சனி, 22 ஜூன், 2013

நம்முன் பரந்து கிடக்கும்வாய்ப்புகளையும், வசதிகளையும் மிகச்சரியாகபயன்படுத்தி முன்னேறசெய்யாமல் சோம்பேறியாக நமக்கு கிடைத்தது அவ்வளவுதான் என முடங்கிபோய்விடுகினறோம்.


முன்னொரு காலத்தில் ஒரு மரத்தின்மீது இருந்த பறவையின் கூட்டில் நிறைய மூட்டைகள் இருந்தன திடீரன ஒருநாள் வீசிய பயங்கர சூறாவளி காற்றினால்அந்த மூட்டைகள் காற்றில் அடித்துசெல்லபட்டு தரையில் வீசியெறியபட்டது அவற்றில்ஒருமுட்டைமட்டும் விழுந்த இடம் கோழிகள் வாழும் இடமாக இருந்ததால் கோழிமுட்டையுடன் இந்த பறவையின் முட்டையும் கலந்துவிட்டது

ஒரு வயதானபெட்டைகோழி தன்னுடைய முட்டைகளுடன் இந்த பறவையின் முட்டையும் சேர்த்து அடைகாத்தது. இறுதியாக மற்ற முட்டைகளிலிருந்து கோழிகுஞ்சுகள் முட்டை ஓட்டை உடைத்து கொண்டு பிறந்ததை போன்று இந்த பறவையின் குஞ்சும் அதனுடைய ஓட்டை உடைத்து கொண்டு அழகிய பறவை குஞ்சாக பிறந்தது

இது மற்ற கோழிகுஞ்சுகள்போன்றே இரைதேடவும் தரையை சீய்த்து புழுபூச்சிகளை தேடிபிடித்து உண்ணவும் அதிகபட்சம் ஓரடி உயரம் மட்டும் தாவி பறக்கவும் பயிற்றுவிக்கபட்டு அந்த செயல்களைமட்டும் செய்ய பழகி அவைகளை மட்டும் பின்பற்றி வந்தது

ஒருநாள் ஒருஅழகியபறவைஒன்று வானத்தில் வட்டுமிட்டு பறப்பதை பார்த்த இந்த பறவையின் குஞ்சானது வயதான பெட்டைக்கோழியை பார்த்து அம்மாஅதோ உயரத்தில் பறக்கின்றதே அதுஎன்னஅம்மா அதுஎவ்வாறு வானத்தில் பறக்கின்றது என வினவியபோது அது ஒரு பறவை வனத்தில் பறப்பதற்காகவே பிறந்திருக்கின்றது நாமெல்லோரும் கோழிகள் நாம் தரையில் மட்டுமே நடக்கமுடியும் அந்த பறவை போன்று நம்மால் பறக்க முடியாது பறந்து சென்று இரைதேடிட முடியாது அதனால் நாம்நடந்து சென்று குப்பைமேடுகளில் சிந்தி சிதறிகிடக்கும் தானியங்களையும் புழுபூச்சிகளையும் இரையாக உட்கொள்ளமுடியும் என அறிவரைகூறியது

அதைஅப்படியேநம்பி தானும் ஒரு கோழிமட்டுமே தன்னால் அவ்வாறு வானத்தில் பறக்கமுடியாது மேலும் பலஇடங்களுக்கு பறந்து சென்று இரைதேடமுடியாது என எண்ணி வாழ்ந்து மடிந்தது.

அதுபோன்றே நம்மில் பலர் நம்முன் பரந்து கிடக்கும்வாய்ப்புகளையும், வசதிகளையும் மிகச்சரியாகபயன்படுத்தி முன்னேறசெய்யாமல் சோம்பேறியாக நமக்கு கிடைத்தது அவ்வளவுதான் என முடங்கிபோய்விடுகினறோம்.

ஞாயிறு, 16 ஜூன், 2013

நாம் கூறும் சொல் ஒவ்வொன்றும் மற்றவர்களுக்கு பாதிப்பெதுவும் ஏற்படாமல்இருக்குமாறு பார்த்து கொள்க


ஒரு வயதான மனிதன் தன்னுடைய வீட்டிற்கு அருகில் வசிக்கும் இளைஞன்தான் அவ்வூரில் நடைபெறும் அனைத்து திருட்டிற்கும் காரணம் என்று பார்ப்பவர்கள் அனைவரிடமும் பொய்யான வதந்தி செய்தியை பரப்பிவிடுவதை வழக்கமாக கொண்டிருந்தார்

அதனால் உண்மையாகவே அந்த இளைஞன் திருடியிருப்பானோ என்றும் அவ்வூரில் நடைபெறும் திருட்டிற்கும் அந்த இளைஞனுக்கும் என்றும் அந்த ஊரின் காவல்துறையானது சந்தேகபட்டுஅந்த இளைஞனை கைதுசெய்து சிறையில் அடைத்தது சிறிது காலம் கழித்தபின் அந்த இளைஞனுக்கும் அவ்வூரில் நடைபெறும் திருட்டிற்கும் தொடர்பே இல்லை என்றும் அவன் நிரபராதி என்றும் தீர்ப்பு கிடைக்கபெற்று அந்த இளைஞன் விடுவிக்கப்பட்டான்

பிறகுஅந்த இளைஞன் வீடுவந்து சேர்ந்ததும் பக்கத்து வீட்டு வயாதனவன் மீது இதுகுறித்து நீதிமன்றத்தில் மானநஷ்ட வழக்கு தொடுத்தான் அதற்கான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்ற போது அவ்வழக்கினை விசாரித்துவரும் நீதிபதியானவர் அந்த வயதான பெரியவரிடம் "ஏன் ? இவ்வாறு பொய்யான வதந்தியை பரப்பிவிட்டீர்கள்" என வினவியபோது "சும்மாபொழுது போக்காக இருக்குமாறுதான் நான் கூறினேனே தவிர உண்மையில் அவ்விளைஞன் பாதிக்குமாறு நான் ஏதும் செய்யவில்லை" என சாதித்தார் உடன் நீதிபதியானவர் அன்றைய தினமனி செய்திதாளை அந்த வயதான பெரியவரிடம் கொடுத்து "இந்த செய்திதாளை உங்களுடைய வீடுபோய்சேரும்வரை சிறுசிறு துண்டாக கிழித்தெரிந்துகொண்டே செல்க நாளை காலையில் நீதிமன்றத்திற்கு வந்து சேருக" என கூறிஅனுப்பினார்

அன்று அந்த வயதான பெரியவர் தன்னுடைய வீட்டிற்கு போய்ச்சேரும் வரை நீதிபதி கூறியவாறு செய்திதாளை சிறுசிறு துண்டுகளாக கிழித்து எறிந்துகொண்டே சென்று மறுநாள் நீதிமன்றத்திற்கு வந்து சேர்ந்தார்

மறுநாள் நீதிபதிவந்ததும் அந்த வயதான மனிதனை பார்த்து "நேற்று உங்களிடம் கொடுத்த செய்திதாளை முழுமையாக சேகரித்து ஒட்டிஎடுத்துவருக " எனக்கூறியவுடன் வயதானவர் "அதுஎப்படி முடியும் நான்தான் அந்த செய்திதாள் முழமையும் சிறுசிறு துண்டுகளாக கிழித்து தரையில் எறிந்துவிட்டேனே அவைகள் எல்லாம் காற்றில் பறந்து போய்விட்டிருக்குமே" என பதில் கூறியபோது "அவ்வாறே நீங்கள் அந்த இளைஞனை பற்றிய அவதூறாக செய்தியை மற்றவர்களிடம் கூறியவுடன் அவை செய்திதாள்துண்டுகள் காற்றில் பரந்து சென்றவாறு இந்த தவறான அக்கப்போரான செய்தியும் உடன் பரவி அனைவரும் அவ்விளைஞனை பற்றிய தவறான நோக்கத்தில் பார்த்திடுமாறு அந்த இளைஞனுக்கு மனஉளைச்சலும் மனவருத்தமும் ஏற்பட்டுவிட்டது

அதனால் இனி அவ்வாறு நடந்துகொள்ளாதீர் மீறினால் உங்களுக்கு தக்க அபராதம் இந்த நீதிமன்றம் விதிக்கும்" என எச்சரித்து அனுப்பினார் அதை போன்றே நாம் கூறும் சொல் ஒவ்வொன்றும் மற்றவர்களுக்கு பாதிப்பெதுவும் ஏற்படாமல்இருக்குமாறு பார்த்து கொள்க

புதன், 12 ஜூன், 2013

தகவல் தொடர்பு என்பது மிகமுக்கியமான கருவியாகும்


பெரும்பாலான நிறுவனங்களில் பணிபுரியும் பேரளவு தொழிலாளர்கள் தாங்கள் பணிபுரியும் நிறுவனத்தில் தற்போது என்ன நிகழ்வு நடந்துகொண்டிருக்கின்றது என்றே தெரியாமலும் அறிந்து கொள்ளாமலும் இருந்துவருவார்கள் ஏனெனில் அவர்கள் பணிபுரியும் நிறுவனத்தில் நடைபறும் நிகழ்வுகளை பற்றிய போதுமான தகவல்கள் அவர்களுக்கு போய்ச்சேருவதில்லை

பொதுவாக எந்தவொரு நிருவாகிக்கும் தகவல் தொடர்பு என்பது மிகமுக்கியமான கருவியாகும் அதனால் மிகத்திறனுடன் அந்த தவல் தொடர்பை கையாளதெரிந்த ஒரு நிருவாகி பணிபுரியும் ஒருநிறுவனத்தில் அந்நிருவாகியில்லை யெனில் குறிப்பிட்ட நிறுவனத்தின் செயல் எதுவுமே நடைபெறாது என அந்த நிருவாகியினுடைய பணி அந்நிறுவனத்திற்கு அதிமுக்கியத்துவம் பெறுகின்றது

வேறுசில நிருவாகிகள் அதிக கூச்ச சுபாவமுடையவர்கள் அதனால் தம்முடைய பணியாளர்களுடன் தகவல் தொடர்பு கொள்வதையே தவிர்த்துவிடுவார்கள் அதாவது அந்த செயலால் தமக்கு எதிர்மறையான நிகழ்வு ஏற்பட்டவிடுமோ என்ற பயத்தில் பணியாளர்களுடன் தகவல்தொடர்பு கொள்ளவே பயப்படுவார்கள்

மற்றும் சிலர் தங்களுக்கு கீழ் பணியாளர்கள் பணிபுரிவதையே மறந்துவிடுவார்கள் அதனால் தகவல் தொடர்பு என்பதேஅவருடைய நிறுவனத்தில் இல்லாத நிலையேற்படும்

பொதுவாக ஒருநிறுவனத்தில் நடைபெறும் எந்தவொரு நிகழ்வும் உடனுக்குடன் அந்த நிகழ்வை பற்றிய தகவல் அந்நிறுவனம் முழுவதும் பரவிடவேண்டும் அப்போதுதான் அந்நிறுவனத்தில் பணிபுரியும் அனைவரும் தம்முடைய கடமைஎன்ன தாம் எதில் தவறவிட்டோம், மிகச்சரியான முடிவு என்ன? அதனால் நிறுவனத்திற்கு என்ன வகையான பாதிப்பு ஏற்படும்? மிக்குறைந்த வாய்ப்புகளில், மிகவிரைவாக, மேலதிகாரிகளின் ஒப்புதல் இல்லாமல் எந்தவொரு செயலையும் எவ்வாறு செய்திடமுடியும் என்பன போன்ற அனைத்து நிகழ்தகவுகளையும் அலசிஆறாய்ந்து சரியாக செயல்படஏதுவாகும்

ஒருசில பணியாளர்கள் நம்முடைய நிறுவனத்தின் வளங்களாகும். அதனால் அந்நிறுவனம் அவர்களை சார்ந்திருக்கவேண்டிய நிலைஏற்படும் வேறுசிலர் நாம் அவர்களை நமக்கு ஏற்றவாறு உருவாக்க வேண்டியிருக்கும் மற்றும் சிலருக்கு அவ்வப்போது நம்முடைய வழிகாட்டுதல்களும் கண்காணிப்பும் அவசியம் இருந்துகொண்டே இருக்கவேண்டும்

அதுபோன்றே ஒருசில பணியாளர்கள் அதிக பணிஅனுபவம் இருப்பதால் அவர்களை சிறிதளவிற்கு மட்டும் மேற்பார்வை செய்தால் போதும் மற்றும் சிலருக்கு மேலாளரின் மேற்பார்வை தொடர்ந்து இருந்தால் மட்டுமே அவர்களினுடைய பணிசரியாக நடைபெறும் வேறுசிலர் அவர்கள் கூறும் செய்தியை ஆலோசனைகளை நிருவாகி காதுகொடுத்து கேட்க வேண்டும் என விரும்புவார்கள் அவ்வாறானவர்கள் தம்மை சந்திக்க வரும்போது தன்னுடைய அனைத்து செயல்களையும் தற்காலிகமாக நிறுத்தம் செய்து அவ்வாறான பணியாளர்களின் செய்தியையும் ஆலோசனைகளையும் ஒருமுகபடுத்தி கேட்டிடும்போது நிருவாகி நம்முடைய கருத்துகளை கவணிக்கின்றார் என மகிழ்வுற்று தம்முடைய பணியை திறம்பட செய்யமுயல்வார்கள்

இவ்வாறான மேலே காணும் அனைத்தையும் மனதில் கொண்டு சிறந்த தகவல்தொடர்பை பணியாளர்களுடன் ஏற்படுத்திகொள்ளும் நிருவாகியின் செயலால் அந்நிறுவனத்தை நல்ல வெற்றிபாதைக்கு அழைத்து செல்லமுடியும் என்பது திண்ணம்

ஞாயிறு, 9 ஜூன், 2013

தொழிலாளர்களுக்கிடையான நம்பிக்கையை வளர்த்தல் அல்லது மேம்படுத்துதலுக்கான அடிப்படைசெயல்கள்


ஏதோஒருவர் மற்றொருவரிடமிருந்து ஏதனும் முழுமையான நிலையானதொரு தீர்வு தனக்கு கிடைக்கும் என எதிர்பார்த்திருப்பதே நம்பிக்கையின் அடிப்படையாகும் அவ்வாறான எதிர்பார்ப்பு நிறைவடையாதபோது அதாவது அந்த நம்பிக்கை பொய்த்திடும்போது அவர்களுக்கிடையுள்ள உறவில் விரிசல் ஏற்படுகின்றது இந்நிலையில் இந்த நம்பிக்கையானது அவ்வருவர்களுக்கிடைய உறவை வலுபடுத்திடும் நிலையாக தொடர்ந்து பராமரித்திடும் ஒரு அத்திவாசியமானதொரு அடிப்படை கருவியாக அமைகின்றது

இந்த உறவுகளானது கணவன் மனைவிக்கிடையேயான உறவு, முதலாளி தொழிளாளிக்கிடையேயான உறவு, மேலாளர் பணியாளருக்கிடையேயான உறவு ,பிள்ளைகள் பெற்றோருக்கிடையேயான உறவு ,அண்ணன் தம்பிக்கிடையேயான உறவு ,அக்காதங்கைக்கிடையேயான உறவு ,வாடிக்கையாளர் வழங்குநருக்கிடையேயான உறவு என ஏராளமான அளவில் தற்போதை நம்முடைய சமூக சூழலில் விரிகின்றது

இந்த உறவை தொடர்ந்து தக்கவைத்துகொள்ளவும் நீடித்து பராமரித்திடவும் பின்வரும் அடிப்படை வழிமுறைகளை பின்பற்றிடுக

