புதன், 11 டிசம்பர், 2019

கடனளிப்பு கடிதம் என்றால் என்ன


LC. என சுருக்கமாக அழைக்கப்படும் கடனளிப்பு கடிதங்களானவை (LETTERS OF CREDIT) வியாபார நடவடிக்கைகளின் அடிப்படையான உயிரோட்டமாக மிகமுக்கிய பங்காற்றுகின்றன இவ்வாறான கடனளிப்பு கடிதங்களை வியாபார நிறுவனங்கள் பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள் பின்வருமாறு 1.இந்த கடனளிப்புகடிதமானது ஒரு ஒளிவு மறைவற்ற பாதுகாப்பான ஆவணமாகும் 2 .பொதுவாக விற்பணைசெய்திடும் பொருட்களை அல்லது சேவைகளை வழங்குவதிலிருந்து கொள்முதல் செய்பவரிடமிருந்து அதற்கான தொகையானது விற்பனையாளருக்கு கிடைத்திடும் வரை பல்வேறு நிலைகள்உள்ளன அதனால் விற்பணையாளருக்கு தன்னுடைய உற்பத்தி பொருளை விற்பணைசெய்திடும்போது அதற்கான விற்பணைதொகை கிடைப்பதற்கு அதிக காலஅவகாசம் ஏற்படுகின்றது. அதனை தவிர்த்து உடனடியாக விற்பணை தொகை கிடைப்பதற்கு ஏதுவாக இந்த கடனளிப்புகடிதம் அமைகின்றது. 3.பொருட்களை அல்லது சேவைகளை வழங்கிய நாளிலிருந்து அதற்கான தொகையை பயனாளிகளிடமிருந்து பெறுகின்றநாள்வரை விற்பணையாளருக்கு கண்டிப்பாக விற்பணைத்தொகை கிடைக்கும் என்பதற்கான உறுதிமொழியாக இந்த கடனளிப்பு கடிதமானது பயன்படுகின்றது 4.விற்பணையாளர் இந்த கடனளிப்புகடிதங்களை பெற்றதன்அடிப்படையில் பொருளிற்கான தொகை பெற்றதை போன்று கருதி உடன் பொருளை அல்லது சேவையை வழங்க துவங்கலாம் 5.இந்த கடனளிப்பு கடிதம் கிடைக்கப்பெற்றவர்அதன் இறுதி நாள்வரை காத்திருக்காமல் உடனடியாக நடைமுறை மூலதனம் தேவையெனில் வங்கியில் இதனை சமர்ப்பித்து தொகையை பெற்றுகொள்ளலாம் 6.இந்த கடனளிப்பு கடிதமானது பொருட்களை அல்லது சேவையை பெறுபவரின் நம்பகத்தன்மையை அதற்கான தொகைவழங்குவதற்கான திறனை உறுதி படுத்திடுகின்றது 7 கொள்முதல் செய்பவரின் நம்பகத்தன்மையை சரிபார்ப்பதற்காகவென தனியாக ஆய்வுபணிஎதுவும் செய்து உறுதிபடுத்தி கொள்ளவேண்டும் என்றில்லாமல் விற்பணையாளர் தன்னுடைய பொருட்களை அல்லது சேவையை வழங்குவதில் மட்டும் கவணம் செலுத்தினால் போதும் 8.விண்ணப்பதாரரின் (கொள்முதல் செய்பவரின்)ஏற்புகை இல்லாமல் இந்த கடனளிப்பு கடிதத்தில் திருத்தம் எதுவும் செய்யமுடியாது 9. பொருட்களை அனுப்பிவைத்தவுடன் அதனை கொண்டுசெல்லும் வழியில் பொருட்கள் காணாமல் போனாலும் அல்லது இழந்துபோனாலும் அந்த பொருளிற்கான தொகை ஏற்கனவே கிடைத்துவிட்டது என விற்பணையாளர் கவலைப்படாமல் நிம்மதியாக தன்னுடைய வழக்கமான பணியை தொடரலாம் 10 இருநாடுகளுக்கிடையே பொருட்களை கொண்டுசெல்லும்போது ஏற்படும் இழப்பினாலும் அதற்கான தொகை கிடைக்காது என அஞ்சத்தேவையில்லை ஓரே நாட்டில் மட்டுமல்லாது இருவேறுநாடு-களுக்கிடையே கூட இந்த கடனளிப்புகடிதத்தினை பயன்படுத்தி பொருட்களின் விற்பணை அல்லது கொள்முதல் செய்வதற்காக பயன்படுத்தி கொள்ளமுடியும் இவ்வாறானவசதி வாய்புகளை கொண்ட கடனளிப்புகடிதங்களை பயன்படுத்தி கொள்வதற்கான நடைமுறைகள் பின்வருமாறு முதலில் கொள்முதல் செய்பவர் தான் குறிப்பிட்ட நிறுவனத்திடமிருந்து பொருட்களை கொள்முதல் செய்வதற்காக கடனளிப்புகடிதம் ஒன்றினை உருவாக்கி தன்னுடைய ஏற்பகை வங்கியின்கிளைக்கு அதனை ஏற்றுஉறுதிபடுத்திடுமாறு கோருவார் அதனை தொடர்ந்து கடனளிப்புகடிதத்தினை ஏற்கும் வங்கியின் கிளையானது அந்த நிறுவனத்தின் கடந்தகால நிதிநடவடிக்கையின் நம்பகத்தன்மையின் அடிப்படையில் கடனளிப்பு கடிதத்தினை ஏற்றுக்கொள்வதாக கையொப்பிட்டு வழங்குவர் அதன்பின்னர் இந்த கடனளிப்பு கடிதமானது விற்பணையாளருக்கு கொள்முதல் செய்பவரால் அனுப்பிவைக்கப்படும் பின்னர் உடனடியாக தன்னுடைய நிறுவனத்தின் நடைமுறை மூலதனத்தை மேம்படுத்திடும்பொருட்டு கழிவுத்தொகைபோக மிகுதி நிகரமாக தொகை-பெறுவதற்காக விற்பணையாளர் அல்லது பயனாளர் தனக்கு கிடைத்த இந்த கடனளிப்புகடிதத்தினை நியமனம் செய்யப்பட்ட தன்னுடைய வங்கிகிளையில் சமர்ப்பிப்பார் (கடனளிப்பு கடிதத்தில் குறிப்பிட்டுள்ள நிபந்தனைகளுக்குட்பட்டு சமர்ப்பிக்கவேண்டிய நாளிற்கு முன் ) அதன்பின்னர் பயனாளரால் சமர்ப்பிக்கப்பட்ட கடனளிப்பு கடிதமானது அதற்கான நிபந்தனைகளுக்கு இணங்க சரியாக எழுதபட்டுள்ளதாவென நியமனம் செய்யப்பட்ட வங்கிகிளையானது பரிசோதித்து சரிபார்த்திடும் பின்னர் அவ்வாறு பரிசோதித்திடும்போது அந்த கடனளிப்பு கடிதத்தில் குறைகள் அல்லது முரண்பாடுகள் ஏதேனும் இருந்தால், உடன் நியமனம் செய்யப்பட்ட வங்கிகிளையானது அதனை சரிசெய்து மீண்டும் சமர்ப்பிக்குமாறு பயனாளருக்கு அந்த கடனளிப்புக்கடித்தத்தை திருப்பிவிடும் அதன்பின்னர் அந்த கடனளிப்புகடிதத்தில் உள்ள குறைபாடுகளை சரிசெய்து மீண்டும் அனுப்பிடுமாறு கொள்முதல் செய்பவருக்கு பயனாளரால்திரும்ப அனுப்பபடும் இவ்வாறு நியமனவங்கிகிளையால் சுட்டிகாட்டப்பட்ட குறைகளை கொள்முதல் செய்பவர்சரிசெய்து பயனாளருக்கு( விற்பணையாளர்) திரும்ப அனுப்பப்பட்டு மீண்டும் நியமனவங்கி-கிளையில் சமர்ப்பிக்கப்படும் பின்னர் நியமனவங்கிகிளையானது தன்னிடம்சமர்ப்பித்த கடனளிப்புகடிதத்தினை அந்த தொகையை வழங்குமாறு அதனைஏற்றுகொண்ட வங்கிகிளைக்கு அனுப்பி வைத்திடும் அதன்பின்னர் ஏற்றகொண்ட வங்கிகிளையானது அந்த கடனளிப்புகடிதத்தில் அனைத்து நிபந்தனைகளும்சரியாக இருக்கின்றனவா என மீண்டும் ஒருமுறை சரிபார்த்து நியமன வங்கிகிளைக்கு ஏற்றுகொண்ட வங்கிகிளையானது குறிப்பிட்டதொகையை வழங்கிடும் . அதனை தொடர்ந்து நியமனவங்கியானது கழிவுத்தொகை போக மிகுதி நிகரத்-தொகையை மட்டும் விற்பணயாளரான பயனாளிக்கு வழங்கிடும் பிறகு இறுதியாக விண்ணப்பதாரர் தான்ஏற்றுகொண்ட இறுதிநாளின்போது கடனளிப்பு கடிதத்திற்கான முழுத்தொகையை ஏற்றுகொண்ட வங்கிகிளைக்கு செலுத்தி தம்முடைய கடனை தீர்வுசெய்திடுவார் இவ்வாறான நடைமுறைகளுக்கிடையில் விற்பனையாளர்கள் கடனளிப்புகடிதத்தின் ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ளவாறு, குறிப்பிட்ட பொருட்களை அல்லது சேவைகளை வழங்கிடும் நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டு முடிவுபெறும்

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...