடர்பாக இருப்பது பெற்றோர்களே அதனால் பெற்றொர்களே முதலில் தம்முடைய பிள்ளைகளுக்கு அந்த யாரோ ஒருவர் என்பதற்கு பதிலாக ஒவ்வொரு பெற்றொரும் தாமே முன்மாதிரியாக இருந்து நல்வழிகாட்டிடுவது நன்று

2சமுதாயத்தில் நாளேடுகள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ஒலிஒளிபடங்கள் புத்தகங்கள் போன்றவைகளிலிருந்து ஒவ்வொரு பெற்றோரும் தான் பெறும் நல்ல கருத்துகளையும் அதனால் பெறும் நன்மைகளையும் தம்முடைய பிள்ளைகளுடன் பகிர்ந்து கொள்வதோடு மட்டுமல்லாமல் அவர்களையும் அதனை பின்பற்றிடுமாறு செய்வது நன்று

3 பிள்ளைகளுக்கு நன்னடத்தையை கற்பித்தல் என்பது திட்டமிடப்பட்டு வருவதன்று ஆனால் எதிர்பாராத விதமாக வந்தமையும் முக்கிய தருணங்களை பயன்படுத்தி அவர்களது வாழ்நாள் முழுதும் பயன்படும் தார்மீக நம்பிக்கைளை வளர்க்க உதவுவதற்கான தனது நடத்தையை தம்முடைய பிள்ளைகளும் பின்பற்றிடுமாறு செய்வது நன்று

4தங்களது தவறுகளை திருத்தி மீண்டும் வருங்காலத்தில் அதுபோன்ற தவறுகள் நிகழாவண்ணம் பார்த்துகொள்ளுதல் அதுபோன்ற தருணங்களில் சரியாக எவ்வாறு செயல்படுவது என்பன போன்ற சிறந்த ஒழுக்க பாடத்தை கற்றுக்கொள்ளுமாறு செய்திடுக மேலும் அதுபோன்ற நேரங்களில் நன்னடத்தை விதிகளை கண்டிப்பாக பின்பற்றிடுமாறு அவர்களை கண்கானித்திடுக

5பிள்ளைகளின் நன்னடத்தை எவ்வாறு மற்றவர்களை கவரும் என அவர்களுக்கு அறிவுறுத்துவதோடுமட்டுமல்லாம்ல் எப்போதும் அந்த நன்னடத்தைகளை முன்னிலைப்படுத்தி அவர்கள் செயல்படுமாறு கவணித்து கொள்க.

6நல்லொழுக்கத்துடன் செயல்படும் தருணங்களின் அவர்களின் செயலை பராட்டுவதால் பிற்காலத்தில் அவர்களின் செயல்கள் அவர்களுடைய நன்னடத்தைகளை வலுப்படுத்துவதாகவே அமையும்

7பிள்ளைகள் எப்போதும் மற்றவர்களை சார்ந்திருக்காமல் தம்முடைய செயலிற்கே தாமே பொறுப்பேற்குமாறு செய்திடுக

8நம்மை எவ்வாறு நடத்தவேண்டும் என விரும்புகின்றோமோ முதலில் அதேபோன்று நாம் மற்றவர்களை நடத்தவேண்டும் என்ற நல்லொழுக்கத்தின் மிகமுக்கிய வழியை நம்முடைய பிள்ளைகள் பின்பற்றிடுமாறு செய்திடுக

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...