ஒருசில சுதந்திரமான இணையதளங்கள் எந்தவொருநிறுவனத்திலும் அடிமையாகாமல் சுதந்திரமாக பணிபுரிந்து போதுமான பணத்தினை ஈட்டிடுவதற்காக உதவுகின்றன அதிலும் தேவையானசேவைகளை இணையத்தின் வாயிலாக வாடிக்கையாளர்களுக்கு இவை வழங்கு கின்றன சுதந்திரமாக பணிபுரிந்து பணம் ஈட்டிடுவதற்கு விரும்பு-வோர்கள் முழுநேரமாகஅல்லது பகுதிநேரமாக தம்முடைய வீ்ட்டிலிருந்தவாறுகூட பணிபுரியவும் அதற்கானஒப்பந்தத்தை மேற்கொள்ளவும் இவை பேருதவியாய் விளங்குகின்றன அவைகளுள் ஒருசில பின்வருமாறு
1.Upwork எனும் தளமானது 12 மில்லியன் பயனாளர்களையும் பல்வேறு வாடிக்கையாளர்களையும் கொண்டு சுதந்திரமாக பணிசெய்திட விரும்பு-வோர்களுக்கு மிகவிரைவாக தேவையான பணிகளை அதாவது ஏறத்தாழ மூன்று மில்லியன் பணிகளை விரைவாக கிடைக்கசெய்கின்றது ஒவ்வொரு செயல்-திட்டத்திற்கும் அல்லது பணிக்கும் எவ்வளவு என தனித்தனியாக தொகையானது நிர்ணயம் செய்யப்பட்டு அதில் நம்முடைய பணிக்கேற்றவாறு அல்லது காலஅளவிற்கு ஏற்றவாறு தொகைவழங்கப்-படுகின்றது எழுதுதல் வடிவமைத்தல்,மெய்நிகர் உதவியாளர்களாக செயல்படுதல் என்பனபோன்ற பல்வேறு பணிவாய்ப்புகள் இதில் கிடைக்கின்றன மேலும் விவரங்களுக்கு https://www.upwork.com/ என்ற இணைய தள பக்கத்திற்குசென்றறிந்து பயன்பெறுக
2. Fiverr என்பது ஒரு சுதந்திரமாக பணிசெய்து போதுமான பணத்தினை ஈட்டிடுவதற்காக உதவிடும் மிகவும்பிரபலமான இணையதளமாகும் இது அனைத்து வகையான பணிகளும் கிடைக்க செய்கின்றது பணிவாய்ப்பு வழங்கிடும் நிறுவனங்களுடன் ஒரு சிறந்த இணைப்பு பாளமாக இது விளங்குகின்றது மேலும் இந்த தளத்தின் வாயிலாக நம்முடைய சேவையை விற்பணை செய்திடமுடியும் இதில் பணிஒன்றிற்கு அடிப்படை விலையாக குறைந்தபட்சம் ஆறுடாலரிலிருந்து துவங்குகின்றது மேலும் விவரங்களுக்கு https://www.fiverr.com/ என்ற இணைய தள பக்கத்திற்குசென்றறிந்து பயன்பெறுக
3.People per Hour என்பது மற்றொரு பிரபலமான வேலைவாய்ப்பினை வழங்கிடும் இணையதளமாகும் இது முக்கியமாக கணினிசெயல்திட்டங்களான developers, SEO, writers, coders ஆகியவற்றில் மட்டும்அதிக பணிவாய்ப்புகளை வழங்குகின்றது இதிலுள்ள WorkStream எனும் கருவியானது நிறுவனங்களையும் பணிபுரிபவர்களையும் இணைத்திடும் பாளமாகவும் பணம் வழங்குதலிலும் நிருவகிப்பதிலும் சிறப்பாக செயல்படுகின்றது அதிக பட்ச வியாபாரம் தொடர்பான பணிக்கு இது உதவுகின்றது நம்முடைய பணியைபற்றிய விவரங்களை கானொளிபடங்களாக இதில் பதிவுசெய்து கொண்டால்நமக்கு பணி-அறிவிப்புகளை நமக்கு மின்னஞ்சல் வாயிலாக அனுப்பிவைக்கின்றது அதனை தொடர்ந்து நமக்கான பணியை நாம் பெறவும் தொடர்ந்து பணிக்கான தொகை நமக்கு கிடைக்கவும் இடைமுகமாக செயல்படுகின்றது மேலும் விவரங்களுக்கு https://www.peopleperhour.com/ என்ற இணைய தள பக்கத்திற்குசென்றறிந்து பயன்பெறுக
4. 99 Designs என்பதுவடிவமைப்பாளர்களுக்கான ஒரு மிகச்சிறந்த பணிவாய்ப்பினை வழங்கிடும் இணயதளமாகும் இதில் தற்போது ஒருமில்லியன் வடிவமைப்பாளர்கள் உலகமுழுவதிற்கும் பதிவுசெய்துள்ளனர் பொதுவாக இது அனைத்து வாடிக்கையாளர்-களுடனும் இணைப்பினை ஏற்படுத்தி தங்களின் வடிவமைப்புதிறனை காண்பிக்குமாறு செய்கின்றது வாடிக்கை-யாளர்களும் தங்களுடைய வியாபாரம் தொடர்பான விவரங்களை வழங்கி அதற்கேற்ற வியாபார குறியீடுகள்(லோகோ) போன்றவைகளை வடிவமைத்திடுமாறு கோருகின்றனர் இதன்பின்னர் தேவையான வடிவமைப்பினை பெற்று வியாபார நிறுவனங்களும் திருப்தி கொள்கின்றன வடிவமைப்பாளர்களும் தேவையான பணத்தினை இதன் வாயிலாக ஈட்டுகின்றனர்மேலும் விவரங்களுக்கு https://99designs.com/ என்ற இணைய தள பக்கத்திற்குசென்றறிந்து பயன்பெறுக
5.Guru .என்பது மிகவும் நீண்டகாலமாக வேலைவாய்ப்பினை வழங்குகின்ற மிகவும் பிரபலமான இணையதளமாகும் இது தொழில்நுட்ப வியாபார திட்டங்களுக்கு மட்டும் வேலைவாய்ப்பினை வழங்கிடும் இணையதளமாகும் சுதந்திரமாக பணிசெய்ய விரும்புவோர் தங்களுடைய சுயவிவரங்களை இதில்பதிவுசெய்து கொண்டால் போதும் அதனை பார்வையிடும் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தகுதியானவர்களை தெரிவு-செய்து கொள்கின்றனர். இந்த பணியானது ஒருமணிநேரம் ,ஒரு வாரம் ,ஒருமாதம் அல்லது குறிப்பிட்ட பணிமுடிப்பதற்கு மட்டுமென தெரிவுசெய்து கொள்ளமுடியும் மேலும் விவரங்களுக்கு .https://www.guru.com/ என்ற இணைய தள பக்கத்திற்குசென்றறிந்து பயன்பெறுக
6.iFreelance என்பது சுதந்திரமாக பணிபுரிபவர்களுக்கான மற்றொரு பிரபலமான இணைய-தளமாகும் இதுphotography, videography, traditional art, writing, marketing, architecture translation,, engineeringஎன்பனபோன்ற பல்வேறு வகையான சுதந்திரமானபணிகளை வழங்கும் இணையதளமாகும் இதில் மிகஎளிதாக நம்முடைய விவரங்களை பதிவுசெய்து கொண்டு நமக்கான பணியைதேடிபெறஉதவுகி்ன்றது மேலும் விவரங்களுக்கு https://www.ifreelance.com/ என்ற இணைய தள பக்கத்திற்குசென்றறிந்து பயன்பெறுக
7. Freelancerஎன்பது சுதந்திரமாக பணிபுரிபவர்களுக்கான பிரபலமான இணைய-தளமாகும் இதுmarketing, writing, web design, என்பனபோன்ற பல்வேறு வகையான சுதந்திரமான பணிகளை வழங்குமொரு இணையதளமாகும்இதில் வாடிக்கையாளர்கள் பல்வேறு பணப்பரிசுகளின் வாயிலாக தங்களுக்கு தேவையான சுதந்திரமான பணிபுரிபவர்களை தெரிவுசெய்கின்றனர்.மேலும் விவரங்களுக்கு https://www.freelancer.com/ என்ற இணைய தள பக்கத்திற்குசென்றறிந்து பயன்பெறுக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக