சனி, 22 பிப்ரவரி, 2020

எந்தவொரு பணியுடனும் கூடுதலாக நாம் செய்திடும் பணிஎன்றும் வீணாகாது


இருசக்கரவாகணம் பழுதுபார்ப்பு கடைவைத்திருந்தவரின் கடைக்கு ஒருவர் தன்னுடைய இருசக்கரவாகணத்தை பழுதுநீக்கம் செய்துதரும்படி கொண்டுவந்து விட்டிருந்தார் அந்த இருசக்கரவாகணத்தின் பழுதினை சரிசெய்ததோடு மட்டுமல்லாமல் அந்த இருசக்கர வாகணத்தினை கழுவி சுத்தம் செய்து புதிய இருசக்கரவாகணம் போன்று பளபளவென மின்னும்படி செய்தார் அந்த கடையின் சொந்தக்காரர் இதனை கண்ணுற்ற அருகிலிருந்த மற்ற கடைகாரர்கள் அவரைபார்த்து கோரிய பணியை மட்டும் செய்திடாமல்கோராத பணியையும் சேர்த்து செய்துள்ளாயேஅதனால் உனக்கு என்ன பயன் எனகிண்டல்செய்தனர் சரிபரவாயில்லை என்னுடைய மனதிருப்திக்காக நான்அவ்வாறுசெய்தேன் என பதிலிருத்தார் அந்த கடைகாரர் அதன்பின்னர் அந்தஇருசக்கரவாகணத்தின் சொந்தக்காரர் வந்து தன்னுடைய வண்டியை பார்த்தபோது அதனுடைய பழுதுமட்டும் நீக்கியதுமட்டுமல்லாது அவருடைய இருசக்கரவாகணத்தைய புதியதாக தோன்றிடுமாறு செய்துள்ளதை பார்த்து மிகவும் ஆச்சரியத்துடன் அவருடைய விசுவாசத்தை பராட்டி தன்னுடைய நிறுவனத்திற்கு தேவையான அனைத்து பணிகளையும் அந்த கடைகாரருக்கு வழங்கி கெளரவித்தார் எந்தவொரு பணியுடனும் கூடுதலாக நாம் செய்திடும் பணிஎன்றும் வீணாகாது என்ற கருத்தினை மனதில்கொள்க

1 கருத்து:

டிபிஆர்.ஜோசப் சொன்னது…

உண்மைதான். செய்யும் பணியில் முழுமை வேண்டும்.

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...