ஞாயிறு, 21 ஜூன், 2015

எந்தவொரு செயல் நடைபெற்றாலும் அதில் உள்ள நல்லதை மட்டும் பார்க்கும் மனப்பான்மை நமக்கு வரவேண்டும்


ஆப்ரிக்கா கண்டத்தில் உள்ள நாடுகளில் அரசன் ஒருவன் இருந்தான் அந்த அந்த அரசனுக்கு மிகநெருங்கிய நண்பன் ஒருவன் இருந்தான் அந்த நண்பன் எந்தவொரு நிகழ்வு ஏற்பட்டாலும் எல்லாம் நன்மைக்கே என நேர்மறையாகவே சிந்தித்து அவ்வாறே செயல்படுவார் ,சொற்களையும் கூறுவார் .

ஒருநாள் அந்த அரசன் தன்னுடைய நண்பனுடன் நாட்டிற்கு அருகிலுள்ள காட்டிற்கு வேட்டையாட சென்றார் அப்போது துப்பாக்கியானது தவறுதலாக அழுத்தியதால் அவருடைய இடதுகையின் கட்டைவிரல் துண்டித்துவிட்டது அந்நிலையில் அவருடைய நண்பன் எல்லாம் நன்மைக்கே பரவாயில்லை கட்டைவிரல் மட்டும்தான் துண்டிக்கபட்டது என கூறினார் உடன் அந்த அரசனுக்கு அதிபயங்கர கோபம் வந்து நான் என்னுடைய கையிலுள்ள கட்டைவிரல் போய்விட்டது என வலியால் துடித்து கொண்டிருக்கின்றேன் நீ அதை பொருட்படுத்தாமல் எல்லாம் நன்மைக்கே என்று கூறுகின்றாயா என கூறி அந்த நண்பரை சிறையில் அடைக்க செய்தார்

அதன்பின்னர் ஓராண்டு கழித்து அந்த அரசன்தூரத்திலிருந்த வேறொரு காட்டிற்கு தனியாக வேட்டையாட சென்றார் அப்போது அந்த காட்டில் வாழும் பழங்குடியின மக்கள் தங்கள் குலதெய்வத்திற்கு பலியிடுவதற்காக நாட்டில் வாழும் மனிதன் ஒருவனை தேடிக்கொண்டிருந்தனர் இந்த அரசன் கிடைத்ததும் அனைவரும் ஒன்றுகூடி இந்தஅசசனை பிடித்து வலுவான கயிற்றால் கட்டி இழுத்து சென்றனர் பின்னர் தங்களுடைய குலதெய்வத்தை கும்பிடுவதற்கான பூஜைகள் செய்யஆரம்பித்தனர்

அதன்பின்னர் இந்த அரசனை பலியிடுவதற்காக பிடித்து இழுத்துசென்று தண்ணீரை கொட்டி குளிப்பாட்டினர் இறுதியாக அவரை பலியிடுவதற்காக கத்தியை ஓங்கி வெட்டமுனையும் போது பூசாரி இவருடைய இடதுபுற கையில் கட்டைவிரல் இல்லாமல் இருப்பதை பார்த்து நிறுத்துங்கள் நாம் நம்முடைய குலதெய்வத்திற்கு முழுமையான மனிதனையே பலியிடவேண்டும் இவன் கைவிரல் துண்டிக்கபட்டு குறையுள்ள மனிதனாக இருக்கின்றான் அதனால் இவனை பலியிடகூடாது ஆகையினால் இவனுடைய கட்டினை அவிழ்த்து இவனை காட்டின் ஓரம் கொண்டுசென்றுவிட்டிடுங்கள் என கூறியதை தொடர்ந்து அவ்வாறே இந்த அரசனை உயிருடன் காட்டின் ஓரம் விட்டுசென்றனர்.

உயிர்தப்பித்தால் போதுமென ஓடோடி வந்த அந்த அரசன் அன்று வேட்டையாடும்போது நம்முடைய இடதுகை கட்டைவிரல் தவறுதலாக துண்டித்ததை நம்முடைய நன்பன் எல்லாம் நன்மைக்கே என கூறியதை தவறுதலாக எண்ணி சிறையில் அடைத்துவிட்டோமே என மனம் வருந்தி உடன் நேரடியாக சிறைக்கு சென்று நன்பனை விடுதலை செய்து நன்பா என்னை மன்னித்துவிடு உன்னை தவறாக நினைத்துவிட்டேன் என கூறினார்

இப்போது ம் அந்த நன்பன் எல்லாம் நன்மைக்கே என கூறினான் இப்போதும் ஏன் அவ்வாறு கூறுகின்றாய் என வினவியபோது அவ்வாறு நான் சிறையில் அடைக்கபடாமல் இருந்திருந்தால் உனக்கு பதிலாக என்னை அந்த பழங்குடியின மக்கள் பலியிட்டிருப்பார்கள் அல்லவா அதிலிருந்து நான் உன்னுடைய சிறை தண்டனையால் தப்பினேன் என கூறினான்

ஆம் எந்தவொரு செயல் நடைபெற்றாலும் அதில் உள்ள நல்லதை மட்டும் பார்க்கும் மனப்பான்மை நமக்கு வரவேண்டும்

பதிவுகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற

கருத்துகள் இல்லை: