வியாழன், 16 ஜனவரி, 2020

பரிசு பொருட்களுக்கு அல்லது இலவச பொருட்களுக்கு சசேவ(GST)வரி செலுத்தவேண்டுமா


தீபாவளி,ஆங்கில புதுவருடபிறப்பு ,பொங்கல் போன்ற பண்டிகை கால திருவிழாக்-காலங்களில் தங்களுடைய உற்பத்தி பொருட்களை அதிக அளவு விற்பனை செய்வதற்காக வியாபார நிறுவனங்கள் குறிப்பிட்ட அளவு பொருட்களை வாங்கினால் குறிப்பிட்ட பொருட்கள் இலவசம் அல்லது பரிசு வழங்கப்படும் என பொதுமக்களை கவருவதற்காக பல்வேறு ஊடகங்களிலும் விளம்பர படுத்திடுவார்கள் அதனை தொடர்ந்து ஏராளமான அளவில் பொதுமக்களும் அந்த வியாபார நிறுவனங்களுக்கு சென்று பொருட்களை வாங்கி செல்வார்கள் இவ்வாறு பரிசு பொருட்களைஅல்லது இலவசபொருட்களை வழங்குவதால் அவைகளுக்காக தொகை ஏதும் பெறாத நிலையில் அவைகளுக்கு புதிய சசேவ(GST)வரி செலுத்தவேண்டுமா என்பதே பொதுவாக அனைத்து வியாபார நிறுவனங்களின்முன் உள்ள மிகப்பெரிய கேள்விகுறியாகும் இவ்வாறான வியாபார நிறுவனங்கள் 1 தங்களுடைய நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 2. தங்களுடைய நிறுவனத்தின் விற்பனைவருமானத்தை உயர்த்திடுவதற்காக 3. குறிப்பிட்ட புதிய உற்பத்திபொருட்களுடன் குறிப்பிட்ட பொருட்களை சேர்த்து 4. தங்களுடைய நிறுவனத்தின் பெயர் பொதுமக்களிடம் பிரபலமாகவேண்டும் என்று ஆகிய நான்குவகைகளில் பரிசு பொருட்களை வழங்குவார்கள்.முதல் வகையில் இவ்வாறு பொருட்களுக்கான தொகையை பெறாமல் பணிபுரியும் ஊழியர்கள் ஒவ்வொருவருக்கும் பரிசுபொருட்களைரூ 50,000 மிகாமல் வழங்கிடும்போது அரசிற்கு சசேவ(GST) வரியைஅந்த வியாபார நிறுவனம் செலுத்திடத்தேவையில்லை ஆனால் இதற்குமேல் ஒரு நிறுவனம் பரிசுபொருட்களை வழங்கினால் கண்டிப்பாக பொருட்களுக்கான தொகை நிறுவனம் பெறாவிட்டாலும் சசேவ வரியைஅரசிற்கு செலுத்திட வேண்டும் என சசேவசட்டம் பிரிவு 25 கூறுகின்றது. ..இரண்டாவது வகையில் நிறுவனத்திற்கு இது ஒரு செலவாகும் அதனால் வருமானம் ஈட்டப்படாத நிலையிலும் இந்த பரிசு பொருட்களுக்கு சசேவ (GST) வரி அரசிற்கு செலுத்திட-வேண்டும் ஆனால் இவ்வாறு நிறுவனத்தின் செலவிற்காக செலுத்திய வரித்-தொகையை விற்பனையின்போது (ITC) இன் அடிப்படையில் செலுத்தவேண்டிய வரித்தொகையில் கழித்து கொள்ளலாம் .மூன்றாவது வகையில் முதன்மை விற்பனை பொருட்களுக்கான சசேவ வரி அளவையே(Rate) கணக்கிற்கொண்டு இவ்வாறு சேர்த்து வழங்கிடும் பொருட்களுக்கான வரியைகணக்கிட்டு அரசிற்கு வரிசெலுத்திட-வேண்டும்.நான்காவது வகையில் வழங்கப்படும் பொருட்களுக்கு சசேவ வரி அரசிற்கு செலுத்திடவேண்டும் ஆனால் இவ்வாறு நிறுவனத்தின் செலவிற்காக செலுத்திய வரித்தொகையை அதன்பின்னர் வழக்கமான விற்பனையின்போது (ITC) இன் அடிப்படையில்செலுத்தவேண்டிய வரித்தொகையில் கழித்து கொள்ளலாம்

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...