திங்கள், 16 நவம்பர், 2015

உண்மையான அன்பிற்கு எந்தவொரு எல்லையுமில்லை


பரபரப்பான காலைநேரத்தில் 8.30 மணிக்கு ஒருமருத்துவமனையின் ஒருஇளைஞன் அவசரமாக வந்துதன்னுடைய கட்டைவிரலில் அடிபட்டதற்கு தேவையான கட்டினை கட்டுமாறு கோரியதை தொடர்ந்து மருத்துவரும் காயத்திற்கு போதுமான கட்டினையும் மருந்து மாத்திரைகளையும் வழங்கி அவைகளை எவ்வாறு எவ்வெப்போது விழங்கவேண்டும் என ஆலோசனை கூறி அந்த இளைஞன் ஏன் பரபரப்பாக இருக்கின்றான் என்றும் உடனடியாக எங்கு செல்லவிரும்புகின்றான்என்றும் வினவினார்

அதற்கு அந்த இளைஞன் சரியாக 9 மணிக்கு கொஞ்ச தூரத்திலுள்ள மருத்துவமனையில் உள்நோயாளியாக இருக்கும் தன்னுடைய மனைவியுடன் சேர்ந்து காலை சிற்றுண்டி அருந்துவதை வழக்கமாக செய்துவருவதாகவும் அதனால்தான் என பதிலிருத்தான் தொடர்ந்து மருத்துவர் அந்த இளைஞனின் மனைவிக்கு என்ன நோய் என வினவியபோது பயங்கர எனும் நோயால் பாதிக்கப்பட்டு உள்நோயாளியாக கடந்த ஒருவருடமாக அந்த மருத்தவமனையில் இருப்பதாகவும் தனக்கு எந்தபணி இருந்தாலும் காலையிலும் இரவிலும் தன்னுடைய மனைவியுடன் சேர்ந்த உணவு அருந்துவது வழக்கமான செயலாகும் என்றும் கூறினான் தொடர்ந்து உங்களுடைய மனைவிக்குதான் உங்களை அடையாளம் தெரியாதே என க்கூறியதை தொடர்ந்து

அவர் என்னுடைய மனைவி என்று எனக்கு தெரியுமல்லவா அதனால் தான் அவ்வாறு கடைபிடித்து வருகின்றேன் உண்மையான அன்பிற்கு எந்தவொரு எல்லையுமில்லையல்லவா எனக்கூறி விடைபெற்று அவசரமாக சென்றார் அந்த இளைஞன்.

நாம் அனைவரும் மற்றவர்களின் உண்மையான நிலையை அறிந்துகொள்ளாமல் அவர்களுக்கு மனதளவில் துன்பம் கொடுப்பதில் வல்லவர்களாக இருக்கின்றோம்


தொடர் வண்டி ஒன்று பெரிய நகரத்திலிருந்து தன்னுடைய பயனத்தை துவங்கியது அதில் ஏராளமான பயனிகள் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மிகமுக்கியமாக தத்தமது பணிக்கு சென்று பணிமுடிந்து வீடுதிரும்புவோர்கள் அதிகஅளவு இருந்தனர் இளம் கணவன் மனைவிமார்களும் கல்லூரியில் பயிலும் இளைஞர்களும் அந்த பெட்டியில் கூட்டமாக பயனம் செய்தனர் அந்த பெட்டியில் ஒருவயதான மனிதனும் 30 வயதுடைய இளைஞனும் சாளரத்திற்கு அருகிலுள்ள இருக்கையில் அமர்ந்திருந்தனர் .

அந்த இளைஞன் அங்கே பாருங்கள் அப்பா அனைத்து மரங்களும் செடிகொடிகளும் வேகமாக ஓடிக்கொண்டிருக்கின்றன என்று தன்னுடைய தந்தையிடம் மிகவும் மகிழ்ச்சியோடு சத்தமிட்டு கூறிக்கொண்டிருந்தான் அதனை கண்ணுற்ற அருகிலிருந்தோர் அனைவரும் என்ன இந்த இளைஞன் பித்துபிடித்தவன் போலும் அதனால்தான் கூக்குரலிடுகின்றான் என தங்களுக்குள் முனுமுனுத்தனர் சிறிதுநேரம் கழித்து சாரல்மழை துவங்கியது அதனை கண்ணுற்ற அந்த இளைஞன் மேலும் அதிக மகிழ்ச்சியுடனும் சத்தத்துடனும் அப்பா அப்பா இப்போது பாருங்களேன் என்ன அருமையாக மழை பொழிகின்றது என மகிழ்ச்சி கூச்சிலிட்டான்

இதனை கண்ணுற்ற மற்ற பயனிகள் அந்த பெரியவரிடம் தே பெரிசு உங்களுடைய பித்தாங்குளி பையனை அடக்கிவையுங்கள் இந்த சாளரத்தை முதலில் மூடிவிடுங்கள் எங்களுக்கு எல்லாம் ஒரே தொந்தரவாக இருக்கின்றது வாயை மூடிக்கொண்டு இருக்கசொல்லுங்கள் என சன்டைபிடிக்க ஆரம்பித்தனர்

உடன் பெரியவரும் ஐயாமார்களே அம்மாமார்களே சிறிது மன்னித்துகொள்ளுங்கள் எனக்கூறினார் தொடர்ந்து அந்த இளைஞனுக்கு சிறுவயதிலிருந்து கண்பார்வை இல்லாமல் இருந்துவந்தது கடந்தவாரந்தான் அவர்களுடைய தாய் இறந்தபோது அவருடைய கண்களை அறுவைசிகிச்சை வாயிலாக இந்த இளைஞனுக்கு பொருத்தப்பட்ட பார்வை திரும்பியது தற்போதுதான்முதன்முதல் மருத்துவமனையிலிருந்து தங்களுடைய வீட்டிற்கு திரும்பி வருகின்றோம் எனக்கூறி தங்களுடைய இருக்கையிலிருந்து எழுந்து அடுத்த பெட்டிக்கு தன்னுடைய மகனை அழைத்துசென்றார்

நாம் அனைவரும் மற்றவர்களின் உண்மையான நிலையை அறிந்துகொள்ளாமல் அவர்களுக்கு மனதளவில் துன்பம் கொடுப்பதில் வல்லவர்களாக இருக்கின்றோம் என்பதே எதார்த்தமான உண்மைநிலவரமாகும்.

திங்கள், 9 நவம்பர், 2015

இவ்வுலகில் வாழும் நாம் அனைவரும் சமம்


முன்னொரு காலத்தில் முதிய துறவிஒருவர் பாலைவணத்தில் அமர்ந்து தவம்புரிந்து கொண்டிருந்தார். அந்நிலையில் அவர் சுற்றுசூழலையே மறந்திருப்பார் அதனால் எதுநடந்தாலும் அதில் அவருடைய கவணம் செல்லாது .

அப்போது அந்த நாட்டினுடைய அரசன் அந்த வழியே தன்னுடைய படையுடன் சென்றுகொண்டிருந்தார் . பொதுவாக அரசனை பார்த்தவுடன் நாட்டுமக்கள் அனைவரும் தாம் எந்த பணியை செய்து கொண்டிருந்தாலும் அதனை அப்படியே நிறுத்தம்செய்துவிட்டு எழுந்துநின்று தலைகுனிந்து அரசனுக்கு மரியாதை செய்வது வழக்கமான செயலாகும் .

ஆனால்அவ்வாறு எதுவும் செய்திடாமல் இந்த முதிய துறவி அமர்ந்திருந்ததை கண்ணுற்ற அரசன் தன்னுடைய மந்திரியை அழைத்து "இந்த துறவி ஏன் அவ்வாறு மரியாதை செய்யாமல் அமர்ந்துள்ளார் " என விசாரித்து வருமாறு உத்திரவிட்டார் .உடன் மந்திரியும் அரசன் உத்திர விட்டவாறு அந்ததுறவியிடம் சென்று "நம்முடைய நாட்டு அரசன் இந்த வழியே செல்லும்போது நம்முடையஅரசருக்கு எழுந்துநின்று ஏன் குனிந்து வணங்கவில்லை " என வினவினார்

அந்த துறவியானவர் "ஒருநாட்டின் அரசனுக்கு குடிமக்கள் அனைவரும் அடிமையன்று. அந்நாட்டின் குடிமக்களை சரியாக பாதுகாத்து அவர்களின் குறைநிரைகளை சரிசெய்வதே அரசனுடைய பணியாகும். இவ்வுலகில் அரசனும் சாதாரணகுடிமகனும் சரிசமமானவர்களே எவ்வாறு எனில் இறந்தபின்னர் அனைவரையும் மண்ணில் குழிதோண்டி புதைத்தபின் சிறிதுகாலம் கழித்து தோண்டிபார்த்தால் அனைவருடைய எலும்புகளும் ஒரேமாதிரியாகத்தான் இருக்கும் அதனால் அரசன் உயிருடன் இருக்கும்வரை அவருக்கு கிடைத்த அரசபதவியை கொண்டு மற்றவர்களுக்கு தொந்திரவு கொடுத்திடாமல்பொதுமக்கள் அனைவருக்கும் நல்லசெயலைசெய்து வாழச்சொல்லுங்கள் !" என அந்த துறவி அறிவுரை கூறினார்.

நாம் எதையும் கொண்டுவரவில்லை அதனால் நாம் எதையும் கொண்டுசெல்லமுடியாது


உலகில் ஏராளமான நாடுகளை வெற்றிகொண்டு தன்னுடைய சொந்த நாட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்த மாபெரும் பேரரசன் அலெக்ஸான்டர் உடல்நிலைசரியில்லாமல் படுத்தபடுக்கையாகிவிட்டார் தன்னுடைய நாட்டிற்கே திரும்புவோமா என்ற சந்தேகம் அவருக்கு வந்து விட்டது . அந்தளவிற்கு அவருடைய உடல்நிலை மோசமாகவிட்டது

ஒருவழியாக அவருடைய நாட்டிற்கு வந்துசேர்ந்தவுடன் தன்னுடையஅமைச்சரை அருகில் அழைத்து தான் இனிஉயிருடன் இருக்கபோவதில்லை அதனால் தான் இறந்தவுடன் தன்னுடைய இருவிருப்பங்களைமட்டும் செயல்படுத்திடுமாறு வேண்டிக்கொண்டார் அவருடைய அமைச்சரும் அவ்வாறே செய்வதாக வாக்களித்தார்.

"முதல் விருப்பமாக தான் இறந்தபின் தன்னுடைய உடலை சுடுகாடுநோக்கி எடுத்துசென்றிடும் வழிமுடிவுவரை தான் வெற்றிகொண்ட நாடுகளில் இருந்துகொண்டுவந்த அனைத்து பொன் வெள்ளி நாணயங்கள் ஒன்றைகூட கையிருப்பில் வைத்திடாமல் அனைத்தையும் கீழே கொட்டிகாலிசெய்துவிடவேண்டும் ஏனெனில் ஒரு ரூபாய்கூட என்னோடு நான் எடுத்து செல்லமுடியாது"

"இரண்டாவதாக என்னுடைய புதைகுழியில் என்னுடைய கைகளை திறந்துவைத்தவாறு வைத்திடவேண்டும் ஏனெனில் நான் பிறக்கும்போது கைகளில் எதையும் எடுத்துவரவில்லை அவ்வாறே நான் இறந்தபின்னரும எந்தவொருபொருளையும் கைகளில் எடுத்தசெல்லவில்லை என அனைவருக்கும் தெரியவேண்டும் " என்றவாறு அவருடைய விருப்பத்தினை கூறிமுடித்தவுடன் அவருடைய உயிரும் அவருடைய உடலைவிட்டு பிரிந்தது.

நீதி நாம் என்ன சம்பாதித்தாலும் வெற்றிகொண்டாலும் நம்மோடு ஒன்றுகூட கொண்டுசெல்லமுடியாது என்பதே உண்மைநிலையாகும்.

திங்கள், 2 நவம்பர், 2015

எந்தவொரு செயலையும் முழுமனதோடு ஈடுபாட்டுடன் செய்வதே சிறந்தது


ஒரு போக்கிரியும் ஒரு சாமியாரும் ஒரு கிராமத்தில் அருகருகே குடியிருந்தனர். சாமியார் எப்போதும் போக்கிரியை பற்றியே எண்ணிக்கொண்டு மந்திரத்தை உச்சரித்துகொண்டிருப்பார்.

போக்கிரியோ எப்போதும் சாமியாரைபோன்று தான் வாழ முடியவில்லையே என எப்போதும் அந்த சிந்தனையிலேயே இருந்துகொண்டு தன்னுடைய பணியை செய்துவருவது வழக்கமாகும்.

ஒருசமயம் அந்தகிராமத்தில் மிகக்கடுமையான புயல் இடியுடன் கூடிய பெரியஅளவு மழை பொழிந்தது. அதனால் அவ்விருவரும் குடியிருந்த கிராமப் பகுதிமுழுவதும் இரவோடு இரவாக வெள்ளத்தில் அடித்துச் செல்ல ஆரம்பித்தது. அதனால் அவர்கள் இருவரும் அந்த வெள்ளப் பெருக்கால் இறந்துவிட்டனர்

. தொடர்ந்து இருவருடைய உயிர்களும் இறப்பிற்கான கடவுளின் முன் கொண்டுசெல்லப்பட்டது. உடன் அவர் போக்கிரியின் உயிரை சொர்கத்திற்கும் ,சாமியாரின் உயிரை நரகத்திற்கும் செல்லுமாறு தீர்ப்புகூறினார்.

உடன் சாமியாரின் உயிரானது ஐயோ! ஐயய்யோ! இது அநீதி! என வாயிலும் வயிற்றிலும் அடித்துகொண்டது. உடன் இறப்பிற்கான கடவுளானவர் அந்த சாமியாரின் உயிரை அமைதியாக இருக்குமாறு கூறி உண்மை நிலவரம் என்னவென இறப்பிற்கான கடவுளின் கூறஆரம்பித்தார்.

சாமியாரின் வாயானது மந்திரச்சொற்களை கூறினாலும் அவருடைய எண்ணம் முழுவதும் போக்கிரியின் செயலையை நினைத்து கொண்டிருந்தது. அதனால் அவர்முழுஈடுபாட்டுடனும் மந்திரம் கூறவில்லை. ஆனால் போக்கிரியோ எப்போதும் சாமியார் கூறும் மந்திரத்தை காதில் கேட்டு மனதிற்குள் உச்சரித்துகொண்டேயிருப்பார் செயல்மட்டும் இயந்திரத்தனமாக செய்துகொண்டுஇருப்பார். அதனால் அவர் முழுமனதோடு மந்திரத்தை எப்போதும் உச்சரித்து கொண்டேயிருந்ததால் அவருக்கு சொர்க்கமும், சாமியாருக்கு நரகமும் கிடைத்தன என விவரங்களை கூறினார்.

நாம் அனைவரும் நம்முடைய செயல்கள் அனைத்தையும் முழுமனதோடு ஈடுபாட்டுடன் செய்வதே சிறந்ததுஎன இதன்மூலம் அறிந்துகொள்க.

தற்போதைய சமூதாய நிலை


பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் அனைவரும் நீதி ஒழுக்கம் ஆகியவற்றை பின்பற்றுவதற்காக கண்டிப்பாக வாரம் ஒருநாள் நீதிபோதனை வகுப்பு நடைபெறும். அதில் பல்வேறு நீதிக்கதைகளை கூறி மாணவர்கள் அனைவரும் நல்லொழுக்கங்களை பின்பற்றிடுமாறு அறிவுறுத்தபடுவார்கள்.

அவ்வாறானதொரு நீதிபோதனை வகுப்பில் ஒருமாணவன் தன்னுடைய தகப்பனாரானவர் தன்னிடம் தன்னுடைய தாய் பற்றிய கதையொன்றை கூறியதாக கதைகூறஆரம்பித்தான்.

அவர்களுடைய தாய் கடற்படையில் சிறந்த விமானியாக இருந்தார் ஒருசமயம் அவர் பயனித்த கப்பற்படையின் போர்விமானம் போதுமான எரிபொருள் இல்லாததால் கடற்கரையோர மணலில் சென்று தரையிரங்கியது. அப்போது கைவசம் ஒருபாட்டில் விஸ்கி, கைத்துப்பாக்கி ,கூர்மையான கத்தி ஆகிய மூன்றுமட்டுமே இருந்தன. உடன் அவர் பாட்டில் விஸ்கி முழுவதும் குடித்துமுடித்தார். பின்னர் அருகில் இருந்த கிராமமக்களை தன்னுடைய கைத்துப்பாக்கியிலிருந்த குண்டுகள் முழுவதும் தீரும்வரை சூட்டுவீழ்த்தினார். அதற்கடுத்ததாக தன்னுடைய கையிலிருந்த கூர்மையான கத்தியின் இருமுனையும் மழுங்குமளவிற்கு அருகிலிருந்த கிராமமக்களை வெட்டி வீழ்த்தினார் இறுதியாக பசிமயக்கத்தில் கடற்கரையோரம் சாய்ந்துவிட்டார்

அந்நிலையில் அவர்பணிபுரிந்துவந்த கப்பற்படையின் சகவீரர்கள் உடன் பணிபுரிந்த படைவீரரையும் விமானத்தையும் நீண்டநேரமாகியும் கானோமே என அவரை தேடிபிடித்து அழைத்து சென்று அவருடைய உயிரை காத்தனர். அதனால் உங்களுடைய தாய் விஸ்கி குடித்திருக்கும்போது மட்டும் அவருடைய அருகே செல்லாதே என என்னுடைய தந்தை அடிக்கடி என்னிடம் கூறுவர் என அந்த மாணவன் கூறினான்.

நம்முடைய தமிழ்நாட்டு நிலைகூட அவ்வாறு தான் உள்ளது அனைவருக்கும் சாராயம் மட்டும் எளிதாக கிடைத்திடுகின்றது அதன்மூலம் தமிழ்நாட்டில் வாழும் அனைவரும் தத்தமது சம்பாதிப்பயையும் உடல்நலத்தையும் ஒருங்கே இழப்பதற்கானசூழலும் வளமாக உள்ளன.

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...