2017-18 நிதி ஆண்டின் முதல் மூன்றுமாதங்களுக்கு(அதாவது 01.04.2017 முதல் 30.06.2017 வரை) மத்திய அரசின் உற்பத்தி வரி(Exise Duty)என்றும் மாநில அரசுகளின் மதிப்புகூட்டுவரி (VAT) என்றும் அதற்கு பிறகு ஒன்பது மாதங்களுக்கு (அதாவது 01.07.2017 முதல் 31.03.2018 வரை) சரக்கு சேவைவரி (சசேவ(GST))என்றும் நடைமுறைபடுத்தப்பட்டது அதனை தொடர்ந்து தற்போது நிறுவனங்கள் தங்களுடைய 2017-18 ஆம் ஆண்டிற்கான கணக்குகளை முடித்து தணிக்கை செய்துவருமானவரி அறிக்கைகளையும்(IncomeTax Return (ITR)) தயார்-செய்து சமர்ப்பிக்க தயாராக உள்ளன இந்நிலையில் பொதுவாக 2016-17 ஆம் நிதியாண்டுவரையில் நிறுவனங்கள் தங்களுடைய வருமானவரிவிவர அறிக்கைகளை சமர்ப்பிக்கும் போது Excise Duty ,VATஎன்பன போன்ற மறைமுகவரி விவரங்களுடன் சேர்த்து சமர்ப்பிக்கும் நடைமுறை பின்பற்றப்படுவதில்லை ஆயினும் தற்போது இந்த புதிய(சசேவ(GST)) நடைமுறைபடுத்தப்-பட்ட பின்னர் நிறுவனங்கள் அனைத்தும் தங்களுடைய வருமானவரி அறிக்கையில் கண்டிப்பாக இந்த(சசேவ(GST)) விவரங்களையும் சேர்த்து சமர்ப்பிக்கவேண்டும் எனும் நடைமுறை செயல்படுத்திடபடுகின்றது
அதாவது சசேவ (GST) இல் பதிவுசெய்திட்ட வியாபார வருமானமும் தொழிற்முறை (Professional) வருமானமும் பெறுபவர்கள் அனைவரும் தங்களுடைய வருமானவரி அறிக்கையில் கண்டிப்பாக இந்தசசேவ(GST) விவரங்களையும் சேர்த்து சமர்ப்பிக்கவேண்டும்
சம்பளம் அல்லது பிற ஆதாரங்களில் இருந்து வருமானம் பெறுபவர்களான ITR 1 . ITR 2 ஆகிய வருமானவரி படிவங்களை சமர்ப்பிப்போர் தங்களுடைய ITRகளுடன் எந்த சசேவ(GST)விவரங்களையும் வழங்க வேண்டியதில்லை.
ஆனால்ITR 3 முதல் ITR 6 வரையிலான வருமானவரிபடிவங்களை சமர்ப்பிப்போர் தங்களுடைய வருமானவரி அறிக்கையில் கண்டிப்பாக இந்த சசேவ(GST) விவரங்களையும் சேர்த்து சமர்ப்பிக்கவேண்டும்
வருமானவரிபடிவம் ITR 3 சமர்ப்பிப்போர்
1.இவர்கள் தங்களுடைய வருமானவரி படிவத்துடன் சசேவ(GST) நடைமுறை படுத்தப்பட்ட பின்னர் 9 மாத விற்பணையில் விதிக்கப்பட்ட சசேவ(GST)இன் வரிவிவரங்களான CGST, SGST,IGST,UTGST ஆகியவற்றுடன் சேர்த்து சமர்ப்பிக்கவேண்டும் இந்த விவரங்களனைத்தும் இந்நிறுவனங்கள் சசேவஇணையதளத்தில்(GSTportal)ஏற்கனவே சமர்ப்பித்த இது தொடர்பான தங்களுடைய மின்னனு பொறுப்பு பதிவேட்டின் (electronic liability register) விவரங்களுடன் மிகச்சரியாக இருக்கவேண்டும்
2.தொடர்ந்து தாம்கொள்முதல்செய்த பொருட்களுடன் சேர்ந்த CGST, SGST, IGST, UTGST ஆகிய சசேவ(GST)வரியை தாங்கள் செலுத்திடும் சசேவ(GST)வரியில் கழித்துகொண்டு நிகரமாக செலுத்தியிருப்பார்கள் இந்த சசேவ(GST) வரவுதொகையானது இதே சசேவ இணைய தளத்தில் (GST portal) ஏற்கனவே சமர்ப்பித்துள்ள இதுதொடர்பான இவர்களுடைய மின்னனு வரவு பதிவேட்டின் electronic credit ledger) விவரங்களுடன் மிகச்சரியாக இருக்கவேண்டும்
3.அதனோடு வரிசெலுத்துவோர் நிகரமாக தாம் செலுத்தவேண்டிய சசேவ(GST)வரி விவரங்களை தங்களுடைய வருமான வரிவிவரங்களில் தெரிவிக்கவேண்டும் இந்த நிகர சசேவ(GST) வரியானது இவர்களுடைய சசேவஇணையதளத்தில் (GST portal) ஏற்கனவே சமர்ப்பித்துள்ள இதுதொடர்பான நிகரதொகையயாகவுள்ள மின்னனு ரொக்கபேரேட்டுடன் (electronic cash ledger)மிகச்சரியாக இருக்கவேண்டும்
4 மேலும் வரிசெலுத்துவோர் 31.03.2018 அன்று தாம் நிகரமாக செலுத்தவேண்டிய CGST, SGST, IGST, UTGST ஆகிய சசே(GST)வரியை தம்முடைய வருமானவரிவிவர அறிக்கையில் (ITR) குறிப்பிடவேண்டும்
5 மிகமுக்கியமாக வரிசெலுத்துவோர் தாம் அதிகமாக செலுத்திய CGST, SGST, IGST, UTGST ஆகிய சசே(GST) வரியை அரசிடமிருந்து மிகுதி வரவேண்டிய ஆனால் இலாப-நட்ட கணக்கில் வருமானமாக காட்டப்படாதவை ஏதேனும் இருந்தால் அவ்விவரங்களை தனியாக தங்களுடைய வருமானவரிவிவர அறிக்கையில் காண்பிக்கவேண்டும்
வருமானவரிபடிவம் ITR 4 சமர்ப்பிப்போர்
இவர்கள் தங்களுடைய தங்களுடைய வருமானவரி படிவத்துடன் சசேவ(GST) நடைமுறை படுத்தப்பட்ட தங்களுடைய 9 மாத விற்பணையின் மொத்த விற்பணைவருமான விவரங்களை சமர்ப்பிக்கவேண்டும் இந்த தொகையும் இவர்கள் ஏற்கனவே சமர்ப்பித்த சசேவ(GST)அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள தொகையும் மிகச்சரியாக இருக்கவேண்டும் மேலும் இவர்களின் சசேவ(GST) பதிவுஎண்ணை கண்டிப்பாக தங்களுடைய வருமானவரி படிவத்தில் இவர்கள் குறிப்பிடவேண்டும்
இது சசேவ(GST)நடைமுறை படுத்தபடும் முதல் ஆண்டாகும், அதனால் சசேவ(GST) இன்-கீழ் வரி செலுத்துவோர் இந்த ஆண்டு பல்வேறு தவறுகளை செய்திருக்கலாம். மேலும் வரி செலுத்துவோர் தங்களுடைய சசேவ(GST)இன் கீழ் இவர்களுடைய கணக்கில் பதிவு-செய்துள்ள கணக்குகளுடன் ஒப்பிடுவதற்கு கடினமான பணியாககூட இருக்கலாம். ஆயினும் வரி செலுத்துவோர் வருமான வரிஅறிக்கையை(ITR) சமர்ப்பிப்பதற்கு முன் சசேவ(GST) ஆண்டறிக்கையுடன் சரியாக இருக்கின்றதாவென மீண்டும் ஒருமுறை சரிபார்த்து கொள்க. தவறு ஏதேனுமிருந்தால் சரிசெய்து கொள்க என பரிந்துரைக்கப்-படுகின்றது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக