சனி, 28 டிசம்பர், 2019

இன்றைய போட்டி மிகுந்த உலகில் நம்முடைய வாழ்க்கைபயனத்தில் கண்டிப்பாக வெற்றிபெறஇப்போதே உறுதிமொழி எடுப்போம்


ஒரு ஜப்பானியரும் ஒரு அமெரிக்கரும் காட்டிற்கு சென்று வேட்டையாடவிரும்பினார்கள் , . அதற்காக அவ்விருவரும்அருகிலுள்ள அடர்ந்த காட்டிற்குள் சென்றனர் . அந்த அடர்ந்த காட்டில் அவர்களிருவரும் சிறுசிறு விலங்குகளையும் பறவைகளை யும் வேட்டையாடி கொண்டே சென்று கொண்டிருந்தபோது வேட்டியாடுவதற்காக வைத்திருந்த அவர்களுடைய துப்பாக்கிகளிலிருந்த தோட்டாக்கள் காலியாகிவிட்டதை உணர்ந்தார்கள். அந்த சூழலில் திடீரென அவர்களுக்கு அருகில் சிங்கம் ஒன்று கர்ஜிக்கும் ஒலியை கேட்டனர் அதனை தொடர்ந்து இந்நிலையில் தங்களால் அந்த சிங்கத்தை எதிர்கொள்ளஇயலாது என தெரிந்து கொண்டு உடன் இருவரும் அந்த அடர்ந்த காட்டினை விட்டு வெளியேறுவதற்காக வேகமாக ஓட ஆரம்பித்தனர். ஆனால் அவ்விருவரில் ஜப்பானிய ர் மட்டும் ஓட்டத்தை நிறுத்தி அவரது காலில் அணிந்திருந்த முழுக்காலணிகளை கழற்றி கைகளில் எடுத்து கொண்டார் இதனை கண்ட அமெரிக்கர், "நீங்கள் என்ன செய்கிறீர்கள்? சீக்கிரம் வாருங்கள் நாமிருவரும் இந்த காட்டினைவிட்டு வெளியேறு வதற்காக நம்முடைய மகிழ்வுந்து இருக்குமிடத்திற்கு விரைவாக ஓடிடுவோம் "என கோரினார் . அதற்கு ஜப்பானியர், "நான்ஒன்றும் செய்யவில்லைஐயா ஆனாலும் நாமிருவரும் ஓடும்போது நான் உங்களுக்கு முன்னால் இருப்பதை உறுதி செய்ய வேண்டுமல்லவா மேலும் அவ்வாறு நான் முந்தி சென்று நம்முடைய மகிழ்வுந்திற்கு சென்று ஏறிபயனம் செய்யவேண்டுமல்லவா அப்போதுதானே சிங்கத்திடமிருந்து நான்தப்பிக்கமுடியும் இந்த முழுக்காலணிகளானவை வேகமாக ஓடுவதற்கு இடைஞ்சலாக இருக்கின்றன அதனால் இந்த முழுக்காலணிகளை கழற்றிவிட்டேன் இப்போது பாருங்கள் நம்மில் யார் முதலில் மகிழ்வுந்திற்கு செல்கின்றோம் என்பதை." எனக்கூறிகொண்டு மகிழ்வுந்து இருக்கும்இடம்நோக்கி பறந்தோடி சென்றார் , இந்நிலையில் இந்த கதையே கேட்பவர் அனைவரும் , அய்யய்யோ அந்த அமெரிக்கரை சிங்கம் தாக்கிவிட்டதா அதன்பிறகு என்ன நடந்தது என கதைகேட்பதில் அதிகம் ஆர்வுமுடன் இருப்பார்கள் அல்லவா நிற்க : அதேபோன்று இன்றைய போட்டி மிகுந்த உலகில் நம்முடைய வாழ்க்கைபயனமானது மிகவும் கடுமையானது, சூறாவளியாக சுழன்று ஓடும் நீரோட்டம்போன்ற நம்முடைய இந்த வாழ்க்கை பயனத்தில் மற்றவர்களை விட நாம் ஓரிரு படிகளாவது கூடுதலாக முன்னேற வேண்டியது கண்டிப்பாக தேவையாகும் . நம்மிடம் இவ்வளவு பெரிய நாடு ம் ஏராளமான இயற்கைவளங்களும் உள்ளன. அதனை கொண்டு எப்போதும் சிறந்த தரமுள்ள பொருட்களை அல்லது சேவைகளை வழங்குவதை உறுதிபடுத்திகொண்டு பாடுபட்டால், உலகின் பல நாடுகளுடன் ஒப்பிடும்போது நம்முடைய நாடு வெற்றிபாதையில் பலமைல்களுக்கு முன்னால் இருக்கும் என்பது திண்ணம் கற்றுக்கொள்ள ஒருபோதும் தாமதமில்லை இப்போதுஇருந்துகூட கற்றுகொண்டால் வெற்றிபெறமுடியும் வாழ்த்துகள்

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...