செவ்வாய், 31 டிசம்பர், 2019

உடல்குறைபாடுகளுடன்கூடிய அரசனின் உருவப்படம்


முன்னொரு காலத்தில், ஒரு காலும் ஒரு கண் மட்டுமே உள்ள அரசனொருவன்ஒரு நாட்டினை ஆண்டுவந்தான் , ஆனால் அந்த அரசன் மிகவும் புத்திசாலி யாகவும் கனிவாகவும் அரசான்டதால். அந்நாட்டில் மக்கள் அனைவரும், அனைத்து வளங்களுடன் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்துவந்தனர். ஒரு நாள் அந்த மன்னன் அரண்மனை மண்டபத்தின் வழியே நடந்து கொண்டிருந்தபோது, அம்மண்டபத்தின் சுவர்களில் அவருடைய முன்னோர்களின் உருவப்படங்களைக் கண்டார். அதனை தொடர்ந்து வருங்காலத்தில் தன்னுடைய சந்ததிகளும் இதே மண்டபத்திற்குள் வந்தால் ஏற்கனவேஉள் ள தன்னுடைய முன்னோர்களுடைய உருவப்படங்களுடன் தன்னுடைய உருவப்படமும் இருந்தால் தன்னையும் நினைவில் கொள்வார்கள் என்று அவர்எண்ணினார். ஆனால்,அவரது உடல் குறைபாடுகளுடன் இருந்ததால் அம்மன்னரின் உருவப்படம்மட்டும் இதுவரையில் அம்மண்டபத்தில் வரையப்படவில்லை. அதனால் குறைபாடுகளுடன்கூடிய தன்னுடைய உருவப் படத்தையும் வரைந்து அவற்றுடன் சேர்க்கமுடியுமா என்ற சந்தேகம் அவருக்கு எழுந்தது , அவ்வாறு வரையப்படும் அவருடைய உருவப்படம் எப்படி அமையும் என்று தெரியவில்லை. இருந்தபோதிலும் அவர் தனது நாட்டிலுள்ள அனைத்து பிரபல ஓவியர்களையும் தன்னுடைய அவைக்கு அழைத்து. அரண்மனையில் தன்னுடைய உருவப்படத்தை வைக்க விரும்புவதாகவும் தன்னுடைய உருவப்படத்தை அழகாக வரைவதற்காக எந்தவொரு ஓவியரும் முன்வரலாம் என்றும் அறிவித்தார். மேலும் அரண்மனை மண்டபத்தில் தன்னுடைய உருவப்படத்தினை யார்மிகவும் அழகிய ஓவியமாக வரைகின்றாரோ அவருக்கு நல்லபரிசுபொருட்கள் வழங்கப்படும் எனவும் அறிவித்தார். அவையில் கூடிய ஓவியர்கள் அனைவரும் அந்த அரசனுக்கு ஒரு காலும் ஒரு கண்ணும் மட்டுமே இருப்பதால் தங்களால் அவருடைய உருவப்படத்தை அழகிய ஓவியமாக வரையமுடியாது எனசிந்திக்கத் தொடங்கினர். குறைபாடுகளுடைய அரசனுடைய உருவத்தை கொண்டு உருவப்படத்தை மட்டும் எவ்வாறு மிகவும் அழகாக உருவாக்க முடியும்? அது சாத்தியமில்லை, அவ்வாறு வரையப்படும் உருவப்படம் நன்றாக அமையவிவில்லை என்றால் அரசன் கோபமடைந்து தங்களைத் தண்டிப்பார். எனவே நமக்கெதற்கு வம்பு என ஒவ்வொருவராக சாக்கு போக்கு கூறிகொண்டு, அனைவரும் பின்வாங்கி, மன்னரின் உருவப்படம் தங்களால் வரைய இயலாது என ஒவ்வொருவரும் மிகவும் பணிவுடன் மறுத்து சென்றனர். இந்நிலையில் திடீரென்று ஒரு ஓவியர்மட்டும்தன்னுடைய கையை உயர்த்தி, நான் நிச்சயமாக அனைவரும் மிகவும் விரும்பும் வகையில் அரசனின் அழகான உருவப்படத்தை உருவாக்குவேன் என்று கூறினார். அதனைக் கேட்ட மன்னர் மிகவும் மகிழ்ச்சியடைந்து அரண்மனை மண்டபத்தில் தன்னுடைய உருவப்படத்தை வரைவதற்கு அந்த ஓவியருக்கு அனுமதி அளித்தார் , மற்ற ஓவியர்கள் அனைவரும் இந்த ஓவியர் மட்டும் குறைபாடுகளுடைய அரசனின் உருவப்படத்தை எவ்வாறு அழகாக வரையமுடியும் என ஆச்சரியமாகவும் அவ்வாறான உருவப்படத்தினை காண ஆர்வமாகவும் இருந்தனர் அரண்மனை மண்டபத்தில் அந்த ஓவியர் அரசனுடைய உருவப்படத்தை வரையத் தொடங்கி வண்ணப்பூச்சுகளால் நிரப்பி வரைந்து கொண்டிருந்தார் ஒருவழியாக நீண்ட கால அவகாசம் எடுத்துக் கொண்ட பிறகு, இறுதியாக, உருவப்படம் தயார் வந்து பார்வையிடலாம் என்று அந்த ஓவியர்அறிவித்தார்! அரசன் உடல் ஊனமுற்றவர் என்பதால் ஓவியர் அரசனின் உருவப்படத்தை எவ்வாறு அழகாக மாற்றி வரைய முடியும்? அதனால் அரசனுடைய உருவப்படம் எவ்வாறு இருக்குமோ அரசன்அந்த ஓவியருக்கு என்ன தண்டனை வழங்குவாரோ ? என அனைவரும், மிகவும்அச்சத்துடனும் பதட்டமாகவும் இருந்தனர், ஆனால் அந்த ஓவியர் வரைந்திருந்த அரசனின் உருவப்படத்தை அரண்மனை மண்டபத்தில் கண்டபோது, அரசன் உட்பட அரசசபையில் இருந்த அனைவரும் திகைத்துப் போனார்கள். அரசன் ஒரு,குதிரையின் மேல் ஒரு கால் மட்டும் பார்வையாளர்களின்கண்களில் படுமாறு அமர்ந்து கொண்டு ,அரசன் தனது வில்லைப் பிடித்து, ஒரு கண்ணை மூடிக்கொண்டு அம்பினை வேட்டையாடுவதற்காகக் குறி பார்க்குமாறு அரசனின் உருவப்படத்தை வரைந்திருந்தார் அந்தஓவியர். அரசனின் குறைபாடுகளை புத்திசாலித்தனமாக மறைத்து ஓவியர் மிகவும் அழகான உருவப்படத்தை உருவாக்கியிருப்பதைக் கண்டு மன்னர் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். அதனை தொடர்ந்து மன்னர் அந்த ஓவியருக்கு மிகப் பெரிய பரிசுபொருளை வழங்கி கௌரவித்தார். நீதி: நாம் எப்போதும் மற்றவர்களைப் பற்றி நேர்மறையாக சிந்தித்து அவர்களின் குறைபாடுகளை புறக்கணிக்க வேண்டும். . எதிர்மறையான சூழ்நிலையில்கூட சாதகமாக சிந்தித்து அணுகினால், நம்முடைய பிரச்சினைகளை இன்னும் திறமையாக தீர்வுசெய்ய முடியும்.

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...