புதன், 18 டிசம்பர், 2019

ஒரு வணிக குறியீட்டினை(Trade Mark)எவ்வாறு பதிவுசெய்வது


ஒரு தனிநபரோ அல்லது வணிக நிறுவனமோ அல்லது பிற சட்டப்படியான நபரோ தமது வணிகப் பொருட்களையோ அல்லது சேவைகளையோ தன்னுடைய வாடிக்கையாளரிடம் தனித்துவமாய் அடையாளப்படுத்துவதற்காக பயன்படுத்தப்படும் ஒரு தனிப்பட்ட சின்னத்தையே அல்லது குறியீட்டையே வணிக குறியீடு என அழைப்பார்கள். இந்த வணிக குறியீடானது நம்முடைய வியாபார பொருட்களை அல்லது சேவைகளை மற்ற வியாபார பொருட்களிலிருந்து அல்லது சேவைகளிலிருந்து வேறுபடுத்தி காண்பிக்கின்றது. இவ்வாறானதொரு வணிக குறியீட்டை நம்முடைய நிறுவனத்தின் பெயரில் பதிவுசெய்வதன் மூலம், நம்முடைய வணிக குறியீட்டில் நம்முடைய பொருளை உற்பத்தி செய்து சந்தைபடுத்தலாம் அல்லது சேவைகளை வழங்கலாம் மேலும் சந்தையில் மற்ற போலியான வணிக குறியீடு களிலிருந்து நம்முடைய வணிக குறியீட்டினுடைய தனித்துவத்தை நம்மால் பாதுகாக்கமுடியும். எந்தவொரு மூன்றாம் நபராவது நம்முடையவணிக குறியீட்டினை சட்டவிரோதமாக பயன்படுத்தினால் உடன் அவர்மீது இந்த வணிக குறியீட்டின் உரிமையாளரான நம்மால் அதற்காக சட்டபடியான நடவடிக்கை எடுக்கமுடியும். இந்த வணிக குறியீட்டினை அதற்குரிய கட்டணத்துடன் வணிக குறியீட்டின்பதிவு அலுவலகத்தில் நாம் பதிவுசெய்துகொண்டால் அந்த பதிவானது பத்தாண்டுகளுக்கு செல்லுபடியாகும் மேலும் தேவையெனில் உரிய கட்டணத்துடன் புதுபித்துக்கொள்ளவேண்டும் பல்வகை பொருட்கள் அல்லது சேவைகளுக்கான வணிக குறியீடுகளை பதிவு செய்வதற்கு ஒரேயொரு விண்ணப்பம் மட்டுமே போதுமானதாகும் இவ்வாறான வசதி வாய்ப்புகளை கொண்ட இந்த வணிக குறியீட்டினை இணையத்தின் வாயிலாகவும் பதிவுசெய்திடமுடியும் அதற்கான படிமுறைகள் பின்வருமாறு: 1. முதலில்நாம் பதிவு செய்ய விரும்பும் வணிககுறியீட்டிற்கான சொல்லை அல்லது சின்னத்தினை (Logo)வேறு யாரும் பயன்படுத்தவில்லை என்பதை உறுதி படுத்திகொள்க இதற்காக. பின்வரும் இணையமுகவரிக்கு சென்று சரிபார்த்து உறுதி படுத்தி கொள்க. https://ipindiaonline.gov.in/tmrpublicsearch/frmmain.aspx/ தொடர்ந்து நம்முடைய வியாபாரம் எந்த வகைகளுக்குள் வருகின்றது என சரிபார்த்திடுக இதற்கான இணையமுகவரி https://ipindiaonline.gov.in/tmrpublicsearch/classfication_goods_service.htm/ஆகும் 2.பின்னர் இந்த இணைய வாயிலின் வழியாக வணிக குறியீட்டினை பதிவுசெய்ய விரும்பும் விண்ணப்பதாரரான உரிமையாளர் அல்லது பதிலாள் அல்லது பதிவுபெற்ற வழக்குரைஞர் ஆகியோர் இந்த இணையபக்கத்திலுள்ள அதற்கான படிவத்தில் தேவையான அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்திடுக. அதனுடன் தம்முடைய மூன்றாம் வகுப்பு(class) இரும கையொப்ப சான்றிதழை(digital Signature Certificate(DSC)) யும் இணைத்து சமர்ப்பித்திடுக. 3.படிமுறை இரண்டில் கூறிய அனைத்தும் சரியாக செயல்படுத்தியபின்னர் இவ்வாறு பதிவுசெய்திடும் விண்ணப்பதாரரால் தன்னுடைய விண்ணப்பத்தினை பூர்த்தி செய்திடும்போது வழங்கிய மின்னஞ்சல் முகவரிக்கு இவ்வாறு பதிவுசெய்திடும் செயல் அனைத்தும் சரியாக உள்ளது என்பதை உறுதிபடுத்திடுவதற்கான மின்னஞ்சல் ஒன்று வந்த சேரும் அதில் குறிப்பிட்ட இந்த விண்ணப்பதாரர் வணிக குறியீடு பதிவுசெய்திடும் இணையபக்கத்தில் தம்முடைய கணக்கில் உள்நுழைவுசெய்வதற்கான இணைய இணைப்பொன்றும் இந்த மின்னஞ்சலுடன் கிடைக்கப்பெறும் 4.இவ்வாறு வெற்றிகரமாக தம்முடைய வணிக குறியீட்டினை பதிவுசெய்திடும் நடைமுறைகளை முடித்தபின் தொடர்ந்து பயனாளர் தனக்கு கிடைத்த மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டுள்ள இணைப்பின் வாயிலாக தம்முடைய கணக்கிற்குள் உள்நுழைவு செய்து TM-A எனும் படிவத்தைபூர்த்தி செய்திடுக பின்னர் இந்த இணையதளத்தின் முகப்பு பக்கத்திலுள்ள Payment எனும் இணைப்பினை தெரிவு செய்து சொடுக்குக அதனை தொடர்ந்து தோன்றிடும் திரையில் NEFTஅல்லது Credit Card போன்றவற்றில் நாம் எந்தவகையில் பதிவு கட்டணத்தினை செலுத்தவிரும்புகின்றோம் என்பதை தெரிவுசெய்து அதன்வாயிலாக பதிவுகட்டணத்தினை செலுத்துக இவ்வாறு சரியாக பதிவுகட்டணத்தினை செலுத்தியவுடன் பதிவுக்கட்டணம் செலுத்தியதற்கான ஏற்புகை சீட்டு ஒன்று உடன் தானாகவே உருவாகிவிடும் 5.ஆயினும் இந்த பதிவுகட்டணம் ஏற்றுகொள்ளப்பட்டதற்கான ஏற்புகை சீட்டினை இரண்டு நாட்கள் கழித்து இதே இணையதளபக்கத்தின் Generate Receipt எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து பெற்றுகொள்க 6.இவ்வாறான வணிக குறியீடு பதிவுசெய்வதற்கான நடைமுறைகள் அனைத்தும் சரியாக பின்பற்றி செயல்படுத்தியிருந்தால் இணையத்தின் வாயிலாக நம்முடைய வணிக குறியீட்டினை பதிவுசெய்வதற்கான நம்முடைய விண்ணப்பமானது வணிக குறியீட்டு பதிவு அலுவலர்களால் சரிபார்க்கப்படும் அனைத்தும் சரியாக இருக்கின்றன என திருப்தியுற்றால் நம்முடைய வணிக குறியீட்டின் பெயரையும் வணிககுறியீட்டையும் வணிக குறியீட்டின்சட்டம் மற்றும் விதிமுறைகளின்படி சரியாக இருக்கின்றதாவென வணிக குறியீட்டு பதிவாளரால் மீண்டும் ஒருமுறை சரிபார்க்கப்படும் அதன் பின்னர் இந்தியாவில் வெளியிடப்படும் வணிக குறியீடு காலமுறை இதழில் நம்முடைய வணிக குறியீடு வெளியிடப்படும் அதனோடு குறிப்பிட்ட விண்ணப்பததாரருக்கு இந்த வணிக குறியீட்டினை வழங்குவதில் யாருக்காவது ஆட்சேபணை இருந்தால் அதனை 30நாட்களுக்குள் தெரிவிக்குமாறு வணிக குறியீட்டு பதிவுத்துறையால் அறிவிப்பு ஒன்றும் வெளியிடப்படும் அவ்வாறான ஆட்சேபணை எதுவும் முப்பது நாட்களுக்குள் வரவில்லை-யெனில் இந்த வணிக குறியீட்டினை பதிவுசெய்த விண்ணப்பதாரருக்கு அவர் பதிவுசெய்த வணிக குறியீட்டிற்கான சான்றிதழ் ஒன்று வணிக குறியீட்டு பதிவாளரால் வழங்கப்படும் இவ்வாறான செயல்முறைகள் நடைபெற்றுகொண்டிருக்கும்போது விண்ணப்பம் செய்தவர் தம்முடைய பொருட்களுக்கான அல்லது சேவைகளுக்கான வணிக குறியீட்டின் அருகில் TM அல்லது SMஎன்ற குறியீட்டினை பயன்படுத்தி கொள்ளலாம் இங்கு TM என்பது பொருட்களுக்காகவும் SMஎன்பது சேவைகளுக்காகவும் வணிக குறியீட்டிற்காக விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது என பொருளாகும் பிறகு சான்றிதழ் கைக்கு கிடைக்கப்பெற்றபின்னர் தமக்கு அனுமதிக்கப்பட்ட வணிக குறியீட்டுடன் ® என்ற குறியீட்டினை பயன்படுத்தி கொள்ளலாம் .இந்த வணிக குறியீட்டினை பதிவுசெய்வதற்கு தேவையான ஆவணங்கள் பின்வருமாறு அ.தனிப்பட்டநபர் எனில் 1. வணிக குறியீட்டின் அல்லது வர்த்தக சொற்றொடரின் நகல் (விரும்பினால் ), 2 விண்ணப்பதாரரானவர் முகவர் அல்லது பதிவுபெற்ற வழக்குரைஞர் எனில் கையொப்பமிடப்பட்ட படிவும் எண் 48, 3. தனிநபரின் அல்லது உரிமையாளரின் அடையாளச்சான்று , 4. தனிநபரின் அல்லது உரிமையாளரின் முகவரி ச்சான்று ஆகியவைகளாகும் ஆ.கூட்டாண்மைநிறுவனம்அல்லதுவரையறுக்கப்பட்டகூட்டாண்மைநிறுவனம் அல்லது நிறுமம் எனில் 1. வணிக குறியீட்டின் அல்லது வர்த்தக சொற்றொடரின் நகல் (விரும்பினால் ), 2 கையொப்பமிடப்பட்ட படிவும் எண் 48, .3. சிறுநிறுவனம் எனில் பணிஆதார பதிவுசான்றிதழ், 4 நிறுமபதிவுசான்றிதழ் அல்லது கூட்டாண்மை பதிவுசான்றிதழ் அல்லது கூட்டாண்மை ஒப்பந்தம், 5.கையொப்பமிடுபவரின் அடையாளச்சான்று, 6 கையொப்பமிடுபவரின் முகவரிச்சான்று 7. நிறுமம் எனில் பதிவுசெய்வதற்கான இயக்குநர்களின் குழுவின், தீர்மானம் ஆகியவைகளாகும்

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...