புதன், 25 டிசம்பர், 2019

இந்தியஉணவு பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் ஆணையம் (FSSAI)


இந்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களிலும் துறைகளிலும் நடைமுறையில் இருந்து வந்த உணவு தொடர்பான சிக்கல்களைக் கையாளும் பல்வேறு சட்டங்களையும் ஆணைகளையும் ஒருங்கிணைத்து புதிய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் சட்டம், 2006( Food Safety and Standards Act, 2006) என்பது நடைமுறை படுத்தப்பட்டுள்ளது இந்த சட்டத்தை கண்காணித்து செயல்படுத்துவதற்காக இதன் கீழ் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் ஆணையம்( The Food Safety and Standards Authority of India (FSSAI)) என்பது . உற்பத்தி, சேமித்தல், விநியோகித்தல், விற்பனைசெய்தல், இறக்குமதி செய்தல் ஆகிய உணவு தொடர்பான பல்வேறு நடவடிக்கைகளை பாதுகாப்பதற்காகவும், உணவிற்கான அறிவியல் அடிப்படையிலான தரநிலைகளை பராமரிப்பதற்காகவும், உருவாக்கப்பட்டுள்ளது. இது மனித நுகர்விற்கான பாதுகாப்பானதும் ஆரோக்கியமானது-மான உணவு கிடைக்கும் தன்மையை உறுதிப்படுத்துகிறது. உணவுமாசுறுதல் தடுப்பு சட்டம் 1954(Prevention of Food Adulteration Act, 1954), பழங்களின் உற்பத்திகள் ஆணை,1955 (Fruit Products Order , 1955) கறிஉணவுகளின் உற்பத்திகள் ஆணை, 1973 (Meat Food Products Order , 1973) , காய்கறி எண்ணெய் உற்பத்திகள் (கட்டுப்பாட்டு) ஆணை, 1947 (Vegetable Oil Products (Control) Order, 1947) , சமையல் எண்ணெய் கட்டுதல் (ஒழுங்குமுறை) ஆணை 1988(Edible Oils Packaging (Regulation)Order 1988), கரைப்பானின் பிரித்தெடுக்கப்பட்ட எண்ணெய், சமையல் உணவு மற்றும் சமையல் மாவு (கட்டுப்பாட்டு) ஆணை, 1967 (Solvent Extracted Oil, De- Oiled Meal and Edible Flour (Control) Order, 1967), பால் மற்றும் பால்பொருட்கள்ஆணை,1992 (Milk and Milk Products Order, 1992)என்பன போன்ற பல்வேறு சட்டங்கள் ஆணைகள் அனைத்தும் 2011 ஆம் ஆண்டு ஆகஸ்டு 5 ஆம்நாள் முதல் நீக்கம் செய்யப்பட்டு அவைகளுக்கு பதிலாக இந்த புதிய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் சட்டம் 2006 ஆனது நடைமுறை படுத்தப்பட்டுள்ளது . உணவு பாதுகாப்பு , தரநிலைகள் தொடர்பான அனைத்து பணிகளையும் செய்து முடிப்பதற்காக எந்தவொரு நபரும் பல்வேறு நிலைகளுக்கும் பல்வேறு துறைகளுக்கும் செல்வதற்கு பதிலாக ஒற்றை சாளரமுறையில் தீர்வு காண்பதற்காக சுதந்திரமான இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் ஆணையம் என்பதை இந்த சட்டம் நிறுவுகை செய்கின்றது இந்த உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் ஆணையத்தின் தலைமை அலுவலகம் புதுதில்லியாகும் இதுவும் அனைத்து மாநிலங்களில் இதேபோன்று நிறுவுப்பட்டுள்ள ஆணையங்களும் சேர்ந்து இந்த உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் சட்டம்,2006இன் பல்வேறு விதிகளை கண்காணித்து கட்டுபடுத்துகின்றது இந்தியாவில் எந்தவொரு உணவு தொடர்பான வியாபாரத்தையும் தொடங்குவதற்கு