சனி, 18 ஜனவரி, 2020

ஓட்டைபானை


பணியாளர் ஒருவர் தூரத்திலிருந்த ஓடையிலிருந்து தன்னுடைய முதலாளியின் வீட்டிற்கு ஒரு நீண்டகுச்சியின் ஒவ்வொரு முனையிலும் ஒவ்வொன்றாக தொங்கவிடப்பட்டிருந்த இரண்டு பெரிய பாணைகளைக் கொண்டுதண்ணீர் எடுத்துகொண்டுவருவார், . அந்தபானைகளில் ஒன்று விரிசலுற்று ஓட்டையாகி ஒழுது கொண்டிருந்தது, மற்றொரு பானை ஓட்டையெதுவுமில்லாமல் சரியாக தண்ணீரை கொண்டுவந்து சேர்த்திடுமாறு இருந்தது அதனால் அந்த பணியாளர் நீண்ட நடைப்பயணத்தின் முடிவில் அந்த பாணைகளில் தண்ணீரை கொண்டுவரும்போது ஒருபாணையில் மட்டும் முழுமையாகவும் மற்றொன்று அரைகுறையாகவும் கொண்டுவந்து சேர்த்து கொண்டருந்தார் அந்த பணியாளர். இந்த நடைமுறையானது ஏறத்தாழ இரண்டு வருடங்களுக்கு, தினமும் தொடர்ந்தது, அந்த பணியாளர் தனது முதலாளியின் வீட்டிற்கு ஒன்றரை பானைகளில் மட்டுமே தண்ணீரை கொண்டுவந்து சேர்த்தார். அதனால் , ஓட்டையில்லாத பானையானது தான் முழுமமையாக தண்ணீர்கொண்டுவரும் அதன் சாதனைகளைப் பற்றி பெருமிதம் கொண்டது, . ஆனால் விரிசலுடையஓட்டை பானையானது அதில் பாதியை மட்டுமே கொண்டுவர முடிந்தது என்பதில் பரிதாபமாக தன்னுடைய செயலிற்காக வெட்கப்பட்டது இது ஒரு கசப்பான தோல்வி என ஒப்புகொண்ட இரண்டாவது பானையானது ஒரு நாள் நீரோடையிலிருந்து தண்ணீர் கொண்டுவரும் வழியில் அந்த பணியாளரிடம் . "நான் என்னுடைய திறமையை பற்றி வெட்கப்படுகிறேன், நான் உங்களிடம் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன்".என பேசியது உடன் பணியாளர், “ஏன்? நீ எதைப் பற்றி வெட்கப்படுகிறாய்? ” என்று கேட்டார் அதற்கு அந்த இரண்டாவது பானையானது,“ கடந்த இரண்டு ஆண்டுகளாக தினமும் கொண்டுவரும் தண்ணீரில் பாதியை மட்டுமே முதலாளியின் வீட்டிற்கு என்னால் கொண்டுவந்து சேர்க்க முடிந்தது, ஏனென்றால் என்னிடம் ஏற்பட்ட இந்த விரிசலினால் எஜமானரின் வீட்டிற்கு திரும்பிச் செல்லும் வழியிலேயே பாதிதண்ணீர் கீழே கொட்டிகொண்டேவந்தது. எனது குறைபாடுகள் காரணமாக, தண்ணீரை முழுமையாக முதலாளியின் வீட்டிற்கு கொண்டுசேர்க்கமுடியவில்லை ”. என வருத்தத்துடன் பதிலிறுத்தது பணியாளர் பழைய விரிசல் பானைகூறியதை கேட்டு மிக வருந்தினார், , “ பரவாயில்லை எஜமானரின் வீட்டிற்குத் திரும்பும்போது, நாம் செல்லும்பாதையில் வழிநெடுகஅழகான பூக்கள் இருப்பதை நீ பார்த்தாயா அதற்கு காரணமே நீதான்.” என அதனை தட்டிகொடுத்துபேசினார் “ மேலும் அவ்வாறாக தினமும் உன்னிடும் இருந்து தண்ணீர் ஒழுகிகொண்டே வந்தததால்தான் வழிநெடுக பூச்செடிகள் வளர்ந்து பூக்களுடன் காட்சிக்குஅழகாக தோன்றுகினறன“ எனஉற்சாக படுத்தினார் அந்த பணியாளர “அதைவிட நம்முடைய பாதையின் நீ இருக்கும் பக்கத்தில் மட்டுமே பூக்கள் இருப்பதை பார்த்தாயா, ஆனால் ஓட்டையில்லாத மற்ற பானையின் பக்கத்தில் பூச்செடிகள் ஏதுமில்லை? ஏனென்றால், உன்னுடைய குறைபாட்டைப் பற்றி நான் முன்பே அறிந்துகொண்டேன், அதனால் நான் அதைப் பயன்படுத்திக் கொண்டு. பாதையின் உன்னுடைய பக்கத்தில் வழிநெடுக நான் பூச்செடிகளை நட்டுவைத்தேன், ஒவ்வொரு நாளும் நாம் ஓடையில் இருந்து திரும்பிச் செல்லும்போது, நீ அவற்றிற்கு தேவையான தண்ணீரை ஓட்டையின் வாயிலாக கொடுத்துகொண்டேவந்தாய். இரண்டு வருடங்களாக நம்முடைய எஜமானரின் வீட்டினை அலங்கரிக்க இந்த அழகான பூக்கள்உதவுகின்றன. ”எனமேலும் அதனுடைய குறையை வேறொருவகையில் பயன்படுத்தி கொண்டதை இரண்டாவது பானையை உற்சாகபடுத்திடுமாறு கூறினார் நீதி: இவ்வுலகில் நம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான குறைபாடுகள் உள்ளன. ஆயினும் இந்த உலகில், எதுவும் வீணாகப் போவதில்லை. வாழ்க்கையின் அவ்வாறான குறைபாடுகளை பயனற்றது என்று தள்ளிவிடாமல் அவ்வாறான குறைபாடுகளையே நம்முடைய வாழ்க்கையின் வெற்றிபாதையாக மாற்றி கொள்க

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...