திங்கள், 30 ஜனவரி, 2017

நிகழ்விற்கு காரணம்அவரவர்கள் வாழும் சூழலே


ஒரு காட்டில் இரு கிளிகள் கணவன் மனைவியாக ஒரு மரத்தில் கூடுகட்டி வாழ்ந்துவந்தன அந்த கூட்டில் முட்டையிட்டு இரு கிளிகுஞ்சுகள் உருவாகியதை தொடர்ந்து அவ்விரண்டு பெற்றோர் கிளிகளும் தினமும் பகல் முழுவதும் காடுகளில் பறந்து திரிந்து தங்களுடைய பிள்ளைகளுக்கு தேவையான உணவினை தேடிபிடித்து கொண்டுவந்த ஊட்டி வளர்த்துவந்தன அவ்வாறு தாங்கள் இரைதேட செல்லும்போது பத்திரமாக இருக்குமாறு தம்முடைய குஞ்சுகளுக்கு அறிவுரை கூறி செல்வது வழக்கமான செயலாக இருந்துவந்தது இந்நிலையில் இந்த கிளிகளின் போக்கினை அறிந்து கொண்ட வேடன் ஒருவன் பெரிய கிளிகள் இரண்டும் காடுகளில் உணவினை தேட புறப்பட்டபின்னர் கிளிக்குஞ்சுகள் இரண்டையும் மடக்கி பிடித்து எடுத்து சென்றான் அப்போது ஒரு கிளிக்குஞ்சு மட்டும் எப்படியோ தப்பி பிழைத்து ஓடிச்சென்றுவிட்டது அதனால் மற்றொன்றை மிகபத்திரமாக வீட்டிற்கு கொண்டுவந்த கூண்டு ஒன்று செய்து அதில் வைத்து வளர்த்து வந்தான் அந்த கிளிக்குஞ்சும் வளர்ந்து அவர்களுடன் பேசி பழக ஆரம்பித்தது தப்பித்த மற்றொன்று காடுகளில் அலைந்து திரிந்து அருகிலிருந்த ஆசிரமத்தின் சோலையில் குடியேறி அமைதியாக அவர்களின் நல்ல பழக்கவழக்கங்களை பின்பற்றி சுதந்திரமாக வாழ்ந்துவந்தது இந்நிலையில் வழிபோக்கன் ஒருவன் வேடன் வீட்டின் திண்ணையில் கால்நடையாக நடந்து வந்த களைப்பாறுவதற்காக உட்கார்ந்தபோது உடன் கூண்டில் இருந்த இளைய கிளியானது "முட்டாள் இங்கு ஏன்டா வந்தாய் நான் உன்னுடைய குரல்வலையை கடித்து குதறிவிடுவேன் எழுந்துபோடா" என மிரட்டியது இதனை கேள்வியுற்றதும் அந்த வழிபோக்கன் உடன் களைப்பாறுதலை அப்புறம் பார்த்து கொள்ளலாம் என எழுந்து சென்றான் அதன் பின்னர் அந்த வழிபோக்கன் ஆசிரமத்திற்கு அருகே வந்தபோது "வாருங்கள்ஐயா வணக்கம் ஐயா இந்த மரநிழலில் நீங்கள் நடந்து வந்த களைப்பை ஆற்றுக இங்குள்ள சோலைகளில் உங்களுக்கு பிடித்தமான கணினிகளை உண்டு பசியாறுக இங்கிருக்கும் சுனையின் நீரினை அருந்தி தாகத்தை போக்குக" என முகமலர்ந்து வரவேற்புஅளித்த இளைய கிளியை கண்ணுற்ற அந்த வழிபோக்கன் மிகவும் ஆச்சரியத்துடன் உன்னை போன்றே வேடனிடத்தில் இருக்கும் கிளிமட்டும் எவ்வாறு கரடுமுரடாக திட்டுகின்றது என வினவியபோது அவரவர்கள் வாழும் சூழலே இவ்வாறான நிகழ்விற்கு காரணம் என இந்த இளைய கிளிக்கூறியது

செவ்வாய், 24 ஜனவரி, 2017

ஒரு கிராமத்து விவசாயியும் அவருடைய மனைவியும்


விவசாயி ஒருவர் எப்போதும் தன்னுடைய மனைவியை பார்த்து நீ சோம்பேறி காலகாலத்தில் அந்தந்த வேலையைய விரைவாக முடிப்போம் என்றில்லாமல் வீட்டிலேயே சாப்பிடவேண்டியது அதன்பின்னர் தூங்க வேண்டியது என்றுதான் பொழுதை போக்குகின்றாயே தவிர உருப்படியாக எதையும் செய்வதே இல்லை சோம்பேறி என திட்டிகொண்டே இருப்பார் இதனால் கோபமுற்ற அவருடைய மனைவி நீங்கள் தவறாக எண்ணிவிட்டீர்கள் நாளை ஒரு நாள் மட்டும் நீங்கள் வீட்டிலிருந்து எனக்கு பதிலாக என்னுடைய பணியையும் உங்களுடைய பணியை உங்களுக்கு பதிலாக நானும் மாற்றி பார்த்திடுவோம் அதன்பின்னர் யார் சோம்பேறி என முடிவுசெய்திடுக என சவாலுக்கு தன்னுடைய கணவனை அழைத்தார் அதனை தொடர்ந்து அந்த விவசாயியும் மிகமகிழ்ச்சியாக அந்த சவாலை ஏற்றுகொண்டு மறுநாள் அதன்படி அவர் வீட்டிலும் அவருடைய மனைவி வயல்வெளியிலும் மாறி பணிபுரிய சென்றனர் அந்த விவசாயி முதலில் பசுமாட்டிலிருந்து பாத்திரத்தில் பால்கறப்பதற்கு முயன்றபோது அந்தபசுவானது அவரை எட்டி உதைத்து தள்ளியது சரிதான் என வீட்டிற்கு தேவையான தண்ணீரை கிணற்றிலிருந்து இறைத்திடலாம் என முயன்ற போது ராட்டினத்தில் கயிறு மாட்டிகொண்டு தண்ணீர் இறைக்கவே முடியவில்லை சமைக்கலாம் என அடுப்பை பற்றவைத்திட முயன்றபோது அடுப்பானது புகையால் நிரம்பியதே தவிர எறியவேஇல்லை இவ்வாறு அவருடைய மனைவி செய்த பணியை அவரால் முழுமையாக செய்து முடிக்கமுடியாமல் அல்லாடிகொண்டிருந்தார் சாயுங்காலம் அவருடைய மனைவி வீடுதிரும்பியபின் தன்னுடைய கணவர் வீட்டுபணியை செய்து முடிக்கமுடியாமல் அல்லாடுவதை கண்ணுற்று அவரை விலகச்செய்து ஒவ்வொரு பணியாக செய்து முடித்தார் இதனால் அந்த விவசாயி மிகவும் வெட்கத்துடன் அவருடைய மனைவியை நோக்கி நான் உன்னுடைய அருமைதெரியாமல் உன்னை தவறாக தீட்டிவிட்டேன் என்னை மன்னித்துவிடு என சமதான தூதுவிட்டார் அதன்பின்னர் இரண்டுபேரும் அமைதியாக சமாதானமாக வாழ முடிவுசெய்தனர்

