வெள்ளி, 6 டிசம்பர், 2019

தவறுகளிலிருந்து கற்றல்


தாமஸ் ஆல்வா எடிசன் எனும் அறிவியல் அறிஞர் தற்போது நாமெல்லோரும் பயன்படுத்திவரும் மின்சாரத்தில் எரிகின்ற ஒளி விளக்கைத் கண்டுபிடிப்பதற்காக வெவ்வேறு பொருட்களில் மின்சாரத்தினை பாய்ச்சி அதனை தற்போது நாம் பயன்படுத்திவருகின்ற வெளிச்சம் தருகின்ற ஒளிரும் விளக்கை போன்று எரியச்செய்திடுமாறு இரண்டாயிரம்முறை மிககடுமையாக முயற்சித்தார். ஆயினும் அவை எதுவும் திருப்திகரமாக மின்சாரத்தில் எரிந்து ஒளிரவில்லை அவ்வாறான நிலையில் , அவரது உதவியாளர் , “ஐயா நாம் இதுவரை செய்த பணிகள் அனைத்தும் வீண். ஏறத்தாழ இரண்டாயிரம் வகையான பொருட்களில் நாம் முயற்சிசெய்தும் ஒன்றுகூட நமக்கு வெற்றிதரவில்லை,மேலும் இவ்வாறு மின்சாரத்தை சரியாகப் பயன்படுத்தி ஒளிரும் விளக்கை எரியச்செய்ய முடியுமா என்று உறுதியாக தெரியவில்லை. அதனால் இதோடு இந்த ஆய்வினை விடுத்து வேறு ஏதேனும் பயனுள்ள பணிகளை செய்யலாம் ” என கோரினார் அதனை தொடர்ந்து எடிசன் , “ஓ, நாம் வெகுதூரம் பயனித்து வந்துவிட்டோம், இதுவரையில் நிறைய கற்றுக்கொண்டோம். அதாவது மின்சாரத்தில் எரியும் ஒரு நல்ல மின் விளக்கை உருவாக்க நம்மால் பயன்படுத்த முடியாத இரண்டாயிரம் கூறுகள் இருப்பதை நாம் அறிந்தகொண்டோம். அவைகளை விடுத்து வேறு புதியவழிமுறைகளில் முயன்றால் வெற்றி பெற்றிடுவோம் ” என மிகவும் நம்பிக்கையுடன் பதிலளித்தார் என்ன ஆச்சரியம் அடுத்த ஒருசில நாட்களில் டங்ஸ்டன்எனும் இழையானது மின்சாரத்தில் எரிந்து நன்கு ஒளி உமிழ்வதை கண்டுபிடித்து உலகுக்கு அறிவித்தார் நீதி: நம்முடைய தவறுகளையே வெற்றிபடிக்கல்லாக மாற்றிகொண்டு அயராது முயற்சிசெய்தால் அவைகளிலிருந்து புதியஏதேனும் ஒன்றை சாதிக்கமுடியும்

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...