ஞாயிறு, 18 அக்டோபர், 2015

நம்மில் பலரும் கண்முன்உள்ள முன்தோற்றத்தை மட்டும் வைத்து தவறாக முடிவுசெய்துவிடுகின்றோம். அதன் பின்புற நிகழ்வுகளைக் கவனிக்க த்தவறிவிடுகின்றோம்


என்னுடைய தந்தைக்கு ஒருகண்மட்டும் இருந்தது. மற்றொருகண் குழிவிழுந்து பள்ளமாகப் பார்ப்பதற்கு மிகக் கோரமாக இருக்கும். இந்நிலையில் சிறுவயதில் நான் படிக்கும் பள்ளிக்கு என்னைக் கொண்டுவந்துவிட்டு செல்வதும்; பின்னர் மாலை என்னை அழைத்துவருவதுமாக இருந்தார். அவருடைய முகதோற்றத்தைப் பார்த்த எங்களுடைய பள்ளி ஆசிரியர்களும் , உடன்பயிலும் மாணவர்களும் ,கிண்டலும் கேளியுமாகப் பேசுவதை கேட்பதற்குச் சகிக்காமல் என்னுடைய தந்தையிடம் அவ்வாறான நிகழ்வை கூறி அவரிடம் முகம்கொடுத்துப் பேசத் தயங்கிவனாக வெறுத்து தூரவிலகிச் செல்ல ஆரம்பித்தேன்.

அதனால், என்னுடைய தந்தை என்னைத் தூரத்து நகரித்திலிருந்த விடுதியுடன் கூடிய பள்ளியில் சேர்த்து படிக்கவைத்தார் . நானும் படித்து நல்ல பணியில் அமர்ந்தேன். எனக்குத் திருமனமும் ஆகிவிட்டது. தனியாகப் புதிய வீடுஒன்றினை அருகிலிருந்த நகரத்தில் வாங்கி அதில் என்னுடைய தந்தை தவிர்த்த குடும்பமாகப் பிள்ளைகளுடன் வாழ ஆரம்பித்தேன்.

நீண்டநாட்களுக்குப் பிறகு என்னுடைய தந்தை பேரப்பிள்ளைகளைக் காண நாங்கள் வாழும் எங்களுடைய வீட்டிற்குவந்தார் . எங்களுடைய பிள்ளைகள் அவருடைய முகதோற்றத்தைக் கண்டு பயந்து வெறுத்துத் தூரமாக விலகிஓடியதைக் கண்ணுற்ற நான் அவரிடம், “ நீயார்? யாரைக் கோட்டுகொண்டு எங்களுடைய வீட்டிற்குள் வந்தீர்? உடன் வீட்டை விட்டு வெளியே செல்லுங்கள்!” என கோபமாகத் தீட்டினேன்.

அதற்கு அவரும் “தவறான முகவரிக்கு வந்துசேர்ந்துவிட்டேன்போலிருக்கின்றது! சரி தம்பி! நான் சென்று வருகின்றேன்.” என விடைபெற்று சென்றார்.

சிறிதுநாள்கழித்துத் தற்செயலாக என்னுடைய சொந்த ஊருக்கு சென்றேன். அப்போது எங்கள்வீட்டிற்கு அருகிலிருந்த வீட்டுகாரர் என்னுடைய தந்தை இறந்து போய்விட்டதாகவும் நான் வந்தால் அவர் எழுதிய கடிதம் ஒன்றினை என்னிடம் கொடுத்திடுமாறு கூறியதாகவும் கூறி என்னிடம் ஒருகடிதத்தினைக் கொடுத்தார் .

அந்த கடிதத்தில் “அன்பு மகனுக்கு நீ சிறுவயதாக இருந்தபோது நடந்த விபத்து ஒன்றில் உன்னுடைய ஒருகண்ணில் அடிபட்டு பார்வை இழந்து போய்விட்டது. அப்போது, “வேறொருவரின் கண் தானமாகக் கிடைத்தால் அதில் பொருத்தி பழையநிலைக்குக் கொண்டுவரலாம்,” என மருத்துவர் அறிவுரைகூறியதைத் தொடர்ந்து; நான் வயதானவன் என்னுடைய கண் உனக்குப் பயன் படட்டும்;எனத் தானமாக வழங்கி, அந்தக் கண் உனக்குப் பொருத்தபட்டு உன்னுடைய கண்ணின் பார்வை பழையநிலையை அடையசெய்தேன். அதனால் மற்றவர்களின் கின்டலுக்கும்கேலிக்கு ஆளானாலும் பரவாயில்லை நம்முடைய மகனின் கண்பார்வையும் முகமும் பழைய நிலைக்கு ஆனதைக் கண்டு மகிழ்ச்சியுடன் அதனை ஏற்றுக்கொண்டேன். தொடர்ந்து தற்போது என்னுடைய பெயரில் இருக்கும் இந்த வீடு நிலபுலன்கள் அனைத்தும் உன்னுடைய பெயருக்கு பட்டா மாற்றிவிட்டேன் அதற்கான ஆவணங்களையும் பக்கத்துவீட்டுகாரரிடம் ஒப்படைத்துள்ளேன் ;அதனையும் பெற்று குடும்பத்துடன் பிள்ளைகளுடன் மகிழ்ச்சியுடனும் வாழ்வாங்கு வாழ்வாயாக!” எனமுடிந்திருந்தது.

“அய்யோ !இவ்வாறு தியாகம் செய்து என்னைக் காத்திட்ட என்னுடைய தந்தையை நான் இவ்வளவு கோபமாகld திட்டி வெறுத்து ஒதுக்கிவிட்டேனே!” என அப்படியே மிகமனவருத்த்துடன் சிறிதுநேரம் அமர்ந்துவிட்டேன்.

இதேபோன்றே நம்மில் பலர் கண்முன்உள்ள முன்தோற்றத்தை மட்டும் வைத்து தவறாக முடிவுசெய்துவிடுகின்றோம். அதன் பின்புற நிகழ்வுகளைக் கவனிக்க த்தவறிவிடுகின்றோம் என்பதே நடப்பு நிலையாகும்

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...