செவ்வாய், 17 ஜனவரி, 2017

சமமற்ற பங்கீடு


அரேபிய நாட்டில் முஸ்லீம் ஒருவர் இருந்தார் அவருக்கு ஒரு ஒட்டகமும் பேரிச்சை மரம் ஒன்றும் இருந்தன ஒட்டகபாலும் பேரிச்சைபழமும மட்டுமே அவர்களின் குடும்ப வருமானமாகும் அவருக்கு ஒருமனைவியும் அலி, அக்பர் ஆகிய இருபிள்ளைகளும் இருந்தனர் பிள்ளைகள் வளர்ந்துவரும்போது திடீரென அந்த கணவன் மனைவி ஆகிய தம்பதிகள் இருவரும் அகால மரணம் அடைந்தவிட்டனர் அதனால் பிள்ளைகள் தங்களுடைய பிழைப்பை பார்க்கவேண்டிய நிலை ஏற்பட்டது பெரியவன் அலி மிகவும் தந்திர சாலி பேராசைக்காரன் இளையவன் மிகவும் அன்புடையவன் அனைவரிடமும் மிக சுமுகமாக பழகுபவன் அவ்விருவரும் குடும்ப சொத்தான ஒட்டகத்தையும் பேரிச்சமரத்தையும் எப்படி பாகம் பிரிப்பது என பிரச்சினை எழுந்தபோது பெரியவன் தந்திரமாக தம்பி நான் நம்முடைய குடும்பத்தில் பெரியவன் அதனால் பேரிச்சை மரத்தின் மேல்பகுதி எனக்கும் கீழ்பகுதி உனக்கும் அதேபோன்று ஒட்டகத்தின் பின்பகுதி எனக்கும் முன்பகுதி உனக்கும் என பங்கிட்டுகொள்வோம் அந்தந்த பகுதியில் வரும் இலாப நட்டங்களை வருமான செலவுகளை அவரவர்கள் ஏற்றுகொள்ளவேண்டும் என ஒப்பந்தம் செய்தான் அதனை தொடர்ந்த இளையவன் ஒட்டகத்தி்ற்கு தேவையான குடிநீர் உணவு போன்றவற்றை அளித்து வந்தான் அவ்வாறே பேரிச்சமரத்தின் அடிமரத்தை சுற்றி பாத்தி கட்டி நன்கு நீர் பாய்ச்சி வந்தான் பெரியவன் அலி ஒட்டகத்தின் பாலை கறந்து விற்றும் பேரிச்சம் பழத்தை விற்றும் பணம் சம்பாதித்து வந்தான் ஆனால் இளையவன் அக்பருக்கு வருமானம் இல்லை செலவு மட்டுமே அதனால் அலியிடம் விற்பணை வருமானத்தை தனக்கு பங்கிட்டு தருமாறு இளையவன் அக்பர் கோரியபோது ஒப்பந்தத்தின்படி ஒட்டகத்தின் பின்பகுதியும் பேரிச்சமரத்தின் மேல்பகுதியின் வருமானமும் தன்னைத்தான் சேரும் என வாதிட்டான் இதனை கண்ணுற்ற வழிபோக்கன் ஒருவன் இளையவன் காதில் இரகசியமாக ஏதோ கூறி அவ்வாறு செயல்படுமாறு கூறினான் அதனை தொடர்ந்து மறுநாள் பெரியவன் அலி ஒட்டகத்தின் மடியில் பால்கறந்து கொண்டிருக்கும்போது இளையவன் அக்பர் ஒட்டகத்தின் முன்பகுதியை சாட்டையால் அடித்தான் அதனால் ஒட்டகம் வலிதாங்காது பால் கறந்து கொண்டிருந்த பெரியவன் அலியை தன்னுடைய காலால் எட்டி உதைத்து தள்ளியது அதனை தொடர்ந்து ஐயோ அம்மா என அடித்துபிடித்து எழுந்து ஓடினான்பெரியவன் அலி அப்போது தம்பி ஏன் அவ்வாறு ஒட்டகத்தை சாட்டையால் அடிக்கின்றாய் என பெரியவன் அலி வினவியபோது ஒப்பந்தத்தின் படி ஒட்டகத்தின் முன்பகுதியில் நான் என்னவேண்டுமானாலும் செய்து கொள்வேன் அதை நீ கேட்க முடியாது என இளையவன் அக்பர் கூறினான் இவ்வாறே மறுநாள் பெரியவன் அலி பேரிச்சமரத்தில் ஏறி பழத்தை பறித்து கொண்டிருக்கும்போது இளையவன் அக்பர் பேரிச்சமரத்தின் அடிமரத்தினை கோடாளியால் வெட்டத் துவங்கினான் உடன் பெரியவன் அலி தம்பி தம்பி நிறுத்து உன்னுடைய செயலை நான் பேராசையால் வருகின்ற வருமானத்தை இருவரும் பங்கிட்டு கொள்வதை தவிர்த்து தவறு செய்துவிட்டேன் இனிமேல் வருகின்ற வருமானத்தை இருவரும் சமமாக பங்கிட்டுகொள்வோம் அவ்வாறே அவைகளின் பராமரிப்பையும் இருவரும் சமமாக செய்திடுவோம் என திருந்தி சரிசெய்தான்

வியாழன், 12 ஜனவரி, 2017

நம்முடைய வாழ்வில் எதிர்படும் எந்தவொரு நிகழ்வையும் நேர்மறையாக சிந்தித்து நமக்கு ஏற்றவாறு அதனை பயன்படுத்தி கொள்க


.நாம் ஒரு நேர்மறையான சிந்தனை, மற்றொரு எதிர்மறையான சிந்தனை ஆகிய இரண்டிற்கும் இடையே உள்ள வேறுபாட்டினை விவரிக்கின்ற பழைய கதை ஒன்றினை கண்டிப்பாக கேள்விபட்டிருப்போம்: அதாவது பல ஆண்டுகளுக்கு முன்பு சூரியன் மறையாத ஆட்சிபுரி்ந்த பிரிட்டன் நாட்டின் காலணி உற்பத்தி செய்திடும் ஒரு நிறுவனமானது தன்னுடைய நிறுவனத்தில் பணிபுரியும் இரண்டு விற்பனையாளர்களை அழைத்து அவ்விருவரும் ஆப்பிரிக்க நாடுகளுக்கு சென்று தங்களுடைய நிறுவனத்தின் உற்பத்தி பொருளான காலணிகளின் விற்பணையை மேலும் உயர்த்துவதற்குதேவையான சந்தை நிலவரம் எவ்வாறு உள்ளது என ஆய்வுசெய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு கட்டளையிட்டது . அதனை தொடர்ந்து அவ்விருவரும் ஒருவாரகாலம் ஆப்பிரிக்க நாடுகளுக்கு சென்றுவந்தனர் பிறகு முதல் விற்பனையாளர், "ஆப்பிரிக்க நாடுகளில் காலணிகள் எதையும் யாரும் அணியவில்லை அதனால் அங்கு காலணி விற்பதற்கான வாய்ப்பு எதுவும் இல்லை " என தன்னுடைய அறிக்கையை சமர்ப்பித்தார் இரண்டாவது விற்பனையாளர், "ஆப்பிரிக்க நாடுகளில் காலணிகள் எதையும் யாரும் அணியவில்லை அதனால் நம்முடைய நிறுவனத்தின் காலணிகளை அங்கு விற்பணை செய்வதற்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன " என சமர்ப்பித்தார் "ஆப்பிரிக்க நாடுகளில் யாரும் காலணிகள் அணியவில்லை" என்பதுதான் உண்மையான நிலவரமாகும் அந்த கள நிலவரத்தை முதல் விற்பணையாளர் எதிர்மறையாக சிந்தித்து "அங்கு காலணி விற்பதற்கான வாய்ப்பு எதுவுமே இல்லை " என்றும் அதே களநிலவரத்தை நேர்மறையாக சிந்தித்து "நம்முடைய நிறுவனத்தின் காலணிகளை அங்கு விற்பணை செய்வதற்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன " என இரண்டாவது விற்பணையாளரும் அறிக்கை சமர்ப்பித்தனர் - இந்த எளிய குறுகிய கதையானது எவ்வாறு இரண்டு வெவ்வேறு வழிகளில் ஒரே களநிலவரத்தை கருதலாம் என்பதற்கான சிறந்த உதாரனத்தை நமக்கு வழங்குகின்றது. அதே போன்று நம்முடைய வாழ்வில் எதிர்படும் எந்தவொரு நிகழ்வையும் நேர்மறையாக சிந்தித்து நமக்கு ஏற்றவாறு அதனை பயன்படுத்தி நம்முடைய வெற்றிகரமான வாழ்வின் முன்னேற்றத்திற்கு எவ்வாறு தயார் செய்து கொள்வது எனவிழிப்புடன் நேர்மறையான சிந்தனையில் இருக்கவேண்டும் அதாவது எந்தவொரு நிகழ்வையும் நமக்கு சாதகமாக பயன்படுத்தி வெற்றிகொள்ள தயாராக இருக்கவேண்டும் என நாம் அனைவரும் உறுதிமொழியேற்போம் வெற்றிபெறுவோம்

புதன், 4 ஜனவரி, 2017

மற்றவர்களுக்கு தீங்கு ஏற்படுத்துவதை தவிர்த்து மகிழ்ச்சியான வாழ்வை உறுதிபடுத்திடுக


ஒருதச்சு தொழில் செய்திடும் தச்சர் ஒருநாள்மாலை நேரத்தில் அன்றைய பணிமுடிந்து தன்னுடைய தொழிலகமான தச்சுப்பட்டறையை மூடிபூட்டிவிட்டு தன்னுடைய வீட்டிற்கு சென்றார் அதன்பிறகு விஷமுள்ள கருநாகபாம்பு ஒன்று மிகப்பசியோடு அவரது பட்டறைக்குள் நுழைந்தது தனக்கு எலி போன்ற இரை ஏதேனும் கிடைக்குமா என அந்த பட்டறை முழுவதும் அது தேடி அலைந்தது தச்சு பட்டறையில் எலிக்கு என்ன வேலை அதனால் கருநாகபாம்பிற்கு தேவையான உணவு கிடைக்காத விரக்தியில் அது மிகவேகமாக அலைந்து திரிந்ததால் அந்த தச்சுபட்டறையிலிருந்த இருபுறமும் வெட்டுகின்ற கூரான நீண்ட வாளில் இதனுடைய உடல் பட்டு சிறியஅளவு கீறி விட்டது இதனால் கோபம் கொண்ட அந்த கருநாகமானது மற்றவர்களை கடித்து கொல்லுகின்ற வீரமுள்ள என்னுடைய உடலையே கீறி விட்டாயா உன்னை என்னசெய்கின்றேன் பார் என கோபமாக அந்த கூர்மையானபகுதியை தன்னுடைய வாயால் கொத்தியது மூர்க்கனிடம் சண்டையிட்டால் நமக்குதானே நஷ்டம் என்பதற்கு ஏற்ப அந்த கருநாகத்தின் வாயிலும் அந்த கூர்மையான வாளின் பகுதி கீறி வாயெல்லாம் இரத்தம் கொட்டுமாறு ஆகிவிட்டது அதனால் அடே என்னிடம் நேருக்குநேர் மோதுகின்றாயா நீயா நானா என பார்த்துவிடலாம் என கோபம் மிகவும் அதிகமாகி கண்மண் தெரியாமல் தன்னுடைய நீண்ட உடலை கொண்டு அந்த இருபுறமும் கூரான வாளினை சுற்றி வளைத்து இறுக்கி நெருக்கியது முடிவு அந்த கருநாகத்தின் உடல்தான் துண்டுதுண்டாக வெட்டப்பட்டதுதவிர வாளிற்கு தீங்கு ஒன்றும் நேரவில்லை பாம்பின் சொந்த கோபமும், மூர்க்கமான செயலே அதனுடைய உயிர் போவதற்கு காரணமாகிவிட்டது ஆனால் அந்த வாளானது எப்போதும் போலவே அப்படியேதான் இருந்தது மறுநாள் காலை அந்த தச்சர் தன்னுடைய தச்சுபட்டறையை திறந்து பார்த்தபோது வாளிற்கு அருகில் துண்டுதுண்டான கருநாக பாம்பின் உடல் மட்டும் கிடந்ததை கண்ணுற்றுவுடன் அவருக்கு மிக ஆச்சர்யமாகிவிட்டது

அதேபோன்றே நம்மில் பலரும் சில நேரங்களில் தேவையில்லாத நிகழ்வுகளில் கூட குறிப்பிட்ட நபரால்தான் நமக்கு அந்த பாதிப்பு ஏற்பட்டது என நமக்கு கோபம் அதிகமாகி காரணமான மற்றவர்களுக்கு தீங்கு ஏற்படுத்துவதற்காக நாம் முயற்சி செய்திடுவோம் ஆயினும் நேரம் போக போக அதனுடைய பாதிப்பு நமக்கே திரும்ப ஏற்படுவதை நாம் உணராமல் அறியாமல் தெரியாமல் நமக்கு நாமே தீங்கிழைத்து கொள்வோம் அதனால் இதனை தவிர்த்து மகிழ்ச்சியான நம்முடைய வாழ்க்கையில், அவ்வாறான நிகழ்வுகளை புறக்கணித்து சமாளித்து வாழக்கற்றுக்கொள் வோம் நம்முடைய வாழ்க்கையை மகிழ்ச்சியானதாக ஆக்கிடுவோம் எனஉறுதிமொழி ஏற்றுக்கொள்க

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...