ஞாயிறு, 7 ஜூன், 2015

எந்தவொரு நிகழ்வையும் நமக்கு சாதகமாக மாற்றி பயனுள்ளதாக ஆக்கிகொள்வதே சிறந்த வழிமுறையாகும்


இந்திய கிராமம் ஒன்றில் ஒரு பணக்கார வீட்டில் வேலைசெய்திடும் வேலைக்காரன் தன்னுடைய முதலாளியின் வீட்டில் பயன்படுத்துவதற்கான தண்ணீரை தூரத்திலிருந்த ஒரு ஓடையிலிருந்து இரண்டு மண்பாணைகளில் நிரப்பி அவைகளை ஒரு நீண்ட தடியின் இருபுறமும் கட்டிதொங்கவிட்டு தோளில் தூக்கி கொண்டு வந்து சேர்ப்பது வழக்கமாகும்.

அவ்வாறு இரு பாணைகளில் தண்ணீரை தோளில் சுமந்துவரும்போது ஒரு பக்கத்திலிருந்த பாணையில் ஏதோவொரு காரணத்தால் கீரல்ஆகிவிட்டது அதனால் அந்த கீரலின்வழியாக பாணையிலிருந்த தண்ணீரானது வழிநெடுக தரையில் ஒழுகி வீணாகி கொண்டே வந்து கடைசியில் முதலாளியின் வீட்டிற்கு வரும்போது அரை பாணை அளவிற்கு மட்டுமே மிஞ்சியிருக்கும்.

மற்றொரு பாணையின் தண்ணீர் வீணாகமல் முழுவதுமாக கொண்டுசென்று சேர்ந்துவிடும் இவ்வாறான வழக்கமான நடைமுறையால் ஓட்டையாகத பாணையானது ஓட்டையான பாணையை பார்த்து “நான் உண்மையாக இந்த முதலாளிக்காக உழைத்து முழுமையாக தண்ணீரை கொண்டுவந்துசேர்க்கின்றேன். நீயோ கீரல்விழுந்து பாதிதண்ணீரை கொண்டுவரும் வழியிலேயே காலிசெய்துவிடுகின்றாய் பார்த்தாயா” என நக்கலாக கேலிசெய்து பேசியது அவ்வாறான கேலியான பேச்சினை கேட்டதும் கீரல் விழந்த பாணைக்கு மிகவும் வெட்கமாக போய்விட்டது. அதனால் அந்த கீரல் விழந்த பாணையாநது பணியாளரிடம் “ஐயா! என்னுடைய உடலில் கீரல் ஆகிவிட்டது அதனால்

நீங்கள் சுமந்து செல்லும் தண்ணீரில் பாதியை வழிநெடுக கீழே வீணாக சிந்திகொண்டேவந்து வீணாக்கிவிடுகின்றேன் அதனை தொடர்ந்து நம்முடைய முதலாளியிடம் என்னுடைய திறமை யின்மையால் உங்களுக்கு கெட்டபெயர் வாங்குமாறு ஆகிவிட்டது அதனால் முதலில் என்னை மன்னித்து கொள்ளுங்கள் ஐயா!” என கூறியது

உடன் “அடடா ஏன் நீ என்னிடம் மன்னிப்பு கோருகின்ராய் நீ வழிநெடுக தண்ணீரை சிந்துவதை பார்த்து அந்த பக்கத்தில் அழகிய பூவிதைகளை தூவி தற்போது அழகழகான பூக்கள் பூத்து குலுங்குகின்றன அந்த பூக்களை பறித்து நம்முடைய முதலாளி வீட்டம்மா தலையில் வைத்துகொள்ளவும் படங்களில் மாலை கட்டி அணிவிக்கவும் பயன்படுத்திகொள்ளபடுகின்றது தெரியுமா? எந்தவொரு நிகழ்வையும் நமக்கு சாதகமாக மாற்றி பயனுள்ளதாக ஆக்கிகொள்வதே சிறந்த வழிமுறையாகும். இதற்காக வருத்தபடாதே!” என ஆறுதல் கூறினான் அந்த வேலைக்காரன்

ஆம் நாமும் நம்முடைய வாழ்வில் நடைபெறும் எந்தவொரு நிகழ்வையும் நமக்கு பயனுள்ளதாக மாற்றியமைத்து பயன்பெறுவோம் என உறுதிகூறுவோம்

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...