முன் இந்தFSSAI இன்உரிமம் பெறுதல் அல்லது FSSAIஇல் பதிவுசெய்தல் கட்டாயமாகும். அதாவது உற்பத்தியாளர்கள், வர்த்தகர்கள், உணவகங்கள், சிறிய உணவகங்கள், மளிகை கடைகள், ஏற்றுமதியாளர்கள், இறக்குமதியாளர்கள், வீடுகள் சார்ந்த உணவு தொழில்களை செய்பவர்கள், பால்பொருட்கள் உற்பத்தி செய்பவர்கள், உணவு உற்பத்திசெய்பவர்கள், சில்லறை விற்பனையாளர்கள், மின்னனு-சில்லறை விற்பனையாளர்கள் போன்ற உணவு வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள பல்வேறு உணவு தொடர்பான வணிகங்கள் அனைத்தும் இந்த FSSAI இல் கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டும் இவ்வாறு பதிவுசெய்துகொண்டு இவர்களுக்காகவென ஒதுக்கப்படும் 14 இலக்க பதிவு எண் அல்லது உணவுப் பொதிகளில் அச்சிடப்பட வேண்டிய உணவு உரிம எண் கண்டிப்பாக பெறப்படவேண்டும். FSSAI பதிவு பதிவுசெய்வதால் உண்டாகும் பயன்கள் நிறுவனமானது தன்னுடைய வியாபாரத்தை ஒரு புதிய திசையில் வளரச்செய்து தம்முடைய உரிமையையும் தகுதியையும் நிறுவுவதற்கு இது உதவுகிறது நிறுவனத்தினுடைய பிராண்ட் உணவுப் பொருட்களில் பல்வேறு புதுமைகளை புகுத்தி மேம்படுத்திகொள்ள இது உதவுகிறது இதனடிப்படையில் கிடைக்கும் உணவுப்பொருட்கள் நல்ல தரமான பாதுகாப்பான உணவு எனும் எண்ணம் நுகர்வோர்களுக்கு ஏற்படச்செய்கின்றது மேலும் இந்த உணவானது பாதுகாப்பு மற்றும் தரத்தில் உயர்ந்தது என நுகர்வோர்களிடம் நம்பிக்கை. ஏற்படச் செய்கின்றது அதுமட்டுமல்லாது சர்வதேச அமைப்புகளுடன் இணக்கமாக இருக்கும் உணவு பாதுகாப்பு தரங்களை தொடர்ச்சியாக புதுப்பித்தலுக்கும் மேம்படுத்துவதற்கும் இதில் பதிவுசெய்து கொண்ட நிறுவனத்திற்கு உதவுகின்றது FSSAI உரிமம் தேவைபடுபவர்: 1.இணையத்தின் வாயிலாக அல்லது இணையம் அல்லாது உணவுப்பொருட்களை விற்பணை செய்பவர் 2.அனைத்து உணப்பொருட்களையும் வழங்குபவர்கள் 3.உற்பத்திசெய்தல் ,கட்டுதல் ,விற்பணைசெய்தல்,ஏற்றுமதிசெய்தல் ,இறக்குமதிசெய்தல், சேமித்து வைத்தல் ஆகிய உணவு உற்பத்தி செய்யும் இடத்திலிருந்து நுகர்வோர்களிடம் சென்றடையும் வரையிலான அனைத்து பணிகளையும் கையாளுபவர்கள் 4. அனைத்து பிஸ்கட் போன்ற தயார்நிலை உணவுப்பொருட்களை உற்பத்தி செய்பவர்கள் , 5.பால் , பால்பொருட்களை உற்பத்தி செய்பவர்கள் 6,உணவுப்பொருட்கள் எடுத்துசெல்லும் போக்குவரத்தாளர்கள் 7ஊறுகாய் , உலர் பழம் தயாரிப்பாளர்கள் , 8.பொருட்களை சேமித்துவைத்திடும்களஞ்சியங்கள் மற்றும் கிடங்குகள் 9.உணவகங்கள் , துரித உணவுகங்கள் FSSAI உரிமங்களின் / பதிவுகளின் பல்வேறு வகைகள்: 1 FSSAIஇன் மத்திய உரிமம் ஒரு நிறுவனத்தின் வருடாந்திர உணவு வியாபார வருமானமானது ரூ. 20 கோடிக்கு மேல் இருந்தால். FSSAIஇன் மத்திய உரிமம் கண்டிப்பாக தேவையாகும். இந்த FSSAIஇன் மத்திய உரிமம் மத்திய அரசால் வழங்கப்படுகிறது. மேலும், உணவுப்பொருள் தொடர்பான தொழில் செய்திடும் FBO க்கள் தம்முடைய தலைமை அலுவலகத்திற்கு இந்த மத்திய உரிமத்தினை பெற வேண்டும், அதிலும் ஒன்றிற்குமேற்பட்ட மாநிலங்களில் உணவு வியாபாரம் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டு கொண்டிருந்தாலும் நாடு முழுவதும் பல்வேறு அலுவலகங்களை கொண்ட உணவு வணிகத்தில் ஈடுபட்டுக்-கொண்டிருந்தாலும், FSSAIஇன் மத்திய உரிமத்தில் பதிவுசெய்துகொள்ள வேண்டும், பொதுவாக ஒவ்வொரு கடையின் விற்பணை வருமானத்தின் அடிப்படையில் தம்முடைய மாநில அல்லது மத்திய உரிமத்தை பெற வேண்டும். இந்த உரிமத்தின் அதிகபட்ச காலம் 5 ஆண்டுகள் குறைந்தபட்சம் ஒரு வருடமாகும். FSSAI இன் மாநில உரிமம் சிறிய மற்றும் நடுத்தர உற்பத்தியாளர்கள், சேமிப்பு அலகுகள், பொருள் போக்கு-வரத்தாளர்கள், சில்லறை விற்பனையாளர்கள், சந்தைப்படுத்துபவர்கள், விநியோகிப்-பாளர்கள் போன்ற உணவுதொடர்பான வியாபாரத்தை செய்பவர்களின் வருடாந்திர உணவு வியாபார வருமானம் ரூ. 12 லட்சத்திற்கும் மேல் ரூ. 20 கோடிக்குள் இருப்பவர்கள் FSSAI இன் மாநில உரிமத்தை பெற வேண்டும். மேலும் நாள் ஒன்றுக்கு 2 டன்களுக்குமேல் உணவு உற்பத்தி திறன் கொண்ட உற்பத்தியாளர்கள், நாள் ஒன்றுக்கு 50000 லிட்டர் மேல் வர்த்தகத்தை கையாளும் பால் பொருட்கள் உற்பத்தியாளர்கள் , 3 நட்சத்திரம் மற்றும் அதற்குமேல் உள்ள தங்கும் விடுதிகள் , உணவுப்பொருட்களை மீண்டும் கட்டுபவர்கள், மறுபெயர் அச்சிட்டு ஒட்டுபவர்கள் , பொழுது போக்குமன்றங்கள், உணவகங்கள் , ஆண்டு வருமானம் எவ்வளவு இருந்தாலும் கேட்டரிங் வர்த்தகம் செய்திடும் அனைத்து நிறுவனங்களும் இந்தFSSAI இன்மாநில உரிமம் பெற வேண்டும் இந்த உரிமத்தின் அதிகபட்ச காலம் 5 ஆண்டுகளும் குறைந்தபட்சம் ஒரு வருடமுமாகும் FSSAI இன் பதிவு சிறியஅளவிலான உணவுஉற்பத்தியாளர்கள், சேமிப்பு அலகுகள், உணவுப்போக்கு-வரத்தாளர்கள், சில்லறை விற்பனையாளர்கள், சந்தையாளர்கள், விநியோகிப்பாளர்கள் போன்ற உணவு வணிக நிறுவனங்களின் வருடாந்திர உணவு வியாபார வருமாணம் ரூ. 12 லட்சத்திற்கு மிகாமல் உள்ளவர்கள் அனைவரும் இந்த FSSAI இல் பதிவு செய்து கொள்ளவேண்டும்.. பொதுவாக யாராவதொருவர் இவ்வாறான உணவு தொடர்பான ஒரு வியாபாரத்தைத் தொடங்கி, எதிர்பார்க்கப்பட்ட வருவாயை உறுதி செய்யாத நிலையில், இந்த அடிப்படையான FSSAI பதிவில் பதிவு செய்துகொள்வது நல்லது அதன்பின்னர் இந்நிறுவனத்தின் வருடாந்திர வருவாய்ரூ. 12 லட்சம் மேல் உயரும்போது இந்த FSSAI இன் பதிவினை மாநில உரிமமாக மேம்படுத்தி கொள்ளவேண்டும். இந்த உரிமத்தின் அதிகபட்ச காலம் 5 ஆண்டுகளும் குறைந்தபட்சம் ஒருவருடமுமாகும் இந்த FSSAI இல் பதிவு செய்வதற்கு தேவையான ஆவணங்கள் மத்திய மற்றும் மாநில FSSAI உரிமத்திற்கு 1.உரிமையாளரின் / இயக்குநர்களின் / நிறுவனத்தின் வருமானவரிபதிவுஎண் (PAN) 2.உரிமையாளரின்/ இயக்குநர்களின் (ஆதார்,கடவுச்சீட்டு,வாக்காளர் அட்டைபோன்றவை) 3.உரிமையாளரின் / இயக்குனர்களின் மார்பளவு உருவப்படம் 4.வளாகத்தை வைத்திருப்பதற்கான ஆதாரம்(வாடகை ஒப்பந்தம் /பயன்பாட்டு பட்டியல்) 5.நிறுவனம் உருவாக்கியதற்கான சான்று / கூட்டான்மை ஒப்பந்தம் / MOA & AOA சான்றிதழ் 6.தயாரிக்கப்பட்ட அல்லது பதப்படுத்தப்பட்ட அல்லது சேமித்த உணவுப் பொருட்களின் பட்டியல் 7.உணவு பாதுகாப்பு மேலாண்மை அமைப்பு திட்டம் ஏதேனும் இருந்தால் தயாராக இருக்கும் வர்த்தக உரிமம் 8.நிறுவனத்தின் உற்பத்தி அல்லது கையாளும் உணவு வகைகளின் பட்டியல் 9.நிறுவனத்தின் கையாளபடும் உபகரணங்களின் பட்டியல் FSSAIஇன் அடிப்படை பதிவு செய்வதற்காக 1.உரிமையாளரின் / இயக்குநர்களின் / நிறுவனத்தின் வருமானவரிபதிவுஎண் (PAN) 2.உரிமையாளரின்/இயக்குநர்களின்(ஆதார், கடவுச்சீட்டு,வாக்காளர் அட்டை, போன்றவை) 3.உரிமையாளரின் / இயக்குனர்களின் மார்பளவு உருவப்படம் 4.வளாகத்தை வைத்திருப்பதற்கான ஆதாரம் (வாடகை ஒப்பந்தம் / பயன்பாட்டு பட்டியல்) 5..நிறுவனம் உருவாக்கியதற்கான சான்று / கூட்டான்மை ஒப்பந்தம் / MOA & AOA சான்றிதழ் இவ்வாறான FSSAI இன் பதிவை நாம் இருக்கும் இடத்திலிருந்தவாறே இணையத்தின் வாயிலாக பதிவுசெய்து கொள்ளலாம் அதற்கான வழிமுறை பின்வருமாறு படிமுறை 1: இந்த FSSAI இன் படி பதிவுசெய்வதற்கான அனைத்து தகுதிகளும் தேவையான ஆவணங்களும் இருக்கின்றதாவென முதலில் சரிபார்த்துகொள்க. படிமுறை 2: பின்னர் நமக்கான உரிமம் அல்லது பதிவு வகை எதுவன தேர்ந்தெடுத்திடுக படிமுறை 3:FSSAIஇன் இணைய பக்கத்திற்கு சென்று பயனாளர் பெயர் கடவுச்சொற்களுடன் இந்த உணவு உரிமம் மற்றும் பதிவு முறை அமைவிற்கு உள்நுழைவு செய்க படிமுறை 4: அதன்பின்னர் FSSAI வலைத்தளத்தில் FSSAI உணவு உரிமம்/பதிவு படிவத்தில் தேவையான அனைத்து விவரங்களையும் உள்ளீடுசெய்து பூர்த்தி செய்க படிமுறை 5:பின்னர்அவ்விவரங்களுக்கான ஆதார ஆவணங்களை பதிவேற்றம் செய்திடுக. படிமுறை6: பிறகு பதிவுசெய்வதற்கான கட்டணத்தை (மத்திய உரிமம், மாநில உரிமம் அல்லது / பதிவு ஆகியவற்றின்) இணையத்தின் வாயிலாக அல்லது சலான் வழியாக செலுத்துக படிமுறை 7: தொடர்ந்து இதே இணையதளபக்கத்தில் உருவாகும் படிவம் B ஐ அச்சிட்டு அதில் பதிவுசெய்பவர் தம்முடைய கையெழுத்தினை இட்டு அந்த படிவத்தை வருடுதல் (Scan) செய்து அதைப் பதிவேற்றம் செய்திடுக உடன் இந்த விண்ணப்பம் பெறப்பட்டதற்கான ஒப்புதல் கடிதம் கிடைக்கப்பெறும். படிமுறை 8: இணையம் வாயிலாக பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை பதிவேற்றம் செய்தபின்னர்நம்முடைய விண்ணப்பத்தில் திருத்தம் ஏதேனும் செய்ய வேண்டியிருந்தால் அதற்காக அரசானது இந்த படிவத்தை நமக்கு அனுப்பிவைத்திடும் - அவ்வாறு திருத்தம்செய்வதற்காக நமக்கு கிடைக்கப்பட்ட நாளிலிருந்து 15 நாட்களுக்குள் நாம் அதனை சரிசெய்து அனுப்பிவைத்திடவேண்டும் அவ்வாறு நாம் அதில் கோரிய-விவரங்களை சரிசெய்து பதிலளிக்காவிட்டால், நம்முடைய FSSAI இன் பதிவு-செய்வதற்கான விண்ணப்பம் நிராகரிக்கப்படும். படிமுறை 9: பொதுவாக இவ்வாறு நாம் விண்ணப்பிக்கும் நம்முடைய விண்ணப்பத்தை முழுமையாக மீளாய்வு செய்து மாநில அல்லது மத்திய FSSAI உரிமமெனில்30முதல் 50 வேலை நாட்களுக்குள் அரசானது அதற்கான ஒப்புதலை வழங்கும் அடிப்படை பதிவிற்கு மட்டுமெனில் 3முதல்7 வேலை நாட்களுக்குள் அரசானது அதற்கான ஒப்புதலை வழங்கும்(ஒவ்வொரு மாநிலத்திற்கேற்ப இந்த காலஅளவு மாறுபடும்)

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...