வியாழன், 2 ஜனவரி, 2020

பிரபலமான நிறுவனங்கள் தங்களுடைய நிறுவனத்திற்கான பெயரினை இட்டவரலாறு


புதியதாக நிறுவனம் துவங்கிடும்போது அந்நிறுவனத்திற்கான பெயரை தேர்வுசெய்வது என்பதே மிகசிக்கலான குழப்பமான செயலாகும் இருந்த போதிலும் பொருத்தமான பெயரை தெரிவுசெய்திடவேண்டும்என்ற நிலையில் மிகப்பிரபலமான நிறுவனங்கள் எவ்வாறு தங்களுடைய நிறுவனத்தின் பெயர்களைதெரிவுசெய்தனர் என பின்வரும்பகுதியில் காணலாம் உண்மை எனும் பொருள் கொள்ளுமாறான veritasஎனும் இலத்தின் சொல்லும் horizonஎனும் சொல்லும் இணந்து Verizon என்ற நிறுவனத்தின் பெயர் உருவாக்கப்பட்டது Sky-Peer-to-Peer ஆகிய சொற்கள் கலந்த Skyper எனமுதலிலும் பின்னர் Skypeஎன்றும் நிறுவனத்தின் பெயர் உருவாக்கப்பட்டது ever-sharp pencil என்பதிலிருந்து sharp எனும் நுகர்வோர் மின்னனுசாதனங்களின் நிறுவனபெயர் உருவாக்கப்பட்டது நன்றாக விளையாடு என டேனிஷ் மொழியிலிருந்து மொழிமாற்றம் செய்யப்பட்டு அனைத்தையும் ஒருஇடத்தில் சேர்த்து வைத்துள்ளேன் எனும் இலத்தின் பொருள் கொள்ளும்படியான leg godtஎனும் சொற்கள் கலந்து Lego என்ற நிறுவனத்தின் பெயர் உருவாக்கப்பட்டது Ingvar Kamprad Elmtaryd Agunnaryd ஆகிய சொற்களின்முதலெழுத்துகளை சேர்த்து Ikea என்ற நிறுவனத்தின் பெயர் உருவாக்கப்பட்டது FranklinQuest , Covey Leadership ஆகிய இரண்டுபெயர்களின் முதல் சொற்களை கொண்டு Franklin Covey என்ற நிறுவனத்தின் பெயர் உருவாக்கப்பட்டது coca வின் இலையும் kolaவின்கொட்டையும் சேர்ந்த குடிநீரை உருவாக்கிய coca Colaஎன்ற நிறுவனத்தின் பெயர் உருவாக்கப்பட்டது Kwanon.Kwanoniஎன்ற ஜப்பானிய பெயரிலிருந்து Canon என்ற நிறுவனத்தின் பெயர் உருவாக்கப்பட்டது பொதுமக்களின் வண்டி என்ற பொருள்தரும் பேரளவு வண்டிகளை உருவாக்குவதற்காக Volkswagen என்ற நிறுவனத்தின் பெயர் உருவாக்கப்பட்டது html,எனும்நிரல்தொடர் மொழியின் பெயரின் எழுத்துகளிலிருந்து Hotmail என்ற மின்னஞ்சல் நிறுவனத்தின் பெயர் உருவாக்கப்பட்டது ஒன்றுக்கு பிறகு நூறு பூஐ்ஐியம் சேர்ந்தஅளவிற்கு தகவல்களை அளிக்கவல்லதுஎன பொருள்தருமாறு googol Google என்ற நிறுவனத்தின் பெயர் உருவாக்கப்பட்டது

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...