சசேவ (GST) அடிப்படையில்வரிமூலபிடித்தம்(TDS) என்பது 1.10.2018 முதல் கண்டிப்பாக பின்பற்றிடவேண்டும் என்ற நிலையில் ஏற்கனவே நடைமுறையில்உள்ள வருமானவரியின்(Income Tax) அடிப்படையில் வரிமூலபிடித்தம்(TDS) என்பதற்கும் இதற்கும் என்ன வேறுபாடு என்னவென பார்த்திடுவோம்
1.வரிபிடித்தம் செய்பவர்(Deductor): சசேவ (GST)இல் அனைத்து மத்திய மாநில அரசுத்துறைகள்,உள்ளாட்சி நிறுவனங்கள், அரசு முகமையாளர்கள், இதர மத்தியஅரசு அறிவித்திடும் நபர்கள் ஆகிய அனைவரும் வரிபிடித்தம் செய்பவர்ஆவார்கள்
வருமானவரியில்(Income Tax) தனிநபர் கூட்டுகுடும்பம் ஆகியோர் சேர்ந்த எந்தவொரு நபரும் ,நிறுவனமும் வரிபிடித்தம் செய்பவர்ஆவார்கள்
2.வரிபிடித்தம் செய்யப்படுபவர்(Deductee): சசேவ (GST)இல் பொருட்களை வழங்குபவர் அல்லது சேவைகளை வழங்குபவர் அனைவரும் வரிபிடித்தம் செய்யப்படுபவர் ஆவார்கள்
வருமானவரியில்(Income Tax) மற்றவர்களிடமிருந்து வருமானமாக பெறுபவர் அனைவரும் வரிபிடித்தம் செய்யப்படுபவர் ஆவார்கள்
3.வரிபொறுப்பு உருவாகும் நிலை:சசேவ (GST)இல் பொருட்களை வழங்கிடும்போது அல்லது சேவைகளை வழங்கிடும்-போது அவைகளின் மதிப்பு ரூ. 2,50,000/-இற்கு மேல் உயரும்போது வரிபிடித்தம் செய்திடவேண்டும்
வருமானவரியில்(Income Tax) பிரிவு 194A இன்படி வழங்கப்படும் வட்டித்தொகை ரூ..5,000/- இற்கு மேல் உயரும்போதும் பிரிவு 194J இன்படி தொழில்நுட்ப மற்றும்தொழில்முறை சேவைகளுக்காக வழங்கப்படும் தொகை 30,000 /- இற்கு மேல் உயரும்போது வரிபிடித்தம் செய்திட வேண்டும்
4.வரிவிகிதம்:சசேவ (GST)இல் CGST & SGST/UTGST ஆகிய ஒவ்வொன்றிற்கும் 1% சேர்த்து மொத்தம் 2% ஆக கணக்கிடவேண்டும் இரு மாநிலங்கிடையே எனில் IGST மட்டும் 2% ஆக கணக்கிடவேண்டும்
வருமானவரியில்(Income Tax)தொழில்நுட்ப மற்றும்தொழில்முறை சேவைகளுக்காக 10% ஆகவும் LICபிரிமியத்தில் 1% ஆகவும் கணக்கிடவேண்டும்
5.பதிவுசெய்தல்:சசேவ (GST)இல் ஏற்கனவே சசேவ (GST)இற்காக பதிவு எண் பெற்றிருந்தாலும் சசேவ (GST)இன் வரிமூலபிடித்தம்(TDS) செய்வதற்காக கண்டிப்பாக பதிவுசெய்து பதிவெண் பெறவேண்டும்
வருமானவரியில்(Income Tax) வரிமூல பிடித்தம் உருவாகிடும்போது மட்டும் கண்டிப்பாக பதிவுசெய்து பதிவுஎண் பெறவேண்டும்
6.பிடித்தம்செய்தவரித்தொகையை அரசிற்கு செலுத்துதல்:சசேவ (GST)இல் அடுத்தமாதத்தில் 10 தேதிக்குள் www.gst.gov.in எனும் இணையதளத்தில் இதற்கான சலானை உருவாக்கி செலுத்திடவேண்டும்
வருமானவரியில்(Income Tax) அடுத்தமாதத்தில் 7 தேதிக்குள் www.tin.nsdl.com எனும் இணையதளத்தில் செலுத்திடவேண்டும்
7.அறிக்கை தயார்செய்தல்: சசேவ (GST)இல் இணையத்தில் நேரடியாக GSTR-7எனும் படிவத்தை சமர்ப்பிக்கவேண்டும்
வருமானவரியில்(Income Tax) வரிமூல பிடித்தங்களுக்கு ஏற்ப 26Q,24Q,27Q.ஆகிய பல்வேறு படிவங்களை சமர்ப்பிக்கவேண்டும்
8.வரித்தொகையைவரவு வைத்தல்: சசேவ (GST)இல் பதிவுபெற்றவரிபிடித்தம் செய்யப்படுபவர்கள் GSTR 2A/4A ஆகிய படிவங்களின் வாயிலாக தம்முடைய கணக்கில் வரவு வந்துள்ளதை அறிந்து கொள்ளலாம்
வருமானவரியில்(Income Tax) வருமான வரித்துறையின் வாயிலாக பதிவுபெற்றுPANஎண் பெற்றவர்கள் 26AS படிவத்தின் வாயிலாக தம்முடைய கணக்கில் வரவு வந்துள்ளதை அறிந்து கொள்ளலாம்
9.வரிபிடித்தம் சான்றிதழ்:சசேவ (GST)இல் படிவம் எண் GSTR 7A வாயிலாக .வரிபிடித்தம் செய்ததற்கான சான்றிதழ் வழங்கப்படும்
வருமானவரியில்(Income Tax) வரிமூல பிடித்தங்களுக்கு ஏற்ப 16A, 16 B , 16 C ஆகிய படிவங்களின் வாயிலாக வரிபிடித்தம் செய்ததற்கான சான்றிதழ் வழங்கப்படும்
10. கால தாமதத்திற்கான வட்டி அபராத தொகை விகிதம்:சசேவ (GST)இல் ஐந்து நாட்களுக்குள் வரிபிடித்த சான்றிதழ் வழங்கவில்லையெனில் காலதாமதம் ஆகும் நாளிற்கு நாளொன்றிற்கு ரூ.100/-வீதம் அதிகபட்சம் ரூ5000/- வரை CGST Act & SGST/UTGST ஆகிய ஒவ்வொன்றிற்கும் தனித்தனியாக அபராத தொகை செலுத்திட வேண்டும்
வருமானவரியில்(Income Tax) கால தாமதத்திற்கு அபராத தொகை நாளொன்றிற்கு .200/-வீதம் செலுத்தவேண்டும் அதனோடு வட்டிதொகைக்கு 1% வீதமும் தொழில்நுட்ப மற்றும் தொழில்முறை சேவைகளுக்கு 1.5% வட்டி கணக்கிட்டு செலுத்தவேண்டும்
மேலேகூறிய விவரங்களை நன்கு மனதில் கொண்டு ஒப்பந்த பணிசெய்திடும் அனைவரும் தங்களுடைய பணியை செய்திடுக என பரிந்துரைக்கப்படுகின்றது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக