நேர்முகத்தேர்விற்கான கேள்வி 1.ஒரு ஆளரவமற்ற காட்டில் அதிக மழைபொழிந்து கொண்டிருக்கின்ற இருண்ட இரவுவேளையில் தன்னந்தனியாக நெடுஞ்சாலை ஒன்றில் மகிழ்வுந்தை ஓட்டிசெல்கின்றீர் அப்போது பேருந்து நிறுத்தம் ஒன்றில் இப்போதே இறக்கபோகின்ற தோற்றத்தில் உள்ள ஒருவயதான பாட்டி, முன்பு ஒருநாள் ஆபத்தில் உங்களின் உயிர்காத்த நன்பன்ஒருவன் , உங்களுடைய வருங்கால மனைவி ஆகிய மூன்றுநபர்களும் பேருந்து ஏதேனும் அந்தவழியாக வருமாவென காத்திருப்பதை பார்க்கின்றீர் ஒரேயொருநபரை மட்டுமே உங்களுடைய மகிழ்வுந்தில் ஏற்றிசெல்லமுடியும் என்றநிலையில் இந்த மூவரில யாரை உங்களுடைய மகிழ்வுந்தில் ஏற்றிசெல்ல முடிவு செய்வீர்?
எனநீங்கள் கலந்துகொண்ட நேர்முக தேர்வில் உங்களிடம் கேள்வியை தேர்வாளர் எழுப்பினால் என்னமாதிரியான பதிலை இந்த கேள்விக்கு அளிப்பது
பதில்1. உடன் இப்போதே இறக்கபோகின்ற தோற்றத்தில் உள்ள வயதான பாட்டியையே முதலில் என்னுடைய மகிழ்வுந்தில் ஏற்றிசெல்வேன்
பதில்2.ஆபத்தில் உங்களின் உயிர்காத்த நன்பனை என்னுடைய மகிழ்வுந்தில் ஏற்றிசெல்வேன் ஏனெனில் ஆபத்தான நேரத்தில் என்னை காத்ததை போன்று கைமாறு செய்வதே நம்முடைய முதல் கடமையாகும்
பதில3.இதுபோன்ற பெண்ஒருத்தி வருங்காலத்தில் எனக்கு மீண்டும் கிடைப்பது அரிது என்பதால் வருங்கால மணைவியையே முதலில் என்னுடைய மகிழ்வுந்தில் ஏற்றிசெல்வேன்
ஆகிய மூன்று பதில்களில் ஒன்றினை நாமனைவரும் அளித்திடுவோம் ஆனால் நேர்முகத்தேர்வில் கலந்து கொண்டநபர் நேர்முகத்தேர்வாளரிடம் பின்வரும் வித்தியாசமான பதிலை அளித்தார்
மகிழ்வுந்திலிருந்து கீழே இறங்கி அதனை இயக்குவதற்கான சாவியை உயிர்காத்த நண்பனிடம் வழங்கி உடன் அந்த நண்பனையே மகிழ்வுந்தை ஓட்டிசெல்லும்படியும் கூடவே இப்போதே இறக்கபோகின்ற தோற்றத்தில் உள்ள வயதான பாட்டியை மகிழ்வுந்தில் ஏற்றி செல்லுமாறும் கூறுவேண் மேலும் நான் என்னுடைய வருங்கால மனைவியுடன் அடுத்த பேருந்து ஏதும் வருமா என மகிழ்ச்சியாக காத்திருப்பேன் .
அடுத்ததாக கேள்வி2 நேர்முகதேர்வில் கலந்து கொண்டநபர்முன்பு குடிப்பதற்கான காஃபி டம்ளர் ஒன்று வைக்கபட்டது பின்னர் அந்த நபரிடம் உங்கள்முன்பு உள்ளதுஎன்னவென ஆங்கிலத்தில் what is before you?என்றவாறு நேர்முகத்தேர்வாளர் கேள்வியொன்றை எழுப்பினார்
உடன் நேர்முகத்தேர்வில் கலந்து கலந்துகொண்ட நபர் Tea என பதிலிறுத்தார் உடன் அவர்கூறிய பதில் சரியென நேர்முக்ததேர்வாளரால் ஏற்றுகொள்ளபட்டது ஏனெனில் ஆங்கில அகரவரிசை எழுத்துகளில் u எனும் எழுத்திற்கு முன்பாக வருவது T எனும் எழுத்து ஆகும்
அதற்கடுத்ததாக நேர்முக்ததேர்வின் கடைசி கேள்வியாகதேர்வாளர்
கேள்வி3.நம்முன் உள்ள இந்த மேஜையின் சரியான மையபகுதிஎதுவென What is the exact position of the center of this table ? என்றவாறு ஆங்கிலத்தில் வினவினார் அதற்கு தேர்வில் கலந்து கொண்டவர் 'b' என பதிலிறுத்தார் உடன் நேர்முகத்தேர்வாளர் நீங்கள் இந்த பணிக்காக தெரிவுசெய்யபட்டுவிட்டீர் வாழ்த்துகள் என பராட்டினார் ஏனெனில் table எனும் சொல்லில் மையத்தில் 'b' எனும் எழுத்தே உள்ளது .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக