சனி, 21 டிசம்பர், 2019

சிங்கமும் ஏழை அடிமையும்


முற்காலத்தில் பெரிய பெரிய பணக்காரர்களும் அவர்களின் கீழ் ஏராளமானஅடிமைகளும் வாழும் நடைமுறை இருந்துவந்தது ஆனாலும் இப்போதுஇந்த இருபத்தி.யொன்றாம் நூற்றாண்டில் கூட புதியநவீனமான அடிமை சமூகத்தில் அவ்வாறு அடிமையாக தாங்கள் வாழ்கின்றோம் என்றுதெரியாமலேயே நாமெல்லோரும் வாழ்ந்து வருகின்றோம் அவ்வாறான ஒரு முதலாளியிடம் வாழ்ந்துவந்த அடிமையொருவன் தன்னுடைய முதலாளியால் அதிக கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு பொறுக்கமுடியாமல் காட்டிற்கு சென்றால் கொடியவிலங்குகளுக்கு இரையாகி தன்னுடைய உயிரை மாய்த்து கொள்வோம் என ஓடினான் அங்கே காட்டில் ஒருசிங்கமானது இரைதேடுவதற்காக ஓடிடும்போது முள்ஒன்று அதனுடைய காலில் குத்திவிட்டதால் நடக்கமுடியாமல் அதிக வலியுடன் படுத்துகிடந்ததை கண்டான் இந்த அடிமை சரி இந்த சிங்கத்தின் காலில் தைத்த முள்ளை எடுத்துவிடுவோம் அதன்பின்னர் அது நம்மை அடித்து சாப்பிட்டுவிடும் என முடிவுசெய்து அந்த சிங்கத்தின் காலில் தைத்த முள்ளை மிகவும் சிரமமபட்டு எடுத்தபின்னர் அருகிலிருந்த முட்பதரில் வளர்ந்திருந்த பச்சிலையை பறித்து முள்தைத்த சிங்கத்தின் காலில் சாறு பிழிந்து விட்டான் அந்த அடிமை சிறிது நேரத்தில் அந்த சிங்கத்தின் கால் வலி சரியாகிவிட்டது அதனால் அந்த சிங்கமானது அந்த அடிமையை அடித்து தின்றாமல் சென்றுவிட்டது சரி உயிர் இருக்கும் வரையில் வயிற்று பசியையாவது தீர்ப்போம் என அருகிலிருந்த காட்டு பழச்செடிகளிலிருந்து பழங்களை பறித்து தின்று பசியாறினான் இந்நிலையில் அந்த அடிமையினுடை முதலாளியானவன் இவனை எப்படியாவது தேடிகண்டுபிடித்து அழைத்துவருமாறும் மேலும் காட்டில் உள்ள மற்ற விலங்குகளை வேட்டையாடி கொண்டுவருமாறும் தன்னுடைய அடியாட்களை அனுப்பியிருந்தான் அந்த முதலாளியின் அடியாட்கள் காட்டிற்கு வந்து இந்த அடிமையையும் சிங்கம் போன்ற பல்வேறு விலங்குகளையும் சிறைபிடித்து கொண்டு திரும்பினார்கள் திரும்பிய பின்னர் இந்த அடிமை காட்டிற்கு தப்பித்து சென்றதால் அவனுக்கு தக்கதண்டனை வழங்கவேண்டும் என அந்த முதலாளி விரும்பினான் அதனால் தாங்கள் சிறைபிடித்து வந்த சிங்கம் இருக்கும் கூண்டிற்குள் தப்பிசென்ற இந்த அடிமையை உள்ளே தள்ளி கூண்டினை அடைத்து விட்டாான்அந்த முதலாளி என்ன ஆச்சரியம்அந்த கூண்டிலிருந்த சிங்கம் இந்த அடிமையால் அதனுடைய காலில் தைத்திருந்த முள் எடுத்து காத்த சிங்கமாகும் அதனால் அந்த சிங்கமானது மிகவும் நட்புணர்வுடன் அவனுடைய கைகளை நக்கி கொடுத்து கொண்டிருந்தது நீதி: ஒருவருக்கு அத்தியாவசியமாக தேவைப்படும் உதவியை நாம் செய்தால் , அதற்கு பிரதிபலணாக நமக்கு உதவக்கூடிய செயல்களின் பலன்களைப் கண்டிப்பாக பெறுவோம்.

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...