1 நம்மை சார்ந்துள்ளவர்களுடைய அன்றாட செயல்களுக்கான நீண்டநாள் எதிர்பார்ப்புகளையும் குறுகிய எதிர்பார்ப்புகளையும் நம்மால் உறுதியாக பூர்த்திசெய்திடமுடியும் என்றபொறுப்பினை உறுதிபடுத்திடுக

2 கொஞ்சமாக பேசவும் அதிகமாக கவணிக்கவும் செய்யவேண்டும் என்ற அடிப்படையில் நமக்கு ஒரேஒரு நாக்கும் இரண்டு காதுகளும் இயற்கை வழங்கியிருக்கின்றது .அதனால் நாம் எப்போதும் நம்மை சுறறியுள்ளமற்றவர்கள் என்ன பேசுகின்றார்கள் என்பதை முதலில் கவணிக்கவும்,பிறகு கொஞ்சமாக பேசுக.

3எப்போதும் உண்மையாகவும் நேர்மையாகவும் பிறரிடம் நடந்துகொள்க அதாவது நம்மைபற்றிய நம்பிக்கையானது ஒரேயொருநொடியில் கண்ணாடி மாளிகை உடைவதைபோன்று தூள்தூளாகிவிடும் ஆனால்அந்த நம்பிக்கையை நம்மீது வளர்த்திட நீண்ட நாட்களாகும் என்பதை மனதில் கொள்க

4 நாம்கூறிய வாக்குறுதியைஎந்தவிலைகொடுத்தாவது காத்திடவேண்டும் அவ்வாறு வாக்குறுதியை காத்திட இயலவில்லை யெனில் உடன் நேரடியாக உண்மையாகவும் நேர்மையாகவும் அதனை தன்னால் நிறைவேற்ற முடியாததை கூறி அதற்கான மாற்றுவழியை காண முயன்றிடுக

5 எப்போதும் மாறிகொண்டே இருக்கும் மனநிலையை விட்டிடுக. அதாவது நம்முடைய சொல்லும் செயலும் ஒரேமாதிரியாக மாறாத நிலையானதாக இருந்திடுமாறு பார்த்துகொள்க

6 ஆங்கிலத்தில் Sorry ,Thanks ஆகிய இரண்டும் பொன்னெழுத்துகளாகும் ஏனெனில் நம்மையறியாமல் நாம் ஏதேனும் தவறுசெய்திடும்போது உடனடியாக சம்பந்தபட்டவரிடம் அதற்காக மன்னிப்பு கோருவதும் அவ்வாறே எந்தவொரு செயல் அல்லது உரையாடல் முடியும்போதும் எதிரில் இருப்பவருக்கு நாம் நன்றி சொல்வதும் மற்றவர்களிடம் நம்மைபற்றிய நல்ல உயர்வான எண்ணத்தை நண்ணம்பிக்கையை உருவாக்கிடும் அடிப்படை செயலாகும் .

வியாழன், 6 ஜூன், 2013

ஏழைகளை சீண்டி விளையாட வேண்டாம் அதற்கு பதிலாக அவர்களுக்க உதவிடுக


ஒரு பல்கலைகழக பேராசிரியரும் அவருடை மாணாக்கர்களும் ஒருநாள் மாலைநேரத்தில் சிறிது நேரம் காலாற அந்த ஊரின் எல்லைவரை நடந்து உலாவரலாம் என முடிவுசெய்தனர் .

அவ்வாறே ஊரின் எல்லைவரை அவர்களனைவரும் பல்வேறு செய்திகளை பற்றி விவாதித்து கொண்டு சென்றனர் அப்போது இருமுழுகாலணிகள் பாதையோரம் இருப்பதையும் அருகிலுள்ள விவசாய நிலத்தில் கூலித்தொழிலாளி பணிசெய்வதையும் கண்ணுற்றனர்

உடன் மாணவன் ஒருவன் ஐயா இந்த முழுகாலணிகளை நாம் மறைத்து வைத்து விட்டு அந்த மரத்தின் அருகில் நாமல்லோரும் மறைந்து இருந்த பார்ப்போம் என்ன நடைபெறுகின்றது என அறிந்து கொள்வோம் என கூறினான் உடன் பேராசிரியர் நண்பரே நம்மைவிட கீழ்நிலையிலுள்ள ஒருஏழை கூலித்தொழிலாளியை அவ்வாறு சீண்டி ஏமாற்றவேண்டாம் மற்றவர்களை துன்புறுத்தி அதிலிருந்து மகிழ்ச்சி பெறவேண்டாம் அதற்கு பதிலாக காலணி ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு நூறு ரூபாய் என இரு நூறுரூபாய் தாட்களை உள்ளே வைத்துவிட்டு நாமல்லோரும் மறைந்து இருந்த பார்ப்போம் என்ன நடைபெறுகின்றது என அறிந்து கொள்வோம் என கூறினார்

அதனை தெடர்ந்து அம்மாணவனும் அவ்வாறே ஒவ்வொரு காலணியிலும் ஒரு நூறு ரூபாய் வீதம் இரு தாட்களை வைத்த பின் அனைவரும் அருகிலிருந்த மரத்திற்கு பின்புறம் சென்று என்ன நடைபெறபோகின்றது என மறைந்திருந்து பார்த்தனர்

சிறிது நேரம் கழித்து அவ்விவசாய கூலித்தொழிலாளி பணிமுடிவுற்றதால் குளித்துவிட்டு வந்து தன்னுடைய கால்களில் அந்த முழுகாலணிகளை அணிய முயற்சித்தபோது இருகால்களிலும் ஏதோவருடுவதை உணர்ந்து என்னவென்று காலனிகளிலிருந்து தன்னுடையகால்களை வெளியில் எடுத்துவிட்டு பார்த்தபோது ஒவேவொரு காலணியிலும் ஒவ்வொரு நூறு ரூபாய் வீதம் இருநூறுரூபாய் இருப்பதை கண்ணுற்று சுற்றும் முற்றும் யாராவது தென்படுகின்றார்களா அல்லது இருக்கின்றார்களா என தேடிபார்த்து போதுயாரும் அவருடைய கண்ணிற்கு தென்(புலப்)படவில்லை

அதனால் உடன் அவர் தரையில் மண்டியிட்டு வணங்கி ஆண்டவரே இன்று இரவு எங்களுடைய பிள்ளைகளுடைய உணவிற்கு என்னசெய்வது என நான் தவித்து திகைத்து இருந்த வேலையில் இந்த ரூபாய் தாட்களை எனக்கு வழங்கினாய் இதனால் இன்று இரவு சமையல் செய்து பிள்ளைகளும் நானும் வயிறாற பசியாற சாப்பிடுவதற்கான வழிகாட்டிவிட்டாய் உன்னுடைய கருணையை என்னவென்று சொல்வது என மீண்டும் தரையில் விழுந்து வணங்கி அந்த ரூபாய்தாட்களை தன்னுடைய பையில் வைத்துகொண்டு வீட்டிற்கு புறப்பட்டு சென்றார்

இதனை கண்ணுற்ற மாணவன் ஐயா உங்களுடைய வழிகாட்டுதலினால் அந்த ஏழையை சீண்டி விளையாடவிருந்த என்னை தடுத்து அவருக்கு உதவுமாறு செய்து நல்வழி காட்டினீர்கள் ஐயா என நாத்தழுதழுக்க கூறினான்

ஞாயிறு, 2 ஜூன், 2013

சக மனிதர்களை மனிதாபமானத்தோடு நடத்திடவேண்டும்


முன்னொரு காலத்தில் அரசன் ஒருவனுக்கு வாரிசு இல்லாததால் தனக்கு பிறகு அந்த நாட்டை ஆளுவதற்கான ஒருநபரைஅரசனாக நியமிக்கவேண்டிய கட்டாய சூழ்நிலை உருவானது உடன் அவ்வரசன் தன்னுடைய நாடு முழுவதும் உள்ள இளைஞர்களில்" நமக்கு மேல் சக்தியுள்ள கடவுளை நேசிக்கவேண்டும் ","சக மனிதர்களை மனிதாபமானத்தோடு நடத்திடவேண்டும்!" ஆகிய நிபந்தனைகளுடன் கூடிய நேர்முகத்தேர்வை விருப்பபடும் இளைஞர்கள் கலந்து கொண்டு வெற்றிபெறுபவர்கள் அந்த அரசனுக்கு பின் அரசனாக பதவிஏற்கமுடியும் என அறிவிப்பு செய்தான் .

உடன் ஏராளமான இளைஞர்கள் இந்த தேர்வில் கலந்துகொள்ள தலைநகருக்கு வந்து சேர்ந்தார்கள் மிகவும் வறுமையில் வாடும் ஏழைஇளைஞன் ஒருவனும் அதே நேர்முகத்தேர்வில் கலந்துகொள்ள விரும்பினான் ஆனால் அவனுக்கு அணிந்து கொள்ள போதுமான நல்ல உடையோ தலைநகருக்கு செல்வதற்கு தேவையான பொருளாதார வசதியோ இல்லை இருப்பினும்அக்கம் பக்கத்தில் கெஞ்சி கூத்தாடி கடன்பெற்று நல்ல தரமான உடைகளை தயார்செய்து அனிந்து கொண்டு நெடுஞ்சாலை வழியாக சென்றுகொண்டிருந்தான்

அந்நிலையில் பிச்சைக்காரன் ஒருவன் "ஐயா! தரும பிரபு உண்ணுவதற்கு போதுமான உணவில்லை ஐயா! உடுத்துவதற்கும் தரமான உடையில்லை ஐயா!" என யாசித்தபோது உடன் தன்னுடைய கையலிருந்த பணம் முழுவதையும் அந்த பிச்சைகாரனிடம் கொடுத்தது மட்டுமில்லாமல் தான் அணிந்திரிந்திருந்த புதிய உடையையும் கழற்றி அந்த பிச்சைக்காரணிடம் அணிந்து கொள்ளுமாறு வழங்கிவிட்டு வழக்கமான தன்னுடைய பழைய ஆடையை அணிந்து கொண்டு ஆங்காங்கு உள்ள அன்ன சத்திரத்தில் பசியாறி கொள்ளலாம் என்று மனதை தேற்றிகொண்டு தலைநகரை நோக்கி நடந்து செல்ல ஆரம்பித்தான்

ஒருவழியாக தலைநகரை வந்த சேர்ந்த பின் நேர்முக தேர்விற்கு வந்துள்ள இளைஞர்களின் கூட்டத்தில் இவனும் வரிசையில் நின்று இவனுடைய முறைவரும்போது அரச சபைக்குள் நுழைந்தான்

முதலில் அரசனுக்கு தலைகுனிந்து வணக்கம் செய்தபின் நிமிர்ந்து பார்த்தபோது ஆச்சரியமாகிவிட்டது "சாலை யோரத்தில் என்னிடம் என்னுடைய புதிய உடையையும் பொருளையும் பெற்றுக்கொண்ட பிச்சைகாரனா, நீங்கள்! "என வினவியபோது "ஆம் !அதே பிச்சைகாரன்தான் நான் என்னுடைய நிபந்தனைகளை யார் மிகச்சரியாக பூர்த்தி செய்வார்கள் என அறிந்துகொள்ள நான் அரசனுடைய உடையில் வந்தால் நான் கேட்பதை மக்கள் அனைவரும் கொடுக்கு தயாராக இருப்பார்கள் ஆனால் உண்மையாக மனமாற யார் சகமனிதர்களுக்கு உதவிடுவார்கள் என கண்டுபிடிக்கமுடியாது"

" அதனால் பிச்சைகாரனாக மாறுவேடமிட்டு நாட்டிற்குள் உலாவந்தேன் "அந்த அரசன் பதில் கூறியதோடு மட்டுமல்லாது "நீஒருவன் மட்டுமே என்னுடைய நிபந்தனையை பூர்த்தி செய்துள்ளாய் அதனால் நீதான் எனக்குபிறகு இந்த நாட்டிற்கு அரசன் "என அந்த அரச சபையில் அறிவிப்பு செய்தான்.

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...