சனி, 1 பிப்ரவரி, 2020

நூலுடன் இணைப்பில் இல்லாத காற்றாடி


ஒரு முறை ஒரு தந்தையும் மகனும் ஊருக்கு அருகில்நடைபெற்றகாற்றாடி பறக்க விடும் விழாவிற்குச் சென்றனர். அந்த காற்றாடிவிழாநடைபெற்ற இடத்தில் வண்ணமயமான காற்றாடிகளால் வானம்முழுவதும் நிரம்பியிருப்பதைக் கண்டு மகன் மிகவும் மகிழ்ச்சியடைந்தான். அதனை தொடர்ந்து அம்மகன் தனது தந்தையிடம் ஒருகாற்றாடியையும் அதனை வானத்தில் பறக்கவிடுவதற்காக உதவிடும் ஒரு நூல் ஒரு ரோலர் ஆகியவற்றை உடனடியாக தனக்கு வாங்கி தருமாறு தன்னுடைய தந்தையிடம் கோரினான் தங்களுடைய மகன் விரும்பி கோரியதால் அந்த தந்தையும் ஒருகாற்றாடியை வாங்குவதற்காக அந் த திருவிழா நடைபெறும் இடத்திலுள்ள ஒரு கடைக்கு சென்று தங்களுடைய மகனுக்காக ஒரு காற்றாடியையும் நூல்கண்டு ஒன்றினையும் ஒரு ரோலரையும் வாங்கிதங்களுடைய மகனிடம் வழங்கினார் அவரது மகன் நூலை ரோலரில் சுழற்றிவைத்துகொண்டு அந்த காற்றாடியை நூலில் கட்டி உயரே வானத்தில் பறக்கவிட ஆரம்பித்தான். விரைவில், அம்மகனுடைய காற்றாடியானது வானத்தில் உயரத்தில் பறக்க ஆரம்பித்தது. சிறிது நேரம் கழித்து, மகன், “அப்பா, இந்த காற்றாடியை கட்டியுள்ள நூலானது அவ்வாறு பறக்கும் காற்றாடியை அதற்கு மேலே உயரேசென்ற பறக்கவிடாமல் தடுத்து வைத்திருப்பதாகத் தெரிகிறது, அதனால் அந்த கட்டினை அவிழ்த்துவிட்டால் காற்றாடியானது சுதந்திரமாக பறக்கமுடியுமல்லவா , மேலும் அந்த காற்றாடியானதுமிக உயரத்தில் பறந்து செல்லுமல்லவா அதனால் . நான் அந்த காற்றாடியின் கட்டினை அவிழ்த்துவிடட்டுமா அப்பா ! ” என அனுமதி கோரினான் அதனைதொடர்ந்து மகனின் விருப்பப்படி காற்றாடியை ரோலருடன் இணைத்திருந்த நூலை அவிழ்த்துவிட அனுமதித்தார் உடன் அந்த மகனும் ரோலருடன்காற்றாடியை இணைத்திருந்த நூலை வெட்டி இணைப்பினை துண்டித்தான் . அதனை தொடர்ந்து அந்த காற்றாடியானது காற்றின் வேகத்தினால் கொஞ்சம் கொஞ்சமாக மேலே செல்ல ஆரம்பித்தது. அதனை கண்ட அவருடைய மகன் மிகவும் மகிழ்ச்சியுடன் "அப்பா! அப்பா! காற்றாடி மிகவும் சுதந்திரமாக உயரே பறந்து செல்லகின்றது பார்த்தீர்களா!” குதூகளித்தான் ஆனால், சிறிது நேரத்தில் அந்த காற்றாடியானது , மெதுவாக, கீழே வர ஆரம்பித்தது. அதன்பின்னர் , விரைவில் அது அருகிலிருந்த கட்டிடத்தின் மொட்டை மாடியில் விழுந்தது. அவ்வாறானதைக் கண்டு மகன் ஆச்சரியப்பட்டான். , “அப்பா, காற்றாடியை இணைத்திருந்த நூலை வெட்டிய பிறகு, காற்றாடியானது சுதந்திரமாக மேலே பறந்து சென்றுக௧ொண்டேஇருக்க வேண்டுமல்லவா!. ஆனால், அது ஏன் கீழே விழுந்தது?“ என வினவினான் தன்னுடைய தந்தையிடம் , “மகனே, . இணைக்கப்பட்ட நூலானது காற்றடியை உயரே செல்வதை தடுத்து பிடிக்கவில்லை, ஆனால் காற்றடிக்கும் போது காற்றாடியானது உயரத்தில் மிகச்சரியாக பறக்க உதவுகிறது, மேலும்காற்றாடி சரியான திசையில் மேலே செல்ல உதவுகின்றது. நூலின் இணைப்பினை வெட்டும்போது, நூல் வழியாக காற்றாடிக்கு வழங்கிய ஆதரவு இல்லாமல் காற்றின் வேகத்தில்காற்றாடி அடித்து செல்லப்பட்டு அந்த காற்றாடியானது பிடிப்பெதுவும்இல்லாததால் கீழே விழுந்தது அவ்வாறே நாம் வாழும் நம்முடைய வாழ்க்கைதில், நாம் சில செயல்களுடன் முக்கியமாக நம்முடைய குடும்பத்துடன் பிணைக்கப்பட்டுள்ளோம் என்று தவறாக எண்ணுகின்றோம், அவ்வாறான பிணைப்புதான் நம்மை மேலும் உயரவிடாமல் தடுக்கின்றன என்றும் தவறாக எண்ணுகின்றோம் ஆயினும் அவ்வாறான பிணைப்புதான் நம்முடைய வாழ்வின் வெற்றிக்கும் வளர்ச்சிகு் மகிழ்ச்சியான நம்முடைய வாழ்விற்கும் அடிப்படையாகும் ”. என தங்களுடைய மகனுக்கு அறிவுரை கூறினார் .மகன் தன்னுடைய தவறை உணர்ந்தான். ஒரு சில சமயங்களில் நாம் நம்முடைய குடும்பத்தினருடன், பிணைக்கப்படாவிட்டால், விரைவாக முன்னேறி, நம்முடைய வாழ்க்கையில் புதிய உயரங்களை எட்ட முடியும் என தவறாக எண்ணுகின்றோம். ஆனால்,நம்முடைய குடும்பம், நம்முடைய அன்புக்குரியவர்கள் நம்முடைய வாழ்க்கையில் கடினமான நேரத்தை அவர்களின் ஆதரவோடு தப்பிப்பிழைக்க உதவுகிறார்கள் என்பதையும், நாம் வாழ்க்கையில் உயர்ந்த சிகரங்களை அடையநம்முடைய குடும்ப உறுப்பினார்கள் நம்மை ஊக்குவிப்பதைல் உணரத் தவறிவிடுகின்றோம். அவர்கள் நம்மை முன்னேறவிடாமல் கட்டிவைத்திருக்கவில்லை, நம்முடைய இக்கட்டில் நம்மை தட்டிகொடுத்து ஆறுதல் அளித்து நம்மை சோர்வுறாமல் வெற்றியை அடைய உதவுகின்றார்கள் அதனால் அவ்வாறான உறவினை ஒருபோதும் வெட்டிவிட்டு தனியாக வாழலாம்எனும் தவறான முடிவெடுக்காதீர்கள் .

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...